செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Tata Nexon EV) காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வரும் ஜனவரி 28ம் தேதி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி கிடையாது.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

ஆனால் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவி என்ற பெருமையை இது பெறும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் ஏற்கனவே இரண்டு முழுமையான எலெக்ட்ரிக் தயாரிப்புகள் இருக்கும் நிலையில், நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

அதே சமயம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கொஞ்சம் வித்தியாசமானது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 'ஜிப்ட்ரான்' பவர்டிரெயின் உடன் வரும் முதல் தயாரிப்பு ஆகும். விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை நாங்கள் ஓட்டினோம்.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்த போது, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பெர்ஃபார்மென்ஸ், டிரைவ் அண்டு ஹேண்ட்லிங், ரேஞ்ச், வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களாலும் நாங்கள் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விரிவான டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை இனி காணலாம்.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டிசைன் & ஸ்டைல்

டாடா நெக்ஸான் ஸ்டாண்டர்டு எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் டிசைன் அம்சங்கள் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரிலும் உள்ளன. இதில், எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரில் செய்யப்பட்டுள்ள அப்டேட்களும் அடங்கும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முன்பகுதி முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்துடன் வருகிறது.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு ஸ்போர்ட்டியான மற்றும் பிரீமியம் லுக்கை கொடுக்கிறது. அதே போல் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் இன்டீரியர்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டிசைன் மற்றும் ஸ்டைலிங் பற்றிய விஷயங்களை முதலில் முன் பகுதியில் தொடங்குவோம்.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்தில் இது வந்துள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் புதிய ஹெட்லேம்ப்கள் மெல்லிய, கூர்மையான தோற்றமுடையதாக இருக்கின்றன. புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உடன் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி வருகிறது. எல்இடி புரொஜெக்டர்கள் இல்லையென்றாலும், சந்தையை விட்டு வெளியேறவுள்ள மாடலை விட, ஹாலோஜென் ஹெட்லேம்ப்ஸ் நன்றாகவே உள்ளன.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் எல்இடி டிஆர்எல்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இந்த டிஆர்எல்கள் தற்போது 'எக்ஸ்' வடிவில் வருகின்றன. இது அக்ரஸிவ் டிசைனை கொடுக்கிறது. இதன் முன்பகுதியில் டாடா பேட்ஜிங்கும், அதனை ஒட்டி ‘EV' பேட்ஜிங்கும் இடம்பெற்றுள்ளன. இதன் முன்பகுதியில் பனி விளக்குகள் அறையும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பானெட் தற்போது கொஞ்சம் 'ப்ளாட்' ஆக வருகிறது. சந்தையை விட்டு வெளியேறவுள்ள மாடலுடன் ஒப்பிடுகையில், இது பெரிய எஸ்யூவி போன்ற உணர்வை கொடுக்கிறது. அதே சமயம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பக்கவாட்டு பகுதியில் பெரிதாக மாற்றங்கள் செய்யப்படவில்லை.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் முன்பக்க டோரிலும் ‘EV' பேட்ஜிங் இடம்பெற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் தற்போது முற்றிலும் புதிய 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களை வழங்குகிறது. இதுவும் பார்ப்பதற்கு பிரிமீயமாக உள்ளது. இனி இந்த எஸ்யூவியின் பின்பகுதிக்கு நகர்வோம்.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பின்பகுதி, ஏறக்குறைய ஃபேஸ்ஃலிப்ட்டுக்கு முந்தைய மாடலை போன்றுதான் உள்ளது. சிறிய அளவிலான மாற்றங்கள் மற்றும் அப்டேட்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஆனால் டெயில்லைட்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இதுதான் பின் பகுதியில் செய்யப்பட்டுள்ள கவனிக்கத்தக்க மாற்றமாக உள்ளது.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

அதே சமயம் பூட் லிட்டின் மைய பகுதியில் ‘N E X O N' பேட்ஜ் இடம்பெற்றிருப்பதும் ஒரு குறிப்பிடத்தகுந்த அப்டேட்டாக உள்ளது. இது டாடா ஹாரியர் மற்றும் அல்ட்ராஸை நினைவூட்டும் வகையில் இருக்கிறது. அதே சமயம் இதன் இரு பக்கங்களிலும் ‘EV' மற்றும் 'Ziptron' பேட்ஜிங் வழங்கப்பட்டிருப்பதும் கவனிக்க கூடியதாக உள்ளது.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இன்டீரியர் & நடைமுறை பயன்பாடு

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் இன்டீரியருக்கு இனி நகர்வோம். இந்த காரில் லெதர் ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஆடியோ உள்ளிட்டவற்றுக்கான கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டியரிங் வீலுக்கு பின்னால், டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் அனலாக் ஸ்பீடோமீட்டருடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரில் இருக்கும் அதே டிஜிட்டல் டிஸ்ப்ளேதான் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் இது இன்னும் பல்வேறு கூடுதல் தகவல்களை இது வழங்குகிறது. இதில், பேட்டரி ஸ்டேட்டஸ், டேக்கோமீட்டர், ரேஞ்ச், பேட்டரி சதவீதம், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் பயன்பாடு ஆகியவை அடங்கும்.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

அதே சமயத்தில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என இரண்டையும் சப்போர்ட் செய்யும். சென்டர் கன்சோலில், இன்போடெயின்மெண்ட் சிஸ்டமுக்கு கீழாக வழங்கப்பட்டிருப்பது ஏசி வெண்ட்கள் ஆகும்.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டேஷ்போர்டு ட்யூயல் டோன் ஸ்கீம் உடன் வருகிறது. இதன் மேல் பகுதியில் கருப்பு வண்ணமும், அடிப்பகுதியில் பழுப்பு வண்ணமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாஃப்ட் டச் மெட்டீரியல்களுடன் டேஷ்போர்டு வருகிறது. கேபினில் பிரிமீயம் லுக் மற்றும் உணர்வை இது வழங்குகிறது.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

சென்டர் கன்சோலில் இன்னும் கீழாக வந்தால், க்ளைமேட் கண்ட்ரோல் செட்டிங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், யுஎஸ்பி போர்ட் மற்றும் 12V சார்ஜிங் சாக்கெட் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சென்டர் கன்சோலில் பொருட்களை வைத்து கொள்ளும் வகையில் ஓரளவிற்கு இடவசதியும் உள்ளது.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் இருக்கைகள் சௌகரியமாக இருக்கின்றன. ஆனால் டிரைவர் மற்றும் முன்பக்க பாசஞ்சர் இருக்கைகளை மேனுவலாகதான் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும். அவற்றை மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்வதை நாங்கள் விரும்பினோம். குறைந்தபட்சம் டிரைவரின் இருக்கைக்காவது அந்த வசதி வழங்கப்பட்டிருக்கலாம்.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

அதே சமயம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பின் இருக்கைகளும் பட்டு போல் சௌகரியமாக உள்ளன. போதிய அளவிற்கு ஹெட்ரூம், லெக் ரூம் உள்ளது. தொடைகளுக்கும் நல்ல சப்போர்ட் இருக்கிறது. மூன்று பேர் சௌகரியமாக பயணிக்கலாம். பின் இருக்கைகள் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் உடன் வருகின்றன. பின் இருக்கை பயணிகளின் சௌகரியத்தை இது அதிகரிக்கிறது.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் உள்ளது. இந்த காரில் பெரிய க்ளவ்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. நான்கு டோர்களிலும் போதுமான அளவிற்கு ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்கிறது. இதுதவிர சென்டர் கன்சோல் மற்றும் முன் இருக்கைகளுக்கு பின்னாலும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உள்ளது.

செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பூட் ஸ்பேஸ் 350 லிட்டர்கள். எனினும் பின் இருக்கைகளை 60:40 என்கிற விகிதத்தில் மடித்து கொள்வதன் மூலம் இதனை இன்னும் அதிகரித்து கொள்ள முடியும்.

Length (mm) 3994
Width (mm) 1811
Height (mm) 1607
Wheelbase (mm) 2498
Ground Clearance (mm) 205
Boot Space (litres) 350
செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

வேரியண்ட்கள், முக்கிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு:

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், XM, XZ+ மற்றும் XZ+ LUX என மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த மூன்று ட்ரிம்களிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் ஒரு சில முக்கியமான வசதிகளை கீழே காணலாம்.

  • புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் கீ லெஸ் எண்ட்ரி
  • எலெக்ட்ரிக் டெயில்கேட் ஓபனர்
  • ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல்
  • 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்
  • கனெக்டட் கார் தொழில்நுட்பம்
  • 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள்
  • எலெக்ட்ரிக் சன் ரூஃப்
  • ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்கள்
  • ஆட்டோமெட்டிக் ரெயின் வைப்பர்கள்
  • செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

    டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் சில முக்கியமான பாதுகாப்பு வசதிகளை கீழே காணலாம்.

    • ட்யூயல் ஏர்பேக்குகள்
    • ஏபிஎஸ் உடன் இபிடி
    • ஹில் அசெண்ட் அஸிஸ்ட்
    • ஹில் டெசண்ட் அஸிஸ்ட்
    • ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
    • சீட் பெல்ட் ரிமைண்டர்கள்
    • ஹை-ஸ்பீடு வார்னிங் அலர்ட்
    • பாதசாரிகள் பாதுகாப்பு
    • செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      ஓட்டுதல் அனுபவம் மற்றும் பெர்ஃபார்மென்ஸ்:

      இந்திய மார்க்கெட்டிற்கு ஒரு நல்ல எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வழங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் கடுமையாக உழைத்துள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், டாடா நிறுவனத்தின் புதிய 'ஜிப்ட்ரான்' பவர்டிரெயின் இடம்பெற்றுள்ளது. இதில், 95kw எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 30.2kWh லித்தியம்-அயான் பேட்டரி தொகுப்பு ஆகியவை அடங்கும்.

      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      இது அதிகபட்சமாக 128 பிஎச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 9.9 வினாடிகளில் எட்டி விடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 122 கிலோ மீட்டர்கள். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 312 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.

      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      இது அராய் சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். ஆனால் நடைமுறை பயன்பாட்டில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 275-290 கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருடன், ஸ்டாண்டர்டு ஹோம்-சார்ஜிங் சிஸ்டம் வழங்கப்படும். காரை முழுமையாக சார்ஜ் செய்ய இது 8 மணி நேரம் எடுத்து கொள்ளும்.

      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      இதுதவிர ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் உள்ளது. இது வெறும் 1 மணி நேரத்தில், பேட்டரியை 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடும். தற்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் தொழில்நுட்ப விபரங்கள் அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருக்கும். இனி இந்த கார் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு விடை காணலாம்.

      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      ஒருவர் ஆக்ஸலரேஷன் பெடலை மிதிக்க தொடங்கியதில் இருந்து, உடனடி பவர் டெலிவரியை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வழங்குகிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் 2 டிரைவிங் மோடுகளுடன் வருகிறது. இந்த 2 டிரைவிங் மோடுகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை நன்றாக உணர முடிகிறது.

      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      நார்மல் மோடை பொறுத்தவரை பவர் டெலிவரி படிப்படியாகதான் வருகிறது. மறுபக்கம் ஸ்போர்ட் மோடு உடனடி பவர் டெலிவரி மற்றும் டார்க்கை வழங்குகிறது. நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், பவர் டெலிவரி என்ற விஷயத்தில் உண்மையிலேயே டாடா மோட்டார் நிறுவனம் மிகச்சிறப்பானதொரு பணியை செய்துள்ளது.

      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு (காரின் கனமான பகுதி) கேபினுக்கு கீழாக வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஃபேஸ்ஃலிப்ட்டுக்கு முந்தைய மாடலின் 209 மில்லி மீட்டர் என்ற க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 205 மில்லி மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் இன்னமும் சிறப்பாகதான் இருக்கிறது.

      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      பேட்டரிகளின் பாதுகாப்பு தொடர்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு சோதனைகளை நடத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திருப்பது சிறப்பான விஷயமாக உள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை கையாள்வதும் எளிமையாகவும், சிறப்பாகவும் உள்ளது. நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும்போது ஸ்டியரிங் வீலின் பணி பாராட்டுக்குரியதாக இருக்கிறது.

      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      அதே சமயம் நகர பகுதிகளில் ஸ்டியரிங் வீல் இலகுவாக உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் காரை எளிதாக திருப்ப முடியும். கடினமான ஆக்ஸலரேஷன் மற்றும் டர்னிங்கின் போதும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஸ்டேபிள் ஆக இருப்பதும் நல்ல விஷயம். ஆனால் சிறிய அளவில் பாடி ரோல் இருக்கிறது. எனினும் பெரிய அளவில் எல்லாம் அது தெரியவில்லை.

      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      அதே சமயம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பிரேக்கிங் மிகவும் அருமையாக உள்ளது. இதன் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்குகளும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

      Electric Motor

      3-Phase Permanent Magnet
      Battery 30.2kWh Lithium-ion
      Power (bhp)

      128
      Torque (Nm)

      245
      Transmission Automatic
      Range (km)

      312
      0-100km/h

      9.9 seconds (Claimed)
      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      விலை மற்றும் கலர்கள்:

      டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் டீல் ப்ளூ, க்ளாசியர் ஒயிட் மற்றும் மூன்லைட் சில்வர் என மொத்தம் மூன்று கலர் ஸ்கீம்களில் கிடைக்கும். நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் சரியான விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான் விலை அறிவிக்கப்படும்.

      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      எனினும் 15 லட்ச ரூபாய் முதல் 17 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், ஆரம்பத்தில் இருந்தே நாடு முழுவதும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கிடைக்கும்.

      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      போட்டியாளர்கள்:

      இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள முதல் எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவி கார் டாடா நெக்ஸான்தான். எனவே தற்போதைய நிலையில் இந்த செக்மெண்ட்டில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டி என எந்த காரும் இல்லை. எனினும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களுடன் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி போட்டியிடும்.

      Model/Specifications Nexon EV MG ZS EV
      Electric Motor 3-Phase Permanent Magnet 3-Phase Permanent Magnet
      Battery 30.2kWh Li-ion 44.5kWh Li-ion
      Power (bhp) 128 141
      Torque (Nm) 245 353
      Price (estimated) Rs 15 - 17 Lakh Rs 20 - 25 Lakh
      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      டிரைவ்ஸ்பார்க் கருத்து:

      இந்திய மார்க்கெட்டில் டாடா நிறுவனம் களமிறக்கவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் நெக்ஸான் கிடையாது. டாடா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் டிகோர் காம்பேக்ட் செடானின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனை செய்து வருகிறது. எனினும் புத்தம் புதிய ஜிப்ட்ரான் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வரவுள்ள முதல் தயாரிப்பு டாடா நெக்ஸான்தான்.

      செம மாஸ்... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

      இந்த புதிய பவர்டிரெயின் உண்மையிலேயே ஈர்க்க கூடிய வகையில் உள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ரேஞ்ச் சிறப்பாக இருக்கிறது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் விலை நிர்ணயம் சரியாக இருந்தால் மட்டுமே, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவர கூடிய தயாரிப்பாக மாறும்.

Most Read Articles
English summary
Tata Nexon Electric SUV First Drive Review: Handling, Performance, Range, Features, Expected Price. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X