மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில், டாடா அல்ட்ராஸ் கார் 45X என்ற பெயரில், கான்செப்ட் மாடலில் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன்பின் நடப்பாண்டு நடைபெற்ற ஜெனீவா மோட்டார் ஷோ நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட தயாரிப்புக்கு உகந்த நிலையில், டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரை அறிமுகம் செய்தது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அல்ட்ராஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி விட்டது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடா அல்ட்ராஸ் கார் வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இன்னும் சுமார் ஒரு மாத காலத்தில் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வந்துவிடும். இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அல்ட்ராஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய ஆல்ஃபா பிளாட்பார்ம் அடிப்படையில் அல்ட்ராஸ் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா நிறுவனம் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யவுள்ள அனைத்து சிறிய மற்றும் மிட்-சைஸ் கார்கள் இந்த கட்டமைப்பு கொள்கையில்தான் உருவாக்கப்படவுள்ளன. மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் போட்டியிடவுள்ளது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, டாடா அல்ட்ராஸ் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் வைத்து இந்த புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக்கை நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது அதன் டிசைன், வசதிகள் மற்றும் கேபினுக்கு உள்ளே இருக்கின்ற பிரிமீயம் வசதிகள் எங்களை வெகுவாக இம்ப்ரஸ் செய்தன.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்த காரின் டிசைன் மற்றும் இன்டீரியர் எப்படி இருக்கிறது? இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி? காரில் இருக்கும் முக்கியமான வசதிகள் என்னென்ன? மற்றும் பாதுகாப்பிற்கு என்னென்ன அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன? என்பது உள்பட இந்த கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டிசைன் & ஸ்டைலிங்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'இம்பேக்ட் 2.0' டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது கார் அல்ட்ராஸ். 'இம்பேக்ட் 2.0' டிசைன் மொழி அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் டாடா ஹாரியர் எஸ்யூவி என்பது குறிப்பிடத்தக்கது. பழைய தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது, புதிய மாடல்களுக்கு ஷார்ப் ஆன மற்றும் பிரிமீயம் லுக்கை இந்த டிசைன் மொழி கொடுக்கிறது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

எனவே டிசைன் & ஸ்டைலிங் எனும் விஷயத்தில் டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. டாடா அல்ட்ராஸ் காரின் முன்பகுதி கூர்மையான கீழ்நோக்கி சாய்ந்த வகையிலான பானெட்டுடன் வருகிறது. இது சுறா மூக்கு போன்ற டிசைனை கொடுக்கிறது. டாடா அல்ட்ராஸ் காரின் முன்பகுதியில் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

நேர்த்தியான கருப்பு நிற க்ரில் அமைப்பின் பக்கவாட்டில் அவை இடம்பெற்றுள்ளன. முன்பகுதியில் ஒட்டுமொத்த அகலத்திற்கும், மெல்லிய குரோம் பட்டை வழங்கப்பட்டுள்ளது. அதனுடன் முன்பகுதியில் க்ரில் அமைப்பிற்கு நடுவே குரோம் டாடா லோகோ இடம்பெற்றுள்ளது. இவை முன் பகுதிக்கு பிரிமீயம் உணர்வை கொடுக்கின்றன.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா அல்ட்ராஸ் காரின் முன்பக்க பம்பர் உயர்வாக பொருத்தப்பட்ட பனி விளக்குகளுடன் வருகிறது. இதனுடன் ஒருங்கிணைந்த வகையில் எல்இடி டிஆர்எல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த காரின் சென்ட்ரல் ஏர் இன்டேக் முன்பக்க பம்பரின் கீழ் பகுதியை நோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பக்க டிசைன் முற்றிலும் புதியது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா அல்ட்ராஸ் காரின் பக்கவாட்டு தோற்றம் மிகவும் ஸ்போர்ட்டியான லுக்கில் இருக்கிறது. இந்த காரின் பக்கவாட்டு பகுதி பெரிய வீல் ஆர்ச்சுகள் உடன் வருகிறது. இதில், ஸ்டைலான 16 இன்ச் ஸ்டாண்டர்டு ட்யூயல் டோன் லேசர் கட் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. டாடா அல்ட்ராஸ் காரின் பக்கவாட்டு பகுதியில் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்த காரின் பின்பக்க டோர்களுக்கான ஹேண்டில்கள் அதன் வழக்கமான பொஷிஷனில் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக ரியர் டோர்களுக்கான ஹேண்டில்கள் தற்போது சி-பில்லருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் டாடா அல்ட்ராஸ் காரின் பக்கவாட்டு தோற்றம் ஸ்போர்ட்டியான தோற்றத்தை பெற்றுள்ளது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இனி டாடா அல்ட்ராஸ் காரின் பின்பகுதிக்கு நகர்வோம். இந்த காரின் பின்பகுதியில் இடம்பெற்றுள்ள டெயில்லைட்கள் நமது கவனத்தை உடனடியாக ஈர்க்கின்றன. இதுதவிர பின்பகுதியில் வழங்கப்பட்டுள்ள கருப்பு வண்ண தீமும் இந்த காருக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கிறது. இந்த காரின் பின்பக்க விண்டுஷீல்டுக்கு மேலே சிறிய கூரையுடன் பொருந்திய வகையிலான ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இதனுடன் ஒருங்கிணைந்த வகையில் பிரேக்கிங் லைட் வழங்கப்பட்டுள்ளது. பின் பகுதியில் பூட் லிட்டின் மையப்பகுதியில், டாடா லோகோ இடம்பெற்றுள்ளது. அத்துடன் அல்ட்ராஸ் என எழுதப்பட்டுள்ளது. இவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால், பின் பகுதியில் வேறு எங்கும் குரோம் இல்லை. ஒட்டுமொத்தத்தில் டாடா அல்ட்ராஸ் காரின் டிசைன் பிரிமீயமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இன்டீரியர் & நடைமுறை பயன்பாடு

டாடா அல்ட்ராஸ் காரின் கேபினுக்கு செல்வதற்கு முன்னதாக ஒரு தனித்துவமான வசதி குறித்து குறிப்பிட்டே ஆக வேண்டும். 90 டிகிரி ஓபனிங் டோர்தான் அந்த தனித்துவமான வசதி. இந்த செக்மெண்ட்டில் 4 கதவுகளிலும் முழுமையான 90 டிகிரி ஓபனிங் வசதி இடம்பெற்றுள்ள முதல் கார் டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக்தான்.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

பயணிகள் காருக்குள் எளிதாக ஏறி, இறங்குவதற்கு இந்த வசதி உதவி செய்கிறது. டாடா அல்ட்ராஸ் காரின் இன்டீரியரில் ஏராளமான பிரிமீயம் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்பாக டாடாவின் வேறு எந்த ஹேட்ச்பேக் காரிலும் இதுபோன்ற வசதிகளை நாம் கண்டதில்லை. இந்த காரின் டேஷ்போர்டை சுற்றிலும், பிரிமீயமான சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரியும் பிரிமீயம் உணர்வை தருகிறது. இந்த காரில் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை சப்போர்ட் ஆகும். டாடா அல்ட்ராஸ் காரில் ஸ்போர்ட்டியான ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. ஆடியோ உள்ளிட்டவற்றுக்கான கண்ட்ரோல்கள் இதில் உள்ளன.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

நல்ல லெதரினால் இந்த மூன்று ஸ்போக் ஸ்டியரிங் வீல் உறையிடப்பட்டுள்ளது. ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இது அனலாக் ஸ்பீடோமீட்டரை உள்ளடக்கியுள்ளது. மற்றவை அனைத்தும் டிஜிட்டல் டிஸ்ப்ளேதான். இது டிரைவருக்கு பல்வேறு தகவல்களை வழங்குகிறது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இதில், டேக்கோமீட்டர், ரேஞ்ச், இருக்கும் எரிபொருளில் கார் எவ்வளவு தூரம் பயணிக்கும், கியர் இன்டிகேட்டர் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. இந்த செக்மெண்ட்டிலேயே அகலமான காராக இருப்பதால், பயணிகளுக்கு மகத்தான இடவசதியை டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் வழங்குகிறது. கேபினின் முன் மற்றும் பின் என இரண்டு பகுதிகளிலும் நல்ல இடவசதி உள்ளது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்த காரின் பெரிய இருக்கைகள், பிரிமீயம் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரியால் கவர் செய்யப்பட்டுள்ளன. சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்யக்கூடிய வகையில் இருக்கைகள் இருக்கின்றன. டிரைவர் மற்றும் முன்பக்க பாசஞ்சருக்கு ஸ்லைடிங் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவும் சிறப்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

முன்பக்க பாசஞ்சர் கால்களை நீட்டி வைத்து கொள்வதற்கு ஏதுவாக நல்ல இடவசதி காணப்படுகிறது. ஆனால் பின் பகுதியை அப்படி கூற முடியவில்லை. பின் பக்க இருக்கைகளில் போதுமான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் இருந்தாலும், 6 அடிக்கும் மேல் உயரமானவர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான். பின்பகுதியில் மூன்று பேர் எளிதாக அமர முடியும்.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

ஆனால் சௌகரியமான பயணத்தை நீங்கள் விரும்பினால், 2 பயணிகளை மட்டுமே நாங்கள் பரிந்துரைப்போம். ரியர் பாசஞ்சர்களுக்கும் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட், ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இனி காரின் பூட் பகுதிக்கு செல்வோம். 345 லிட்டர் என்ற நல்ல லக்கேஜ் ஸ்பேஸ் உடன் டாடா அல்ட்ராஸ் கார் வருகிறது. இது ஓரளவிற்கு போதுமானதுதான்.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா அல்ட்ராஸ் காரின் பின் பக்க இருக்கையை ஸ்பிளிட் செய்யும் வசதி இல்லை. எனவே லக்கேஜ் ஸ்பேஸை அதிகரிக்க வேண்டுமென்றால், பின்புற இருக்கைகளை முற்றிலுமாக கீழே மடித்தால்தான் முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் லக்கேஜ் ஸ்பேஸை 665 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும். டாடா அல்ட்ராஸ் காரின் டைமன்சன்களை நீங்கள் கீழே காணலாம்.

Lenght (mm) 3990
Width (mm) 1755
Height (mm) 1523
Wheelbase (mm) 2501
Ground Clearance (mm) 165
Boot Space (litres) 345
மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

வேரியண்ட்கள், முக்கியமான வசதிகள் மற்றும் பாதுகாப்பு

டாடா அல்ட்ராஸ் கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடன் XE, XM, XT, XZ மற்றும் XZ (O) என மொத்தம் 5 வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த அனைத்து வேரியண்ட்களிலும் பல்வேறு விதமான வசதிகள் வழங்கப்படவுள்ளன. இதில் பெரும்பாலான வசதிகள் இந்த செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா அல்ட்ராஸ் காரின் முக்கியமான வசதிகள்:

  • மெட்டல்-ஃபினிஷ் இன்டீரியர் டோர் ஹேண்டில்கள்
  • சென்ட்ரல் கன்சோல் மற்றும் டிரைவர் கால் வைக்கும் இடங்களில் மூட் லைட்டிங்
  • 15 லிட்டர் கூல்டு க்ளவ் பாக்ஸ்
  • முன்பகுதி இருக்கைகளில் குடையை வைத்து கொள்வதற்கான ஹோல்டர்
  • டிரைவிங் மோடுகள் (Eco & City)
  • மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மற்றும் மடிக்கக்கூடிய ஓஆர்விஎம்கள்
  • அணியக்கூடிய சாவி
  • ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல்
  • ஃபாஸ்ட் யூஎஸ்பி சார்ஜிங்
  • மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

    டாடா அல்ட்ராஸ் காரின் பாதுகாப்பு வசதிகள்:

    • இபிடி உடன் ஏபிஎஸ்
    • கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
    • முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள்
    • ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா
    • ஆட்டோ ஹெட்லேம்ப்கள்
    • க்ரூஸ் கண்ட்ரோல்
    • ஹை-ஸ்பீடு அலர்ட் சிஸ்டம்
    • இன்ஜின் இம்மோபிலைசர்
    • மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் டிரைவிங்

      டாடா அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் மூன்று-சிலிண்டர் Revotron பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் Revotorq டீசல் என இரண்டு இன்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் டியாகோவிடம் இருந்தும், டீசல் இன்ஜின் நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளன.

      மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      எனினும் இரண்டு இன்ஜின்களும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளன. டாடா அல்ட்ராஸ் காரின் இரண்டு இன்ஜின்களையும் சோதித்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இதில், 1.2 லிட்டர் (1197 சிசி) மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 6000 ஆர்பிஎம்மில் 82 பிஎச்பி பவரையும், 3300 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

      மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      மறுபக்கம் 1.5 லிட்டர் (1497 சிசி) நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 4000 ஆர்பிஎம்மில் 90 பிஎச்பி பவரையும், 1250-3000 ஆர்பிஎம்மில் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த வல்லது. இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் ஸ்டாண்டர்டு 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் கிடைக்கும். ஆரம்பத்தில் அல்ட்ராஸ் காரின் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்டை டாடா நிறுவனம் வழங்கப்போவது கிடையாது.

      மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      எனினும் பின் நாட்களில் அதனை அறிமுகம் செய்ய டாடா திட்டமிட்டுள்ளது. டாடா அல்ட்ராஸ் காரின் இரண்டு இன்ஜின்களும் போதுமான அளவில் சக்தியை வழங்குகின்றன. இந்த இரண்டு இன்ஜின்களும் அதிகம் பிரகாசிக்கும் இடமாக நகர சாலைகள் உள்ளன. இந்த காரின் இலகுவான கிளட்ச், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் கூட சௌகரியமாக பயணிக்க அனுமதிக்கிறது.

      மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      நகர பகுதிகளில் ஓவர்டேக் செய்வது எளிதாக உள்ளது. ஆனால் கியர் ஷிப்ட் ஸ்மூத் ஆக இல்லாததால், நெடுஞ்சாலைகளில் அவ்வளவு எளிதாக ஓவர்டேக் செய்ய முடியவில்லை. டிரைவரால் விரைவாக கியர்களை மாற்றுவது கொஞ்சம் கடினம்தான். அதே சமயம் டாடா அல்ட்ராஸ் காரின் சஸ்பென்ஸ் நெடுஞ்சாலைகளுக்கு ஏற்றதாக உள்ளது.

      மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      அதேபோல் டாடா அல்ட்ராஸ் காரின் பிரேக்கிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதில் எவ்விதமான புகார்களும் இல்லை. எனினும் ரைடு மற்றும் ஹேண்ட்லிங் துறையில்தான் டாடா அல்ட்ராஸ் ஜொலிக்கிறது எனலாம். இந்த காரின் புதிய ஆல்ஃபா பிளாட்பார்ம் அனைத்து வேகங்களிலும் அருமையான பேலன்ஸை வழங்குகிறது. வளைவுகளில் ஓட்டுவதும் அருமையாக உள்ளது.

      ஸ்டியரிங்கிலும் குறைகள் இல்லை. அதன் ரெஸ்பான்ஸ் ஷார்ப் ஆக உள்ளது. டாடா அல்ட்ராஸ் காரின் இன்ஜின், அதன் பவர், டார்க் மற்றும் டிரான்ஸ்மிஷன் குறித்த தகவல்களை நீங்கள் கீழே காணலாம்.

      Variables Petrol Diesel
      Engine (cc) 1199, 3-cylinder 1497,4-cylinder
      Power (bhp) 86 @ 6000rpm 90 @ 4000rpm
      Torque (Nm) 113 @3300rpm 200 @ 1250rpm
      Transmission 5-MT 5-MT
      மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      விலை, போட்டியாளர்கள் மற்றும் நிறங்கள்:

      டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் காரின் விலையை இன்னும் அறிவிக்கவில்லை. 2020 ஜனவரி மாதம் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அப்போதுதான் விலை அறிவிக்கப்படும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன் பிரிமீயம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் இது போட்டியிடும்.

      மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் எலைட் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு டாடா அல்ட்ராஸ் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் கார் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அவை பின்வருமாறு:

      மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!
      • ஹை ஸ்ட்ரீட் கோல்டு
      • ஸ்கைலைன் சில்வர்
      • டவுன்டவுன் ரெட்
      • மிட்டவுன் க்ரே
      • அவென்யூ ஒயிட்
      • மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

        டாடா அல்ட்ராஸ் மற்றும் அதன் முக்கியமான போட்டியாளர்களுடனான ஒரு ஒப்பீட்டை நீங்கள் கீழே காணலாம்.

        Specification/Model Tata Altroz Maruti Suzuki Baleno Hyundai Elite i20
        Engine 1.2-Petrol/1.5-Diesel 1.2-Petrol/1.3-Diesel 1.2-Petrol/1.4-Diesel
        Power (bhp) 86/90 82/74 82/89
        Torque (Nm) 113/200 113/190 113/220
        Transmission 5-MT 5-MT/CVT 5-MT/CVT/6-MT
        Starting Price (Rs) NA* Rs 5.58 Lakh Rs 5.52 Lakh
        மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

        டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு:

        இதனை ஒரு அருமையான ஃபேம்லி கார் என சொல்லலாம். இதன் அட்டகாசமான டிசைனை நிச்சயமாக சாலையில் அனைவரும் திரும்பி பார்ப்பார்கள். அத்துடன் இதன் கேபினில் நல்ல இடவசதியும் கிடைக்கிறது. இதன் இருக்கைகளும் சௌகரியமாக உள்ளன. மேலும் பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன. பெர்ஃபார்மென்சும் கூட பாஸிட்டிவ் ஆகதான் உள்ளது.

        மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

        தற்போது எஞ்சியிருக்கும் ஒரே ஒரு விஷயம் விலைதான். டாடா அல்ட்ராஸ் காரின் விலையை தெரிந்து கொள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விலையை சரியாக நிர்ணயம் செய்தால், பிரிமீயம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் அல்ட்ராஸ் முதலிடத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
Tata Altroz Premium Hatchback First Drive Review. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X