ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று (நவம்பர் 19) விற்பனைக்கும் கொண்டு வரப்பட்டது. முன்னதாக இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும் இந்த கார் பற்றிய விரிவான தகவல்களையும் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் டிசைன்

பொதுவாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி கார்களின் டிசைன் கவர்ச்சிகரமாக இருக்கும். மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் காரின் டிசைனும் அப்படித்தான் இருக்கிறது. ஏ-க்ளாஸ் காரின் டிசைனை மெர்சிடிஸ் ஏஎம்ஜி குழுவினர் மாற்றியமைத்துள்ளனர். முன் பகுதியை பொறுத்தவரை, வழக்கமான ஏ-க்ளாஸ் காரை காட்டிலும், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் அகலமாக இருக்கிறது.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் கிடைமட்ட பார்களுடன் கூடிய க்ரோம் க்ரில் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக தனது மற்ற கார்களில் வழங்கப்பட்டுள்ள Panamericana க்ரில் அமைப்பை வழங்கியுள்ளது. இந்த புதிய க்ரில் அமைப்பில் செங்குத்தான ஸ்லாட்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதன் நடுவில் மெர்சிடிஸ் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய க்ரில் அமைப்பின் பக்கவாட்டில் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் பெரிய ஏர் இன்டேக்குகள் உடன் முன் பக்க அப்ரான் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த காரின் முன் பகுதி கம்பீரமாக காட்சியளிக்கிறது.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை பெரிய வீல் ஆர்ச்சுகளும், கருப்பு நிற அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் மிச்செலின் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் பிரேக் காலிபர்கள் சிகப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் இது வழக்கமான ஏ-க்ளாஸ் கார் இல்லை என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்தும் வகையில், Turbo 4Matic+ பேட்ஜூம் இடம்பெற்றுள்ளது.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பின் பகுதியை பொறுத்தவரை, A45 S பேட்ஜ், நேர்த்தியான டெயில் லைட்கள், 2 பெரிய 90 மிமீ டெயில்பைப்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதை போல், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் காரின் டிசைன் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருக்கிறது.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் இன்டீரியர் மற்றும் வசதிகள்

காரின் உள்ளே சென்றால் விசாலமான இன்டீரியர் நம்மை வரவேற்கிறது. நாம் இன்று வரை பார்த்த கார்களிலேயே ரெகுலர் ஏ-க்ளாஸ் காரின் இன்டீரியர் மிகவும் சிறப்பான ஒன்று. எனவே ஏஎம்ஜி இங்கே பெரிதாக எதையும் செய்யவில்லை.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டேஷ்போர்டில் ட்வின் டிஸ்ப்ளே ஆதிக்கம் செலுத்துகிறது. இதில், ஒன்று இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளே ஆகவும், மற்றொன்று இன்போடெயின்மெண்ட் யூனிட்டாகவும் செயல்படும். இதில், இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளேவை டிரான்ஸ்மிஷன் ட்யூனலுக்கு அருகில் உள்ள பேடு மூலமாகவும், ஸ்டியரிங் வீலில் உள்ள பட்டன்கள் மூலமாகவும் அல்லது நேரடியாக தொடுவதன் மூலமும் கட்டுப்படுத்த முடியும். இது குரல் கட்டளைக்கும் கட்டுப்படும். 'Hey Mercedes' என்ற வார்த்தையை கூறி இடப்படும் கட்டளைகளை இது ஏற்கும்.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரில் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இது ஏஎம்ஜி யூனிட் ஆகும். மேலும் Burmeister சவுண்ட் சிஸ்டம், ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் இருக்கைகள் ஆகியவற்றையும் இந்த கார் பெற்றுள்ளது.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் இன்ஜின், செயல்திறன்

இந்த கார் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? என்பதை தெரிவிப்பதற்கு முன்பு, இன்ஜின் பற்றிய தகவல்களை கூற கடமைப்பட்டுள்ளோம். இந்த காரில் மிகவும் சக்தி வாய்ந்த நான்கு-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஏ35 காரில் இருப்பதை காட்டிலும் இந்த இன்ஜினை வித்தியாசப்படுத்த ஏஎம்ஜி மெனக்கெட்டுள்ளது. இந்த இன்ஜின் 2 ஸ்டேஜ் ஃப்யூயல் இன்ஜெக்ஸன் சிஸ்டமை பெற்றுள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் இன்ஜின் 104 பிஹெச்பி/சிலிண்டர் அல்லது 208 பிஹெச்பி/லிட்டர் அவுட்புட்டை கொண்டுள்ளது. 'One Man One Engine' கொள்கையை ஏஎம்ஜி கடைபிடித்து வருவது உங்களுக்கு தெரியும். இதன்படி மற்ற ஏஎம்ஜி இன்ஜின்களை போலவே, ஒவ்வொரு மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் இன்ஜினும் ஒரே ஒரு டெக்னீஸியனால் அசெம்பிள் செய்யப்படுகிறது.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் காரில், 1,991 சிசி, இன்லைன்-4 சிலிண்டர், டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,750 ஆர்பிஎம்மில் 421 ஹார்ஸ்பவரையும், 5,000-5,250 ஆர்பிஎம்மில் 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ட்யூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரின் நான்கு சக்கரங்களுக்கும் இன்ஜின் சக்தி செலுத்தப்படுகிறது.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் காரில் மொத்தம் 6 டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி ஈரமான சாலைகளில் ஓட்டுவதற்கு ஸ்லிப்பரி என்ற டிரைவிங் மோடு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரெகுலர் ஏ-க்ளாஸ் காரை ஓட்டு விரும்புபவர்களுக்காக கம்ஃபோர்ட், தினசரி பயணங்களுக்கு ஸ்போர்ட், இன்னும் அதிக வேகம் வேண்டும் என்பவர்களுக்கு ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ரேஸ், இன்டிஜூவல் ஆகிய டிரைவிங் மோடுகளையும் இந்த கார் பெற்றுள்ளது.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டி விடும். இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 278 கிலோ மீட்டர்கள். இவை இரண்டையுமே உண்மையிலேயே எட்ட முடியும். ஆனால் சாதாரண சாலைகளில் இதனை செய்து விடாதீர்கள். முறையான ரேஸ் டிராக்கில் நீங்கள் இதனை செய்யலாம்.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் ஓட்டுதல் அனுபவம்

சரி, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் விஷயத்திற்கு வந்து விடுவோம். மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது?

ரேஸ் மோடுக்கு மாற்றி கொள்ளுங்கள். ஸ்டியரிங் வீலில் உள்ள பட்டனை க்ளிக் செய்து எக்ஸாஸ்ட் வால்வுகளை திறந்து கொள்ளுங்கள். அப்போது கிடைக்கும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வேகத்தில் இந்த கார் சிறுத்தையை போல் சீறிப்பாய்கிறது.

இந்த கார் நேரான சாலையில் மட்டும் அதிவேகத்தில் செல்லக்கூடியது அல்லது. NATRAX டிரைவிங் டெஸ்ட் சென்டரின் வளைந்து, நெளிந்து செல்லும் சாலைகளில் மணிக்கு 220 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் நாங்கள் காரை ஓட்டினோம். இந்த காரின் ஸ்டியரிங் வீலும் இன்னும் வேகமாக செல்லக்கூடிய நம்பிக்கையை நமக்கு வழங்குகிறது. அதே நேரத்தில் இந்த காரின் சஸ்பென்ஸ் அமைப்பும் சிறப்பாக இருக்கிறது. இந்த காரை ஓட்டும் அனுபவத்தை மேஜிக் போல் இருந்தது எனலாம்.

இந்த காரின் டாப் ஸ்பீடான மணிக்கு 278 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எங்களால் எட்ட முடிந்தது. ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி ரேஸ் டிராக்குகளில் மட்டும் இந்த வேகத்தில் காரை ஓட்டுங்கள். 11.3 கிலோ மீட்டர் NATRAX ஹை-ஸ்பீடு டிராக்கில் 1 லேப்பை நாங்கள் வெறும் 3 நிமிடங்களுக்கு உள்ளாக முடித்து விட்டோம்.

ஸ்டைல், செயல்திறன் தூள்! 6 டிரைவிங் மோடுகள் உடன் அசத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

தீர்ப்பு

இந்த காரின் டெஸ்ட் டிரைவ் முடிந்ததும் எங்கள் மனதில் தோன்றிய விஷயம் இதுதான். மீண்டும் ஒரு முறை காரை ஓட்ட முடியுமா? என்பதுதான் அது. இந்த கார் வழங்கிய உற்சாகமான அனுபவத்தை வேறு வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை!

Most Read Articles
English summary
Mercedes amg a45 s first drive review design features engine performance driving impressions
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X