கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ப்ராண்டான ரேஞ்ச் ரோவரின் புதிய கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி காரினை நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த புதிய ஸ்போர்ட்ஸ் எஸ்யூவி காரினை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லேண்ட் ரோவர் நிறுவனம் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மற்றும் அதிநவீன எஸ்யூவி கார்களை தயாரித்து வருகிறது. லேண்ட் ரோவர் மக்களிடையே புகழ் பெற்ற நிறுவனமாக மாறியது. உலக அளவில் தனது எஸ்யூவி கார்கள் வியபாரத்தினை நிலைநிறுத்திய லேண்ட் ரோவர். இந்தியாவிலும் தனது கார்களை அறிமுகம் செய்தது இந்நிறுவனம் ரேஞ்ச் ரோவர் என்ற ப்ராண்டின் கீழ் புதிய எஸ்யூவி கார்களை தயாரிக்க ஆரம்பித்தது.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்நிலையில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி காரினை கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த காருக்கு மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பினை தொடர்ந்து ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் சிறிது மேம்படுத்தப்பட்டு புதிய மிட்-லெவல் ஸ்போர்ட் எஸ்யூவியாக இந்திய வியாபார சந்தையில் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் லேண்ட் ரோவர் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மேம்படுத்தப்பட்ட புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி லேண்ட் ரோவர் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த கம்பீரமான தோற்றம் கொண்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி காரினை நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இதில் இந்த எஸ்யூவி காரில் உள்ள சிறப்பு அம்சங்கள், என்ஜின் செயல்திறன் மற்றும் வடிவமைப்பை குறித்து கண்டறிந்தோம்.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்:

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் எஸ்யூவிகள் ஜெர்ரி மெகவர்னின் புதிய டிசைன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி டிசைனையும் அவ்வாறே வடிவமைத்துள்ளனர். பழைய மாடலை விட புதிய ஸ்போர்ட்ஸ் எஸ்யூவின் டிசைன் அதிக அளவில் மேம்படுத்தப்பட்டு அட்டகாசமான தோற்றத்தை தருகிறது. இதில் மிகவும் கூர்மையான மற்றும் துல்லியமான டிசைன் வேலைப்பாடுகளை காண முடிகிறது.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் முன்புறத்தில் புதிய நேர்த்தியான தேன்கூடு வடிவிலான கிரில் ஏர் வேண்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள எல்இடி டிஆர்எல் மற்றும் ப்ரகாசாமான மாட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்புகள் கவர்ச்சியான முன்தோற்றத்தை தருகிறது.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மேலும் இதன் பக்கவாட்டில் வழங்கப்பட்டுள்ள 20இன்ச் அலாய் வீல்கள் காரின் சிறப்பான பயணத்தை அனுபவத்தை தருகிறது.மேலும் இதன் பின்புறத்தில் ஸ்போர்ட்ஸ் பேஜ் மற்றும் எல்இடி டெயில் லேம்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 60:40 என்ற விகிதத்தில் விரிப்படுத்தக்கூடிய 1,686 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டிரியர்:

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி இன்டிரியரில் காரின் பல செயல்பாடுகளின் பட்டன்கள் அடங்கிய ஸ்டேரிங் வீல் உள்ளது. அதன் பின்புறத்தில் 12.3 இன்ச் டச் சென்சர்களுடன் கூடிய கிராபிக் இன்ஸ்ட்ருமெட்ன் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் டூயல் 10 இன்ச் இன்போடெய்ன்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இது கண்ட்ரோல் டச் புரோ டியோ சிஸ்டத்தில் வடிவைக்கப்பட்டுள்ளது. இதில் இசை, நேவிகேஷன், தொலைபேசி இணைப்பு போன்றவை உள்ளமைக்கப்பட்ட பயன்பாடுகள் மற்றும் பொது இன்போடெயின்மென்ட் அமைப்புகள் வழங்கபட்டுள்ளது.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்போர்ட்ஸ் எஸ்யூவி காரில் அனைத்து நிலப்பரப்பு செயல்பாட்டைக் கட்டுப்படுத்த டிரைவிங் மொடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் டிரைவர் சீட் 16 வகையில் அட்ஜஸ் செய்யும் வகையில் அமைத்துள்ளனர். மேலும் இதன் ரியர் சீட் 3 பேர் சொகுசாக பயணம் செய்யும் வகையில் வழங்கபட்டுள்ளது. இதில் கூடுதலாக 19 ஸ்பீக்கர் 825W மெரிடியன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளது இதன் மூலம் காரில் பயணம் செய்யும்போது அசத்தலான இசையை கேட்டு மகிழலாம்.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

என்ஜின்:

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி கார்கள் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் மற்றும் டீசல், 4.4 லிட்டர் வி8 டீசல் மற்றும் 5.0 வி8 பெட்ரோல் என நான்கு என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்த 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் வி6 டீசல் என்ஜின் 260 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும் ஆற்றல்மிக்கது. இதில் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 100கிமீ வேகத்தை 7.7 நொடிகளில் தொட கூடிய சக்தி வாய்ந்த என்ஜின் ஆகும்.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் மற்றொரு நவீன 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் 518 பிஎச்பி பவரையும் 625 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வல்லமை கொண்டது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்டின் டீசல் வேரியண்டில் 3.0 லிட்டர் வி6 என்ஜின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும் மற்றும் 255 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதன் சக்திவாய்ந்த 4.4 லிட்டர் வி8 என்சின் 250 பிஎச்பி பவரையும் மேலும் 740 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பார்க்கின் தீர்ப்பு:

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி முன்பிருந்த மாடலை விட கூர்மையான மற்றும் துல்லியமான டிசைன் வேலைப்பாடுகளுடன் அழகிய டிசைன் வடிவமைப்பை பெற்றுள்ளது. மேலும் இதன் இன்டிரியரில் உள்ள வசதிகள் அனைத்துமே ஓட்டுனரின் வேலையே குறைத்து சிறந்த பயண அனுபவத்தை தரும். இந்த கார் 7 சீட்டராக வராமல் போனது சற்று ஏமாற்றத்தை தருகிறது.

கம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி கார்கள் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையில் பேஸ் வேரியண்ட் 1.03 கோடி ரூபாயில் துவங்கி டாப் வேரியண்ட் 2.05 கோடி ரூபாய் என விற்பனையில் உள்ளது. அசால்டாக 100கிமீ வேகத்தை 7.7 நொடிகளில் தொட கூடிய சக்தி வாய்ந்த என்ஜின் இனி இந்திய சாலைகளில் தனது சாம்ராஜியத்தை காட்டும் என்பது உறுதி. இது ஆஃப் ரோடு என கூறப்படும் கரடுமுரடான சாலைகளிலும் பயணம் செய்ய ஏற்றவாறு வடிவமைப்பட்டுள்ளதால் மக்களுக்கு ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles
English summary
Range Rover Sport Review: Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X