சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

ஆடி நிறுவனம் ஏ4 செடான் காரை கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போது முதல் இந்திய சந்தையில் கிடைக்கும் ஆடி நிறுவனத்தின் விலை குறைவான சொகுசு செடான் கார்களில் ஒன்றாக ஏ4 இருந்து வருகிறது. 2008ம் ஆண்டிலேயே பல்வேறு அதிநவீன வசதிகள் மற்றும் செயல்திறன் மிக்க இன்ஜின்களுடன் ஆடி ஏ4 வந்தது. இதன் மூலம் சொகுசு செடான் மார்க்கெட்டில் வெகு விரைவாகவே தனக்கென தனி இடத்தை ஆடி ஏ4 பிடித்து விட்டது.

தற்போது 2021ம் ஆண்டு வந்து விட்ட நிலையில், 5வது தலைமுறை ஏ4 செடான் காரை ஆடி நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய 2021 ஆடி ஏ4 செடான் காரின் டிசைனில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்டீரியர் மற்றும் இன்ஜினும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆடி ஏ4 செடான் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. நகர பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் புதிய ஆடி ஏ4 காரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது இந்த கார் எங்களை வெகுவாக கவர்ந்தது. புதிய ஆடி ஏ4 காரில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? என்பதை இந்த செய்தியில் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிசைன் & ஸ்டைல்

முதலில் முன் பகுதியில் இருந்து தொடங்குவோம். இங்கே இந்த கார் பெற்றுள்ள புதிய ஹெட்லைட்கள்தான் உங்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். இந்த ஹெட்லைட்கள் நேர்த்தியான டிசைனை பெற்றுள்ளன. இவை முழு எல்இடி யூனிட்கள் ஆகும். இந்த கார் அட்டகாசமான டிஆர்எல்களை பெற்றுள்ளது. இவை இன்டிகேட்டர்களாகவும் செயல்படும். ஹெட்லைட் பிரகாசமாக இருப்பதுடன், அதிக தூரத்திற்கு ஒளியை வீசுகிறது.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் புதிய ஆடி ஏ4 செடான் காரில், சற்றே பெரிய க்ரில் வழங்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு நன்றாக இருப்பதுடன், கிடைமட்டமான லைன்கள் வடிவில் க்ரோம் வேலைப்பாடுகளையும் பெற்றுள்ளது. இந்த காரின் க்ரில் அமைப்பில் முன் பக்க பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் துரதிருஷ்டவசமாக 360 டிகிரி கேமரா வசதியை இந்த கார் பெறவில்லை.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இருந்தாலும் இந்த காரின் பம்பரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது பார்ப்பதற்கு ஸ்போர்ட்டியாக உள்ளது. அத்துடன் பம்பரில் டம்மி பனி விளக்குகள் அறை வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தேவைப்பட்டால் பனி விளக்குகளை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஹெட்லைட்கள் மிகவும் பிரகாசமாக இருப்பதால், பனி விளக்குகள் தேவையில்லை என்பதை போல் தோன்றுகிறது.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இனி பக்கவாட்டு பகுதிக்கு வருவோம். இங்கே புதிய ஆடி ஏ4 செடான் 17 இன்ச் சிங்கிள்-டோன் அலாய் வீல்களை பெற்றுள்ளது. டயூயல்-டோனில் வழங்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். விண்டோக்களை சுற்றிலும், டோர் ஹேண்டில்களிலும் க்ரோம் பூச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டோர் ஹேண்டில்களை பொறுத்தவரையில் பார்ப்பதற்கு வழக்கமானவை போல தோன்றாலும். ஆனால் நீங்கள் பயன்படுத்தும்போது, அவை மேல்நோக்கியவாறு திறப்பதை பார்க்கலாம். இது சிறப்பானதாக இருந்தாலும், நன்றாக பழகுவதற்கு ஒரு சில முறை முயற்சி செய்ய வேண்டும்.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இனி காரின் பின் பகுதிக்கு வருவோம். இங்கே நேர்த்தியான தோற்றம் கொண்ட புதிய எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. க்ரோம் பட்டை ஒன்று இரண்டு டெயில்லைட்களையும் இணைக்கிறது. அதே சமயம் பம்பரின் கீழ் பாதியில் இரட்டை புகைபோக்கி குழல்களை சுற்றிலும் க்ரோம் வேலைப்பாடுகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் புதிய ஏ4 காரின் வெளிப்புறத்தை ஆடி நிறுவனம் கவர்ச்சிகரமாக டிசைன் செய்துள்ளது.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்டீரியர் & வசதிகள்

இனி காரின் உள்ளே செல்வோம். இங்கே புதிய காற்றோட்டமான கேபின் நம்மை வரவேற்கிறது. புதிய ஆடி ஏ4 செடான் காரின் கேபின் முன்பை விட பிரீமியமாக உள்ளது. டேஷ்போர்டு, டோர்கள் மற்றும் இதர பாகங்களில் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் வழங்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டின் மையப்பகுதியில் 10.1 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதற்கு நன்றாக உள்ளது. ஒவ்வொரு முறை தொட்ட பிறகும் 'க்ளிக்' என்ற சத்தம் வருகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதிகளையும் இது பெற்றுள்ளது.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இதுதவிர 12.1 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும், புதிய ஆடி ஏ4 செடான் பெற்றுள்ளது. இது 'விர்ச்சூவல் காக்பிட்' எனவும் அறியப்படுகிறது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் உள்ள டிஸ்ப்ளேவை ஓட்டுனரின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள முடியும். நீங்கள் இதில் 'மேப்' பார்க்க விரும்பினால், ஸ்டியரிங் வீலில் உள்ள 'View' பட்டனுடைய உதவியின் மூலம், கிட்டத்தட்ட முழு திரையும் மேப்பை காட்டும்படி செய்யலாம்.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் ஸ்டியரிங் வீல் லெதரால் சுற்றப்பட்டுள்ளது. பிடித்து ஓட்டுவதற்கு நன்றாக உள்ளது. ஸ்டியரிங் வீலில் பல்வேறு கண்ட்ரோல்களுக்கான பட்டன்கள் சரியான இடங்களில் வழங்கப்பட்டுள்ளன. எனவே ஓட்டுனர் சாலையில் இருந்து பார்வையை எடுக்காமலேயே இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமை பயன்படுத்த முடிகிறது.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இருக்கைகளை பொறுத்தவரையில், பிரீமியம் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி வழங்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளையும் 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்ய முடியும். ஆனால் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே சீட் மெமரி வசதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யும் வகையில், ஹெட்ரெஸ்ட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

நாங்கள் இந்த காரை 2 நாட்கள் ஓட்டினோம். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் ஓட்டியது நகர பகுதிகளில்தான். ஆனால் இருக்கைகள் எங்களை சோர்வடைய செய்யவில்லை. அதே சமயம் இரண்டாவது வரிசை இருக்கைகளும் சௌகரியமாகதான் உள்ளன. ஆனால் இரண்டு பயணிகள் மட்டும் அமர்வதாக இருந்தால், அவை மிகவும் உகந்ததாக இருக்கும். அதற்காக மூன்றாவது நபர் அமர முடியாது என்பதில்லை. தொலை தூர பயணங்களின்போது மூன்றாவது நபர் அமர்ந்தால் அசௌகரியம் ஏற்படலாம்.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இரண்டாவது வரிசையை பொறுத்தவரை, இருக்கைகளை மடித்து வைத்து கொள்ளும் செயல்முறையை கட்டுப்படுத்தும் வகையில், 'லாக் அண்ட் கீ சிஸ்டம்' இடம்பெற்றுள்ளது. இது ஒரு பாதுகாப்பு வசதியாகும். யாராவது ட்ரங்க்கை உடைத்து உள்ளே நுழைவதற்கு முயற்சி செய்தால், அவர்களால் இருக்கையை மடித்து கேபினுக்கு உள்ளே நுழைய முடியாது.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

புதிய ஆடி ஏ4 செடான் கார் பெரிய பூட்ரூம் இடவசதியை பெற்றுள்ளது. இதில், 4 பேரின் லக்கேஜ்களை எளிதாக வைத்து கொள்ள முடியும். அப்போதும் இட வசதி போதவில்லை என்றால், இரண்டாவது வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து, கூடுதல் இட வசதியை ஏற்படுத்தி கொள்ள முடியும். ஆனால் இந்த காரில் எலெக்ட்ரானிக் பூட் வசதி வழங்கப்படவில்லை. எனினும் பூட் லிட் எளிதாக திறந்து, மூடும் வகையில் மிகவும் இலகுவாக உள்ளது.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்ஜின் & ஹேண்ட்லிங்

புதிய ஆடி ஏ4 செடான் காரில், புதிய 2.0 லிட்டர் TFSI டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிஎஸ்ஜி) இணைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 7.5 வினாடிகளுக்கு உள்ளாகவே இந்த கார் எட்டிவிடும்.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

எஃபிஷியன்ஷி, கம்ஃபோர்ட், டைனமிக் மற்றும் இன்டிஜூவல் என மொத்தம் 4 டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. எஃபிஷியன்ஷி மோடில் ஸ்டியரிங் வீல் மிகவும் இலகுவாக உள்ளது. த்ராட்டில் ரெஸ்பான்ஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை. இருந்தாலும் எரிபொருளை சேமிக்கிறது. அதே சமயம் கம்ஃபோர்ட் மோடில் ஸ்டியரிங் வீல் மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சற்றே மேம்படுகிறது. நகர பகுதிகளில் ஓட்டுபவர்களுக்கு இந்த மோடைதான் நாங்கள் பரிந்துரைக்கிறோம். டைனமிக் மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஷார்ப் ஆக உள்ளது. அத்துடன் ஸ்டியரிங் வீல் இறுக்கமானதாக மாறிவிடுகிறது. காரின் அதிகபட்ச செயல்திறனை நீங்கள் இந்த மோடில் பெறலாம்.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் பவர் டெலிவரி சீராகவும், நேர்த்தியாகவும் உள்ளது. ஆனால் 3,000 ஆர்பிஎம்மிற்கு பிறகு, பவரில் திடீரென எழுச்சி ஏற்படுகிறது. அதே சமயம் பேடில் ஷிஃப்ட்டர்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. மேனுவல் மோடில் திடீரென கியர்களை குறைக்க வேண்டிய சமயங்களில் உதவிகரமாக உள்ளது.

சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், பயணிகளுக்கு சௌகரியமான பயணத்தை ஆடி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த காரின் சஸ்பென்ஸன் நன்றாக உள்ளது. குண்டும், குழியுமான சாலைகளை கார் எளிதாக கடக்கிறது. உள்ளே இருப்பவர்களால் இதனை அவ்வளவாக உணர முடியவில்லை. அதேபோல் என்விஹெச் லெவல்களும் சிறப்பாக உள்ளன. ஜன்னல்களை மூடி விட்டு நீங்கள் உள்ளே அமர்ந்தால், வெளி உலகத்துடனான தொடர்பே துண்டிக்கப்பட்டதை போல், கேபின் மிகவும் அமைதியாக உள்ளது.

அதேபோல் கார்னர்களையும் இந்த கார் சிறப்பாக எதிர்கொள்கிறது. ஆனால் சிறிய பாடி ரோலை உணர முடிகிறது. எரிபொருள் சிக்கனத்தை பொறுத்தவரை இந்த கார் நகர பகுதிகளில் எங்களுக்கு ஒரு லிட்டருக்கு 7.4 முதல் 9.2 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கியது. ஆனால் கார் எங்களிடம் குறுகிய காலமே இருந்த காரணத்தால், நெடுஞ்சாலைகளில் எவ்வளவு மைலேஜ் தருகிறது? என்பதை பரிசோதிக்க முடியவில்லை. ஆனால் நீங்கள் காரை சரியான முறையில் ஓட்டினால், நெடுஞ்சாலைகளில் ஒரு லிட்டருக்கு 12 முதல் 14 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

புதிய ஆடி ஏ4 செடான் காரின் விலை 42 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்ஷோரூம்). சிறப்பான செயல்திறனுடன், சௌகரியமான பயணத்தை வழங்க கூடிய அதே சமயம் தேவையான அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ள ஒரு சொகுசு காருக்கு இது அதிகப்படியான விலை கிடையாது. ஆனால் ட்யூயல்-டோன் அலாய் வீல்கள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற சில கூடுதல் வசதிகளை ஆடி நிறுவனம் வழங்கியிருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். இதை தவிர்த்து விட்டு பார்த்தால், குறைவான விலையில் சொகுசு செடான் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு புதிய ஆடி ஏ4 மிகவும் சிறப்பான தேர்வாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
New Audi A4 Sedan Review (First Drive): Design, Handling, Engine, Performance, Mileage, Prices. Read in Tamil
Story first published: Saturday, January 16, 2021, 18:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X