கோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை

பிஎம்டபிள்யூ, ஹுண்டாய், மஹிந்திரா மற்றும் மினி போன்ற முன்னனி கார் நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளனர். கோடை கால விற்பனையில் களம் இறங்கவுள்ள கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை

இந்தியாவில் ஆரம்ப காலங்களில் ஆடம்பர பொருளாக பார்க்க பட்ட கார்கள் தற்போது மக்களின் அத்யாவசிய தேவையாக கார்கள் மாறி வருகிறது. வீட்டிற்கு ஒரு கார் என்கிற காலம் மாறி தற்போது வீட்டில் இருக்கும் நபர் ஒன்றுக்கு ஒரு கார் என்கிற நிலை மாறி விட்டது. இதன் காரணமாக மாருதி, மஹிந்திரா போன்ற உள்நாட்டு கார் நிறுவங்கள் மட்டுமின்றி ஜாகுவார் ஆடி போன்ற வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கும் தங்களின் கார்களை இந்திய விற்பனை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர்

கோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை

கோடை காலமான வரும் மே மாதத்தில் பிஎம்டபிள்யூ, ஹுண்டாய், மஹிந்திரா மற்றும் மினி போன்ற முன்னனி கார் நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளனர். பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது தயாரிப்பான பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார், ஹுண்டாய் நிறுவனம் தனது தயாரிப்பான ஹுண்டாய் வெனியூ கார், மஹிந்திரா நிறுவனம் தனது தயாரிப்பான மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மற்றும் மினி நிறுவனம் தனது தயாரிப்பான மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஆகிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது.

கோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை

பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 :

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CLAR கட்டமைப்பின் கீழ் உருவான எக்ஸ் 5 தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ் 5 எக்ஸ்யூவி காரினை விட பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள 21 அங்குல வீல்கள் மூலமாக வீல் பேஸ் பெரிதாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஐ-டிரைவ் உடன் இயங்க கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுதிரையுடன் கூடிய 12 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அளிக்கப்படுள்ளது. மேலும் இதில் உள்ள ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம், கெஸ்ச்சர் கன்ட்ரோல் ஆகியவை சிறப்பு அம்சங்களாக உள்ளன.

கோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை

பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 காரின் சக்தி வாய்ந்த 3.0 டர்போ டீசல் என்ஜின் அதிகபட்சமாக 265 எச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும் மற்றொரு 3.0 பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 340 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. எக்ஸ் 5 காரில் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 அடுத்த மாதம் 16ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

கோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை

ஹுண்டாய் வென்யூ:

ஹுண்டாய் வென்யூ எக்ஸ்யூவி கார் இந்தியவின் முதல் அதி நவீன தொழில்நுட்ப கார் என ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் அதிநவீன புளூலிங்க் தொழில்நுட்பம் அடங்கிய 8 அங்குல தொடுதிறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அளிக்கப்படுள்ளது இதன் மூலமாக நேவிகேஷன், ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட 33 விதமான தொழில்நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். வென்யூ எக்ஸ்யூவில் புரொஜெக்டர் ஹெட்லைட், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் தானியங்கி காற்று சுத்திகரிப்பு வசதி ஆகியவை சிறப்பு அம்சங்களாக உள்ளது.

கோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் இதில் டியூவல் க்ளட்ச் ஆட்டடோமேட்டிக் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வென்யூ எக்ஸ்யூவி 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த கார் அடுத்த மாதம் 21ம் தேதி விற்பனைக்கு வருகிறது. , ஃபோர்டு ஈகோஸ்போர்ட் , மஹிந்திரா எக்ஸ்யூவி 300 , மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களுக்கு போட்டியாக ஹுண்டாய் வென்யூ எக்ஸ்யூவி களம் இறங்குகிறது.

கோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை

மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்:

மஹிந்திரா நிறுவனத்தின் டியூவி300 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். ஆரம்ப கட்டத்தில் விற்பனையில் சிறப்பாக இருந்த டியூவி300 மெதுவாக விற்பனையில் சரிவை சந்தித்தது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் கார்களுடன் போட்டியிட முடியாமல் திணறியது. இதனை கருத்தில் கொண்டு மஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரினை அறிமுகம் செய்கிறது. இதில் ஹெட்லேம்ப்ஸ், க்ரில் மற்றும் முன்பக்க பம்பர் மற்றும் பின்பக்க பம்பரும் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை

மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் T4+, T6+, T8, T10 மற்றும் டாப் எண்ட் T10 (O) என மொத்தம் 5 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவர் திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் பெட்ரோல் வேரியண்ட் குறித்து மஹிந்திரா நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை. டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது.

கோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை

மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ்:

ஹேட்ச்பேக் ரக கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக மினி கூப்பர் கார் நிறுவனம் தனது தயாரிப்பான ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரினை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. காற்று மாசினை குறைக்கும் வகையில் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் குறைந்த புகை உமிழ்வு காரக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் இன்டிரியர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

கோடை காலத்தில் களம் இறங்கும் புதிய கார்கள்: சூடு பிடிக்கப் போகும் விற்பனை

இதன் நவீன 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 228 பிஎச்பி பவரையும், 319 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஜான் கூப்பர் ஒர்க்ஸ் 0 - 100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது .

மேலும் இதில் 8 ஸ்பீட் ஸ்டெப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஜான் கூப்பர் ஒர்க்ஸ் கார் அடுத்த மாதம் 9ம் தேதி விற்பனைக்கு வருகிறது. ஜாகுவார் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவன கார்களுக்கு மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் கடும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
new car launches in may 2019: read More In Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X