சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட பென்ஸ் சி கிளாஸ் 220டி ஃபேஸ்லிஃப்ட் டீசல் வெர்சனை நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த புதிய பென்ஸ் சி220டி ஆடம்பர காரினை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஆடம்பர கார் தயாரிப்பில் மிகவும் புகழ் பெற்றது, குறிப்பாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சி கிளாஸ் 200டி மாடல் ஆடம்பர கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் மேம்படுத்தப்பட்ட சி கிளாஸ் 220டி காரினை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்தது. அதன் பின்னர் 2018ம் ஆண்டு இறுதியில் சி கிளாஸ் 220டி காரினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக விற்பனை செய்யப்படுகிறது.

சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பென்ஸ் சி கிளாஸ் 220டி ஃபேஸ்லிஃப்ட் டீசல் வெர்சனை நமது டிரைவ்ஸ்பார்க் குழு கர்நாடக மாநிலம் பெங்களுரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் டெஸ்ட் டிரைவ் செய்தது. இதில் காரின் செயல்திறன், டிசைன் மற்றும் தொழில்நுட்ப வேலைப்பாடுகள் குறித்த கண்டறிந்தோம்.

சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்:

மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி கார் இதன் முந்தைய மாடலை விட புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. மேம்படுத்தப்பட்ட சி220டி காரின் டிசைனில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் உழைப்பு இதில் தெளிவாக தெரிகிறது.இந்த காரின் முன்பக்கத்தில் மேம்படுத்தப்பட்ட பம்பர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் புதிய எல்இடி விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன மேலும் இதில் பகல் நேர விளக்குகள் ஹெட்லாம்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் பக்கவாட்டில் காரின் மிரர்கள் சுற்றிலும் கிரோம் கோட்டிங் செய்யபட்டுள்ளது. மேலும் இதில் 17 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கத்தில் சி வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் 480 லிட்டர் பூட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பூட் எலக்ட்ரானிக் முறையில் திறந்து மெனுவலாக மூடும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளிக்கும்.

சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டிரியர்:

மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி காரின் உள்ளே டேஷ்போர்ட் பியானோ ப்ளாக் வண்ணத்தில் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் டேஷ்போர்ட்ரில் உள்ள மரதினால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் காருக்கு கிளாசிக் லுக்கினை தருகிறது. இதில் உள்ள 7 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்பிலே வசதியை கொண்டுள்ளது. இருப்பினும் இதில் டச்ஸ்க்ரீன் வசதி இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. காரின் ஸ்டேரிங் வீலில் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தினை கண்ட்ரோல் செய்யவதற்கான பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது.

சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

என்ஜின் மற்றும் செயல்திறன்:

மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி காரின் நவீன 2லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட ஒஎம்654 பிஎஸ்6 டீசல் என்ஜின் அதிகபட்சமாக 193 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் 9 ஸ்பீட் டூயல் கிளட்ச் கொண்ட 9ஜி ட்ரோனிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி இந்த டீசல் என்ஜினில் மட்டுமே விற்பனைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சி220டி காரின் ஸ்டேரிங் வீல் கையாள்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது. இருப்பினும் ஸ்டேரிங் வீல் பழைய மடலை விட சற்று கனமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.இதில் பழைய சி220டி காரில் உள்ள 18இன்ச் வீலை மாற்றி 17இன்ச் வீல் பொருத்தியுள்ளனர். இதனால் சாலைகளில் சவுகரியமான பயணத்தை பெற முடிகிறது. இருப்பினும் இதில் உள்ள சஸ்பென்ஷன் ஏமாற்றத்தை அளிக்கிறது.

சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கரடு முரடான சாலைகள் அல்லது மேடு பள்ள சாலைகளில் பயணிக்கும் பொது பின் சீட்டில் உள்ள பயணிகளை குலுங்க வைக்கிறது. மேலும் காரில் அதிக அளவு அதிர்வுகளை உணர முடிகிறது.நகர்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சி220டி சொகுசான பயண அனுபவத்தை தருகிறது. இதன் 17இன்ச் வீல்கள் வளைவுகளில் திருப்புவதற்கு எளிதாக உள்ளது. மொத்தத்தில் இதை ஆடம்பர கார் ஆப்ரோடு பயத்திற்கு சற்று ஏற்றது அல்ல என தெரிகிறது.

சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தீர்ப்பு:

ஆடம்பர சொகுசு காரான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி ஆடம்பர கார் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். சக்தி வாய்ந்த என்ஜின். மேம்படுத்தப்பட்ட கியர் பாக்ஸ் சவுகரியமான சீட்கள் என பல சிறப்புஅம்சங்கள் இந்த காரில் உள்ளது. பென்ஸ் சி கிளாஸ் 220டி ஃபேஸ்லிஃப்ட் டீசல் கார் இந்தியாவில் எக்ஸ்ஷோரூம் விலையில் 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் பிஎம்டபிள்யூ 3 சீரியஸ் மற்றும் ஆடி ஏ4 கார்களுடன் போட்டியிடுகிறது. பழைய மாடலை விட பெரிதும் மேம்படுத்தப்பட்ட புதிய 220டி ஃபேஸ்லிஃப்ட் டீசல் கார் நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக இருக்கும்.

Most Read Articles
English summary
Mercedes Benz C220D Review: Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X