நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்திய சந்தையில் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு நிஸான் நிறுவனம் தயாராகி வருகிறது. அனேகமாக நடப்பு மாத இறுதியில் நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான போட்டி நிலவி வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிஸான் மேக்னைட் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதன் மூலம் இந்த செக்மெண்ட்டில் போட்டி இன்னும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

நிஸான் மேக்னைட் காரில் வழங்கப்படும் வசதிகளும், அதன் கவர்ச்சிகரமான டிசைனும், இந்த செக்மெண்ட்டில் போட்டியாளர்களுக்கு எதிராக விற்பனையில் சிறப்பாக செயல்பட உதவி செய்யலாம். இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகள் மற்றும் நெடுஞ்சாலையில் அதனை நாங்கள் ஓட்டி பார்த்தோம். எங்களது டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிசைன் & ஸ்டைல்

பார்த்தவுடனே பிடித்து விடும் தோற்றத்தில் நிஸான் மேக்னைட் டிசைன் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்த காம்பேக்ட் எஸ்யூவி கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது. காரை சுற்றிலும் உள்ள ஷார்ப்பான லைன்கள் மற்றும் மடிப்புகள் அதன் கவர்ச்சியை தூக்கலாக காட்டுகின்றன. அத்துடன் கருப்பு வண்ண க்ளாடிங்கும், வீல் ஆர்ச்சுகளும் காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன.

முன் பகுதியை பொறுத்தவரை, ஹூட்டின் மீது லைன்கள் மற்றும் மடிப்புகளை காண முடிகிறது. அத்துடன் நேர்த்தியான தோற்றம் கொண்ட எல்இடி ஹெட்லைட்களை இந்த கார் பெற்றுள்ளது. பம்பரின் கீழ் பகுதியில் டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் எல்இடி பனி விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேக்னைட்டின் ஒட்டுமொத்த லைட்டிங் செட்-அப் அருமையாக உள்ளது.

அதே சமயம் முன் பக்க க்ரில் அமைப்பில் ஓரளவிற்கு க்ரோம் வேலைப்பாடுகளை இந்த காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ளது. இந்த க்ரில் அமைப்பு, டட்சனில் இருப்பதை போன்றே உள்ளது. முன் பக்க பம்பர், காருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது. இனி பக்கவாட்டு பகுதிக்கு நகர்வோம்.

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இங்கே 5-ஸ்போக் ட்யூயல்-டோன் அலாய் வீல்கள்தான் ஒருவரின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். ஆனால் அலாய் வீல்களின் டிசைன், ஸ்கோடா ஆக்டேவியா விஆர்எஸ் காரில் இருப்பதை போன்று உள்ளது. அதே நேரத்தில் ஒருங்கிணைந்த எல்இடி இன்டிகேட்டருடன், கருப்பு நிற ஓஆர்விஎம்களை இந்த காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ளது. மேலும் ஓஆர்விஎம்களில் கேமராக்களும் வழங்கப்பட்டுள்ளன. செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக 360 டிகிரி கேமரா வசதியை இந்த கார் பெற்றுள்ளது.

அதே சமயம் கதவு கைப்பிடிகளில் க்ரோம் பூச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட ரூஃப் ரெயில்களையும் இந்த கார் பெற்றுள்ளது. இது 50 கிலோ வரையிலான எடையை தாங்கும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இனி காரின் பின் பகுதிக்கு வருவோம். இங்கே வழங்கப்பட்டுள்ள டெயில்லைட்கள் எல்இடி போல தோன்றலாம். ஆனால் அவை எல்இடி கிடையாது. இருந்தாலும் அவை நன்றாக இருப்பதால், பின் பகுதியிலும் கார் கவர்ச்சிகரமாக உள்ளது. இங்கே நிஸான் லோகோவிற்கு கீழ் பெரிய மேக்னைட் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. இதுதவிர பார்க்கிங் சென்சார்களையும் இந்த கார் பெற்றுள்ளது. நெருக்கடியான இடங்களில் பார்க்கிங் செய்ய இது உதவி செய்யும். ஆனால் கேமராவின் தரம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்டீரியர் & வசதிகள்

இனி காரின் உள்ளே செல்வோம். இங்கே விசாலமான கேபின் நம்மை வரவேற்கிறது. டேஷ்போர்டு கருப்பு வண்ணத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏசி வெண்ட்கள், லம்போர்கினி கார்களில் இருப்பதை போன்று உள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த காரின் கேபின் நன்றாக உள்ளது. பிரீமியமான தோற்றத்தை வழங்குகிறது.

இந்த காரில் 8 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே செயலிகளை சப்போர்ட் செய்யும். டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதற்கு நன்றாக உள்ளது. இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு அப்படியே கீழாக ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஏசி கண்ட்ரோல்களுக்கு கீழாக ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சார்ஜிங் சாக்கெட்களையும் இந்த கார் பெற்றுள்ளது. பொருட்களை வைப்பதற்கும் நல்ல இட வசதி உள்ளது.

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அத்துடன் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீலை நிஸான் நிறுவனம் இந்த காரில் வழங்கியுள்ளது. இதன் இரு புறமும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான கண்ட்ரோல்கள் உள்ளன. இதன் இடது பக்கத்தில் உள்ள பட்டன்கள், இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தவும், வலது பக்கம் உள்ள பட்டன்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. ஸ்விட்ச்கியரின் தரம் நன்றாக இருப்பதுடன், பிரீமியமான உணர்வை தருகிறது.

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் முக்கியமான ஹைலைட்களில் ஒன்றாக இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை குறிப்பிடலாம். இது டிஜிட்டல் ஆகும். கார் பற்றிய பல்வேறு தகவல்களை வழங்க கூடிய 7 இன்ச் எம்ஐடி ஸ்கீரினையும் இது பெற்றுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் நன்றாக இருந்தாலும், ரீட்-அவுட்கள் வீடியோ கேம் போல் உள்ளன. இந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் இருக்கைகளும் கருப்பு நிறத்தில் உள்ளன. அவை சௌகரியமான பயணத்தை உறுதி செய்கின்றன. ஆனால் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. முன் இருக்கைகளில் தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. இந்த கார் எங்களிடம் சிறிது நேரம் மட்டுமே இருந்தது. என்றாலும் தொலை தூர பயணங்களின்போது இந்த இருக்கைகள் உங்களை சோர்வடைய செய்யாது என்பதை எங்களால் உறுதியாக கூற முடியும்.

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இனி பின் இருக்கைகளுக்கு வருவோம். இங்கே போதுமான லெக்ரூம் இல்லாத காரணத்தால், உயரமான பயணிகளுக்கு சற்று அசௌகரியம் ஏற்படலாம். ஆனால் உயரமான பயணிகளுக்கு ஹெட்ரூம் ஒரு பிரச்னையாக இருக்காது. அதே சமயம் இந்த காரில் ஏசி மிகவும் சிறப்பாக உள்ளது. ரியர் ஏசி வெண்ட்களும் வழங்கப்பட்டிருப்பதால், வெப்பம் சுட்டெரிக்கும் நாளில் கூட, கேபின் வெகு விரைவாக குளிர்ச்சியடைகிறது. ஆனால் இந்த காரின் டாப்-வேரியண்ட்டில் கூட இல்லாத ஒரு விஷயம் சன்ரூஃப் ஆகும்.

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் பூட் ஸ்பேஸ் 336 லிட்டர்கள். நான்கு பயணிகளின் லக்கேஜ்களை வைத்து கொள்ள இது போதுமானது. ஆனால் பின் இருக்கைகள் 60:40 ஸ்பிளிட் வசதியை கொண்டிருப்பதால், கூடுதல் இட வசதி தேவைப்பட்டாலும் பிரச்னையில்லை.

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

ஓட்டுதல் அனுபவம்

1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் யூனிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு மோட்டார் என மொத்தம் இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இதில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. விலை குறைந்த வேரியண்ட்களில் மட்டுமே இந்த இன்ஜின் தேர்வு வழங்கப்படும்.

அதே சமயம் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். நாங்கள் ஓட்டியது 7 ஸ்டெப் சிவிடி வேரியண்ட் ஆகும். இது அருமையான கியர் பாக்ஸ் என சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். இதுதவிர 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வும் உள்ளது. இதுவும் அதே அளவிற்கான பவர் அவுட்புட்டைதான் வழங்குகிறது.

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

சிவிடி கியர் பாக்ஸ் இயக்குவதற்கு 'ஸ்மூத்' ஆக உள்ளது. பவர் டெலிவரி சீராக இருக்கிறது. அதே சமயம் கியர் பாக்ஸில் 'D' மோடுக்கு கீழ் 'L' மோடு வழங்கப்பட்டுள்ளது. இது 'Low range' என்பதை குறிக்கிறது. நீங்கள் மணிக்கு 40 அல்லது 50 கிலோ மீட்டர்கள் வரையிலான வேகத்தில் 'D' மோடில் கார் ஓட்டி கொண்டுள்ளீர்கள் என வைத்து கொள்வோம். அப்போது நீங்கள் திடீரென 'L' மோடுக்கு மாற்றினால், ஆர்பிஎம் 2,500 என்ற அளவில் இருந்து சுமார் 4000க்கு ஜம்ப் ஆவதை காணலாம். இதன் காரணமாக முதல் சில கியர்களில் அதிக டார்க் கிடைக்கும். செங்குத்தான பாதைகளில் ஏறும்போது இது உதவிகரமாக இருக்கும்.

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரில் மூன்று இலக்க வேகத்தை விரைவாக எட்ட முடிகிறது. அதே சமயம் குறைவான வேகத்தில் கேபின் மிகவும் அமைதியாக உள்ளது. ஆனால் மணிக்கு 80 கிலோ மீட்டர் என்ற வேகத்தை கடக்கும்போது, இன்ஜின் சத்தம் கேபினுக்குள் தொடர்ச்சியாக கேட்கிறது. இது உங்களுக்கு எரிச்சலூட்டலாம்.

ஆனால் இந்த காரின் சஸ்பென்ஸன் அமைப்பு நன்றாக உள்ளது. குறிப்பாக வேகத்தடைகள் மற்றும் குண்டும், குழியுமான சாலைகளை எளிதாக எதிர்கொள்வதால், நகர சாலைகளுக்கு ஏற்றதாக இது உள்ளது. அதே சமயம் 205 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸை கொண்டிருப்பதால், இந்த காரை சிறிய அளவிலான ஆஃப் ரோடுக்கு கொண்டு செல்லலாம். அத்துடன் கார்னர்களையும் இந்த கார் நன்றாக ஹேண்டில் செய்கிறது. இந்த திறன் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். ஆனால் கொஞ்சம் பாடி ரோல் இருக்கிறது. எனினும் குறையாக சொல்லும் அளவிற்கு பெரிய அளவில் இல்லை.

ஸ்டியரிங் வீல் பிடித்து ஓட்டுவதற்கு நன்றாக உள்ளது. இது இறுக்கமாக இருப்பதை போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. உண்மையில் இது நல்ல விஷயம். ஏனெனில் அதிக வேகத்தில் செல்லும்போது ஸ்டியரிங் வீல் இலகுவாக இருப்பது ஆபத்தானது. ஆனால் கார் எங்களிடம் குறைந்த நேரமே இருந்த காரணத்தால், எங்களால் மைலேஜ் பற்றி துல்லியமாக கூற முடியவில்லை.

நிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

இது கவர்ச்சிகரமான தோற்றத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ள காம்பேக்ட் எஸ்யூவி காராக உள்ளது. விசாலமான இட வசதியும், நல்ல ஹேண்ட்லிங்கும் எங்களை கவர்ந்தது. ஆனால் சன்ரூஃப் இல்லாதது, சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் குறைவாக பயன்படுத்தப்பட்டிருப்பது ஆகியவற்றை நாங்கள் விரும்பவில்லை.

இந்த காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இதன் ஆரம்ப விலை 5.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு வந்தவுடன், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன், நிஸான் மேக்னைட் போட்டியிடும்.

Most Read Articles
English summary
Nissan Magnite Compact SUV First Drive Review: Engine Performance, Handling, Features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X