ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி காரை கடந்த 2022 ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்தது. என்-லைன் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய வென்யூ கார் அறிமுகமாகி 2 மாதங்களாகி விட்டதால், தற்சமயம் சாலைகளிலும் காண முடிகிறது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இந்த நிலையில் புதிய வென்யூ என்-லைன் காரை இயக்கி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த காரை நாங்கள் டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்த்தோம். ஹூண்டாயின் என்-லைன் கார்கள் பொதுவாகவே அவற்றின் செயல்படுதிறனால் அறியப்படுகின்றன. அந்த அளவிற்கு புகழப்படுவதற்கு ஏற்றதாக வென்யூ என்-லைன் கார் உள்ளதா? இந்த காரின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

வெளிப்புற தோற்றம்: வசீகரிக்கும் அம்சங்கள் உள்ளன

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் காம்பெக்ட் எஸ்யூவி காரான வென்யூவிற்கு என்-லைன் என்கிற பெயரில் ஆயுட் காலத்தை அதிகரிக்கக்கூடிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இதன்படி காரின் முன்பக்கத்தில் புதிய ‘பாராமெட்ரிக் ஜூவெல் க்ரில்', புதிய பம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

அத்துடன் காரின் சக்கரங்களும், பின்பக்கத்தில் டெயில்லைட்களும் புதியவைகளாக வென்யூ என்-லைன் காரில் காட்சியளிக்கின்றன. முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்களிலும், சக்கர வளைவுகளிலும், காரின் பக்கவாட்டின் அடிப்பகுதிகளிலும் மற்றும் மேற்கூரையிலும் சிவப்பு நிறத்தில் ஹைலைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை காரில் இருந்து தனித்து தெரிகின்றன.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

ஹூண்டாய் நிறுவனம் வென்யூ என்-லைன் காரின் முன்பக்க க்ரில், பம்பர் & பின்பக்க பம்பர் மற்றும் ஃபாக்ஸ் பிளேட்களின் வடிவங்களை சற்று திருத்தியமைத்துள்ளது. காரின் பின்பக்கத்தில் பம்பரிலும் ‘என்-லைன்' பேட்ஜ் பொருத்தப்பட்டிருக்க, புதிய இரட்டை-முனை எக்ஸாஸ்ட் குழாய்கள் வென்யூ என்-லைன் காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய வென்யூ காரில் 16-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

உட்புற தோற்றம் & வசதிகள்: ஸ்போர்டி தன்மை மெருகேறி உள்ளது

வெளிப்புறத்தை போன்று புதிய வென்யூ என்-லைன் காரின் உட்புறத்திலும் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, காரின் வெளிப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள சிவப்பு நிற ஹைலைட்கள் காரின் உட்புறத்திலும் இருக்கைகள், ஸ்டேரிங் சக்கரம், கியர் ஸ்டிக், HVAC கண்ட்ரோல் டயல்கள் மற்றும் காற்று துளைகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இதில் என்-லைன் லோகோ உடன் உள்ள காரின் ஸ்டேரிங்கில் சிவப்பு நிற தையல்கள் பளிச்சிடும் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இருக்கைகளிலும் சிவப்பு நிற ஹைலைட்கள் தையல்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் காரின் கேபினை பிரீமியம் தரத்தில் வெளிக்காட்ட சிவப்பு நிறத்தில் கேபின் விளக்குகளும், ஆக்ஸலேரேட்டர் & பிரேக் பெடல்களை அலுமினியத்திலும் ஹூண்டாய் வழங்கியுள்ளது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், டேஸ்போர்டில் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஹூண்டாயின் ப்ளூலிங்க் இணைப்பு வசதிகளை கொண்ட 8-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை உள்ளது. மற்ற முக்கிய தொழிற்நுட்ப வசதியாக வண்ண மயமான ட்ரைவிங் மோட் தீம்-கள் உடன் ஓட்டுனருக்கு தகவல்களை வழங்கக்கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை சொல்லலாம்.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இவற்றுடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர் இல்லா போன் சார்ஜிங் பேட் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக ஆப்ரேட் செய்யக்கூடிய சன்ரூஃப் உள்ளிட்டவற்றையும் வென்யூ என்-லைன் கார் பெற்றுள்ளது. ஆனால் உண்மையில் இவற்றை காட்டிலும் முக்கிய அப்டேட்டாக இரு கேமிராக்கள் உடன் டேஸ்காம் அமைப்பை இந்த புதிய வென்யூ எஸ்யூவி ஏற்றுள்ளது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இந்த இரு கேமிராக்களின் மூலமாக பயனர்கள் அனைத்து பயணத்தையும் காட்சிப்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, இதில் ஒரு கேமிரா காரின் வெளிப்பக்கத்தில் உள்ளவற்றையும், மறு கேமிரா கேபினுக்குள் பயணிகளையும் காட்சிப்படுத்துகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், 6 காற்றுப்பைகள் வென்யூ என்-லைன் காரில் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

மேலும், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் உதவி, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், வாகன ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான பாயிண்ட்கள் மற்றும் டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்டவையும் பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் இடம் பெற்றுள்ளன.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

என்ஜின் & கியர்பாக்ஸ்: கிட்டத்தட்ட மாற்றமில்லை

புதிய வென்யூ என்-லைன் ஆனது வென்யூவின் வழக்கமான டர்போ வெர்சனில் வழங்கப்படும் அதே என்ஜின் & கியர்பாக்ஸ் செட்அப்-ஐயே பெற்றுள்ளது. ஆனால் புதிய என்-லைன் வேரியண்ட்டை 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே பெற முடியும். வென்யூ டர்போ & என்-லைன் வேரியண்ட்களில் 998சிசி, 3-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 118.3 பிஎச்பி மற்றும் 1,500- 4,000 ஆர்பிஎம்-இல் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் இயக்க ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்குகிறது. வென்யூ என்-லைன் காரில் 45 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இந்த காரின் நீளம் (3,995மிமீ), அகலம் (1,770மிமீ) மற்றும் உயரம் (1,617மிமீ) ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது வென்யூ சப்-4 மீட்டர் எஸ்யூவி காரும் இதே அளவிலான நீளம், அகலம் மற்றும் உயரத்தில் தான் வடிவமைக்கப்படுகிறது. என்-லைன் வேரியண்ட்டில் வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2,500மிமீ ஆகும்.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

டிரைவிங் அனுபவம்: பிரத்யேக பெயிண்ட் மட்டுமில்லாமல் டிரைவிங்கில் எக்ஸ்ட்ரோ டோஸ்

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்யும் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களிலேயே விலைமிக்கதாக கொண்டுவரப்பட்டுள்ள வென்யூ என்-லைன் காரை பெங்களூரு சாலைகளில் ஓட்டி பார்த்தத்தில் கொடுக்கும் பணத்திற்கும், போட்டி மிகுந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் நிறுத்தப்படுவதற்கும் மிகவும் சரியான கார் இது என்பதற்கு உறுதியளிக்கிறோம்.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

பெங்களூருவில் கடந்த 1 மாத காலமாக மழை அவ்வப்போது பெய்து வருவதை பற்றி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இதனால் சாலைகள் எப்படி இருக்கும் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. 3-சிலிண்டர்களை கொண்ட என்ஜினில் இயங்கும் புதிய வென்யூ என்-லைன் காரில் என்ஜினில் இருந்து கிடைக்கும் ஆற்றலானது வழக்கம்போல் பெப்பியாக உள்ளது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இதன் இரட்டை க்ளட்ச் கியர்பாக்ஸை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த அளவிற்கு மென்மையான இந்த வகை இரட்டை-கள்ட்ச் கியர்பாக்ஸை இதுவரை நாங்கள் பார்த்தத்தில்லை. அதற்கேற்ப என்ஜினில் இருந்து வெளிவரும் சத்தம் ஆனது மிக அருமையாக உள்ளது. இதற்கு நாம் இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் இரட்டை-முனை எக்ஸாஸ்ட் குழாயை தான் பாராட்ட வேண்டும்.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

ஈக்கோ, நார்மல் & ஸ்போர்ட் என 3 விதமான டிரைவிங் மோட்கள் இந்த காரில் உள்ளன. இவை காரின் டிரைவ் பண்பை மிக சிறப்பாக மாற்றுகின்றன. இதற்காகவே இந்த 3 டிரைவிங் மோட்களிலும் காரை இயக்கி பார்த்தோம். ஈக்கோ மோடில் கியர்பாக்ஸ் மிக விரைவாகவே செயல்பட ஆரம்பித்து விடுகிறது. அதேநேரம், டாப் கியரிலும் குறைவான வேகத்தில் செல்லும்போதும் எந்த பிரச்சனையும் இல்லை. அத்தகைய சூழலில், த்ரோட்டல் ரெஸ்பான்ஸ் கிடைப்பதில்தான் சற்று பின்னடைவு ஏற்படுகிறது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

நார்மல் மோடில் கியர்பாக்ஸ் அடுத்த கியர்களுக்கு மாறுவதில் சற்று நேரத்தை எடுத்துக் கொள்கிறது என்பதை தவிர்த்து மென்மையான இயக்கத்தில் எந்த குறையும் இல்லை. இந்த மோடில் ஆக்ஸலரேட்டர் பெடலை மிதித்தவுடன் கிடைக்கப் பெறும் ரெஸ்பான்ஸும் கவனிக்கத்தக்கக்கூடிய வகையில் உள்ளது. மூன்றாவது ஸ்போர்ட் மோடில் தான் 3-சிலிண்டர் என்ஜின் முழுவதையும் பயன்படுத்திய உணர்வு கிடைக்கிறது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இதனால் இந்த மோடில் தான் மிக ஜாலியான பயணங்களை மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும். வழக்கமான வென்யூ காருக்கு பதிலாக புதிய என்-லைன் வேரியண்டிற்கு வருவோர் எதிர்பார்க்கும் பயண உணர்வு நிச்சயம் இந்த காரில் பெடில் ஷிஃப்டர்கள் உடன் கியர்களை மேனுவலாக மாற்றும் போது கிடைக்கிறது. இதனால் முதல்முறையாக காம்பெக்ட் எஸ்யூவி காரை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான பயணம் கிடைக்கும் என்பது உறுதி.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

டிரைவ் மோட்கள் மாறும்போது ஸ்டேரிங் சக்கரத்திலும் அதற்கேற்ப வித்தியாசம் தெரிகிறது. ஈக்கோ மோடில் ஸ்டேரிங் சக்கரம் மிகவும் இலகுவாக இருக்கிறது. ஆதலால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிப்பதற்கு இந்த மோட் உகந்ததாக இருக்கும். மிகவும் ஸ்போர்டியான பயணத்தை வழங்கும் ஸ்போர்ட் மோட் ஸ்டார்ட்-ஸ்டாப் டிராஃப்பிக்கிற்கு ஏற்றதாக இருக்காது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

நெடுஞ்சாலை பயணங்களுக்கு பயன்படுத்தலாம். ஏனெனில் ஸ்போர்ட் மோடில் ஸ்டேரிங் சக்கரம் இயக்குவதற்கு சற்று வலுவானதாக உள்ளது. அத்தகைய ஸ்டேரிங் சக்கரம் அதிவேகத்தை மிக எளிமையாக கையாளும். சஸ்பென்ஷன் அமைப்பை பொறுத்தவரையில், இந்த விஷயத்தில் ஹூண்டாய் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி செயல்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இதனாலேயே இந்திய சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் சிறந்த ஹேண்ட்லிங்கை வழங்கக்கூடிய காராக புதிய வென்யூ என்-லைனை சொல்லலாம். வென்யூ காரில் பொதுவாகவே சஸ்பென்ஷன் அமைப்பானது சற்று டைட்டானதாக வழங்கப்படும். இருப்பினும் புதிய என்-லைன் வேரியண்ட்டின் செயல்படுதிறன்களை தாங்குவதற்கு ஏற்ப புதிய உச்ச நிலைக்கு ஹூண்டாய் நிறுவனம் சென்றுள்ளது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

இதனால் பயணத்தின் போது குலுக்கல்கள் என்பது முற்றிலுமாக இல்லை. இதன் காரணமாக வளைவுகளில் திரும்பும்போதும் கூட ஓட்டுனருக்கு கூடுதல் நம்பிக்கை கிடைக்கிறது. இருப்பினும் அதற்காக மோசமான ஆஃப்-ரோடு சாலைகளிலும் அதிவேகத்தில் செல்லாம் என கூற முடியாது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

ஆனால் உடனடி நிறுத்தங்களுக்கு புதிய வென்யூ என்-லைன் காரில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும். ஏனெனில் இந்த காரின் அனைத்து 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளை ஹூண்டாய் பொருத்தியுள்ளது. குறிப்பாக, உடனடி நிறுத்தங்களுக்கு டிஸ்க் பிரேக்குகள் உத்தரவாதம் அளிக்கின்றன. இதற்கேற்ப பிரேக் பெடல் விரைவாக செயல்படக்கூடியதாக உள்ளது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் எப்படி இருக்கு? டிரைவிங் மோட்கள் எல்லாம் ஓகே!! முழு டெஸ்ட் டிரைவ் ரிவியூ

ட்ரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பெயர் மட்டுமின்றி செயல்படுதிறனும் பெரியதாகி உள்ளது

தோற்றத்தில் சிவப்பு நிற ஹைலைட்களை தவிர பெரியதாக எதுவும் வழங்கப்படவில்லை என மற்றவர்களுக்கு தோன்றலாம். ஆனால் ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்னால் இருந்து இயக்கி பார்த்த எங்களுக்கு தான் தெரியும் வென்யூ என்-லைன் கார் எத்தகைய மகிழ்ச்சியான பயண அனுபவத்தை வழங்கியது என்று. ஆதலால் அளவில்-சிறிய எஸ்யூவி காரை செயல்படுதிறன்மிக்கதாக எதிர்பார்க்கிறீர்கள் எனில் உங்களுக்கு இந்த புதிய ஹூண்டாய் கார் ஏற்றதாக இருக்கும்.

Most Read Articles
English summary
New hyundai venue n line test drive review
Story first published: Sunday, September 18, 2022, 22:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X