பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், ட்ரைபர் எம்பிவி காரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. சிறப்பான தோற்றத்தினாலும், தரமான டிசைனினாலும் ட்ரைபர், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வாகனமாக விளங்குகிறது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

கடந்த ஆண்டு அறிமுகத்தில் இருந்து இதுவரை 40,000க்கும் அதிகமான ட்ரைபர் மாதிரி கார்களை விற்பனை செய்துள்ள ரெனால்ட் நிறுவனம், இந்த எம்பிவி மாடலை ஒரே ஒரு 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் தான் அறிமுகப்படுத்தியது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

இந்த நிலையில் தான் தற்போது புதியதாக ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வு ட்ரைபருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் ட்ரைபர் காரை கடந்த சில தினங்களாக டெஸ்ட் ட்ரைவ் செய்துள்ளோம். அதன் மூலம் இந்த ஏஎம்டி காரை பற்றி நாங்கள் அறிந்தவற்றை இந்த செய்தியில் விரிவாக கொடுத்துள்ளோம்.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

டிசைன் & ஸ்டைலிங்

தோற்றத்தை பொறுத்தவரையில் ட்ரைபரின் புதிய ஏஎம்டி வேரியண்ட் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் பெறவில்லை. இதனால் தற்சமயம் விற்பனையில் உள்ள மேனுவல் வேரியண்ட்டை தான் டிசைனில் ஒத்து காணப்படும் இந்த புதிய வேரியண்ட், முன்புறத்தில் ஹலோஜன் பல்புகளுடன் ப்ரோஜெக்டர் ஹெட்லைட் செட்அப்பை கொண்டுள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

பம்பருக்கு கீழ்பகுதியில் ஃபாக் விளக்குகள் உள்ள இடத்தில் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வேரியண்ட்டிற்கு சற்று கூடுதலான ப்ரீமியம் தோற்றத்தை வழங்க க்ரில், ஹெட்லைட் அமைப்பின் உள்ளே மற்றும் டிஆர்எல்களை சுற்றிலும் க்ரோம்-ஐ ரெனால்ட் நிறுவனம் பொருத்தியுள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

அப்படியே காரின் பக்கவாட்டு பகுதிக்கு வந்தால், சக்கர ஆர்ச்களை டர்ன் இண்டிகேட்டர்களுடன் இணைக்கும் விதமாக காரை சுற்றிலும் கருப்பு நிற க்ளாடிங் வழங்கப்பட்டுள்ளது. 15 இன்ச் சக்கரங்கள், அலாய் போன்று காட்சியளித்தாலும், ஆனால் அவை உண்மையில் இரும்பு ரிம்கள் ஆகும்.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

இதனால் தூரத்தில் இருந்து காரை பார்ப்பவர்கள் அலாய் சக்கரங்களின் விஷயத்தில் ஏமாற வாய்ப்புண்டு. இந்த சக்கரங்களில் தனித்துவமான பிடிமானம் மற்றும் ஈரமான சாலைகளில் சிறப்பாக செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்ட 185/65/R15 என்ற அடையாளத்தை கொண்ட எம்ஆர்எஃப் இசட்விடிவி சுற்றுச்சூழல் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

காரின் உடல் நிறத்தில் பின்புறம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ள பக்கவாட்டு பகுதிகளில் எந்த க்ரோமும் சேர்க்கப்படவில்லை. மேற்கூரை பின்பக்கமாக சற்று நீட்டிக்கப்பட்டுள்ளதால் உட்புறத்தில் மூன்றாவது வரிசையும் ஏசி-ஐ பெற்றுள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

சாவி இல்லாமல் உள்ளே நுழையும் வசதியினை புதியதாக ட்ரைபரின் புதிய ஏஎம்டி வேரியண்ட் பெற்றுவந்தாலும், முன்பக்க கதவு ஹேண்டில்களில் எந்த பொத்தானும் வழங்கப்படவில்லை. எவ்வாறு இது செயல்படுகிறது என்றால், காரின் சாவியை நீங்கள் உங்களது பாக்கெட்டில் வைத்து கொண்டு வந்தாலே போதும்.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

அதுவே தானாக கதவுகளை திறந்துவிட்டு (அன்லாக்) மீண்டும் பூட்டி கொள்ளும். இதனால் பொத்தான்களை அழுத்துவது தேவையற்றதாகி போய்விட்டது. ஆனால் உண்மையில் இது ஒருபுறம் உரிமையாளருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

ஏனெனில் சாவியை வைத்து காரின் அருகில் வந்தாலோ அல்லது காரை கடந்த செல்ல நேர்ந்தாலோ கதவுகள் தானாக அன்லாக் ஆகிவிட்டு மீண்டும் பூட்டி கொள்ளும். என்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கும் அணைத்து வைப்பதற்கும் பொத்தான் வழங்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

பின்புறத்தில் ட்ரைபர் என்கிற முத்திரை சரியாக நிறுவனத்தின் லோகோவிற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இந்த ஏஎம்டி காரில் 'Easy-R' என்ற முத்திரையும் பார்க்க முடிகிறது. இது ஒன்றே நாம் ஏஎம்டி மற்றும் எம்டி (மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்) வேரியண்ட்களை அடையாளப்படுத்த ஒரே வழி ஆகும்.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

ஏன்னெனில் ஏஎம்டி வேரியண்ட்டில் மட்டும் தான் இந்த முத்திரை வழங்கப்படும். காரின் வழிகாட்டுதல் தகவமைப்புடன் இல்லாவிடினும் பின்பக்க கேமிராவின் தரம் சிறப்பாக உள்ளதால் வாகனங்கள் நிறைந்த இடத்திலும் காரை பின்பக்கமாக சென்று நிறுத்துவது என்பது அவ்வளவு கடினமாக ஒன்றாக இருக்காது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

உட்புற வசதிகள்

காரின் உட்புறத்தை பார்த்தோமேயானால், ட்ரைபர் ஏஎம்டி காரின் கேபின் உண்மையிலேயே நன்கு பெரியதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஸ்போர்டு மற்றும் இருக்கைகள் இரட்டை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் டேஸ்போர்டிலும் கதவுகளிலும் கொடுக்கப்பட்டுள்ள சில்வர் நிறம் பார்ப்பதற்கு அட்டகாசமாக உள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய இதன் 8-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான திரை, பிரகாசமான சூரிய ஒளியிலும் ஓட்டுனர் இயக்கத்தின்போது தெளிவாக பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு வலதுபுறமாக கீழே, கதவுகளை பூட்டுதல்/திறத்தல், பின்பக்க டீஃபாக்கர்ஸ் மற்றும் ஹசார்ட் விளக்கு உள்ளிட்டவை கட்டுப்படுத்தும் பொத்தான்கள் தரப்பட்டுள்ளன. இவற்றிற்கு கீழே க்னாப்களுடன் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

பயணிகள் நன்கு சவுகரியமாக அமரும் விதத்தில் பெரியதாகவே உள்ள இதன் கேபினில் உள்ள ஸ்டேரிங் சக்கரம் மென்மையான லெதரால் மூடப்பட்டுள்ளது. மற்றப்படி இந்த ஸ்டேரிங்கில் எந்தவொரு கண்ட்ரோல் பொத்தானும் தரப்படவில்லை. ஆனால் ட்ரைபரின் எதிர்கால ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் குறைந்தது இன்ஃப்டெயின்மெண்ட் சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்யும் கூடியதான ஸ்டேரிங் கண்ட்ரோல்களையாவது எதிர்பார்க்கலாம்.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

ட்ரைபர் ஏஎம்டி கார், 4-இன்ச்சில் பயண தூரம், எரிபொருளின் அளவு, வேகம், நேரம் போன்ற ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை கொண்டுள்ளது. இந்த க்ளஸ்ட்டர் முன்பக்கத்தில் கண்ணாடி எதையும் கொண்டில்லாததால் சுட்டெரிக்கும் கோடை காலத்தின்போதும் க்ளஸ்ட்டர் மூலமாக தகவல்களை அறியலாம்.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

பயணிகளுக்கான சவுகரியத்தை பொறுத்தவரையில், காரின் முன் இருக்கைகள் கீழ் தொடைகளுக்கான ஆதரவு மற்றும் பக்க மேம்பாடுகளுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டாவது இருக்கை வரிசை சற்று பெரியதாக மூன்று நபர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

ஆனால் மூன்றாவது வரிசையில் இரண்டு நபர்கள் மட்டுமே சவுகரியமாக அமர முடியும். சிறிய பயணங்களுக்கு பரவாயில்லை, ஆனால் தொலைத்தூர பயணங்களுக்கு மூன்றாவது இருக்கை வரிசையில் அமருவது அவ்வளவு சவுகரியமானதாக இருக்காது என்பது எங்களது கருத்து.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

இரண்டாவது இருக்கை வரிசை பயணிக்களுக்காக B-பில்லரில் ஏசி காற்றுக்கான துவாரங்களும், 3-வது வரிசை பயணிக்களுக்கு மேற்கூரையில் துவாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு துவாரங்களையும் கியர் லிவருக்கு பின்பகுதியில் உள்ள கண்ட்ரோல் மூலமாக தனியாக தனியாக கட்டுப்படுத்த முடியும்.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

என்ஜின் & செயல்திறன்

ட்ரைபர் ஏஎம்டி காரில் 999சிசி, 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை ரெனால்ட் நிறுவனம் பொருத்தியுள்ளது. அதிகப்பட்சமாக 72 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் புதியதாக ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

ரெனால்ட் க்விட் மாடலிலும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. ஆனால் அதில் கியரை தேர்ந்தெடுப்பதற்க்கு ரோட்டரி டயல் கொடுக்கப்பட்டுள்ளதால், கியரை மேனுவலாக தேர்ந்தெடுப்பது முடியாத காரியமாக இருக்கிறது. ஆனால் ட்ரைபர் ஏஎம்டி கார் ஆனது பாரம்பரியமான கியர் லிவரை பெற்றுள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

இதனால் இதில் கியரை ஓட்டுனர் மேனுவலாக மாற்ற முடியும். அதேபோல் ஓட்டுனருக்கு கூடுதல் வசதியாக ப்ரேக் மற்றும் ஆக்ஸலரேட்டருக்கான பெடல் இரண்டும் அருகருகே கொடுக்கப்பட்டுள்ளன. ரெனால்ட், கிளட்ச் துடுப்பை காரிலிருந்து வெளியே எடுத்துள்ளதால், மீதமுள்ள இரண்டு துடுப்புகளும் நன்கு இடைவெளியுடனே உள்ளன.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

காரை 'D'-க்கு கொண்டுவந்து ப்ரேக்கில் இருந்து காலை எடுத்தால் எந்தவொரு ஆக்ஸலேரேஷனும் இன்றி கார் எளிமையாக நகர்ந்து செல்லும், உண்மையில் இது சூப்பரான வசதியே. மற்ற அனைத்து ஏஎம்டி கார்களை காட்டிலும் சிறப்பாக ட்யூன் செய்து ஏஎம்டி கியர்பாக்ஸை ட்ரைபரில் பொருத்தியுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் நினைத்துள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

ஆனால் உண்மையில் கியர்பாக்ஸிற்கு இன்னும் ட்யூனிங் தேவை என்பது எங்களது கருத்து. இது அதி வேகத்தின்போது காருக்கு பெரிய பின்னடைவாக விளங்கும். அதேபோல் கியரை மேலும் கீழுமாக மாற்றுவதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. மேனுவல் மோடில் சில கண்ட்ரோல்கள் கியர் மாற்றும்போது நமக்கு கிடைக்கும். ஆனால் அத்தகைய கண்ட்ரோல் எதுவும் இந்த ஏஎம்டி காரில் கிடைப்பது போல் தெரியவில்லை.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

இரண்டாவதில் இருந்து மூன்றாவது கியருக்கு மாற்றும்போது, மாறுவதற்கு கார் சிறிது நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அதேநேரம் காற்றை ஏற்று கொள்வதற்கும் அதனை எக்ஸாஸ்ட் குழாய் வழியாக வெளியிடுவதற்கும் வெவ்வேறான வால்வு நேரங்களை கார் எடுத்து கொள்கிறது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

ஆனால் என்ஜினின் ஆற்றல் காருக்கு மிகவும் நேர்த்தியாக வழங்கப்படுவதை இந்த இடத்தில் பதிவு செய்தாக வேண்டும். எதிர்காலத்தில் டர்போசார்ஜ்டு என்ஜின் உடனும் ட்ரைபர் அறிமுகமாக வாய்ப்புள்ளது. சஸ்பென்ஷன் மிகவும் மென்மையாக இயங்குவதால் ஏறி குதித்தலில் கார் தன்னால் முடிந்த அளவிற்கு தான் செயல்படுகிறது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

இதன் காரணமாக மேடு பள்ளங்களின்போது கார் சற்று அதிகமாகவே ஒரு பக்கமாக சாய்வதால், காட்டு பாதைகளில் இயக்கும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் ஸ்டேரிங் சக்கரத்தின் செயல்பாடும் பெரிய அளவில் சொல்லும்படியாக இல்லை.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

மைலேஜ் அளவும் கணிசமாக குறைந்துள்ளது. அதாவது மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 20-ல் இருந்து 21kmpl மைலேஜ்ஜை வழங்கிய ட்ரைபர், புதிய ஏஎம்டி கியர்பாக்ஸில் 18kmpl-ஐ தான் வழங்குகிறது. என்விஎச் நிலைகள் மற்றும் மின்பாயாமல் காக்கும் காப்பும் ட்ரைபரில் கவரும்படியாக இல்லை என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

இயக்கத்தின்போது கேபினில் எதிர்பார்த்ததை விடவும் சற்று அதிகமாகவே இரைச்சல் ஏற்படுகிறது. ஆனால் இது எல்லாத்தையும் மறைக்கும் விதமாக ட்ரைபர் ஏஎம்டி காரின் விலையில் ரெனால்ட் நிறுவனம் கவனமாக செயல்பட்டுள்ளது. ஏனெனில் மேனுவல் வேரியண்ட்டை காட்டிலும் இந்த எம்பிவியின் புதிய ஏஎம்டி வேரியண்ட்டின் விலை வெறும் ரூ.40 ஆயிரம் மட்டுமே அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

ட்ரைபர் ஏஎம்டி ஆனது ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என்ற மூன்று விதமான ட்ரிம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ.6.26 லட்சத்தில் இருந்து ரூ.7.3 லட்சம் வரையில் உள்ளது.

பட்ஜெட் விலையில் ஏழு-இருக்கை காம்பெக்ட் எம்பிவி... ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி காரின் முழு விமர்சனம் இதோ...

ஏழு இருக்கைகள், புதியதாக ஏஎம்டி கியர்பாக்ஸ் எல்லாம் சரிதான், அதேபோல் என்ஜினை திருத்தியமைத்தும், சஸ்பென்ஷனை சற்று விரைப்பாகவும், கியரை வேகமாக மாற்றும்படியாகவும் வழங்கியிருந்தால், ட்ரைபர் ஏஎம்டி கார் இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கக்கூடும் என்பது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் விமர்சனம்.

Most Read Articles
English summary
Renault Triber AMT Review, Budget Seven-Seater Compact MPV. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X