புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே 'ஏ க்ளாஸ்'- தானா?... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சொகுசு, செயல்திறன் மற்றும் சொக்க வைக்கும் இன்டீரியருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் பென்ஸ் கார்கள் பெயர் பெற்றவை. அந்த வகையில், தனது குறைவான விலை செடான் கார் மாடலாக ஏ க்ளாஸ் லிமோசின் என்ற புதிய மாடலை வரும் 25ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ். சில தினங்களுக்கு முன் இந்த காரை கோவாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த காரின் சாதக, பாதக விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

விசேஷ டிசைன்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், உலகின் மிகச் சிறந்த ஏரோடைனமிக்ஸ் தத்துவம் கொண்ட கார் மாடலாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் டிராக் கோ எஃபிசியன்ட் மதிப்பு சிடி 0.22 என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், காற்றை கிழித்துச் செல்லும் திறனில் இந்த கார் மிகச் சிறப்பானதாக இருப்பதால், எரிபொருள் சிக்கனம் மற்றும் செயல்திறனில் வாடிக்கையாளர்களை கவரும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புற டிசைன்

முன்புறத்தில் மெல்லிய எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் அதனுடன் கூடிய எல்இடி பகல்நேர விளக்குகள் இந்த காரை பிரிமீயம் மாடலாக காட்டுகிறது. பென்ஸ் நிறுவனத்தின் லோகோவுடன் கூடிய பாரம்பரிய க்ரில் அமைப்பு வசீகரமாக இருக்கிறது. க்ரோம் கம்பி ஒன்று க்ரில் அமைப்புக்கு அலங்காரமாக உள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் 17 அங்குல அலாய் சக்கரங்கள் சட்டென கவனத்தை ஈர்க்கிறது. அலாய் சக்கரங்களின் ஸ்போக்குகளுக்கு இடையில் கருப்பு வண்ண அலங்கார பாகம் வசீகரத்தை கூட்டுகிறது. அத்துடன், காற்று உராய்வால் ஏற்படும் தடங்கலை தவிர்த்து, ஏரோடைனமிக்ஸை அதிகப்படுத்துவதற்கும் உதவுகிறது. இரட்டை வண்ண ரியர் வியூ மிரர்கள், ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகளை இணைக்கும் வகையிலான வலிமையான ஷோல்டர் லைன் ஆகியவை காருக்கு சிறப்பான வசீகரத்தை வழங்குகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

பின்புறத்தில் பூட்ரூம் மூடிக்கான லிப் ஸ்பாய்லர், பிளவுபட்ட அமைப்புடன் ஸ்பிளிட் எல்இடி டெயில்லைட்டுகள், க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட புகைப்போக்கி குழல்கள் சிறப்பு சேர்க்கின்றன. இதன் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் தனித்துவமான டிசைனில் கவர்கின்றன. பின்புற பம்பரில் க்ரோம் கம்பி ஒன்றும் கொடுக்கப்பட்டு இருப்பது பிரிமீயம் மாடலாக காட்ட துணை நிற்கிறது. பூட்ரூம் மூடியில் பென்ஸ் லோகோ மற்றும் அதற்குள் ரியர் வியூ கேமராவும் இடம்பெற்றுள்ளன. மொத்ததில், வெளிப்புற டிசைன் மிகவும் கவரும் வகையில் இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர்

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் இன்டீரியர் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் என்பது தெரிந்ததே. இது குறைவான விலை கார் என்பதற்காக மெர்சிடிஸ் பென்ஸ் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. வழக்கம்போல் மிக மிக கவர்ச்சியாகவே இருக்கிறது. இந்த காரின் இன்டீரியர் அர்டிகோ பிளாக் மற்றும் அர்டிகோ மெஷியாட்டோ பீஜ் என்ற இரண்டு வண்ணத் தேர்வுகளில் வழங்கப்படும். சாஃப்ட் டச் பிளாஸ்டிக் பாகங்களுடன் டேஷ்போர்டு, கதவுகள், சென்டர் கன்சோல் ஆகியவை மிகவும் சிறப்பாக உள்ளது. அத்துடன், அலங்கார மரத்தகடுகளும் பொருத்தப்பட்டு இருப்பது இந்த காரின் மதிப்பை உயர்த்துகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டேஷ்போர்டு

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் டேஷ்போர்டில் ஒரே அமைப்பில் இரண்டு மின்னணு திரைகள் கொடுக்கப்படுகின்றன. தலா 10.25 அங்குலத்திலான இந்த இரண்டு திரைகளில் ஒன்று தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனமாகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டராகவும் செயல்படும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்

இதில், இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தின் தொடுதிரை இயக்குவதற்கு மிகவும் சிறப்பாக உள்ளது. தொடுதிரை மட்டுமின்றி, ஸ்டீயரிங் வீலில் உள்ள டச்பேடு மூலமாகவும், சென்டர் கன்சோலில் உள்ள டச்பேடு மூலமாகவும் இயக்குவதற்கான வசதிகள் உள்ளன. இது மிகவும் சிறப்பான விஷயமாக கூறலாம். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக MBUX என்ற வாய்ஸ் கமாண்ட் வசதி மூலமாகவும் கட்டுப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதர வசதிகள்

எம்பியூஎக்ஸ் வாய்ஸ் அசிஸ்ட் வசதி மூலமாக பல்வேறு வசதிகளை குரல் வழி கட்டளை மூலமாக பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மேலும், மெர்சிடிஸ் மீ என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதியையும் பெறலாம். காரை வெளியில் இருந்தபடியே ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக பூட்டி திறப்பதற்கான வசதி, காரின் முக்கிய பாகங்கள் இயக்கம் மற்றும் ஜியோ ஃபென்சிங் எனப்படும் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்ல முடியாத வகையில் கட்டுப்படுத்தும் வசதிகள் உள்ளன. அலெக்ஸா மற்றும் கூகுள் ஹோம் சாதனங்கள் மூலமாக ரிமோட் முறையில் கட்டுப்படுத்தும் சில முக்கிய வசதிகளும் உள்ளது நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் விஷயமாக இருக்கிறது.

இந்த காரில் எம்பியூஎக்ஸ் அசிஸ்ட் மட்டுமின்றி, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை வயர்லெஸ் முறையில் ஸ்மார்ட்ஃபோனுடன் இணைக்கும் வசதி உள்ளது. 12 ஸ்பீக்கர்களுடன் கூடிய பர்ம்ஸ்டெர் நிறுவனத்தின் ஆடியோ சிஸ்டம் உள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரையும் ஏராளமான வசதிகளை அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் விருப்பப்படி, திரையில் டயல்களின் அமைப்பை மாற்றிக் கொள்ள முடியும். டயல்களில் உள்ள விபரங்களை ஓட்டுனர் எளிதாக பார்க்க முடிகிறது. ஸ்டீயரிங் வீலின் வலது பக்கத்தில் உள்ள சுவிட்சுகள் மூலமாக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை கட்டுப்படுத்த முடியும்.

ஆம்பியன்ட் லைட் சிஸ்டம்

இந்த காரில் 64 வண்ணங்களில் ஒளிரும் வசதி கொண்ட ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இருக்கை மற்றும் முன்புறத்தில் இருக்கும் பயணியின் இருக்கைக்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் மற்றும் மெமரி வசதி உள்ளது. டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் சிறப்பானதாகவும், இதன் ஏசி சிஸ்டம் நல்ல குளிர்ச்சியையும் வழங்குகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஏசி வென்ட்டுகள்

டேஷ்போர்டில் உள்ள ஏசி வென்ட்டுகள் காரின் இன்டீரியரை மிகவும் பிரிமீயமாக காட்டுகின்றன. சென்டர் கன்சோல் கீழ் புறத்தில் வயர்லெஸ் சார்ஜருக்கான பேட், யுஎஸ்பி டைப் சி சார்ஜர், 12 வோல்ட் சாக்கெட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற இருக்கை பணிகளுக்காக ரியர் ஏசி வென்ட்டுகள் உள்ளன. ஸ்டோரேஜ் வசதியும் போதுமானதாக இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் எதிர்பார்ப்பது போலவே, இந்த காரிலும் இன்டீரியர் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சொகுசு, நடைமுறை பயன்பாட்டு அம்சங்கள்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் இருக்கைகள் மிக மிக சொகுசாக இருக்கின்றன. முன்புற இருக்கைகள் மிகவும் சிறப்பான வடிவமைப்புடன் இருக்கின்றன. முன் இருக்கைகளில் லம்பார் சப்போர்ட் சவுகரியத்தை கூட்டுவதற்கு ஏதுவாக அட்ஜெஸ்ட் செய்துகொள்ளலாம்.

பின் இருக்கைகள் போதிய சாய்மான அமைப்புடன் மிகவும் சொகுசாகவும், சவுகரியமாகவும் உள்ளன. அதேபோன்று, கால் வைப்பதற்கு போதுமான இடவசதி இருக்கிறது. அதேநேரத்தில், உயரமான பயணிகள் பின்புறத்தில் அமரும்போது, போதிய ஹெட்ரூம் இடவசதி இல்லாமல் சற்றே நெருக்கடியாக உள்ளது. கப் ஹோல்டர்களுடன் சென்ட்ரல் ஆர்ம் ரெஸ்ட் வசதியும் உள்ளது. மொத்தத்தில் நீண்ட தூர பயணங்களுக்கும் மிகச் சிறப்பான சவுகரியத்தை வழங்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின் இருக்கைகள் போதிய சாய்மான அமைப்புடன் மிகவும் சொகுசாகவும், சவுகரியமாகவும் உள்ளன. அதேபோன்று, கால் வைப்பதற்கு போதுமான இடவசதி இருக்கிறது. அதேநேரத்தில், உயரமான பயணிகள் பின்புறத்தில் அமரும்போது, போதிய ஹெட்ரூம் இடவசதி இல்லாமல் சற்றே நெருக்கடியாக உள்ளது. கப் ஹோல்டர்களுடன் சென்ட்ரல் ஆர்ம் ரெஸ்ட் வசதியும் உள்ளது. மொத்தத்தில் நீண்ட தூர பயணங்களுக்கும் மிகச் சிறப்பான சவுகரியத்தை வழங்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பூட்ரூம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் பெட்ரோல் மாடலில் 405 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும், டீசல் மாடலில் 395 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும் உள்ளன. காரின் பூட்ரூம் இடவசதி சிறப்பானதாக இருப்பதுடன், அகலமான மூடியுடன் பொருட்களை வைத்து எடுப்பதற்கு ஏதுவாகவும் உள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பரிமாணம்

இதன் ரகத்தில் மிகப்பெரிய கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது இந்த காரின் மிக முக்கிய விஷயமாக இருக்கிறது. இந்த காரின் பரிமாண விபரத்தை தொடர்ந்து பார்க்கலாம்.

Dimensions Mercedes-Benz A-Class Limousine
Length 4549mm
Width 1796mm
Height 1446mm
Wheelbase 2729mm
Boot Space 405-Litres
Ground Clearance 127mm
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின், செயல்திறன் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது. பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களையும் நாம் டெஸ்ட் டிரைவ் செய்தோம். பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இதே எஞ்சின்தான் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிஸான் கிக்ஸ் மற்றும் ரெனோ டஸ்ட்டர் டர்போ பெட்ரோல் மாடல்களில் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில், சற்றே கூடுதல் திறன் கொண்டதாக ட்யூனிங் செய்யப்பட்டு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுடன் இந்த காரில் வழங்கப்படுகிறது. இந்த பெட்ரோல் எஞ்சின் செயல்திறன் இந்த சொகுசு காருக்கு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதேநேரத்தில், போதுமானதாக கூற முடியும். குறைவான எஞ்சின் சுழல் வேகத்தில் போதுமான செயல்திறனை வழங்குகிறது. 1,500 ஆர்பிஎம்.,மில் டார்க் முழுமையாக வெளிப்படத் துவங்குவதால், நடுத்தர நிலைக்கு செல்லும்போது போதுமான செயல்திறனை வழங்குகிறது. அதிக சுழல் வேகத்தில், எஞ்சின் சற்று சிரமப்படுவதை உணர முடிகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டீசல் எஞ்சின் செயல்திறன்

இதன் டீசல் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 148 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சினை ஒப்பிடும்போது, டீசல் எஞ்சின் சிறப்பானதாக இருக்கிறது. செயல்திறன் ஏமாற்றம் தரவில்லை. 1,400 ஆர்பிஎம்.,மில் இருந்து 3,200 ஆர்பிஎம்., எஞ்சின் சுழல் வேகத்திற்கு இடையில் சிறப்பான செயல்திறனை உணர முடிகிறது. டீசல் எஞ்சின் குறைவான சுழல் வேகத்தில் அதிக டார்க்கை வழங்குவதால், பெட்ரோல் எஞ்சினைவிட டீசல் எஞ்சின் ஓட்டுவதற்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கியர்பாக்ஸ் செயல் தரம்

பெட்ரோல், டீசல் மாடல்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் உள்ளது. குறிப்பாக, பெட்ரோல் எஞ்சினின் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கியர் மாற்றம் மிகவும் மென்மையாக இருப்பதால் சிறந்த உணர்வை வழங்குகிறது. எஞ்சினின் செயல்திறனுக்கு ஏற்ற வகையில் கியர் மாற்றம் நடப்பது மிகவும் மென்மையான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது. டீசல் மாடலின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. இரண்டு கியர்பாக்ஸ்களிலும் பேடில் ஷிஃப்ட் மூலமாக மேனுவலாக கியர் மாற்றும் வசதி இருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டீயரிங் சிஸ்டம்

இந்த காரின் ஓட்டுதல் அனுபவத்தை அதிகரிப்பதில், ஸ்டீயரிங் சிஸ்டம் மிகச் சிறப்பானதாகவும், அதிக பங்களிப்பையும் வழங்குகிறது. மிக துல்லியமான திருப்புதல் திறனை வழங்குவதால், ஓட்டுனருக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது. வேகம் அதிகரிக்கும்போது போதுமான ஸ்டீயரிங் சிஸ்டம் அதிக இறுக்கத்தை வழங்குவதால், நம்பக்கையுடன் ஓட்ட முடிவதால், மன அழுத்தம் இல்லாத ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கையாளுமை

இதன் சேஸீ மற்றும் சஸ்பென்ஷன் கோவாவின் வளைவு, நெளிவுகள் மிகுந்த சாலைகளை எளிதாக கையாள துணை நின்றது. சிறப்பான கையாளுமையை கொண்ட கார் மாடலாக இருக்கிறது. அதேநேரத்தில், வேகத்தை குறைக்காமல் மோசமான வளைவுகளில் திருப்பும்போது லேசான பாடி ரோல் ஏற்படுவதை உணர முடிகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவிங் மோடுகள்

இந்த காரில் டைனமிக் செலக்ட் சிஸ்டம் மூலமாக காரின் இயக்கம், ஓட்டுதல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வசதி உள்ளது. ஈக்கோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் இன்டிவிஜுவல் என நான்கு டிரைவிங் மோடுகள் உள்ளன. இதில், எஞ்சின் செயல்திறன், ஸ்டீயரிங் சிஸ்டத்தின் இயக்கம் மற்றும் கியர்பாக்ஸ் இயக்கத்தில் மாறுதல்களை வழங்கும்.

ஈக்கோ மோடில் வைத்து இயக்கும்போது அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடிவதுடன், ஸ்டீயரிங் சிஸ்டம் மிக இலகுவாக உள்ளது. ஸ்போர்ட் மோடில் வைத்து இயக்கும்போது, ஸ்டீயரிங் சிஸ்டம் இறுக்கமாக மாறுவதுடன், பிக்கப் அருமையாக மாறிவிடுகிறது. ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் மோடுகளுக்கு இடையிலான ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் எஞ்சின் செயல்திறனை வழங்குகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிரேக் சிஸ்டம்

இந்த கார் மிகச் சிறப்பான பிரேக் சிஸ்டத்தை பெற்றுள்ளது. பிரேக் பிடிக்கும்போது அதிக நம்பிக்கையான உணர்வை வழங்குகிறது. இந்த காரில் எமெர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட் வசதியும் உள்ளது. இந்த காரின் பாதுகாப்பிற்கு இந்த பிரேக் சிஸ்டம் நிச்சயமாக துணை நிற்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மைலேஜ்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் பெட்ரோல் மாடல் லி்டருக்கு 17.5 கிமீ மைலேஜையும், டீசல் எஞ்சின் லிட்டருக்கு 21.35 கிமீ மைலேஜையும் வழங்கும். அதேநேரத்தில், குறைவான நேரமே இந்த இரண்டு மாடல்களையும் ஓட்டியதால், நடைமுறையில் இந்த காரின் மைலேஜ் விபரங்களை முழுமையாக பெற முடியவில்லை. ஆனால், நடைமுறையிலும் வாடிக்கையாளர்களின் பாக்கெட்டை பதம் பார்க்காத வகையில் சிறப்பான மைலேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முக்கிய வசதிகள்

  • எல்இடி விளக்குகளுடன் ஹெட்லைட், பகல்நேர விளக்குகள், டெயில் லைட் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள்
  • 17 அங்குல டியூவல் டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள்
  • லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி
  • 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • 10.25 அங்குல டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ருமென்ட் க்ள்ஸ்ட்டர்
  • 64 வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம்
  • ஓட்டுனர் மற்றும் கோ பாசஞ்சர் இருக்கைகளுக்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி
  • டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல்
  • பானரோமிக் சன்ரூஃப்
  • எம்பியூஎக்ஸ் வாய்ஸ் அசிஸ்ட்
  • அலெக்ஸா மற்றும் கூகுள் ஹோம் இன்டகிரேஷன்
  • புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

    பாதுகாப்பு வசதிகள்

    • 7 ஏர்பேக்குகள்
    • பிளைன்டு ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்
    • ஹில் ஹோல்டு கன்ட்ரோல்
    • டிராக்ஷன் கன்ட்ரோல்
    • இபிடியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
    • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்
    • எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்
    • எமெர்ஜென்ஸி பிரேக்கிங் அசிஸ்ட்
    • ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள்
    • ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
    • பெரிமீட்டர்- வால்யூமெட்ரிக் அலாரம்
    • மெர்சிடிஸ் மீ பிரேக்டவுன் மற்றும் கிராஷ் அசிஸ்ட்
    • புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

      வேரியண்ட் விபரம்

      புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் பெட்ரோல்(A200), டீசல்(A200d) மாடல்கள் அனைத்து வசதிகளுடன் கொண்ட டாப் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் அதிசெயல்திறன் மிக்க A35 AMG என்ற மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஏ35 ஏஎம்ஜி மாடலானது இந்தியாவிலேய அசெம்பிள் செய்து விற்பனை செய்யபபடும்.

      புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

      வண்ணத் தேர்வுகள்

      போலார் ஒயிட், மொஜவ் சில்வர், மவுண்டெயின் க்ரே, காஸ்மோஸ் பிளாக், டெனிம் புளூ மற்றும் இரிடியம் சில்வர் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இரிடியம் சில்வர் வண்ணத் தேர்வில் கருப்பு வண்ண இன்டீரியர் தேர்வும், பிற வண்ணத் தேர்வுகளில் பீஜ் வண்ண இன்டீரியரும் கொடுக்கப்படும்.

      புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

      எதிர்பார்க்கும் விலை

      புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் வரும் 25ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ரூ.40 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனத்தின் ஆரம்ப நிலை சொகுசு செடான் கார் மாடலாக நிலைநிறுத்தப்படும்.

      புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

      வாரண்டி

      புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காருக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த வாரண்டி திட்டம் வழங்கும். தவிரவும், எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸுக்கு 8 ஆண்டுகளுக்கான வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கான வாரண்டி திட்டமும் கூடுதல் கட்டணம் இல்லாமல் கொடுக்கப்பட உள்ளது. இந்த 8 ஆண்டுகளுக்கான வாரண்டி திட்டத்தை காரை விற்றால் புதிய உரிமையாளருக்கு மாற்றிக் கொள்ளலாம். இந்த காருக்கு சிறப்பு பராமரிப்புத் திட்டங்கள் மற்றும் சாலை அவசர உதவி திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

      புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

      போட்டியாளர்

      புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காருடன் நேரடியாக போட்டியும். இரண்டு கார்களுக்குமான சில முக்கிய அம்சங்களை கீழே உள்ள அட்டவணையில் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

      Specifications Mercedes-Benz A-Class Limousine BMW 2-Series Gran Coupe
      Engine 1.3-litre Turbo-Petrol / 2.0-litre Diesel 2.0-litre Turbo-Petrol / 2.0-litre Diesel
      Power 161bhp/ 148bhp 189bhp/ 188bhp
      Torque 250Nm/ 320Nm 400Nm/ 280Nm
      Transmission 7-Speed DCT/ 8-Speed DCT 7-Speed DCT/ 8-Speed DCT
      Starting Price* TBA** 40.40 Lakh
      புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் உண்மையிலேயே ஏ க்ளாஸாக இருக்கிறதா?... எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

      டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

      இந்தியாவில் ஆரம்ப ரக சொகுசு கார் மார்க்கெட் புதிய வரவுகளால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வுகளை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை சமரசமில்லாமல் நிறைவு செய்யும் அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கிறது. விலை குறைவான புதிய சொகுசு கார் வாங்கும் கனவுடன் இருப்பவர்களுக்கு புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் மிகச் சிறந்த தேர்வாக அமையும் என்று கூறலாம்.

Most Read Articles
English summary
Mercedes-Benz A-Class Limousine Review: The German luxury brand is all set to introduce its entry-level offering in the Indian market. The sedan will go on sale on March 25th in the country. Ahead of its launch, we have been driving the most aerodynamic production car in the streets of Goa. Does the A-Class meet the standards set by the luxury brand? Read more to find out!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X