நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான் புத்தம் புதிய மேக்னைட் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களில் தயாராக உள்ளது. பிராண்டின் பி-எஸ்யூவி மாடலாக வெளிவரும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் இந்த அக்டோபர் 21ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

இந்திய சந்தையில் மிகுந்த விற்பனை போட்டி நிலவும் சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள புதிய நிஸான் மேக்னைட் ஏகப்பட்ட அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. இதன் நேர்த்தியான தோற்றம் பிரிவில் உள்ள மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு சவாலாக விளங்கலாம்.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

இந்த வகையில் இந்திய சந்தையில் இன்னும் சில மாதங்களில் விற்பனையை துவங்கவுள்ள மேக்னைட் இந்தியாவில் நிஸானிற்கு புதிய இன்னிங்க்ஸை ஆரம்பித்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக நிஸான் மேக்னைட் காருடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதன்மூலம் நாங்கள் அறிந்து கொண்ட இந்த சப்-காம்பெக்ட் காரை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

டிசைன் & ஸ்டைல்

ஏற்கனவே கூறியதுபோல் நேர்த்தியான டிசைனினாலும், கூர்மையான லைன்களினாலும் புதிய நிஸான் மேக்னைட்டின் வெளிப்புற தோற்றம் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள கருப்பு நிற க்ளாடிங் மற்றும் அகலமான சக்கர வளைவுகள் காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

முன்பக்கத்தில் எண்கோண டிசைனில் வழங்கப்பட்டுள்ள பெரிய க்ரில் அமைப்பை சுற்றிலும் தடிமான க்ரோம் ஸ்ட்ரிப்-ஐ பார்க்க முடிகிறது. அதேபோல் க்ரில்லின் உட்புறத்திலும் க்ரோம் உள்ளீடுகள் உள்ளன. இந்த க்ரில்லிற்கு இரு புறங்களிலும் எல்இடி ப்ரோஜெக்டர்களுடன் நேர்த்தியான ஸ்விஃப்ட்பேக் ஹெட்லேம்ப் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

L-வடிவில் வழங்கப்பட்டுள்ள எல்இடி டிஆர்எல்கள் (பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள்) முன்பக்க பம்பர் வரையில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய டிஆர்எல் விளக்குகளை புதிய தலைமுறை டட்சன் ரெடி-கோ ஹேட்பேக் காரில் பார்த்திருப்போம்.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

இரு முனைகளிலும் மூடுபனி விளக்குகளை கொண்ட முன்பக்க பம்பரிலும் கருப்பு நிற க்ளாடிங் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் காரின் முன்பக்கம் வழக்கமான மைய ஏர் டேம் மற்றும் சில்வர் நிற சறுக்கு தட்டையும் கொண்டுள்ளது. அப்படியே பக்கவாட்டு பகுதிகளுக்கு சென்றால், புதிய மேக்னைட் கார் 16 இன்ச்சில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

இவற்றிற்கு மேலே கருப்பு-க்ளாடிங் உடன் பெரிய சக்கர வளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் வரையில் பக்கவாட்டு பகுதிகளின் வழியாக கூர்மையான லைன்கள் மற்றும் மடிப்புகள் செல்கின்றன.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

மேக்னைட் காரை இரட்டை-நிற மேற்கூரை உடன் நிஸான் நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது. எஸ்யூவி கார்களே உண்டான பண்பின்படி கொண்டுவரப்பட்டுள்ள இந்த இரட்டை நிற அம்சத்தில் மேற்கூரை கருப்பு நிறத்திலும் பொருட்களை கட்டி வைப்பதற்கு தேவையான ரெயில்கள் சில்வர் நிறத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

இந்த சில்வர் நிறத்தை கார் கதவுகளின் வெளிப்பக்கத்திலும் காண முடிகிறது. காரின் பின்பக்கம் ஆனது சுற்றிலும் வ்ராப்-ஐ கொண்ட எல்இடி டெயில் லைட்களுடன் கூர்மையான மற்றும் ஸ்போர்டியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. பின்பக்கத்தில் இந்த கார் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி ஸ்ட்ரிப் உடன் மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லரையும் பெற்றுள்ளது.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

ஸ்கிட் தட்டுகள் மற்றும் ஒளி பிரதிபலிப்பான்களுக்கான குழிகளை கொண்டுள்ள பின்பக்க பம்பரும் முன் பம்பரை போல் சில்வர் நிற பாகங்களை கொண்டுள்ளது. பூட்-லிட்டின் மையத்தில் 'MAGNITE' என்ற முத்திரை வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பெற்றது மேக்னைட்டின் டர்போ & சிவிடி வெர்சனாகும். இதனால் பின்பக்கத்தில் ‘Turbo' & ‘CVT' முத்திரைகளும் உள்ளன.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

உட்புறம் & வசதிகள்

இந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் உட்புற கேபின் சில இடங்களில் சில்வர் நிறத்துடன் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில்வர் நிறம் ஸ்டேரிங் சக்கரம், கியர் நெம்புகோல், ஏசி காற்று வெளிவரும் பகுதி மற்றும் பக்கவாட்டு கதவு ஹேண்டில்களில் வழங்கப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

இதன் 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் தட்டையாகவும் தாழ்வாகவும் லெதரால் மூடப்பட்டும் உள்ளது. அதேநேரம் அழைப்புகள், அலாரம் மற்றும் ஆடியோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன் கண்ட்ரோல்களையும் கொண்டுள்ளது. ஸ்டேரிங்கிற்கு பின்புறத்தில் முழு-டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

வழக்கமான ஸ்பீடோமீட்டர் மற்றும் டச்சோமீட்டர் என்று மட்டுமில்லாமல் கூடுதலாக சில செயல்பாடுகளையும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் மூலமாக அறிய முடிகிறது. இதில் வெவ்வேறான செயல்பாடுகளை ஸ்டேரிங் சக்கரத்தில் வழங்கப்பட்டுள்ள ஸ்விட்ச்கள் மூலமாகவே ஓட்டுனர் கண்ட்ரோல் செய்யலாம்.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்ட 8 இன்ச்சில் தொடுத்திரை உடன் வழங்கப்பட்டுள்ள இதன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் பல வசதிகளை பெற முடிகிறது. அறுகோண வடிவில் ஏசி துளைகள் உள்ள காரின் டேஸ்போர்டு ப்ரீமியம் தரத்திலான மென்மையான பாகங்கள் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

ஏசி துளைகள் மையத்தில் இரண்டும், இரு கதவுகளுக்கு அருகில் தலா ஒன்று என்றும் உள்ளன. மொபைல் போன் சார்ஜருக்கான சாக்கெட்டை கொண்டுள்ள மைய கன்சோல் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் செட்டிங்ஸையும் பெற்றுள்ளது. இருக்கைகள் கருப்பு & க்ரே என்ற இரட்டை நிறத்தில் ப்ரீமியம் ஃபாப்ரிக் துணியால் மூடப்பட்டுள்ளன.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

சற்று தேவைக்கு ஏற்றாற்போல் சரி செய்து கொள்ளும் வசதியை கொண்டுள்ள இந்த இருக்கைகள் நல்ல சவுகரியத்தை தருகின்றன. குறிப்பாக இரண்டாவது இருக்கை வரிசை பயணத்தின்போது உண்மையில் பறப்பதுபோன்று இருக்கும். அமர்பவர்களின் உயரம் பற்றி கவலைப்பட தேவை இல்லை. தேவையான அளவிற்கு இட வசதி உள்ளது. அதேநேரம் பின் இருக்கை வரிசையில் மையத்தில் ஆர்ம்ரெஸ்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

பின் இருக்கை பயணிகளுக்கான ஏசி முன் இருக்கைகளுக்கு நடுவில் வழங்கப்பட்டுள்ளது. கேபின் மொத்தத்திலும் போதுவான இட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கான பகுதி 334 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் இடம் தேவை என்றால் பின் இருக்கை வரிசையை 60:40 என்ற விகிதத்தில் பிரித்தும் கொள்ளலாம்.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

என்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள்

நிஸான் நிறுவனம் மேக்னைட்டில் வழங்கவுள்ள என்ஜின் தேர்வுகள் குறித்த விபரங்களை வெளியிடவில்லை. எங்களுக்கு அனுப்பப்பட்ட மேக்னைட் காரில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் எக்ஸ்ட்ரோனிக் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்பட்டது.

1 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேர்வு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் மேக்னைட்டின் விலை குறைவான வேரியண்ட்களில் நிஸான் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

போட்டி மாடல்கள் & எதிர்பார்க்கும் விலை

முன்பே கூறியதுபோல் நிஸான் மேக்னைட் அதிக விற்பனை போட்டி நிலவிவரும் காம்பெக்ட்-எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதனால் இந்த நிஸான் தயாரிப்புக்கு மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் சமீபத்திய அறிமுகமான கியா சொனெட் உள்ளிட்டவை போட்டியாக விளங்கும்.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

நிஸான் மேக்னைட்டின் விலை குறித்த எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை. நமக்கு தெரிந்தவரை இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.11 லட்சத்திற்கு உள்ளாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்! கார் எப்படி இருக்கு?

ட்ரைவ்ஸ்பார்க்கின் கருத்து

இந்திய சந்தையில் தற்சமயம் வாடிக்கையாளர்கள் பலர் பெரிதும் எதிர்பார்க்கும் மாடலாக நிஸான் மேக்னைட் விளங்குகிறது. மேக்னைட் காரை எங்களுக்கு இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கம்பீரமான தோற்றம், ஸ்போர்டியான டிசைன் மற்றும் சவால்விடும் வகையிலான என்ஜின் தேர்வுகளுடன் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் பயணமும் அருமையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite Review (First Look): Design, Interiors, Features, Boot Space, Dimensions, Specs & All Other Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X