சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம்... மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ

மெர்சிடீஸ் நிறுவனம் முழுமையான சொகுசு எலெக்ட்ரிக் காராக இக்யூஎஸ் 580 காரை உருவாக்கியுள்ளது. இந்த கார் எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தைத் தான் இங்கே காணப்போகிறோம்.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

ஜெர்மன் கார் தயாரிப்பாளரான மெர்சிடீஸ், சொகுசு மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த கார்களை தயாரிப்பதில் உலகின் தலை சிறந்த நிறுவனம். இந்நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது இக்யூஎஸ் காரை காட்சிப்படுத்தியபோது இது எலெக்ட்ரிக் சொகுசு செடான் செக்மெண்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போவது நன்றாக தெரிந்தது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

மெர்சிடீஸ் நிறுவனம் இக்யூஎஸ் காரில் தனது வழக்கமான கம்பஷன் இன்ஜினை விட்டு விட்டு முற்றிலும் எலெக்ட்ரிக் காராக உருவாக்கியுள்ளது. இந்த காரின் உட்புற கட்டமைப்பு எல்லாம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் வருவது போல நாம் எதிர்பாராத பல தொழிற்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் கார்களில் உள்ள அம்சங்களை அப்படியே இவி செக்மெண்டில் வைத்தால் அது தான் இக்யூஎஸ் என்று சொல்லிவிடலாம் என்று கருதப்பட்டது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இப்படியாக பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய மெர்சிடீஸ் இக்யூஎஸ் கார் உண்மையில் இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்ததா? இதை டெஸ்ட் செய்வதற்காக புனோவில் இந்த காரை எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழு ஓட்டிப்பார்த்தது. இதன் ரிவியூவை தான் இங்கே காணப்போகிறோம்.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

வெளிப்புறக் கட்டமைப்பு

மெர்சிடீஸ் நிறுவனம் இந்த இக்யூஎஸ் காரில் தனது வழக்கமான 3 பாக்ஸ் டிசைனை தூக்கித் தூர வீசிவிட்டு ஸ்மூத்தி ஏர் கட்டிற்காக லிஃப்ட் பேக் டிசைனில் காரை உருவாக்கியுள்ளது. இந்த இக்யூஎஸ் கார் பெரியதாக இருந்தாலும் இந்த பாடி வடிவமைப்பு ஸ்மூத்தாக இருக்கும் இது இந்த காரின் கோஎஃபிஷியன்ட் டிராக்கின் அளவை குறைத்துள்ளது. இந்த காருக்கு கோஎஃபிஷியன்ட் டிராக் 0.20 Cd தான் உள்ளது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 காரில் முகப்பு பகுதியைப் பொருத்தவரை ஆங்குலர் ஹெட்லட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இருபக்க ஹெட்லைட்களும் சிறிய லைட் பாரால் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்தாக கருப்பு நிற பேனல் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிரிலில் வழக்கம் போல பென்ஸ் நிறுவனத்தின் 3 பாயிண்ட் லோகா கொடுக்கப்பட்டுள்ளது. பேனலில் அகல வாக்கில் லிட்டிங் புரோஃபைலுடனும் லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. பம்பரின் கீழ் மையப்பகுதியில் ஒரு வென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது இவி மோட்டார் கூலாவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த இக்யூஎஸ் காரின் பானட் அமைதியாக இயங்கும் திறன் கொண்டது. இதை மெர்சிடீஸ் டெக்னீஷியனை தவிர வேறு யாராலும் திறக்க முடியாது. பானட்டிற்கு மேலே ஸ்லோப்பியான விண்ட் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான ஏரோடைமிக்ஸிற்காக அதிக ஸ்லோப் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

பானட் முழுமையாக மூடப்பட்டுள்ளதால் இந்த காரின் இடது பக்க ஃபென்டரில் விண்ட் ஸ்கிரீன் வாஷரை நிரப்புவதற்கு லிட் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டைப் பொருத்தவரை இந்த இக்யூஎஸ்580 காரில் 20 இன்ச் அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. டயர்களை பொருத்தவரை பைரலி டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கதவுகள் ஃப்ரேம்லெஸ் கதவுகளாக வழங்கப்பட்டுள்ளன.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

மெர்சிடீஸ் இக்யூஎஸ் காரின் பின்பக்க செக்ஷனில் பெரிய லைட் பார் வழங்கப்பட்டுள்ளது. இது இந்த காருக்கு லாக்ஷரி செடான் லுக்கை கொடுக்கிறது. பூட் பகுதியில் சிறிய ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பூட்டை திறக்க வேண்டும் என்றால் மையத்தில் உள்ள மெர்சிடீஸ் பேட்ஜை அழுத்தினால் பூட் திறக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

பின்பக்க விண்ட் ஸ்கிரீனும் ஸ்லோப்பாக வழங்கப்பட்டுள்ளது. இது போக பின்பக்க டிசைன் உயர்த்தப்பட்டுள்ளதால் அதிக பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது மொத்தம் 610 லிட்டர் கொள்ளளவுடன் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது கோஃல்ப் பேக்களை வைக்கும் அளவிற்குப் பெரியதாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கும் அதிக லக்கேஜ்களை கொண்டு செல்வதற்கும் ஏற்றவாறு வழங்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

உட்புறக் கட்டமைப்பு மற்றும் அம்சங்கள்

சூப்பர் ஹீரோ அயன் மேன் ரசிகரா நீங்கள், அப்ப உங்களுக்காகத் தான் இந்த காரின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக தொழிற்நுட்ப விரும்பிகளுக்கு இக்யூஎஸ் 580 கார் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கனவுகளை எல்லாம் நிறைவேற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 56 இன்ச் ஹைப்பர் ஸ்கிரீன் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது டேஷ் போர்டின் ஒரு எட்ஜிலிருந்து மற்றொரு எட்ஜை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

ஹைப்பர் ஸ்கிரீன் ஒரே பேன் கிளாஸில் இருந்தாலும் அதில் 3 விதமான டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 12.3 இன்ச் டிஸ்பிளே டிரைவருக்கும் மற்றொன்று முன்பக்கச் சீட்டில் உள்ள பயணியும் பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. நடுவில் 17.7 இன்ச் டச் ஸ்கிரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. HVAC கண்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர் ஸ்கிரீனின் கிராஃபிக்ஸிற்காக 8 கோர் பிராசஸர், 24 ஜிபி ரேம் ஆகியன வழங்கப்படுகின்றன.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த ஹைப்பர் ஸ்கிரினில் உள்ள 3 டிஸ்பிளேக்களும் மெர்சிடீஸ் MBUX உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இதில் சில சென்சார்கள் மற்றும் சில செயற்கை நுண்ணறிவு அற்புதங்களைச் செய்யக்கூடியது. நீங்கள் காரில்செல்லும் போது ஒரு ஸ்கிரினில் பயணிக்காக இருப்பவர்கள் இந்த ஸ்கிரினில் என்ன செய்து கொண்டிருந்தாலும் டிரைவர் அவருக்கான தகவல்களை அவரது ஸ்கிரீனில் பார்த்துக்கொள்ளலாம்.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த காரின் சென்டர் டிஸ்பிளே பெரியதாக வழங்கப்பட்டுள்ளது. இது எளிதாக நேவிகேட் செய்யும்படி கொடுக்கப்பட்டுள்ளது. இது போக காரில் உள்ள கேமராவின் வியூவை ரியல் டைமில் அதே நேரம் கேவிகேஷனை பயன்படுத்தும் போது தெரியும்படி செட் செய்து கொள்ள முடியும். இந்த கார் ஓட்டுபவர் இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் பிளே மூலம் அவரது செல்போனை இணைத்துக்கொள்ள முடியும்.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

மேலும் இந்த டிஸ்பிளே மேனுக்களை நேவிகேட் செய்ய ஸ்டியரிங் வீலில் கண்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வாய்ஸ் அசிஸ்டென்ஸ் வசதியும் இருக்கிறது. "ஹே மெர்சிடீஸ்" எனச் சொல்வதன் மூலம் வாய்ஸ் அசிஸ்டென்ஸை ஆக்டிவேட் செய்யலாம்.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த காரின் முன்பக்கப் பயணி சீட் நல்ல சொகுசு வசதிகளுடன் இரக்கிறது. பின்பக்க சீட் தான் இந்த இக்யூஎஸ் காரில் முக்கியமான அம்சமே. இங்கு 3 பேர் அமர்ந்து பயணிக்கலாம். ஆனால் நடுவில் ஆர்ம் ரெஸ்ட் எடுத்து விட்டால் இரண்டு பேர் தான் அமர முடியும். இந்த ஆர்ம் ரெஸ்டில் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை கண்ட்ரோல் செய்யும் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த காரின் பின்பக்கம் ஸ்லோப்பான ரூஃப் லைன் இருந்தாலும் காருக்குள் பின் சீட்டில் உயரமானவர்களும் அமரும் வகையில் உயரம் மற்றும் அவர்களுக்கு தேவையான முட்டி மற்று கால் வைப்பதற்கான இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடைக்கு கீழே சப்போர்ட் செய்யும்படியும் டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த காரில் உள்ள மற்றொரு முக்கியமான அம்சம் இதன் சன்ரூப் தான். இதற்கான கண்ட்ரோல்கள் பின்பக்கச் சீட்டில் இருப்பவர்கள் எளிதாக கண்ட்ரோல் செய்யும் இடத்தில் இருக்கிறது. இது இந்த மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் இருக்கிறது. இந்த காரில் 9 ஏர்பேக்ஸ் மற்றும் அடாஸ் சிஸ்டம் ஆகியன இருக்கிறது. இதை டெஸ்ட் செய்ய முடியவில்லை. இந்த காரில் முக்கியமான ஒரு அம்சம் இருக்கிறது. இந்த கார் 30 கி.மீ வேகத்திற்கும் குறைவாக பயணிக்கும் போது காருக்கு வெளியே அட்டோமெட்டிக்காக ஒரு ஹெம்மிங் சத்தம் வருகிறது. இது ரோட்டில் நடந்து செல்பவர்களை எச்சரிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

பரிமாணம்

மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 காரில் ட்வின் மோட்டார் செட்டப் உள்ளது. ஒவ்வொரு மோட்டாரும் தனித்தனி ஆக்ஸில் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 516 பிஎச்பி பவரையும் 855 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் டார்க் திறன் 4 வீல்களுக்கும் சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் மூலம் வழங்கப்படுகிறது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த காரில் மோட்டாருக்கு பவர் கொடுக்க 107.8 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது தான் இந்தியாவிலேயே மிக அதிகமான பேட்டரி கொள்ளளவு கொண்ட காராகும். இது முழு சார்ஜில் 857 கி.மீ பயணிக்கும் என ARAI சான்றளித்துள்ளது. WLTP 676 கி.மீ செல்லும் என சான்றளித்துள்ளது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய 200 கிலோ வாட் சார்ஜர் உள்ளது. இது இந்த காரை 10-80 சதவீத பேட்டரியை வெறும் 31 நிமிடத்தில் சார்ஜ் செய்துவிடும். இந்த காருடன் வழங்கப்படும் ஹோம் சார்ஜர் 22 கிலோ வாட் சார்ஜர் ஆகும். இது 10-100 சதவீத சார்ஜ் ஏற 1 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 காரை அந்நிறுவனம் அலுமினியம்-இன்டென்ஷிவ் எலெக்ட்ரிக் வெஹிகில் ஆர்க்கிடெக்ஷர் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகமாக அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இந்த இக்யூஎஸ் 580 கார் 2585 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த மெர்சிடீஸ் இக்யூஎஸ்580 கார் 5216 மிமீ நீளம், 1926 மிமீ அகலம் மற்றும் 1512 மிமீ உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வீல் பேஸ் 3210 மிமீ நீளம் கொண்டது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 134 மிமீ தான் இருக்கிறது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த இக்யூஎஸ்580 காரில் ஏர் சஸ்பென்சன் வழங்கப்பட்டுள்ளது. இது டிரைவிங் மோடிற்கு தகுந்தார் போல் தானாக மாறிக்கொள்ளும் திறன் கொண்டது. இந்த காரில் எக்கோ, கம்போர்ட், ஸ்போர்ட் ஆகிய 3 மோட்கள் உள்ளது. இந்த இக்யூஎஸ்580 கார் முன்பக்கம் 4 லிங்க் செட்டப் மற்றும் பின்பக்கம் மில்டி லிங்க் செட்டப் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

டிரைவிங் இம்பிரஷன்

நாம் முன்பே சொன்னது போல இந்த காரின் ட்வின் மோட்டார் செட்டப் காருக்கு 516 பிஎச்பி பவரையும் 855 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இது காரை வேகமாக செல்ல உதவுகிறது. இந்த காரில் உள்ள எக்கோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் மோட்களுக்கு ஏற்ப த்ராட்டல், ஸ்டியரிங், மற்றும் சஸ்பென்சன் மாறி மாறி வேலை செய்கிறது. அதற்குத் தகுந்தார் போல செட்டிங் செய்யப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

கம்ஃபோர்ட் மோட் தான் பெரும்பாலும் இந்த இக்யூஎஸ் 580 காரை வாங்கும் பலர் தேர்வு செய்தார்கள். இது செம சொகுசான ஃபீலை வழங்குகிறது. ஆனால் த்ரில் அனுபவம் வேண்டும் என்றால் ஸ்போர்ட் மோட் தான் சிறப்பாக இருக்கும். இந்த மோடில் இக்யூஎஸ்580 கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.3 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த காரில் உள்ள ஏர்சஸ்பென்சன் இக்யூஎஸ்580 காரில் மிக சிறப்பாக இருக்கிறது. மேடு பள்ளங்களில் எளிதாக கடந்துவிடுகிறது. சாலைக்கு ஏற்ப இந்த சஸ்பென்சன் தானாக அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறது. இதனால் காருக்கு மிகக் குறைவான பாடி ரோல் மிகக் குறைவாக இருக்கிறது. இந்த காரின் பேட்டரி பேக் காரின் ஃப்ளோர் பகுதியில் இருப்பதால் இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் வெறும் 134 மிமீ தான் இருக்கிறது.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த இக்யூஎஸ்580 காரில் ரியர் வீல் ஸ்டியரிங் இருப்பதால் டைட்டான ஸ்பாட்களிலும் கார்களை சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். இந்த காரில் ரீஜென் சிஸ்டம் இருப்பதால் பிரேக்கிங் சிறப்பாக இருக்கிறது. நீண்ட தூர டிராவலுக்கு பிரேக் பெடலே தேவையில்லை. இருந்தாலும் விரைவாக ரெஸ்பான்ஸ் வர இதை பயன்படுத்தாமல். ரீஜென் செட்டிங்கை மேக்ஸில் வைத்துவிட்டால் வெறும் த்ராட்டல் பெடல் வைத்தே வானகத்தை ஓட்டலாம்.

சிங்கிள் சார்ஜில் அசால்டா சென்னை - கன்னியாகுமரி போலாம் . . . மெர்சிடீஸ் இக்யூஎஸ் 580 கார் ரிவியூ . . .

இந்த உலகின் சிறந்த கார் தயாரிப்பாளரை அழைத்து ஒரு எலெக்ட்ரிக் காரை தயாரிக்கச் சொன்னால் அவர் இந்த இக்யூஎஸ்580 காரை தான் வடிவமைப்பார். இது தான் தற்போது நடந்துள்ளது. இந்த காரில் உள்ள ஹைப்பர் ஸ்கிரீன் அதிக பேட்டரி திறன், டூயல் மோட்டார் செட்டப் காருக்கான சிறப்பான ஃபீலை தருகிறது. மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் காரை எலெக்ட்ரிக் வெர்ஷனாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Mercedes EQS 580 electric car first drive review
Story first published: Friday, October 7, 2022, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X