புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த, புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் கார் மிகச் சிறப்பான வசதிகளுடன் தனித்துவமான டிசைனில் வந்துள்ளது. அத்துடன், அதிக எரிபொருள் சிக்கனம் என்பது இந்த காரின் மிகப்பெரிய ப்ளஸ்

டொயோட்டா கார் நிறுவனத்தின் சொகுசு பிராண்டாக செயல்பட்டு வரும் லெக்சஸ் நிறுவனம், கடந்த 2016ம் ஆண்டு இந்திய சந்தையில் தனது இஎஸ் 300எச் காருடன் கால் பதித்தது. எனினும், அப்போது அறிமுகம் செய்யப்பட்ட இஎஸ் 300எச் சொகுசு செடான் கார் வெளிநாடுகளில் அர்த பழசாகி விற்பனையில் இருந்து தூக்கும் கட்டத்தில் இருந்த மாடலாக வந்தது.

இந்த சூழலில், சீனாவில் நடந்த 2018 பீஜிங் மோட்டார் ஷோவில் புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் காரின் 7ம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடல் அடுத்த சில மாதங்களில் தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜெர்மனியை சேர்ந்த ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ ஆகிய போட்டியாளர்களை எதிர்கொள்வதற்கான தனது முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக இந்த காரை கருதுகிறது லெக்சஸ். இந்த நிலையில், இந்த காரை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் டீம் டெல்லியில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தது. அப்போது இந்த கார் பற்றி உணர்ந்த சாதக, பாதக விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் கார் மாடலானது டொயோட்டா நிறுவனத்தின் சர்வதேச அளவிலான கார்கள் கட்டமைக்கப்படும் குளோபல் ஆர்க்கிடெக்சர் கே (GA- K) என்ற புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட நீளத்தில் 60 மிமீ வரையிலும், அகலத்தில் 45 மிமீ வரையிலும் அதிகரித்துள்ளது. வீல் பேஸ் கூட 50 மிமீ அதிகம் என்பதால், உட்புறத்தில் மிக தாராள இடவசதியை பெற்றிருக்கிறது.

மேலும், இந்த GA - K பிளாட்ஃபார்ம் மூலமாக புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதிக உறுதிமிக்க இலகு எடையிலான உயர்வகை ஸ்டீல் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் சிறந்த பாதுகாப்பு கொண்ட மாடலாக இருக்கும்.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரில் வழக்கம்போல, லெக்சஸ் கார்களுக்குரிய மிக பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு இந்த காருக்கு மிக தனித்துவமான தோற்றத்தை தருகிறது. ஹெட்லைட்டில் அம்புகுறி போன்ற எல்இடி பகல்நேர விளக்குகள் கொண்ட எல்இடி ஹெட்லைட்டுகள் மிக முக்கிய சிறப்பம்சமாக இருக்கிறது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பானட்டிலிருந்து முன்புறம் ஏறி, பின்னர் மெல்ல பின்னோக்கி சரிகிறது கூரை. இடுப்பு பகுதிக்கு கீழே கூர்மையான பாடி லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், கைப்பிடிகள் இணைந்துள்ளன. இந்த காரின் 18 அங்குல அலாய் வீல்கள் மிக வசீகரமாக இருக்கின்றன. ஜன்னலை சுற்றிலும் குரோம் கம்பி தடுப்பு இடம்பெற்றிருக்கிறது. பழைய மாடலை கிரவுண்ட் கிளியரன்ஸ் 5 மிமீ குறைக்கப்பட்டு இருப்பதால் மிக தாழ்வாக தெரிகிறது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்தில் மிக அழகான டெயில் லைட் வடிவமைப்பு கவர்கிறது. க்ரோம் பட்டையுடன் இரண்டு எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்களும் தொங்கவிடப்பட்டது போல கொடுக்கப்பட்டு இருக்கிறது. பூட் ரூம் மூடியில் ஸ்பாய்லர் இடம்பெற்றிருக்கிறது. பம்பரும் காரின் கம்பீரத்திற்கு உதவி புரிகிறது. ஒட்டுமொத்ததில் மிக ஸ்டைலான தனித்துவமான மாடலாக இருக்கிறது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர்

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டேஷ்போர்டு உள்ளிட்டவை தரமான பாகங்களுடன், சாஃப்ட் டச் பாகங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், உட்புற டிசைன் பழமையுடன் காட்சி தருகிறது. க்ரோம் அலங்காரம், மர வேலைப்பாடுகள் உள்ளிட்டவை இல்லை. கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், லெதர் உறை கொண்ட ஸ்டீயரிங் வீல், கியர் லிவர் ஆகியவை குறிப்பிடத்தக்க சிறப்புகள். ஓட்டுனர் கட்டுப்பாட்டு பகுதி முழுவதும் ஏராளமான சுவிட்சுகளுடன் காட்சி தருகிறது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரின் நவீனமான அம்சம் என்றால், 12.3 அங்குல பெரிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டின் நடுநாயகமாக வீற்றிருக்கிறது. தொடுதிரை வசதி இல்லாமல், தொடு உணர் வசதியுடன் இயங்குகிறது. டிராக் பேடு மூலமாக இந்த சாதனத்தை கட்டுப்படுத்த முடியும். நேவிகேஷன், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட செயலிகளை சப்போர்ட் செய்கிறது. டிவிடி பிளேயர் இடம்பெற்றுள்ளது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆடியோ சிஸ்டம்

இந்த காரில் 17 ஸ்பீக்கர்களுடன் கூடிய 1800W மார்க் லெவின்சன் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. உயர்தரமான ஒலி துல்லியத்தை கொடுக்கிறது. இந்த ரக சொகுசு கார்களில் மிக உயர்தரமான ஒலி உணர்வை தருகிறது. இந்த காரில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டருடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மேல்பகுதியில் டிரைவிங் மோடுகளை கட்டுப்படுத்தும் விதத்தில், இரண்டு சுழலும் திருகுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே

ஸ்டீயரிங் வீல் பிடிப்பதற்கு பெரிதாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், கீழ் பகுதியில் பேடில் ஷிஃப்ட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியும் உள்ளது. ஓட்டுனர் கவனச் சிதறல் இல்லாமல் பாதுகாப்பாக செல்வதற்கு இது சிறந்த தொழில்நுட்ப அம்சமாக கூறலாம்.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சொகுசான இருக்கைகள்

இருக்கைகள் மிக அகலமாகவும், சொகுசான உணர்வையும் தருகின்றன. மென்மையான உயர் தர லெதர் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், லம்பார் சப்போர்ட் வசதியுடன் கிடைக்கிறது. இதனை 4 விதமான நிலைகளில் மாற்றிக் கொள்ளவும் முடியும். இருக்கைகளை வெதுவெதுப்பாகவும், குளிர்ச்சியாகவும் வைப்பதற்கான வசதியையும் அளிக்கிறது..

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புற இருக்கை பயணி மற்றும் ஓட்டுனருக்கு இடையே ஆர்ம் ரெஸ்ட் லெதர் உறையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. முன் இருக்கைகள் மிக சொகுசாக இருப்பது போலவே, பின் இருக்கையும் மிக சொகுசான அனுபவத்தை தருகிறது. சோபாவில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை தருகிறது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தனி ஏசி வென்ட்டுகள், அதற்கான தனி கட்டுப்பாட்டு சுவிட்சுகள், இருக்கையை வெதுவெதுப்பாக வைக்கும் வசதி, ஷன் ஷேட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கால் வைப்பதற்கு போதுமான லெக்ரூம் இடவசதியை அளிக்கிறது. அதேநேரத்தில், உயரமானவர்களுக்கு ஹெட்ரூம் போதுமானதாக இருக்காது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

லெக்சஸ் இஎஸ் 300எச் கார் மிகச் சிறப்பான சப்த தடுப்பு கட்டமைப்பை கொண்டுள்ளது. உட்புறத்தில் அதிர்வுகள் மற்றும் வெளிப்புற சப்தம் மிக மிக குறைவாக இருப்பது இதன் மிகப்பெரிய பலம். சப்த தடுப்பு சிறப்பாக இருப்பது மட்டுமின்றி, இதன் 18 அங்குல அலாய் சக்கரங்களின் உட்புறம் கூடு போல வடிவமைக்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளை உள்வாங்கி கொள்கிறது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பூட் ரூம்

இந்த காரில் 454 லிட்டர்கள் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. பின் இருக்கைக்கு கீழாக இந்த ஹைப்ரிட் காருக்கான பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பூட்ரூமை கிக் சென்சார் மூலமாக கால் அசைவு மூலமாக திறக்கும் வசதியும் உள்ளது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின்

இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் மின் மோட்டாரும் இணைந்து செயல்படுவதால், இது ஹைப்ரிட் மாடலாக வந்துள்ளது. பெட்ரோல் எஞ்சின் மட்டும் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 221 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மின் மோட்டார் 120 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முந்தைய மாடலைவிட இந்த புதிய மாடலில் மின் மோட்டார் அடக்கமாக மாறி இருக்கிறது. இதனால், எடை குறைவதற்கு காரணமாகி இருப்பதுடன், செயல்திறனும் கூடுதலாக்க உதவி இருக்கிறது. இந்த காரில் பெட்ரோல் எஞ்சினை அணைத்துவிட்டு, மின் மோட்டாரில் மட்டுமே இயங்கும் வசதியும் உள்ளது. மின் மோட்டாரில் செல்லும்போது ஒரு சின்ன அதிர்வுகள், சப்தங்கள் கூட இல்லை.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் பெட்ரோல் எஞ்சின் மிக சீரான பவர் டெலிவிரியை வழங்குவதுடன், மின் மோட்டாருடன் இணைந்து அதிகபட்சமான செயல்திறனை காட்டி அசத்துகிறது. இதன் சிவிடி கியர்பாக்ஸும் எஞ்சின் பவரை சக்கரங்களுக்கு சிறப்பாக கடத்துகிறது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மேனுவலாக ஓட்ட விரும்புவோருக்காக பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது. குறைவான வேகத்தில் ஸ்டீயரிங் வீல் மிக இலகுவான உணர்வையும், அதிவேத்தில் கடினமாகவும் இருப்பதால், நகர்ப்புறமாக இருந்தாலும், நெடுஞ்சாலையாக இருந்தாலும் சலுப்பில்லாமல் நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு உற்சாகம் தருகிறது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த ஹைப்ரிட் கார் கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 22.37 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சொகுசு கார் ரகத்தில் இது அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட காராக இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் இருக்கும் மல்டி லிங்க் சஸ்பென்ஷன் கரடுமுரடான சாலைகளாகட்டும், நெடுஞ்சாலைகளாகட்டும் எளிதாக கடந்து செல்லும் வகையில் இருக்கிறது. இருக்கைகளும், சஸ்பென்ஷனும் இணைந்து சொகுசான பயணத்துக்கு உறுதி தருகின்றன. அதேபோன்று, கையாளுமையிலும் சிறந்த மாடலாக இருக்கிறது. வளைவுகளில் பாடி ரோல் குறைவாக இருப்பதும் இதன் சிறப்பு.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் இடம்பெற்றிருக்கும் பிரேக் சிஸ்டம் மிக துல்லியமான செயல்திறனை வெளிப்படுத்துவதால், அதிவேகத்திலும் பாதுகாப்பான உணர்வையும், நம்பிக்கையுடனும் செல்ல முடிகிறது. இது நிச்சயம் சொகுசு கார்களில் சிறப்பான பிரேக் சிஸ்டம் கொண்ட மாடலாக கூறலாம்.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
Engine 2,487cc NA Petrol
No. Of Cylinders 4
Power (bhp) 214
Torque (Nm) 221
Transmission eCVT
Top Speed (km/h) 180
Mileage (km/l) 22.37 (Claimed)
Wheel Size (mm) 235/45 R18
Kerb Weight (kg) 1,705
Price (Ex-Showroom) Rs 59.13 Lakh
புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முக்கிய வசதிகள்

இந்த காரில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆக்டிவ் நாய்ஸ் டிஸ்ப்ளே வசதி, ரிமோட் டச் இன்டர்ஃபேஸ், வயர்லெஸ் சார்ஜர், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி, மெமரி வசதியுடன் முன் இருக்கைகள், பவர் ரியர் சீட்டுகள், எல்இடி ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரில் 10 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஜாம் கன்ட்ரோல் மற்றும் ஸ்பீடு கன்ட்ரோல் வசதியுடன் பவர் விண்டோஸ், எமர்ஜென்ஸி பிரேக் சிக்னல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வண்ணங்கள்

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் கார் சோனிக் குவார்ட்ஸ், மெர்குரி கிரே மைக்கா, பிரிமீயம் சில்வர் மெட்டாலிக், சோனிக் டைட்டானியம் பிளாக், கிராஃபைட் பிளாக் கிளாஸ் ஃப்ளேக், ரெட் மைக்கா க்ரிஸ்ட்டல் ஷைன், ஐஸ் எக்ரு மைக்கா மெட்டாலிக் மற்றும் டீப் புளூ மைக்கா ஆகிய 9 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

விலை விபரம்

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.59.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த காருக்கு வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கு ஏராளமான விசேஷ ஆக்சஸெரீகளை லெக்சஸ் நிறுவனம் வழங்குகிறது.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போட்டியாளர்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் லாங் வீல் பேஸ், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஜாகுவார் எக்ஸ்எஃப் மற்றும் வால்வோ எஸ்90 கார்களுடன் ஒப்பிடலாம். ஆனால், புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் கார் ஹைப்ரிட் மாடலாக வந்திருப்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம்.

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
Models Power/Torque (bhp/Nm) Starting Price
Lexus ES300h 2.5 petrol 214/221 Rs 59.13 Lakh
Mercedes-Benz E-Class 2.0 Petrol 184/300 Rs 58.61 Lakh
BMW 5-Series 530i Petrol 248/350 Rs 49.90 Lakh
புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் கார் மிகச் சிறப்பான வசதிகளுடன் தனித்துவமான டிசைனில் வந்துள்ளது. அத்துடன், அதிக எரிபொருள் சிக்கனம் என்பது இந்த காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். சொகுசு கார்களில் ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்களை பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு இந்த கார் மிகச் சிறந்த மாற்று சாய்ஸாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #லெக்சஸ்
English summary
we recently got to drive the new 2018 Lexus ES300h in Delhi and here are our thoughts on the Japanese luxury sedan.
Story first published: Saturday, October 27, 2018, 17:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X