சரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.. எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இங்கிலாந்தை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி. Morris Garages என்பதன் சுருக்கமே எம்ஜி. இந்திய மார்க்கெட்டில் ஹெக்டர் (Hector) வடிவில் தனது முதல் தயாரிப்பை களமிறக்க எம்ஜி நிறுவனம் வேகமாக தயாராகி வருகிறது. இந்திய சந்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் தயாரிப்புகளில் இதுவும் ஒன்று. இந்தியாவின் மிக சவாலான அதே சமயம் மிக வேகமாக வளர்ந்து வரும் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் கால் பதிக்கவுள்ளது எம்ஜி ஹெக்டர். தனது ஐ-ஸ்மார்ட் டெக்னாலஜி மூலம் இந்தியாவின் முதல் கனெக்டட் கார் (Connected Car) என்ற பெருமையை எம்ஜி ஹெக்டர் தாங்கி வருகிறது. எனவே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடப்பதால், ஹெக்டர் மூலம் இந்திய சந்தையில் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட துடிக்கிறது எம்ஜி நிறுவனம்.

1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரை இந்திய சந்தையில் ஏற்கனவே நன்றாக பிரபலப்படுத்தி விட்டது. எனவே இதற்கு பெரிதாக அறிமுகம் எல்லாம் தேவையில்லை. எம்ஜி நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹெக்டர் காரை இந்திய மார்க்கெட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அப்போது ஹெக்டர் காரில் வழங்கப்படவுள்ள வசதிகள் மற்றும் உபகரணங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. அவ்வளவு ஏன்? பெரும்பாலான தொழில்நுட்ப விபரங்களும் கூட அறிவிக்கப்பட்டு விட்டன. ஆனால் அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி மட்டும் தற்போது எழுந்து நிற்கிறது. எம்ஜி ஹெக்டர் ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது? என்பதுதான் அது.

1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. எம்ஜி ஹெக்டர் காரை கோவைக்கு அருகே ஓட்டி பார்த்தோம். இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது? என்ற உங்களின் கேள்விக்கு இனி பதில் வழங்குகிறோம்.

1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

டிசைன் மற்றும் ஸ்டைலிங்:

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது முதல், இந்த எஸ்யூவியின் தோற்றம் தொடர்பாக கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. ஆனால் இதன் ஒட்டுமொத்த டிசைன் எங்களை மிகவும் ஈர்த்தது.

1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் முன் பகுதியில் பெரிய சரிவக வடிவ க்ரில் அமைப்பு மற்றும் ட்யூயல் ஹெட்லேம்ப் செட் அப் வழங்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் இவை இரண்டும்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. தேவையான அளவிற்கு குரோம் வேலைப்பாடுகளை முன்பகுதி பெற்றுள்ளது. க்ரில் அமைப்பு, எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் ஆகியவற்றை சுற்றி குரோம் பூச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இதற்கேற்ப தோற்றத்தை சீர்குலைக்காத வகையில், தேவையான அளவிற்கு மட்டும் குரோம் பூச்சுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் முன் பக்க பம்பரின் அடிப்பகுதியில் பெரிய ஏர் இன்டேக் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

பக்கவாட்டை பொறுத்தவரை செவ்வக வடிவத்தை போன்ற வீல் ஆர்ச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. கதவுகளின் அடிப்பகுதியிலும் குரோம் வேலைப்பாடுகளை காண முடிகிறது. எம்ஜி ஹெக்டர் காரின் டாப் வேரியண்ட்களில், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ட்யூயல் டோன் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இனி பின் பகுதிக்கு செல்வோம். எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் பின் பகுதியில் எல்இடி டெயில் லேம்ப்ஸ் வழங்கப்பட்டுள்ளன. மெல்லிய குரோம் பட்டை மற்றும் எம்ஜி பேட்ஜ் ஆகியவை பின்பகுதிக்கு கவர்ச்சி சேர்க்கின்றன. முன் மற்றும் பின் பக்க லைட்கள், டைனமிக் டர்ன் இன்டிகேட்டர்களுடன் வருகின்றன. இது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரை இன்னும் பீரிமியமாக காட்டுகிறது. பின் பக்க பம்பரின் அடிப்பகுதியில், பெரிய டிஃப்யூஸர் இடம்பெற்றுள்ளது.

1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இன்டீரியர் மற்றும் வசதிகள்:

இனி எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் கேபினுக்குள் நுழைவோம். இதில், கருப்பு வண்ண இன்டீரியர் வழங்கப்பட்டுள்ளது. கேபினில் உள்ள மிக முக்கியமான விஷயம் என்றால், அது நிச்சயமாக 10.4 இன்ச் செங்குத்து திரையுடன் கூடிய பெரிய டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளேதான். இந்த செக்மெண்ட்டிலேயே இதுதான் மிகப்பெரியது.

1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

ஆடியோ சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல்கள், இன்போடெயின்மெண்ட் கண்ட்ரோல்கள், நேவிகேஷன் மற்றும் ஐ-ஸ்மார்ட் கனெக்டிவிட்டி டெக்னாலஜியின் செயல்பாடுகளை இந்த 10.4 இன்ச் திரை கட்டுப்படுத்துகிறது. இதில், ஐ-ஸ்மார்ட் டெக்னாலஜியானது, வாய்ஸ் கமாண்ட், ஜியோ-ஃபென்சிங் உள்பட 50க்கும் மேற்பட்ட கனெக்டட் வசதிகளை வழங்குகிறது.

1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

குரல் மூலமாக ஆக்டிவேட் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தையும் இந்த சிஸ்டம் பெற்றுள்ளது. 'ஹலோ எம்ஜி' என்று சொல்வதன் மூலமாக இதனை ஆக்டிவேட் செய்து பயன்படுத்த முடியும். இந்த காரில் வாய்ஸ் கமாண்ட் மூலம் 100 விதமான வசதிகளை கட்டுப்படுத்த முடியும் என்பது சிறப்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. கண்ணாடி ஜன்னல்களை திறந்து மூடுவது, சன் ரூஃப்பை இயக்குவது, செல்போன் அழைப்புகளை ஏற்பது மற்றும் துண்டிப்பது உள்ளிட்ட விஷயங்களை வாய்ஸ் கமாண்ட் மூலமாகவே செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ-ஸ்மார்ட் டெக்னாலஜியானது, இ-சிம் உடன் வருகிறது. இதன்மூலம் பயணத்தின்போது சீரான இன்டர்நெட் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. எனவே 'இன்டர்நெட் இன்சைட்' பேட்ஜை எம்ஜி ஹெக்டர் பெற்றுள்ளது.

1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

எம்ஜி ஹெக்டர் காரில், லெதர் உறையுடன் கூடிய ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டியரிங் வீல் பிடிப்பதற்கு ஏதுவாக உள்ளது. இதில், இன்கம்மிங்/அவுட்கோயிங் கால்கள், ஆடியோ கண்ட்ரோல்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் செட்டிங்குகளை கட்டுப்படுத்துவதற்கான ஸ்விட்ச்களும் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் 3.5 இன்ச் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (MID) உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்ர் வழங்குகிறது. இந்த ட்ரீப் மீட்டர்கள், சராசரி எரிபொருள் சிக்கனம், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியும் என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த எம்ஐடி வழங்குகிறது.

1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

எம்ஜி ஹெக்டர் காரில் உள்ள இதர முக்கியமான வசதிகள்:

  • ஆம்பியன்ட் லைட்டிங் (8 வண்ணங்கள்)
  • லெதர் அப்ஹோல்ஸ்டரி (டாப் எண்ட் வேரியண்ட்களில்)
  • மின்னணு முறையில் 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை
  • பனரோமிக் சன் ரூஃப்
  • டில்ட் & டெலஸ்கோபிக் ஸ்டியரிங்
  • ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்ஸ்
  • ரியர் வெண்ட்களுடன் ஆட்டோ ஏசி
  • பவர் விண்டோஸ்
  • செல்போனை சார்ஜ் செய்வதற்கான வசதி
  • ஆண்ட்ராய்டு ஆட்டோ
  • புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்
  • மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் மற்றும் மடிக்க கூடிய ஓஆர்விஎம்கள்
  • 1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    சௌகரியம் மற்றும் பூட் ஸ்பேஸ்:

    எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில் விசாலமான கேபின் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் வேரியண்ட்டில் லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. சௌகரியமான பயணத்திற்கு அவை உதவுகின்றன. முன்பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளையும் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இதில், டிரைவர் இருக்கையை 6 வழிகளிலும், முன் பகுதி பாசஞ்சர் இருக்கையை 4 வழிகளிலும் அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இந்த இருக்கைகள் தொடை மற்றும் இடுப்பிற்கு நல்ல சப்போர்ட்டை வழங்குகின்றன. நீண்ட தூர பயணம் என்றாலும் கூட, ரிலாக்ஸான டிரைவிங் பொஷிஷனில் காரை இயக்க முடியும்.

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    பின் பக்க இருக்கைகளிலும் தொடைக்கு நல்ல சர்போர்ட் கிடைக்கிறது. எனவே சொகுசாக அமர்ந்து பயணம் செய்யலாம். உயரமானவர்களுக்கு கூட போதுமான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் உள்ளது. பின்பகுதியில் எவ்விதமான சிரமும் இன்றி 3 பேர் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். பின் பகுதியில் 2 கப் ஹோல்டர்களுடன் சென்ட்ரல் ஆர்ம் ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இது பின் பகுதி பயணிகளின் ரிலாக்ஸான பயணத்திற்கு இன்னும் வலு சேர்க்கின்றன.

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டர் காரை சுற்றிலும் தேவையான அளவிற்கு ஸ்டோரேஜ் வசதிகளையும் வழங்கியுள்ளது. நான்கு கதவுகளிலும் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வைத்து கொள்வதற்கான இடவசதி உள்ளது.

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    அனைத்து இருக்கைகளும் சரியாக பொருந்தியிருக்கும் நிலையில், எம்ஜி ஹெக்டர் காரின் பூட் ஸ்பேஸ் 587 லிட்டர்கள். ஆனால் பின் பக்க இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் மடித்து வைத்து கொள்ள முடியும். இதன் மூலம் பூட் ஸ்பேஸை இன்னும் அதிகரித்து கொள்ளலாம்.

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    எம்ஜி ஹெக்டர் காரின் டைமன்சன்களை சுருக்கமாக கீழே காணலாம்.

    Length (mm) 4655
    Width (mm) 1835
    Height (mm) 1760
    Wheelbase (mm) 2750
    Boot Space (litres) 587
    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ஓட்டுதல் அனுபவம்:

    முதலில் எம்ஜி ஹெக்டர் காரின் இன்ஜின் விபரங்களை தெரிந்து கொள்வோம். எம்ஜி ஹெக்டர் காரில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இதில், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 5,000 ஆர்பிஎம்மில் 143 பிஎச்பி பவரையும், 1,600-3,600 ஆர்பிஎம்மில் 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    மறுபக்கம் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 3,750 ஆர்பிஎம்மில் 170 பிஎச்பி பவரையும், 1,750-2,500 ஆர்பிஎம்மில் 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹாரியர் ஆகிய போட்டியாளர்களிடம் காணப்படும் அதே இன்ஜின்தான் இது. டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் அதே பவர் அவுட்புட்டைதான் இந்த இன்ஜினும் கொடுக்கிறது.

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    இந்த இரண்டு இன்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது. அதே சமயம் பெட்ரோல் இன்ஜினில் ஆப்ஷனலாக 7 ஸ்பீடு ட்யூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ஹெக்டர் எஸ்யூவி காரின் டாப் எண்ட் பெட்ரோல் வேரியண்ட்களில் எம்ஜி நிறுவனம் தனது சொந்த ஹைப்ரிட் டெக்னாலஜியையும் (48V ஹைப்ரிட் மோட்டார்) வழங்குகிறது. ஹைப்ரிட் வேரியண்ட்டின் மைலேஜ் 12 சதவீதம் அதிகமாக இருக்கும். அதே சமயம் CO2 உமிழ்வு 11 சதவீதம் குறைவாக இருக்கும். எனவே இது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    எம்ஜி ஹெக்டர் காரின் தொழில்நுட்ப விபரங்களை தெரிந்து கொண்டோம். இனி ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்போம். நாங்கள் முதலில் பெட்ரோல்-ஹைப்ரிட் வேரியண்ட்டை கோவையில் இருந்து கோத்தகிரி வரை ஓட்டினோம்.

    ஆரம்பம் முதலே இந்த இன்ஜின் சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது. மிக சிறப்பாக ரீஃபைன் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் சிட்டி டிராபிக்கில் நன்றாகவே செயல்படுகிறது. சிட்டியை கடந்து நெடுஞ்சாலை மற்றும் மலை தொடர்கள் ஆகிய இடங்களிலும் எம்ஜி ஹெக்டர் நல்ல பவர் மற்றும் டார்க்கை தொடர்ந்து வழங்குகிறது. எந்த ஒரு வேகத்திலும் தொடர்ந்து சீரான பவர் கிடைத்து கொண்டே இருப்பதால், நகரம், நெடுஞ்சாலை அல்லது மலைத்தொடர் என எந்த இடமானாலும் ஓவர் டேக் செய்வது எளிதாகிறது.

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    இனி எம்ஜி ஹெக்டர் காரின் டீசல் வேரியண்ட்டிற்கு செல்வோம். இது உடனடியாகவே அருமையான உணர்வை தருகிறது. பெட்ரோல் வேரியண்ட்டை காட்டிலும் டீசல் வேரியண்ட்டில்தான் சிறப்பான ஓட்டுதல் அனுபவம் கிடைக்கிறது. குறைவான ஆர்பிஎம்மிலேயே அதிகப்படியான டார்க் திறன் கிடைப்பதால், ஓட்டுவதற்கு அருமையாக உள்ளது. ஆனால் டீசல் இன்ஜினில் எழும் ஒரு வித சப்தம் கேபினிற்குள்ளும் கேட்கிறது.

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    அதே சமயம் கடினமான வளைவுகளில் திரும்பும்போது, சற்று பாடி ரோல் இருப்பதை கவனிக்க முடிகிறது. இது டிரைவரின் நம்பிக்கையில் இடையூறை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாக ஆக்ஸலேட்டரை மிதிப்பதில் தயக்கம் உண்டாகலாம். குறைவான வேகத்தில் ஸ்டியரிங் வீல் இலகுவாக உள்ளது. எனவே உடனடியாக திசை மாற வேண்டும் என்றால், காரை மிக எளிதாக திருப்பலாம். அதே சமயம் அதிக வேகத்திலும் கூட ஸ்டியரிங் வீல் இலகுவாகதான் உள்ளது. எடை ஏறியது போன்ற உணர்வு ஏற்படவில்லை.

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் உள்ள 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மிகவும் ஸ்மூத் ஆக உள்ளது. கியர்களை எளிதாக மாற்ற முடிகிறது. ஆனால் கியர்களை வேகமாக மாற்றும்போது ஒரு வித தடுமாற்றத்தை உணர முடிகிறது. அதே சமயம் சஸ்பென்ஸன் மற்றும் பிரேக்கிங் ஆகியவை குறையே சொல்ல முடியாத வகையில், அட்டகாசமாக உள்ளன. எவ்வித மோசமான சாலை என்றாலும், கேபினுக்குள் அதனை உணர முடியவில்லை. எம்ஜி ஹெக்டர் காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மிகச்சிறப்பான 'ஸ்டாப்பிங் பவர்' இருப்பதால், டிரைவர்கள் நம்பி ஓட்டலாம்.

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    எம்ஜி ஹெக்டர் காரின் இன்ஜின் விபரங்களை நீங்கள் கீழே காணலாம்:

    Engine Specs Petrol Diesel

    Engine (cc) 1541 1956
    No. Of Cylinders 4 4
    Power (bhp) 143 172
    Torque (Nm) 250 350
    Transmission 6-MT/7-DCT 6-MT
    Weight (Kg)* 1554 - 1644 1633 - 1700

    *Weight - Unladen

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    வேரியண்ட்கள், கலர் மற்றும் விலை:

    ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் எம்ஜி ஹெக்டர் கார் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்களிலும் பல்வேறு விதமான வசதிகள் வழங்கப்படவுள்ளன. வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக பேஸ் வேரியண்ட்டில் கூட எம்ஜி நிறுவனம் பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது.

    1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

    எம்ஜி ஹெக்டர் காரின் நான்கு வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படவுள்ள சில முக்கியமான வசதிகளை கீழே காணலாம்:

    • ரிமோட் கீலெஸ் எண்ட்ரி
    • கார் அன்லாக் செய்யப்படுகையில் வெல்கம் லைட்
    • முன் மற்றும் பின் பகுதியில் ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்கள்
    • கூல்டு கிளவ் பாக்ஸ்
    • 60:40 என்ற விகிதத்தில் மடக்கி கொள்ள கூடிய இருக்கைகள்
    • ஆட்டோ ஏசி
    • மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள்
    • 1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

      புத்தம் புதிய எம்ஜி ஹெக்டர் கார், கேண்டி ஒயிட், ஸ்டார்ரி பிளாக், அரோரா சில்வர், பர்கெண்டி ரெட் மற்றும் கிளாசி ரெட் என மொத்தம் 5 வண்ணங்களில் கிடைக்கும்.

      எம்ஜி ஹெக்டர் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த செக்மெண்ட்டில் முக்கிய போட்டியாளர்களுக்கு இணையாகதான் எம்ஜி நிறுவனம் விலையை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரூ.14 முதல் ரூ.20 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

      1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

      பாதுகாப்பு வசதிகள்:

      பாதுகாப்பு என்ற விஷயத்திற்கு எம்ஜி நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. எனவே இந்த செக்மெண்ட்டில் இருந்து வெளிவரும் ஒரு காரில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க கூடிய அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளையும் எம்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது. அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.

      • 6 ஏர் பேக்குகள்
      • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
      • இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் பிரேக் அஸிஸ்ட்
      • 360 டிகிரி கேமரா
      • ஹில்-ஹோல்டு கண்ட்ரோல்
      • ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள்
      • ரியர் பார்க்கிங் கேமரா
      • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
      • டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம்
      • 1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

        போட்டியாளர்கள்:

        ஏற்கனவே குறிப்பிட்டபடி அதிகம் போட்டி நிறைந்த மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில்தான் எம்ஜி ஹெக்டர் களமிறக்கப்படவுள்ளது. இந்த செக்மெண்ட்டில் ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி ஹெக்டர் போட்டியிடவுள்ளது.

        1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

        எம்ஜி ஹெக்டர் மற்றும் அதன் முக்கியமான இரண்டு போட்டியாளர்களுக்கு இடையேயான ஒப்பீட்டை கீழே காணலாம்:

        Competitiors/Specs MG Hector Tata Harrier Jeep Compass

        Engine 1.5 Petrol/ 2.0 Diesel 2.0-litre Diesel 1.4 Petrol/ 2.0 Diesel
        Power (bhp) 143/170 140 163/173
        Torque (Nm) 250/350 350 250/350
        Transmission DCT/MT 6MT DCT/MT
        Price (ex-showroom) TBA* Rs 13 - 16.5 Lakhs Rs 15.6 - 23.1 lakh

        *TBA - To Be Announced

        1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

        ரிவியூ எடிட்டர் கருத்து:

        எம்ஜி ஹெக்டர் கார் சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது. அத்துடன் ஏராளமான வசதிகள் மற்றும் கனெக்டிவிட்டி டெக்னாலஜியுடன் வருகிறது. குறிப்பாக ஐ-ஸ்மார்ட் டெக்னாலஜி. பல்வேறு பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் கட்டுமான தரமும் மிக சிறப்பாக உள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில், எம்ஜி நிறுவனம் விலையை மட்டும் சரியாக நிர்ணயம் செய்தால், இந்த செக்மெண்ட்டின் சிறந்த காராக ஹெக்டர் உருவெடுக்கலாம்.

        1. விலை சரியாக இருந்தால் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் இதுதான்! எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

        எங்களை மிகவும் கவர்ந்த விஷயம்:

        ஏராளமான வசதிகள்

        ஐ-ஸ்மார்ட் கனெக்டிவிட்டி டெக்னாலஜி

        ஹைப்ரிட் டெக்னாலஜி

        சிறப்பாக செயலாற்றும் இன்ஜின்கள்

        நாங்கள் விரும்பாதது:

        டீசல் இன்ஜின் சப்தம்

Most Read Articles
English summary
MG Hector First Drive Review — Brit By Blood, Human By Nature. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X