குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரை, நடப்பாண்டு தொடக்கத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா நிறுவனத்தின் புத்தம் புதிய ஆல்பா (ALFA - Agile Light Flexible Advanced) பிளாட்பார்ம் அடிப்படையில் அல்ட்ராஸ் கட்டமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் சிறிய மற்றும் மிட்-சைஸ் தயாரிப்புகளுக்கு இந்த புதிய பிளாட்பார்ம் பயன்படுத்தப்படும்.

டாடா அல்ட்ராஸ் கவர்ச்சிகரமான டிசைன் செய்யப்பட்டுள்ளது, ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன, கேபின் பிரீமியமான உணர்வை தருகிறது என்பதெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் இந்த காரின் பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் எப்படி உள்ளது? என்பதை தெரிந்து கொள்வதற்கான நேரம் இது. மும்பையில் டாடா அல்ட்ராஸ் டீசல் வேரியண்ட் எங்கள் கைகளுக்கு ஒரு சில நாட்கள் கிடைத்தது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் நாங்கள் அதனை ஓட்டி பார்த்தோம். எங்களது டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

டிசைன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'இம்பேக்ட் 2.0' டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது டாடா தயாரிப்பு அல்ட்ராஸ். முதல் தயாரிப்பு டாடா ஹாரியர் எஸ்யூவி. பிரீமியம் எஸ்யூவி செக்மெண்ட்டில், போட்டியாளர்களை காட்டிலும் டாடா அல்ட்ராஸ் அதிக பிரீமியமாக காட்சியளிக்கிறது. இதற்கு இந்த புதிய டிசைன் மொழியே காரணம்.

இந்த காரின் முன் பகுதியில் நேர்த்தியான தோற்றம் கொண்ட ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. லோ- பீமுக்கு புரொஜெக்டரையும், ஹை-பீமுக்கு ரெஃப்லெக்டரையும் இது கொண்டுள்ளது. டிஆர்எல்கள் தவிர வேறு எங்கும் எல்இடி லைட்கள் வழங்கப்படவில்லை. இது பம்பரின் அடிப்பகுதியில் பனி விளக்குகளுக்கு அடுத்தபடியாக அமைந்துள்ளது.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

அதே சமயம் கீழ்நோக்கி சாய்ந்த பானெட்டை டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது. இது சுறா மூக்கு வடிவ டிசைனை கொடுக்கிறது. அத்துடன் கருப்பு நிற க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர முன் பகுதியின் ஒட்டுமொத்த அகலத்திற்கும் மெல்லிய க்ரோம் பட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இது முன் பகுதியில் காரை பிரீமியமாக காட்டுகிறது. அதே நேரத்தில் முன் பக்க பம்பரின் கீழ் பகுதியில், கருப்பு நிறத்தில் சென்ட்ரல் ஏர் இன்டேக் வழங்கப்பட்டுள்ளது.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை மேற்புறமாக வளைந்த விண்டோ லைனை டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது. இது இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்கிற்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை தருகிறது. பின் பகுதியை நோக்கி செல்ல செல்ல இந்த விண்டோ லைனின் தடிமன் குறைகிறது. இது கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 16 இன்ச், நான்கு-ஸ்போக், ட்யூயல்-டோன் லேசர் கட் அலாய் வீல்களை டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

இந்த காரின் பின் பக்க கதவு கைப்பிடிகள், சி-பில்லருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. டாடா அல்ட்ராஸ் காரின் கதவுகளை பற்றிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அவை 90 டிகிரிகளில் திறக்கின்றன. எனவே முன் மற்றும் பின் பக்க பயணிகள் காருக்கு உள்ளே செல்வதும், வெளியே வருவதும் மிகவும் எளிமையாக உள்ளது.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

இனி காரின் பின் பகுதிக்கு நகர்வோம். இங்கே நேர்த்தியான தோற்றம் கொண்ட டெயில்லைட் யூனிட்களை டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது. பின் பகுதியில் பியானோ பிளாக் நிறத்தை அதிகளவில் காண முடிகிறது. பூட்டின் மையப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள 'டாடா' மற்றும் 'அல்ட்ராஸ்' பேட்ஜ்களில் மட்டுமே க்ரோம் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் டாடா அல்ட்ராஸ் காரின் தோற்றம் மிகவும் சிறப்பாக உள்ளது. காரை சுற்றிலும் ஆங்காங்கே உள்ள மடிப்புகள், கூடுதல் கவர்ச்சியை வழங்குகின்றன. ஸ்போர்ட்டியான தோற்றத்திற்காக குறைந்த அளவு மட்டுமே க்ரோம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

இன்டீரியர் & வசதிகள்

இனி காருக்கு உள்ளே செல்வோம். இங்கே விசாலமான மற்றும் பிரீமியமான கேபின் வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்டர் கன்சோலில் உள்ள பட்டன்களும் நன்றாக உள்ளன. டேஷ்போர்டின் மையப்பகுதியில் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என இரண்டு செயலிகளையும் சப்போர்ட் செய்யும்.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

இந்த காரில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஆடியோ மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான பட்டன்கள் உள்ளன. இந்த மூன்று ஸ்போக் ஸ்டியரிங் வீல் லெதரால் சுற்றப்பட்டுள்ளது. பிடித்து ஓட்டுவதற்கு நன்றாக உள்ளது. ஸ்டியரிங் வீலின் இடது பக்கத்தில், இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்கள் உள்ளன. வலது பக்கத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றுக்கான கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

டாடா அல்ட்ராஸ் காரில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. அனலாக் ஸ்பீடோமீட்டர் இடம்பெற்றுள்ள நிலையில், எஞ்சிய பாகங்கள் அனைத்தும் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகும். டேக்கோமீட்டர், ரேஞ்ச், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணம் செய்யலாம், கியர் இன்டிகேட்டர் உள்பட டிரைவருக்கு பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

அதே சமயம் இந்த காரின் பெரிய இருக்கைகள் சௌகரியமான பயணத்தை உறுதி செய்கின்றன. ஓட்டுனர் மற்றும் முன் பக்க பயணிக்கு ஸ்லைடிங் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது. இதனுடன் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டியரிங் வீல் அட்ஜெஸ்ட்மெண்ட் வசதி இருப்பதால், சரியான டிரைவிங் பொஷிஷனை கண்டறிவது எளிமையானது.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

பின் இருக்கைகளில் பக்கவாட்டு பகுதியில் நல்ல இடவசதி உள்ளது. ஆனால் 6 அடிக்கும் அதிகமான உயரம் கொண்டவர்கள் என்றால், ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் சற்று குறைவாக இருக்கலாம். ஆனால் பின் பகுதியில் தரை சமதளமாக இருப்பதால், மூன்று பேர் எளிதாக அமரலாம். பின் பகுதி பயணிகளுக்கும் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. வெயில் சுட்டெரிக்கும் நாட்களில் கேபினை விரைவில் குளிர்ச்சியாக்க ஏசி வெண்ட்கள் உதவும்.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

இனி பூட் பற்றி பார்க்கலாம். 345 லிட்டர் என்ற பூட் ஸ்பேஸ் உடன் டாடா அல்ட்ராஸ் வருகிறது. இந்த அளவுடைய காருக்கு இது போதுமானதாக இருக்கும். இருந்தாலும் இன்னும் அதிக இடவசதி வேண்டும் என நீங்கள் நினைத்தாலும் பிரச்னையில்லை. 60:40 ஸ்பிளிட் பின் பக்க இருக்கையை மடித்து வைத்து கொள்வதன் மூலம் பூட் ஸ்பேஸை 665 லிட்டர்களாக உயர்த்தி கொள்ள முடியும்.

அத்துடன் சென்சார்களுடன் ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவையும் இந்த கார் பெற்றுள்ளது. நெருக்கடியான இடங்களில் காரை எளிதாக பார்க்கிங் செய்ய இது உதவும்.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

இன்ஜின் & ஹேண்ட்லிங்

இந்த காரில், 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் Revotorq டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான் காரிலும் இந்த இன்ஜின் தேர்வு உள்ளது. இந்த இன்ஜின் 4000 ஆர்பிஎம்மில் 90 பிஎச்பி பவரையும், 1250-3000 ஆர்பிஎம்மில் 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த டீசல் இன்ஜினின் பிக்-அப் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் கார் செல்ல ஆரம்பித்ததும், பவரில் திடீர் எழுச்சியை காண முடிகிறது. நகர பகுதிகளில் ஓட்டும்போதுதான் இன்ஜின் அதிக திறன்மிக்கதாக உள்ளது. மேலும் இந்த காரின் இலகுவான க்ளட்ச், நின்று நின்று செல்லும் கடுமையான போக்குவரத்து நெரிசல்களில் சௌகரியமான பயணிக்க அனுமதிக்கிறது. நகர பகுதிகளில் ஓவர்டேக் செய்வது எளிமையாக உள்ளது. ஆனால் நெடுஞ்சாலைகளில் இதனை அவ்வளவு எளிதாக செய்ய முடியவில்லை.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

அதேபோல் இந்த காரில் கியர்களை மாற்றுவது அவ்வளவு ஸ்மூத் ஆக இல்லை. ஒருவர் நினைப்பதற்கு ஏற்ப கியர்களை அவ்வளவு விரைவாக மாற்ற முடியாது. இது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. அத்துடன் 'டர்போ லேக்' இருப்பதும் அல்ட்ராஸ் டீசல் காரின் முக்கியமான குறைகளில் ஒன்றாக உள்ளது. ஈக்கோ மற்றும் சிட்டி என இந்த காரில் இரண்டு டிரைவிங் மோடுகள் உள்ளன. சிட்டி மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஓரளவிற்கு நன்றாக உள்ளது. ஆனால் ஈக்கோ மோடில் கார் மிகவும் மந்தமாக இருக்கிறது. இந்த இரண்டில் சிட்டி மோடு சிறந்ததாக தோன்றுகிறது.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

இனி சஸ்பென்ஸன் செட்அப்பிற்கு வருவோம். டாடா அல்ட்ராஸ் காரின் சஸ்பென்ஸன் செட்அப் நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் பயணிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. குண்டும், குழியுமான இந்திய நகர சாலைகளுக்கு இது அவ்வளவு ஏற்றதாக இல்லை. ஆனால் டாடா அல்ட்ராஸ் காரின் பிரேக்கிங் மிகவும் சிறப்பாக உள்ளது. அதிக வேகத்தில் சென்றாலும் காரை உடனடியாக நிறுத்தி விட முடிகிறது.

ரைடு மற்றும் ஹேண்ட்லிங் பிரிவில்தான் டாடா அல்ட்ராஸ் ஜொலிக்கிறது. இந்த காரின் புதிய ஆல்பா பிளாட்பார்ம் அனைத்து வேகங்களிலும் சிறப்பான பேலன்ஸை வழங்குகிறது. அதேபோல் ஸ்டியரிங் வீலின் ரெஸ்பான்சும் ஷார்ப் ஆக உள்ளது. மூன்று இலக்க வேகத்தில் பயணிப்பதிலும் பிரச்னைகள் ஏற்படுவதில்லை.

சரி, டாடா அல்ட்ராஸ் எவ்வளவு மைலேஜ் தருகிறது? என்ற கேள்வி உங்களுக்குள் நீண்ட நேரமாக இருந்திருக்கலாம். டாடா அல்ட்ராஸ் கார் எங்களிடம் இருந்தபோது, நகர பகுதிகளில் ஒரு லிட்டருக்கு 14 முதல் 17 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கியது. அதே சமயம் நெடுஞ்சாலைகளில் சுமாராக ஒரு லிட்டருக்கு 19 முதல் 22 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைத்தது.

குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான கார்... டாடா அல்ட்ராஸ் டீசல் ரோடு டெஸ்ட் ரிவியூ...

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

டாடா அல்ட்ராஸ் டாப் டீசல் வேரியண்ட்டின் விலை 9.09 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) ஆகும். இது குடும்பங்களுக்கு ஏற்ற அட்டகாசமான பிரீமியம் ஹேட்ச்பேக் கார். இந்த காரின் டிசைன் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும். அத்துடன் விசாலமான கேபினையும் இந்த கார் பெற்றுள்ளது. ஆனால் பின் இருக்கைகள் மற்றும் பவர் டெலிவரி ஆகிய அம்சங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20, டொயோட்டா க்ளான்சா, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுடன், டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது. உங்கள் குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பான (குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா அல்ட்ராஸ் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது) பிரீமியம் ஹேட்ச்பேக் காரை நீங்கள் பார்த்து கொண்டிருந்தால், டாடா அல்ட்ராஸை நாங்கள் உங்களுக்கு பரிசீலிப்போம்.

Most Read Articles
English summary
Tata Altroz Diesel Review (Road Test): Engine Performance, Handling, Mileage, Design. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X