புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி மாற்றமா, ஏமாற்றமா?... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் மாடலானது ஹாரியர் என்ற பெயரில் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு பொது பார்வைக்கு வந்துள்ளது. இந்த புத்தம் புதிய மாடலை ஜோத்பூரில் நடந்த மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் வைத்த

லேண்ட்ரோவர் அடிப்படையில் ஒரு டாடா கார் உருவாகிறது என்ற கசிந்த செய்தி சில ஆண்டுகளுக்கு முன் இந்திய ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் கார் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியது. அதன் பின் வந்த ஸ்பை படங்கள் அந்த ஆவலை அதிகப்படுத்தின.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடைசியாக பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் அரங்கில் எச்5எக்ஸ் என்ற பெயரில் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த எஸ்யூவி ரக கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வேற லெவலுக்கு போன டாடா என்று நாம் போட்டிருந்த தலைப்பும், அந்த காரும் வெகு பிரபலமானது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் மாடலானது ஹாரியர் என்ற பெயரில் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு பொது பார்வைக்கு வந்துள்ளது. இந்த புத்தம் புதிய மாடலை ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடந்த மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் வைத்து ஓட்டி பார்த்தோம். அப்போது இந்த புதிய கார் குறித்து கிடைத்த சாதக, பாதகங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட்டில் அதிக வித்தியாசங்கள் இல்லாமல், சில மாற்றங்களுடன் குறுகிய காலத்தில் தயாரிப்பு நிலை மாடலாக டாடா ஹாரியர் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. முதல் பார்வையிலேயே தோற்றத்தில் மிக பிரம்மாண்டமாகவும், எஸ்யூவி கார்களுக்குரிய அனைத்து லட்சணங்களையும் பெற்றிருக்கிறது டாடா ஹாரியர்.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உயர்த்தப்பட்ட பானட் அமைப்பு மிக வலிமையான முகப்பு தோற்றத்தை கொடுக்கிறது. தேன்கூடு வடிவிலான பியானோ பிளாக் வண்ணத்திலான முகப்பு க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இல்லாமல் ஹெட்லைட்டானது க்ரில் அமைப்புக்கு கீழாக அமைக்கப்ப்டடு இருக்கிறது. மேலும், ஹெட்லைட்டும், பனி விளக்குகள் அறையும் முக்கோண வடிவிலான அறையில் பிளவுபட்ட அமைப்புடன் ஒரே பகுதியாக அமைய பெற்றிருக்கிறது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிற கார்களில் பானட்டுக்கு கீழாக ஹெட்லைட் இடம்பெறும். ஆனால், ஹாரியரில் முகப்பு மேல்புறத்தில் இரு எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இது பகல்நேர விளக்குகளாகவும், இன்டிகேட்டர்களாகவும் செயல்படுவது சிறப்பு. பார்ப்பதற்கும் மிக கவர்ச்சியாக இருக்கிறது. ஹாலஜன் ஹை பீம் லைட்டும், எச்ஐடி புரொஜெக்டர் லோ பீம் லைட்டும் ஹெட்லைட் க்ளஸ்ட்டரில் இடம்பெற்றுள்ளது. கருப்பு வண்ண பம்பரில், ஏர்டேம் பகுதியும், அதற்கு கீழாக ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைனில் அசத்துகிறது. இரட்டை வண்ண சைடு மிரர்கள், மிக பிரம்மாண்டமான வீல் ஆர்ச்சுகள், வலிமையான 17 அங்குல அலாய் சக்கரங்கள், வலிமையான பாடி லைன், பின்னோக்கி சற்றே சரிந்து காணப்படும் கூரை அமைப்பு, கருப்பு வண்ண டி பில்லர் ஆகியவை அசத்தலான தோற்றத்தை தருகிறது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் பொருத்தப்பட்டு இருப்பதுடன், அதிக தரை இடைவெளியுடன் கம்பீரமாக இருக்கிறது. டி பில்லரில் க்ரோம் பட்டை ஒன்று கொடுக்கப்பட்டு இருப்பதுடன், ரியர் ஸ்பாய்லர்மற்றும் சுறா துடுப்பு வடிவ ஆன்டென்னா ஆகியவை காரின் கவர்ச்சிக்கு கூடுதல் வலுசேர்க்கின்றன.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

இந்த எஸ்யூவியின் கவர்ச்சியான விஷயங்களில் முக்கியமானது டெயில் லைட் க்ளஸ்ட்டர்தான். மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டரும் இணைந்திருப்பது போன்ற தோற்றத்தை பெற்றிருக்கின்றன. அடுத்து அழகான மடிப்புடன் செதுக்கப்பட்டு இருக்கிறது. பம்பர் மிக பிரம்மாண்டமாக இருப்பதுடன், ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் டிசைனில் மிக வலிமையான எஸ்யூவி மாடலாக கவர்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

உள்ளே நுழைந்ததும், டேஷ்போர்டு டிசைன் மற்றும் அலங்கார வேலைப்பாடுகள் பிரிமீயமாக தெரிகின்றன. உள்பகுதி கருப்பு மற்றும் ஓக் பிரவுன் என்ற விசேஷ வண்ணத்தில் அசத்துகின்றன. அலுமினியம் மற்றும் மர அலங்கார வேலைப்பாடுகள் இன்டீரியரின் பிரிமீயத்தை கூட்டுகின்றன.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆனால், ஃபிட் அண்ட் ஃபினிஷிங் சுமார். பல இடங்களில் பாகங்களுக்கான இணைப்பு விஷயத்தில் கோட்டைவிட்டுள்ளனர். அதிக எதிர்பார்ப்போடு எமக்கு இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. உட்புறத்தில் ஆட்டோ டிம் மிரர் வசதியும் இல்லை.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

டேஷ்போர்டு நடுவில் ஃப்ளோட்டிங் அமைப்புடைய 8.8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. திரை அகலமாக இருந்தாலும் உயரம் குறைவாக இருக்கிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் திரை அதிதுல்லியமாக இல்லை ஏமாற்றமாக இருந்தது. எனினும், மியூசிக் சிஸ்டம் அந்த குறையை போக்கிவிட்டது. ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம் சிறந்த ஒலி தரத்தை வழங்குகிறது. பயணங்களை அலுப்பில்லாமல் போக்குவதற்கு உதவிபுரியும்.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இந்த எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில் 7 அங்குல மின்னணு திரை மற்றும் அனலாக் ஸ்பீடோ மீட்டர் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மின்னணு திரை மூலமாக கார் எந்த மோடில் இயங்குகிறது, எவ்வளவு எரிபொருள் உள்ளது, இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம், நேவிகேஷன் மற்றும் ரேடியோ ஸ்டெஷன் குறித்த தகவல்களையும் இந்த திரை மூலமாக தெரிந்து கொள்ள முடியும். கார் ஓடிய தூரம், கார் எஞ்சினிலிருந்து வெளிப்படும் பவர் மற்றும் டார்க் திறன் விபரங்களையும் காட்டுகிறது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டாப் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. இந்த எஸ்யூவியில் சன்ரூஃப் இல்லாததும் மிகப்பெரிய குறையாக கூறலாம். அடுத்து ஹேண்ட் பிரேக் ஆனது வித்தியாசமாக இருக்கிறது. ஆனால், இயக்கும்போது மென்மையான உணர்வை தரவில்லை. நாளாக நாளாக தரம் எவ்வாறு இருக்கும் என்ற யோசனையை கொடுக்கிறது. அடுத்து, யுஎஸ்பி போர்ட்டுகள் சென்ட்ரல் கன்சோலுக்கு உள்ளே மறைவாகவும், நெருக்கடியான இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் சவுகரியமாக இல்லை.

அதிக இடவசதி

அதிக இடவசதி

டாடா கார்கள் உட்புற இடவசதியில் சிறப்பாக இருக்கும். இந்த எஸ்யூவி காரும், உட்புறத்தில் தாராளமான இடவசதியை காண முடிகிறது. ஆனால், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவுடன் சவுகரியமாக உணர்வை தரவில்லை. ஓட்டுனர் இருக்கைக்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி இல்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

பின் இருக்கைகள்

பின் இருக்கைகள்

பின் இருக்கைகள் மிக தாரளமான இடவசதியை பெற்றிருக்கின்றன. தலை இடிக்காத அளவுக்கும், கால் வைப்பதற்கும் போதிய இடவசதி இருப்பது இதன் மிகப்பெரிய பலம். நீண்ட தூர பயணங்களின்போது சிறப்பான அனுபவத்தை பெற முடியும். ரியர் ஏசி வென்ட்டுகள் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ரூஃப் மவுண்ட் ஏசி வென்ட்டுகள் போல விரைவான குளிர்ச்சியை தரவில்லை.

ஸ்டோரேஜ் வசதிகள்

ஸ்டோரேஜ் வசதிகள்

ஓட்டுனருக்கு இடதுபக்கத்தில் இருக்கும் ஆர்ம் ரெஸ்ட்டுக்கு கீழே குளிரூட்டும் வசதியுடன் சிறிய ஸ்டோரேஜ் அறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, குளிர்பானங்களை குளிரூட்டுவதற்கான அறையும் உள்ளது. தண்ணீர் பாட்டில்கள் வைப்பதற்கு ஏதுவாக கதவுகளில் ஸ்டோரேஜ் வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் ஃபியட் நிறுவனத்தின் அதே 2.0 லிட்டர் டர்போார்ஜ்டு டீசல் எஞ்சின்தான் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை. புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியும் உள்ளது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சென்டர் கன்சோலில் இருக்கும் பட்டன்களை வைத்து இதனை தேர்வு செய்து கொள்ள முடியும். அடுத்து, கியர் லிவருக்கு முன்பகுதியில் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ரோட்டரி டயலும், பட்டன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சாதாரண சாலை, ஈரப்பதமான சாலை மற்றும் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ள முடியும்.

செயல்திறன்

செயல்திறன்

இந்த எஸ்யூவியின் மற்றுமொரு மிகப்பெரிய பலம் இதன் எஞ்சின்தான். இதன் டீசல் எஞ்சினில் 1,200 ஆர்பிஎம் முதலே டார்க் சிறப்பாக இருக்கிறது. டர்போலேக் என்பதை உணர முடியாத அளவிற்கு சிறப்பாக ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. ஆரம்ப மற்றும் நடுத்தர ரேஞ்சிலும் செயல்திறன் சிறப்பாக இருக்கிறது. கியர் மாற்றமும் சிறப்பாக இருக்கிறது. இதனால், நகரத்திலும், நெடுஞ்சாலையிலும் ஓட்டுவதற்கு சிறப்பான அனுபவத்தை தருகிறது.

 ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

ஆனால், வேகமெடுக்கும்போது அதிர்வுகள் மிக அதிகமாக தெரிவது அபத்தமான பயண அனுபவத்தை வழங்குகிறது. எஞ்சினிலிருந்து டார்க் திறன் சிறப்பாக இருப்பதுடன் க்ளட்ச் இலகுவாக இருக்கிறது. ஆனால், டேஷ்போர்டுடன் நெருக்கமாக காலை வைத்து ஓட்டுபவர்களுக்கு இது எளிதாக இருக்கும். இருக்கையை பின்னோக்கி வைத்து ஓட்டுபவர்களுக்கு, காரை நகர்த்தும்போதே, க்ளட்ச் துல்லியமாக இல்லாதது போன்ற உணர்வை தருகிறது. இதன் க்ளட்ச் லாங் டிராவல் கொண்டிருப்பதால் அதிக அழுத்தத்தை வழங்கி கியர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். இதனால், கியர் மாற்றும்போது சிறிய அதிர்வு ஏற்பட வாய்ப்புண்டு.

ஆஃப்ரோடு

ஆஃப்ரோடு

டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் இருப்பதால் அனைத்து சாலைகளிலும் செல்வதற்கு ஏதுவான மாடலாக கூறலாம். ஆனால், 4 வீல் டிரைவ் சிஸ்டம் இல்லாததால், முழுமையான ஆஃப்ரோடர் மாடலாக கருத முடியவில்லை. ஆஃப்ரோடு பயணங்கள் செல்லும்போது சிரமம் ஏற்படும்.

கையாளுமை

கையாளுமை

இந்த பிரம்மாண்ட எஸ்யூவியை இதன் சஸ்பென்ஷன் அபாரமாக ஈடுகொடுக்கிறது. வளைவுகளில் பாடி ரோல் இருந்தாலும் சமாளிக்கக்கூடிய அளவிலேயே இருக்கிறது. ஸ்டீயரிங் சிஸ்டத்தின் செயல்பாடும் திருப்திகரமாகவே இருக்கிறது. எனினும், இது ஹைட்ராலிக் ஸ்டீயரிங் என்பதால், குறைவான வேகத்தில் கடினமாக இருக்கிறது. வேகமெடுக்கும்போது இலகுவாக இருக்கிறது.

பூட் ரூம் இடவசதி

பூட் ரூம் இடவசதி

இந்த எஸ்யூவியில் 425 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இருப்பது சிறப்பான விஷயம். பின் இருக்கையை 60: 40 என்ற விகிதத்தில் மடக்க முடியும். அப்போது பொருட்களை வைப்பதற்கு 810 லிட்டர் அளவுக்கு மிக தாராள இடவசதியை பெற்றுக் கொள்ள முடியும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

பேஸ் மாடல்களில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன. டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்ககுகள், கார் கவிழாமல் செல்வதற்கான ரோல்ஓவர் மிட்டிகேஷன் நுட்பம், கார் நிலைத்தன்மையுடன் செல்வதற்கான எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதிகள் உள்ளன.

மலைச்சாலைகளில் ஏறும்போது கார் பின்னோக்கி நகராமல் இருப்பதற்கான ஹில் ஹோல்டு வசதி, இறங்கும்போது பாதுகாப்பை உறுதி செய்யும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா என பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

பாராட்டுக்குரிய முயற்சி

பாராட்டுக்குரிய முயற்சி

சிறப்பான டிசைன், சிறப்பான வசதிகளுடன் கூடிய இந்த கார் மூலமாக டாடா மோட்டார்ஸ் அடுத்த லெவலுக்கு செல்ல முயற்சித்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான். வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு உலகத் தரம் வாய்ந்த மாடல்களை நாமும் உருவாக்க முடியும் என்ற முயற்சியை டாடா செய்திருக்கிறது.

மீடியா டிரைவிற்கு வழங்கப்பட்ட கார்கள் வழக்கமான வழக்கமான உற்பத்திக்கு முந்தைய நிலை கார்களாக தெரிவிக்கப்பட்டதுடன், முழு வீச்சில் உற்பத்தி துவங்கும்போது ஃபிட் அண்ட் ஃபினிஷ் பிரச்னைகள் சரிசெய்யப்படும் என்று டாடா தெரிவித்திருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும் கார்கள் சிறந்த ஃபிட் அண்ட் ஃபினிஷ் தரத்துடன் வரும் என்று நம்பலாம்.

நிறை, குறைகள்

நிறை, குறைகள்

ரூ.16 லட்சம் முதல் ரூ.21 லட்சம் ஆன்ரோடு விலையில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனமே சமூக வலைத்தள பக்கத்தின் மூலமாக உறுதி செய்துள்ளது. இந்தநிலையில், கம்பீரமான தோற்றத்துடன், சிறப்பான இடவசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களை வசியம் செய்ய வர இருக்கிறது புதிய டாடா ஹாரியர்.

சன்ரூஃப் இல்லை, ஓட்டுனர் இருக்கைக்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி இல்லை, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் செயல்பாடு துல்லியமாக இல்லை, 4 வீல் டிரைவ் சிஸ்டம் இல்லை, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை போன்ற குறைகள் இருந்தாலும், நிச்சயம் இந்தியர்கள் பெருமைகொள்ளத்தக்க தயாரிப்பாக வர இருக்கிறது.

மாற்றமா, ஏமாற்றமா?

மாற்றமா, ஏமாற்றமா?

கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த டாடா கார்களான டியாகோ, டிகோர், நெக்ஸான் ஆகியன அந்நிறுவனத்தை வேற லெவலுக்கு இட்டு சென்றுள்ளது. அந்த வரிசையில், லேண்ட்ரோவர் பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்ட புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியும், விலை சரியாக நிர்ணயிக்கப்பட்டால், ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட போட்டியாளர்களை எதிர்கொண்டு நிச்சயம் வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது. சில குறைகள் ஏமாற்றம் கொடுத்தாலும், டிசைன் உள்ளிட்ட விஷயங்களில் நிச்சயம் டாடாவுக்கு மாற்றம், முன்னேற்றம் தரும் மாடலாகவே பார்க்க முடியும்.

Most Read Articles
English summary
DriveSpark was invited to Jodhpur for a first-drive experience of the All new Tata Harrier. We spent a couple of hours with the flagship Tata SUV and here are our impressions.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X