இதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்! ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? கார் விமர்சனம்

இந்தியாவின் முதல் மின்சார காரும், பென்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார காருமான இக்யூசி400 4மேடிக் காரை நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் முதல் பரிசோதனை ஓட்டம் செய்தனர். அப்போது எங்களுக்கு கிடைத்த தகவலை காரின் விமர்சனமாக இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் கார்குறித்த சிறப்பு தகவல்களைத் தொடர்ந்து காணலாம்.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

உலகம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள், அதன் கவனத்தை மின்வாகன தயாரிப்புகளின் பக்கம் திருப்பியுள்ளன. ஆரம்பநிலை வாகன உற்பத்தி நிறுவனங்கள் முதல் உலக புகழ்பெற்ற வாகன நிறுவனங்கள் வரை இந்த பணியில்தான் ஈடுபட்டு வருகின்றன.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

அந்தவகையில், உலக புகழ்பெற்ற மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் முதல் மின்சார காராக இக்யூசி 400 4 மேட்டிக் எனும் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே, இந்தியாவில் சொகுசு வசதிகளுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் மின்சார காராகும். இதனை கடந்த 9ம் தேதி அன்று அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இந்த நிலையிலேயே இந்த மின்சார எஸ்யூவி சொகுசு காரின் சிறப்பு வசதிகள் மற்றும் எஞ்ஜின் திறன் பற்றிய தகவல்களை ஆராயும் விதமாக நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் டெஸ்ட் டிரைவ் செய்தனர். அப்போது, அக்கார் பற்றி கிடைத்த பல்வேறு தகவல்களையே டெஸ்ட் டிரைவ் விமர்சனமாக இந்த தொகுப்பில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

புதிய பென்ஸ் காரின் தோற்றம்:

பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே கவர்ச்சியான தோற்றத்திற்கு பெயர்போனவை ஆகும். இதை பரைசாற்றும் வகையிலேயே இந்த புதுமுக மின்சார கார் இக்யூசி 400 மாடலும் இருக்கின்றது. வெளி மற்றும் உட்புறத் தோற்றத்தில் பல்வேறு வசீகரிக்கும் அம்சங்களை இது இடம் பெற்றிருக்கின்றது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

சொகுசு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு பெயர்போன ஜிஎல்சி சொகுசு கார்களைத் தழுவியே பென்ஸ் நிறுவனம் இக்கார் வடிவமைத்திருக்கின்றது. எனவேதான், அந்த கார்களில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு சிறப்பு வசதிகள் புதிய இக்யூசி400-லும் இடம்பெற்றிருக்கின்றன.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

அந்தவகையில், காரின் முகப்பு பகுதியில் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நவீன ரக எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹெட்லேம்பிற்கு மேல் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் நீல நிற அக்செண்ட்கள் இக்யூசி400-க்கு மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றது. இது இக்யூசி காரை மின்சார கார் என்பதை வெளிக்காட்டும் பென்ஸ் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இதைத்தொடர்ந்து, முறைக்கும் பார்வையை வெளிப்படுத்தக்கூடிய புருவ அமைப்புடைய கார்னரிங் மின் விளக்குகள் நீல நிற அக்செண்டின் மேல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் இரவு நேரத்தில் ஒளிரும்போது இக்யூசி மின்சார காருக்கு மிகவும் விநோதமான மற்றும் ரம்மியமான லுக்கை வழங்குகின்றது. இது நாம் எதிர்பார்த்திராத அட்டகாசமான தோற்றமாக உள்ளது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இந்த மின்விளக்குகள் அனைத்தும் புரஜெக்டர் ரகத்திலானவையாகும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கவர்ச்சியான மேலும் மெருகேற்றும் வகையில் முகப்பு பகுதியில் அமைந்திருக்கும் கிரில் இருக்கின்றது. இதில், கருப்பு மற்றும் குரோம் பூச்சுடன் காணப்படுகின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், இந்த கிரில், இசைக் கருவி பியானோவைப் போன்று காட்சியளிக்கின்றது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இத்தகைய அம்சங்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார்களில் மட்டுமே நம்மால் காண முடியும். அந்தவகையிலேயே இந்த புதுமுக எஸ்யூவி ரக மின்சார காரில் பென்ஸ் வழங்கியுள்ளது. பம்பர், காற்றை மிக சிறப்பாக காரின் அடிப்பகுதியில் கடத்தும் வகையில் அதிகளவில் வெண்டுகளை இது பெற்றிருக்கின்றது. இதுமட்டுமின்றி, பம்பரின் இரு முனைகளிலும் தனி தனியாக ஏர் வெண்டுகள் நிறுவப்பட்டிருக்கின்றன.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

பக்கவாட்டு பகுதி, இந்த பகுதியை கவனிக்கையில் நம் அனைவரின் பார்வையையும் கவரும் வகையில் மல்டி ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல் உள்ளது. இது 20 இன்ச்சிலானது. மின்சார காருக்கு மிகவும் அட்டகாசமான தோற்றத்தை வழங்குவதில் இந்த வீல்களின் பங்கும் மிக முக்கியமானதாக உள்ளது. இந்த வீலில் மொத்தம் ஸ்போக்குகள் உள்ளன. அதில், ஐந்து ஸ்போக்குகள் நீல நிறத்திலும், மீதமுள்ள ஐந்து ஸ்போக்குகள் சில்வர் நிறத்தில் காட்சியளிக்கின்றன.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

திரும்பும் திசையை உறுதி செய்யும் இன்டிகேட்டர் மின் விளக்குகள் காரின் உடல்பகுதியுடனேயே பொதிந்து காணப்படுகின்றது. இதனைச் சுற்றி கருப்பு நிற பேனல் உள்ளது. இதில், காரின் மாடலை பிரதிபலிக்கும் வகையில் இக்யூசி எனும் எழுத்துக்கள் நீல நிறத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த பேனலில் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராக்களும் இடம்பெற்றிருக்கின்றது. இது பார்க்கிங்கின்போது உதவும்.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

பின் பகுதி பார்வை, கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை வழங்கக்கூடிய லைன்கள் மிகக் குறைவாகவே தெண்படுகின்றது. இது, ஜிஎல்சி தயாரிப்பு என்பதை பரைசாற்றும் வகையில் உள்ளது. ஜிஎல்சி மாடல்களில் பெரியளவில் லைன்களைப் பார்க்க முடியாது. அதேசமயம், கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் பின் பகுதி சிவப்பு மின் விளக்கு அமைந்துள்ளது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

பட்டையான இழை போன்ற வடிவத்தில் அது காணப்படுகின்றது. பின் பகுதியின் இரு முனைகளையும் முழுமையாக தொட்டுக் கொண்டிருக்கின்ற வகையில் அது உள்ளது. இதற்கு கீழே, மையப்பகுதியில்தான் பென்ஸ் லோகோ நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இக்யூசி 400 மற்றும் 4 மேட்டிக் பேட்ஜ்களும் லோகோவின் நேர் கோட்டில் ஒட்டப்பட்டிருக்கின்றது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

பின் பகுதி பம்பர், இதில் குரோம் லைன்களை நம்மால் காண முடிகின்றது. இந்த குரோம் லைன்களில்தான் பொய்யான எக்சாஸ்ட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மின்சார கார் என்பதால் இதில் எக்சாஸ்ட் இருக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

காரின் உட்பகுதி மற்றும் அம்சங்கள்:

இக்யூசி400 காரின் வெளிப்புறத்திற்கு எப்படி பல்வேறு சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றதோ, அதேபோன்று, தனிக் கவனத்தை காரின் உட்பகுதிக்கும் பென்ஸ் நிறுவனம் செலுத்தியிருக்கின்றது. இதை வெளிப்படுத்தும் வகையில் வெளிப்புறத்தைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பு அம்சங்களை காரின் உட்பகுதியில் நம்மால் காண முடிகின்றது. இந்த காரின் கேபின் அதிக இடவசதி கொண்டது மற்றும் பெரியது ஆகும்.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

எனவே சொகுசு வசதிக்கு சற்றும் குறைச்சலின்றி இது காணப்படுகின்றது. குறிப்பாக, மேற்கூரையில் வழங்கப்பட்டிருக்கும் சன் ரூஃப் காரை மேலும் காற்றோட்டமானதாக மாற்றுகின்றது. இதன் டேஷ்போர்ட் ஒற்ற நிறத்தில் காட்சியளிக்கின்றது. இதற்கு கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஏசி வென்டுகளுக்கு புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. மையப்பகுதியில் இருக்கும் ஏசி வென்ட் கிடைமட்டமாகவும், பக்கவாட்டுகளில் செங்குத்தாகவும் உள்ளன.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

மேலும், ஏசி வென்ட்களுக்கு சுற்றிலும் தாமிரத்தினாலான கவர் போன்ற பேனல் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது டாஷ்போர்டுக்கு நல்ல மாறுபாட்ட தோற்றத்தைக் கொடுக்கின்றது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஒற்றை திரையைக் கொண்டதாக உள்ளது. இதனையே இரண்டாக பிரித்து பென்ஸ் நிலை நிறுத்தியுள்ளது. இதில், ஒரு பாதி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டராகவும், மறு பாதி இன்ஃபோடெயின்மெண்டாகவும் பயன்படும்.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இவையிரண்டும் ஒரே நீளமான திரையிலேயே உள்ளன. எனவே, பல்வேறு தகவல்களை ஒற்றை திரையின் வாயிலாக இக்யூசி 400 மின்சார காரின் உரிமையாளரால் பெற முடியும். இதில், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகளைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், மெர்சிடிஸ் எம்பியூஎக்ஸ் எனும் தொழில்நுட்ப வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

ஆகையால், பிற வாகனங்களில் இருப்பதைக் காட்டிலும் பென்ஸ் இக்யூசி 400 காரில் கூடுதல் சிறப்பு வசதிகளை பெற முடியும். இத்துடன், மியூசிக் சிஸ்டத்திற்காக பர்மெஸ்டர் எனும் சவுண்ட் சிஸ்டத்தை பென்ஸ் வழங்கியுள்ளது. ஸ்டியரிங் வீல், இதற்கு லெதர் போர்வை போர்த்தப்பட்டிருக்கின்றது. இது அதிக பிடிமானத்தை ஓட்டுநருக்கு வழங்கும். இத்துடன், ஸ்டியரிங் வீலில் பல்வேறு கன்ட்ரோல் பொத்தான்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

ஸ்டியரிங் வீலின் டெலிஸ்கோபிக் மற்றும் டில்டை எலெக்ட்ரானிக்கலாக மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இருக்கைகள், இருக்கைகளின் இரு நிற தோற்றத்திற்காக வெவ்வேறு வண்ணம் கொண்ட லெதர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, கருப்பு மற்றும் நீலம் நிறம் கொண்ட லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், 1886 எனும் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. பென்ஸ் நிறுவனத்தின் வரலாற்றைக் குறிக்கும் வகையில் இந்த எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

மேலும், இந்த இருக்கைகளில் மசாஜ் வசதியையும் பென்ஸ் வழங்கியுள்ளது. டிரைவர் மற்றும் கோ-பயணி இருக்கைகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டிருக்கின்றன. இதனை இன்ஃபோடெயின்மெண்ட் திரை வாயிலாக கன்ட்ரோல் செய்ய முடியும். 4+1 இருக்கை அமைப்பை இக்கார் கொண்டிருக்கின்றது. பின் பகுதியில் மூவரும், முன்னிருக்கையில் ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவரும் அமரும் வகையில் இருக்கை வழங்கப்பட்டிருக்கின்றது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இத்துடன், தொழில்நுட்ப வசதியாக மூன்று விதமான க்ளைமேட் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது காரை வெகு விரைவில் கூலாக மாற்ற உதவும். இத்துடன், செல்போன் சார்ஜ் வசதி, கோட் ஹேங்கர் உள்ளிட்ட வசதிகளும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இக்காரின் பூட் ஸ்பேஸ் 500 லிட்டராக உள்ளது. பின் பக்க இருக்கையை அட்ஜெஸ்ட் செய்தோமேயானால் இதை மேலும் அதிகரிக்கச் செய்ய முடியும்.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

எஞ்ஜின் திறன் மற்றும் கையாளுதல்:

மெர்சிடிஸ் பென்ஸ் 400 காரின் அதீத திறனுக்காக இரு மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு தேவையான மின்னோட்டத்தை 80kwh உடைய பேட்டரிகள் வழங்குகின்றன. இந்த பேட்டரிகளின் காரின் அடிப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மின் மோட்டார்கள் அதிகபட்சமாக 405 பிஎச்பி மற்றும் 765 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

மேலும், இக்காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 350 கிமீ ஆகும். இதுமட்டுமின்றி, இக்காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 470 கிமீ தூரம் வரை பயமின்றி பயணிக்கலாம். இது ஓர் 2.5 டன் மின்சார கார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் பிக்-அப் ஸ்பீடும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. ஆம், இக்கார் வெறும் 5.1 செகண்டுகளிலேயே மணிக்கு 0-100 கிமீ எனும் வேகத்தைத் தொடுகின்றது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இது சூப்பர் ஃபாஸ்ட் வேகம் ஆகும். இக்காரில் துடுப்பு மாற்றிகள் (paddle shifters) கொடுக்கப்படவில்லை. இருப்பினும், இதற்கு பதிலாக குறைந்த, நடுத்தர மற்றும் உயர் என கட்டுபடுத்தக்கூடிய ஆப்சன் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், எஞ்ஜின் விஷயத்தில் இந்த கார் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக, பிக்-அப் திறனில் எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு இணையானதாக உள்ளது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

மின் மோட்டார்கள் நேரடியாக சக்கரங்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால் எந்தவொரு அசௌகரியமான உணர்வையும் நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை. அதேசமயம், ஓட்டுநராக உங்கள் கையில்தான் அனைத்தும் இருக்கின்றது. இதற்காக ஈகோ, கம்ஃபோர்ட், டைனமிக் மற்றும் தனிப்பட்ட ஆகிய நான்கு விதமான ரைடிங் மோட்களை வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இதில், ஈகோ மோடில் நீங்கள் பயன்படுத்தினால் அதிக ரேஞ்ஜை பெற முடியும். ஆனால், வேகம் மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவற்றின் பயன்பாடு மிகக் குறைந்து காணப்படும். டைனமிக் மோட், வேகம் மிருதுவானதாக இருக்கும், ஸ்டியரிங் சற்று கனமானதாக இருக்கக்கூடும். கம்ஃபோர்ட் மோட், இந்த மோடில் உங்களால் காரை எஞ்ஜாய் செய்து இயக்க முடியும். மேலும், நல்ல பேலன்ஸையும் பெற முடியும். இந்த மோடை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதுமாதிரியான அனுபவத்தை பிற மோட்களும் வழங்குகின்றன.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இக்காரின் சஸ்பென்ஷன் விவகாரத்திலும் அதிக கவனத்தைச் செலுத்தியிருக்கின்றது. இக்யூசி400 மின்சார காரின் முன் பக்கத்தில் வழக்கமான காயில்களும், பின் பின்பக்கத்தில் ஏர் சஸ்பென்ஷனையும் அது பொருத்தியிருக்கின்றது. இது காரில் அமர்ந்து செல்லும்போது பள்ளம், மேடுகளில் செல்லும் உணர்வை துளியளவும் பயணிகளுக்கு வழங்காது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

அதேசமயம், முன்னிருக்கையாளர்களைக் காட்டிலும் பின்னிருக்கையாளர்களுக்கு அதிகமான சொகுசு பயண அனுபவத்தை இந்த சஸ்பென்ஷன் அமைப்பு வழங்குகின்றது. இக்காரின் கிரவுண்ட் 142 மிமீ-ஆக உள்ளது. எனவே, இந்தியாவின் குண்டும், குழியுமான சாலைகளை இது எளிதில் சமாளிக்கும் என கூறப்படுகின்றது. மேலும், சொகுசான பயண அனுபவத்தை வழங்க இதுவே போதுமானது என கருதப்படுகின்றது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

டயர், 255/45/R20 இந்த ரகத்திலான டயர்களே பென்ஸ் இக்யூசி கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, ஸ்டியரிங்கின் உடனடி கட்டளைக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும். மேலும், சாலையில் அதிக கிரிப்புடன் செயல்படும். இந்த கார் மின்சார வாகனம் என்பதால் இதில் எஞ்ஜின் சப்தம் பெரியளவில் இருக்காது. எனவே, காருக்குள் இருக்கும்போது எந்தவொரு ஒலியும் பயணிகளை தொந்தரவு செய்யாது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

ஆகையால், மிகவும் அமைதியான பயணத்தை இந்த காரில் நம்மால் இதில் எதிர்பார்க்க முடியும். இக்காரை சார்ஜ் செய்வதும் மிக சுலபம் ஆகும். இதில் பன்முக சார்ஜ் திறன் வழங்கப்படுகின்றது. வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்யும் வசதி, ஏசி மின்சாரத்தால் சார்ஜ் செய்யும் வசதி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜ் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதில், வழக்கமான சார்ஜிங்போது பேட்டரியை முழுமையாக்க 20 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

அதேசமயம், ஏசி சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் 10 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் முறை மூலம் செய்யும்போது வெறும் 90 நிமிடங்களியே மின்சாரக் காரை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். இது மிக மிக வேகமான சார்ஜாகும் திறனாகும். இதுபோன்ற பல்வேறு திறன்களைக் கொண்ட மின்சார காராகவே பென்ஸ் இக்யூசி400 இந்தியாவில் களமிறங்கியுள்ளது.

இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார்... ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் விமர்சனம்...

மேற்கூறிய ஒட்டுமொத்த தகவல்களின் அடிப்படையில் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி 400 4மேட்டிக் மின்சார காருக்கு நாங்கள் நான்கு நட்சத்திர ரேட்டிங்கை வழங்குகின்றோம். இதையே எங்களின் முதல் பரிசோதனை ஓட்டத்தில் இக்கார் பெற்றிருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 99.3 லட்சங்கள் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz EQC 400 4MATIC Review (First Drive): The Company's First All-Electric SUV. Read In Tamil.
Story first published: Thursday, October 29, 2020, 13:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X