ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

ஸ்கோடா நிறுவனம் ரேபிட் செடான் காரை கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதன்பின் தயாரிப்பு நிறுவனத்தின் சிறந்த விற்பனை கார்களுள் ஒன்றாக மாறிய இந்த செடான் மாடல் 2011ல் இருந்து சில ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களை பெற்றுள்ளது. இருப்பினும் ரேபிட்டின் இரண்டாம் தலைமுறை காரை இதுவரை ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

இந்த புதிய தலைமுறை கார் அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் 2020 ஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ டிஎஸ்ஐ காரை சில நாட்களுக்கு ஓட்டும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதன் மூலம் நாங்கள் அறிந்து கொண்ட இந்த காரை பற்றிய முழு விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

ஸ்கோடா ரேபிட் செடானின் டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படவுள்ள இந்த மான்டே கார்லோ எடிசன் வழக்கமான ரேபிட் காரில் இருந்து சில கூடுதலான பாகங்களை பெற்றுள்ளது.

வெளிப்புறம்

காரின் வெளிப்புறத்தை பார்த்தவுடன் நமது கண்களை கொள்ளையடிப்பது இதன் சிவப்பு நிற பெயிண்ட் அமைப்பு தான். இருப்பினும் ரேபிட்டின் ஸ்போர்ட்டியான பண்பை தொடரும் வகையில் இந்த ஸ்பெஷல் எடிசன் காரை சுற்றிலும் சில கருப்பு நிற பாகங்களை பார்க்க முடிகிறது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

முன்புறத்தில் நேர்த்தியான வடிவத்தில் கருப்பு நிறத்தில் உள்ள ஹெட்லைட்கள், குறைவான ஒளியினை வெளிப்படுத்துவதற்காக ப்ரோஜெக்டரையும், அதிக ஒளியினை வழங்க பிரதிபலிப்பானையும் கொண்டுள்ளது. இவைமட்டுமின்றி எல்இடி டிஆர்எல்களுடன் சில க்ரோம்களும் ஹெட்லைட் அமைப்பில் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

இந்த காரில் ஃபாக் விளக்குகள் கார்னரிங் விளக்குகளாகவும் செயல்படுகின்றன. இருப்பினும் விளக்கு அமைப்புகள் ஹலோஜனாகவே கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்பெஷல் எடிசனிற்கு மட்டுமாவது எல்இடி தரத்தில் விளக்குகள் கொடுக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

க்ரில் அமைப்பு கருப்பு நிறத்தில் செங்குத்தான செருகல்களுடன் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஒரே ஒரு க்ரோம் மட்டும் தயாரிப்பு நிறுவனத்தின் முத்திரைக்காக வழங்கப்பட்டுள்ளது. மற்ற கூர்மையான லைன்கள் மற்றும் க்ரீஸ்கள் அனைத்தும் ஸ்போர்டியான தோற்றத்திற்கு காரின் கீழ்பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

அப்படியே பக்கவாட்டு பகுதிக்கு நகர்ந்தால், அங்கிருக்கும் 16-இன்ச் இரட்டை-நிற அலாய் சக்கரங்கள் நிச்சயம் உங்களை கவர்ந்துவிடும். இவற்றில் அதிவேகத்தின் போதும் சிறப்பான பிடிமானத்தை வழங்கக்கூடிய 195/55/ஆர்16 எம்ஆர்எஃப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

காரில் சாவி இல்லாமல் நுழையும் வசதி கொடுக்கப்படவில்லை. இது சற்று ஏமாற்றத்தை தரக்கூடும். ஸ்பெஷல் எடிசன் என்பதை உணர்த்தும் விதமாக B-பில்லரின் இரு பக்கங்களிலும் மான்டே கார்லோ முத்திரை பொருத்தப்பட்டுள்ளது. காரின் மேற்கூரை மற்றும் பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் உள்ளிட்டவை காரின் சிவப்பு நிறத்திற்கு ஏற்றதாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

சுறாவின் துடுப்பு வடிவில் ஆண்டெனாவை கொண்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் ஜன்னல்களில் க்ரோம் எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும் பின்புறத்தில் முத்திரைகள் பொருத்தப்படும் இடங்களில் சில க்ரோம்களை பார்க்க முடிகிறது. அதிவேகங்களின் போது காரை கீழ்நோக்கி தள்ளுவதற்காக கருப்பு நிறத்தில் பூட்-லிப் ஸ்பாய்லரை மான்டே கார்லோ எடிசனில் ஸ்கோடா நிறுவனம் பொருத்தியுள்ளது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

பின்புறத்தில் உள்ள டெயில்லைட்கள் அப்கிரேட் செய்யாதது போல் உள்ளன. அவற்றை சிறிது கூர்மையாகவும், நேர்த்தியாகவும் வழங்கியிருந்தால் பின்புறத்தில் உள்ள மற்ற பாகங்களுடன் எளிதாக பொருந்தியிருக்கும். வாகனங்கள் நிறைந்த பகுதியிலும் காரை எளிமையாக பார்க் செய்ய ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

உட்புறம்

உட்புற கேபின், இதில் தான் 2020 மாண்டே கார்லோ வழக்கமான ரேபிட் காரில் இருந்து அதிகளவில் மாற்றங்களை பெற்றுள்ளது. இதனால் கேபினிற்குள் நுழைந்தவுடனே டேஸ்போர்டு, ஸ்டேரிங் சக்கரம், கதவு பேனல்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டிருப்பதை கவனித்துவிடுவீர்கள்.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

ஏனெனில் விற்பனையில் உள்ள ரேபிட்டில் இரட்டை நிறத்தில் கேபின் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இரட்டை நிறங்களை காட்டில் ஒற்றை கருப்பு நிறத்தில் தான் காரின் உட்புறம் அட்டகாசமாக உள்ளது. இருப்பினும் இந்த கருப்பு நிற கேபினில் சில சிவப்பு நிற ஹைலைட்களையும் பார்க்க முடிகிறது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

ஆம், இருக்கைகள் தான் பெற்றுள்ளன. மான்டே கார்லோ முத்திரையுடன் வழங்கப்பட்டுள்ள இதன் இருக்கைகளை சவுகரியத்திற்கு ஏற்றாற்போல் மேனுவலாக சரிசெய்து கொள்ள முடியும். இருப்பினும் இருக்கையின் உயரத்தை மாற்றும் வசதி ஓட்டுனரின் இருக்கைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

இரண்டாவது இருக்கை வரிசையில் மையத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆர்ம்ரெஸ்ட் உடன் சவுகரியமாக இருவரும், அதிகப்பட்சமாக மூன்று பேரும் அமரலாம். பயணிகளின் தனியுரிமைக்காக தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட நிற ஜன்னல் கண்ணாடிகளை வழங்கியுள்ள ஸ்கோடா, பின்புறத்தில் உள்ள ஜன்னலை நகர்த்தக்கூடிய சன்ஷேட்களுடன் பொருத்தியுள்ளது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

இதுமட்டுமின்றி பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கொளுத்தும் கோடை காலத்திலும் காரின் உள்ளே பனிகாலம் தான். மேலும் பின் இருக்கை பயணிகளுக்காக மான்டே கார்லோ முத்திரையுடன் இரு தலையணைகளையும் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

தாழ்வாக வழங்கப்பட்டுள்ள ஸ்டேரிங் சக்கரம் சிவப்பு நிற ஹைலைட்களை கொண்ட லெதரால் மூடப்பட்டுள்ளது. இந்த ஸ்டேரிங் சக்கரத்தின் இடது புறத்தில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்யக்கூடிய பொத்தான்கள் உள்ளன. இவற்றின் மூலமாக இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் வரும் அழைப்புகளை நிராகரிக்கவும் முடியும்.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பற்றி கூற வேண்டுமென்றால் 8-இன்ச் தொடுத்திரை வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றின் மூலமாக ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்ப்ளேவை இணைக்க முடியாது. ஆனால் உங்களது மொபைல் போனை அதன் மூலமாக செயல்படுத்த முடியும்.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

இதற்காகவும் இணையத்திற்காகவும் சிம் கார்டு பொருத்து வசதி இதன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்டு சிஸ்டங்களை தங்களது வாகனங்களில் பொருத்தி சிக்னல்களில் நிற்கும்போது பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

ஆனால் அதிலும் சிலரோ அவற்றை இயக்கத்தின்போதும் உபயோகப்படுத்துகின்றனர். இது உண்மையில் அபாயகரமானது ஆகும். இதனால் தான் ஸ்கோடா நிறுவனம் இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் ஹேண்ட் ப்ரேக் மேலே இழுக்கப்பட்டிருந்தால் மட்டுமே வீடியோ இயங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் அடிப்படை தன்மையில் தான் உள்ளது. இதன் பல தகவல்களை வழங்கக்கூடிய திரையின் உதவியுடன் கேபினின் வெப்பநிலை, பயண குறிப்புகள், எரிபொருளின் அளவு, நேரம், மைலேஜ் உள்ளிட்ட தகவல்களை அறிய முடியும்.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

இதன் இருபக்கங்களிலும் அன்லாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் டச்சோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் தானியங்கி வைபர்களையும் பெற்றுள்ள ரேபிட்டின் இந்த ஸ்பெஷல் எடிசனில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியும் உள்ளது. இதனால் கேபினில் காலியான பகுதிகள் குறைவாக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள்.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

கதவுகளில் மற்றும் கியர் லிவரின் முன்புறத்தில் தண்ணீர் பாட்டில்கள் வைப்பதற்கு இடம் வழங்கப்பட்டும் கேபின் நன்கு விசாலமாகவே உள்ளது. இவற்றுடன் குளிர் கையுறைபெட்டியும் இந்த காரில் உள்ளது. மேலும் பின்புறத்தில் 460 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ள இடத்தில் நான்கு நபர்களது பொருட்களை தாராளமாக வைத்து கொள்ளலாம்.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

இதற்கு மேலும் இடம் தேவை என்றால், பின் இருக்கை வரிசையை 60:40 என்ற விகிதத்தில் மடித்து கொண்டு அந்த இடத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம். மான்டே கார்லோ எடிசனை மென்மையான பாகங்கள் கொண்ட கேபின் உடன் எதிர்பார்த்தோம். ஆனால் இதில் நல்ல தரத்திலான பிளாஸ்டிக்-ஆல் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

என்ஜின் & கையாளுதல்

ரேபிட் மான்டே கார்லோ, 1 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜினை கொண்ட வாகனமாகும். இதனால் இதில் 999சிசி, 3-சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் (ஆட்டோமேட்டிக் விரைவில் வரவுள்ளது) இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

காரின் மொத்த எடை 1200 கிலோவுக்கும் குறைவாக தான் உள்ளது. இந்த குறைவான எடை உடன் கட்டாய தூண்டல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் பயணம் எவ்வாறு இருக்கும் என நினைத்து பாருங்கள். உண்மையில் நீங்கள் நினைப்பதை போன்று தான் அருமையாக இருந்தது. 6

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

டர்போ என்ஜின் என்பது காருக்கு சிறிய பின்னடைவு தான், இருந்தாலும் காரை இயக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால் டர்போ என்ஜின் என்பதையே மறந்துவிடுவீர்கள். முதல் கியரில் உங்கள் கால் ஆக்ஸலரேட்டரில் இருக்கும்போது காரை இயக்க ஆரம்பிக்கவும், கிளட்சை மிதிக்கவும் நீங்கள் திட்டமிட்டால், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் இல்லாததால் நிறைய சக்கர சுழற்சி இருக்கும்.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

ஆனால் அகலமான டயர்கள் இத்தகைய நிகழ்வுகளை பெரிய விபத்திற்கு கொண்டு செல்லாது. ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன்புறத்தில் டிஸ்க்குகளும், பின்புறத்தில் ட்ரம்மும் உள்ளது. இதில் முன்பக்க ப்ரேக் காலிபர்கள் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவ்வாறு இல்லை.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

இவற்றுடன் ஏபிஎஸ்-ம் உள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பு சற்று விரைப்பாகவே புதிய மான்டே கார்லோ எடிசனில் வழங்கப்பட்டுள்ளது. மூன்று இலக்க எண் வேகத்தில் சென்றால் கார் சிறிது தள்ளாடுகிறது. ஆனால் வளைவுகளில் காரை மிக எளிமையாக கையாள முடிகிறது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

ஆனால் அதேநேரம் அதிவேகத்தில் வளைவுகளில் திருப்பினால் ஒரு பக்கமாக சாய்வதால் ஹேண்ட்லிங் செய்வது சிறிது கடினமானதாக உள்ளது. மற்றப்படி பாதையை மாற்றுவது ஒன்றும் கடினமானதாக இல்லை. ஸ்டேரிங் சக்கரம் மிக நன்றாகவே செயல்படுகிறது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

இதனால் யாரையாவது முந்தி கொண்டு செல்ல நினைத்தால் ஒரு கியரை கீழே இருக்கினாலே போதுமானது. மேலும் அந்த ஒரு கியர் மாற்றுவதே உங்களுக்கு நல்ல உணர்வை கொடுக்கும். மிகவும் இலகுவாக உள்ள க்ளட்ச் சிக்னலில் காரை நிறுத்துவதற்கு எளிமையானதாக இருக்கும்.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

மைலேஜ் அளவுகளை பார்ப்பவர்களுக்காக, ரேபிட்டின் இந்த ஸ்பெஷல் எடிசன் 12-ல் இருந்து 14 kmpl வரையிலான மைலேஜ்ஜை வழங்குகிறது. அதுவே நெடுஞ்சாலைகளில் 18-ல் இருந்து 20 kmpl வரையில் கூட மைலேஜ்ஜை பெற முடியும். இதனால் இந்த காரில் 500கிமீ தூரத்திற்கு பயணிப்பதற்கு பெட்ரோல் டேங்கின் கொள்ளளவான 55 லிட்டர் போதுமானதாக இருக்கும். இதுதான் உண்மையில் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

ட்ரைவ்ஸ்பார்க்கின் கருத்து

ரேபிட் மான்டே கார்லோவின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.11.76 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டியான தோற்றத்தில் இயக்கத்திற்கு ஏதுவான என்ஜின் உடன் வரும் செடான் காருக்கு இவ்வளவு தொகையை செலவழிப்பது தவறானதாக இருக்காது.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

ஆனால் சாவி இல்லாமல் நுழையும் வசதி மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதேபோல் சஸ்பென்ஷனை சற்று கூடுதல் விரைப்பாகவும், காரின் பின்பக்கத்தை தற்போதைய மாடர்ன் கார்களுக்கு இணையாக அப்டேட்டும் செய்திருக்கலாம்.

ஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...

மற்றப்படி காருக்கு என்ஜின் வழங்கும் ஆற்றலை அழகான காரின் தோற்றத்துடன் கண்டு மெய்சிலிர்த்து போனோம் என்பது உண்மை. ரேபிட்-ஐ போன்று 2020 மான்டே கார்லோ எடிசனும் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுஸுகி சியாஸ், ஹோண்டா சிட்டி மற்றும் டொயோட்டா யாரிஸ் உள்ளிட்டவற்றுடன் விற்பனையில் மல்லுக்கட்டவுள்ளது.

Most Read Articles
66
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Rapid TSI Monte Carlo Edition Road Test Review
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X