முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம்... டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ...

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் கார் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த கார் முழு சார்ஜில் 300 கி.மீ பயணிக்கும் எனச் சொல்லப்பட்டது. இந்த கார் உண்மையில் எப்படிச் செயல்படுகிறது? இதன் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கிறது என காண இதை டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த கார் குறித்த எங்கள் ரிவியூவை கீழே வழங்கியுள்ளோம்.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இந்தியாவின் எலெக்ட்ரிக் மார்கெட் சந்தையில் ஒரு முன்னணியான இடத்தில் இருக்கும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ். இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய டாடா நெக்ஸான் இவி என்ற காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக இருக்கிறது. ஏற்கனவே நல்ல விற்பனையில் இருக்கும் காரில் பல புதிய அம்சங்கள் இருந்தால் எப்படி இருக்கும்? தற்போது இருக்கும் காரின் பெர்பாமென்ஸ் மேம்பட்டால் எப்படி இருக்கும். இப்படியான ஒரு விஷயத்திற்காக அந்நிறுவனத்தின் இன்ஜினியர் சிந்தித்து உருவாக்கிய கார் தான் புதிய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் கார்

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இந்த காரை பொருத்தவரை எல்லாவற்றிலும் மேக்ஸிமம் விஷயங்களுடன் காரை உருவாக்கியுள்ளது. மேக்ஸிம் ரேஞ்ச், மேக்ஸிமம் பெர்பாமென்ஸ், மேக்ஸிமம் அம்சங்கள், என எல்லாவற்றிலும் இது மேக்ஸிமமாக இருப்பதால் இந்த காருக்கு மேக்ஸ் என்ற பெயரை வைத்துள்ளனர். இந்த கார் மார்கெட்டில் அறிமுகமாகியுள்ள நிலையில் இந்த கார் குறித்த ரிவியூவை காணப்போகிறோம்.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

டிசைன் மற்றும் ஸ்டைல்

டிசைனை பொருத்தவரை இந்த நெக்ஸான் இவி மேக்ஸ் காரில் நெக்ஸான் இவி காரிலிருந்து பெரிய டிசைன் அப்டேட்டை ஒன்று பெறவில்லை. பெரும்பாலான டிசைன்கள் நெக்ஸான் இவியில் இருக்கும் அதே டிசைன் தான் இந்த இடத்திலும் இருக்கிறது. ஹலஜென் ஹெட்லைட், கிரில், கிரில் கீழ் பகுதியில் உள்ள மூன்று ஆரோ டிசைன், பெரிய ரூப், ஆகிய டிசைன்கள் இந்த காரில் அப்படியே உள்ளன. கலரும் எலெக்ட்ரிக் ப்ளு, மற்றும் இவி பேட்ஜ்களும் அதே ஷேடில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

வீல்களிலும் இவி மாடலில்உள்ள டைமண்ட் கட் அலாய் வீல் இந்த காரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ள 16 இன்ச் வீல் புதிய ஸ்போர்டி மொழியை கொண்டுள்ளது. இந்த காரில் புதிதாக இன்டென்ஸி டீல் கலர் ஸ்கீம் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் டூயல் டோன் கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது. பிரிஸ்டைன் ஒயிட் மற்றும் டைடோனா க்ரே ஆகிய கலர் ஆப்ஷன்கள் இந்த காரில் உள்ளன. இந்த கார் இன்டன்ஸி டீல் கலர் ஸ்கீம் காருக்கால நல்ல லுக்கை தருகிறது. எலெக்டரிக் ப்ளு எலமென்ட்களுக்கு நல்ல காண்ட்ராஸ்ட் லுக்கை தருகிறது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

மொத்தத்தில் நெக்ஸான் இவி காரே வாடிக்கையாளர்கள் மத்தியில் அதன் ஸ்டைல் மற்றும் லுக்கிற்கு நல்ல பெயரைப் பெற்றதால் இந்த காரிலும் அதே லுக் மற்றும் ஸ்டைலை பெரும்பாலும் மாற்றாமல் அப்படியே கொடுத்துள்ளனர்.இதில் செய்யப்பட்ட சில மாற்றங்களும் காருக்கான லுக்கை மேலும் மேம்படுத்தியே காட்டுகிறது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

காக்பிட் மற்றும் இன்டீரியர்

இன்டீரியர் லேஅவுட்களும் சிறப்பான லே அவுட்களையே பெறுகிறது. இதில் கவனிக்கத் தக்க மாற்றம் என்றால் இதில் புதிய கலர் ஸ்கீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாக்காரானா பேட்ஜ் என்ற கலர் ஸ்கீம் மாற்றப்பட்டுள்ளது. இது காருக்கு கிளாஸியான லுக்கை தருகிறது. இந்த கலருடன் எலெக்டரிக் ப்ளு நிற தையல்கள் கொடுக்கப்பட்டுள்ள வித்தியாசமான கலர் காம்பினேஷனாக உள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

சீட்களில் மூன்று ஆரோ டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க சீட்களில் வெண்டிலேஷன் அம்சம் உள்ளது. இதன் கண்ட்ரோல்கள் சீட் யூனிட்டிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வென்டிலேஷன் சீட்கள் கோடைக் காலங்களில் காரை பயன்படுத்தும்போது அதிகம் பயன்படும். வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மைக் காக்கும்.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

டூயல் டோன் இன்டீரியரில் கருப்பு நிறம் காருக்கான உட்பு லுக்கிற்கு மெருகைக் கூட்டுகிறது. டேஷ்போர்டின் பெரும்பகுதி கருப்பு நிறத்திலும் அதன் கீழ் பகுதி பேட்ஜ் நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் சில விஷயங்கள் எலெக்ட்ரிக் ப்ளு கலரிலும் உள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

ஸ்டியரிங் வீலில் லெதர் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் எலெக்ட்ரிக் ப்ளு நிற தையல் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்க நல்ல ஃபீலை கொடுக்கிறது. மூன்று போக்களுடனான பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூன்று ஸ்போர்க்களும் கிளாஸ் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டியரிங்கில் ஆடியோ கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் இன்ட்ரூமெண்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி எலெக்ட்ரிக் ப்ளு பினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது. இன்ட்ரூமெண்ட் கிளஸ்டரை பொருத்தவரை ஸ்பீடா மீட்டர் அனலாக்கிலும், மற்ற தகவல்கள் டிஜிட்டல் ஸ்கிரினிலும் இருக்கிறது. இதற்காக 7 இன்ச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இதில் வாகனத்தின் மீதம் இருக்கும் பேட்டரின் அளவில் எவ்வளவு ரேஞ்ச் செல்லும், எவ்வளவு சார்ஜ் இருக்கிறது. பவர் எவ்வளவு செலவாகிறது. எவ்வளவு உற்பத்தியாகிறது. ட்ரிப் மீட்டர் ஓடோமீட்டர், எச்சரிக்கை சிக்னல், நோட்டிபிகேஷன் ஆகிய விஷயங்கள் இந்த டிஜிட்டல் கிளஸ்டரில் இருக்கிறது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

டேஷ்போர்டின் மையப்பகுதியை பொருத்தவரை 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், உள்ளது. இது ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளை எல்லாம் கொண்டுள்ளது. ஆனால் அது ஓயர் கனெக்ஷனவில் தான் செயல்படுகிறது. வயர்லெஸில் இது கனெக்ட் ஆவது தான் இந்த காரின் மேக்ஸிமம் தீமிற்கு பொருந்தும் ஆனால் அது இந்த காரில் இல்லை.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு கீழ்ப் பகுதியில் சென்ட்ரல் ஏசி வென்ட்கள் உள்ளது. இதைச் சுற்றி எலெக்ட்ரடிக் ப்ளு கலர் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. பட்டைக்கு உள்ளே கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது டேஷ் போர்டு உடனான டிசைனாக உள்ளது. இதன்நடுவில் உள்ள பேனிலில் மூன்று ஆரோ டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறு சிறு மாற்றங்கள் பழைய காரிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

டேஷ் போர்டின் கீழ் பகுதியில் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆப்ஷன் உள்ளது. இதில் எந்த மாற்றங்களைச் செய்தாலும் அது இன்ஃபோடெயின்மெண்டில் தெரிகிறது மாறாக இதற்கு அருகில் சிறிய டிஜிட்டல் டிஸ்பிள வைத்திருந்திருக்கலாம்.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

ஏசி வென்டிற்கு கீழே சில பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காரை லாக் மற்றும் அன்லாக் செய்வது, சார்ஜரை காரலிருந்து அகற்றுவது, ஹில் டிசென்ட் கண்ட்ரோலை ஆக்டிவேட் அல்லது டீ ஆக்டிவேட் செய்வது, மத்தியில் 12 V யூஎஸ்பி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கியர் நாப் டிசைனாக கொடுக்கப்பட்டுள்ளது. இது காருக்கான அட்ராக்டிவ் விஷயத்தை வழங்கியுள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

காரின் கியர் நாப் பில் ஆக்டிவ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. பிரிமியர் ஃபீலை வழங்கி வருகிறது. இதுமுழு கலர் டிஸ்பிளேவாக கார் எந்த கியரில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதில் பார்க்கிங், ரிவர்ஸ், நியூட்ரல், மற்றும் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கலர் மாறுகிறது. இதன் அருகில் எக்கோ மற்றும் ஸ்போர்ட்ட டிரைவ் மோட்களுக்கான பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இதற்கு அடுத்ததாக ஒரு நாப் வழங்கப்பட்டுள்ளது. இது ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை குறைக்கக் கூட்டவும், எலெக்டரானிக் பார்க்கிங் பிளேக், ஆட்டோஹோல்டு ஆப்கான்களைப் பயன்படுத்த உதவுகிறது. மேலும் அப்பகுதியில் வயர்லெஸ் செல்போன்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் பேட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிரைவர் மற்றும் முன்பக்க பாசஞ்சர்களுக்கு ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆர்ம் ரெஸ்ட்டிற்கு கீழே பெரிய கேபி ஹோல் கொடுக்கப்பட்டுள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

ஒட்டு மொத்தமாக டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் காரை பொருத்தவரை கிளாஸி, எலெகண்ட் யூத்ஃபுல் டிசைனாக கொடுக்கப்பட்டுள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

கம்ஃபோர்ட் மற்றும் பூட் விபரங்கள்

டாடா நிறுவனம் ஸ்பேஸ்களை வழங்குவதில் மிகவும் பிராக்டிகலாக இருக்கும். நெக்ஸான் காரிலிருந்து இந்த காருக்கு எந்த விதமான மாற்றங்களும் இல்லை. நெக்ஸான் இவியிலும் இதே போல தான் இருந்தது. தற்போது இவி மேக்ஸ் காரிலும் அதே இட வசதிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இவி மேக்ஸில் கூடுதலாக அதிக கம்ஃபோர்ட்டிற்காக சில சிறிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் ஒரு அங்கம் தான் முன்புறத்தில் வென்டிலேட்டட் சீட்கள், சீட்களின் தரமும் சிறப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் அதன் குஷன்களும் சிறப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

பின்புறம் உள்ள சீட்களும் தரமான கொடுக்கப்பட்டுள்ளன. கால்கள் முட்டுகள், தலைக்கு போதுமான இட வசதி காரில் உள்ளது. ஆர்ம் ரெஸ்ட்களில் கப் ஹோல்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சென்டர் கன்சோலின் பின்பகுதியில் பின்புறம் உள்ளவர்களுக்கான ஏசி வென்ட் பொருத்தப்பட்டுள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இந்த காரின் கிளவ் பாக்ஸில் அதிக இட வசதிகள் உள்ளது. அதிகமான பொருட்களை வைத்துக்கொள்ளலாம். சென்டர் கன்சோலில் வயர்லெஸ் சார்ஜர் ஆப்ஷன் உள்ளது. டாடா சென்டர் கன்சோலில் இருந்த பாட்டில் வைக்கும் இதை கிளவ் பாக்ஸ் அருகே கொண்டு சென்றுவிட்டது அதனால் மையப்பகுதியில் பாட்டில் வைக்கும் இடம் இல்லை.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

டோர் பேனல்களில் டீப் பாக்கெட், வாட்டர் பாட்டிலை வைக்க கப் ஹோல்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரில் டாடா மோட்டார்ஸ் கேபின் மற்றும் பூட் ஸ்பேஸ்களுக்காக கிரவுண்ட் கிளியரன்ஸை தியாகம் செய்துள்ளது. பெரிய பேட்டரி போக்கிற்கான இடம் போக 350 லிட்டர் பூட் ஸ்பேஸ் இந்த காரில் உள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இவி பவர் டெரைன்

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் கார் எல்லாவற்றிலும் மேக்ஸிம் விஷயத்தைக் கையாண்டுள்ளது. டாடா நிறுவன இன்ஜினியர்கள் இந்த காரில் பெரிய பேட்டரி, பவர்ஃபுல் மோட்டார், அதிகமான ரேஞ்ச் நல்ல செயல் திறன் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இதில் 40.5 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதாரண நெக்ஸான் இவி காரில் 30.2kWh ஆக இருந்தது. தற்போது 10.3 kWh உயர்ந்துள்ளது. இந்த பேட்டரி பெரியதாகவும் அதே நேரத்தில் 70 கிலோ எடையுடனும் இருக்கிறது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

முன்பக்க வீல் டிரைவ் உடன் வரும் இந்த மோட்டார். 143 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இது பழைய காரை விட 14 பிச்பி மற்றும் 5 என்எம் டார்க் திறனை அதிகம் வெளிப்படுத்தும். இந்த கா் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 9 நொடிகளில் பெரும் எனக் கூறியிருந்தனர். நாங்கள் இந்த காரில் அதிகபட்சமாக 140 கி.மீ வேகம் வரை பயணித்தோம்.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இந்த காரின் முக்கியமான விஷயம் இதன் ரேஞ்ச் ARAI இந்த கார் முழு சார்ஜில் அதிகபட்சம் 437 கி.மீ வரை பயணிக்கும் எனக் கூறியிருந்தனர். ஆனால் ரியல் உலகத்தில் இதை விட குறைவான ரேஞ்சே கிடைக்கிறது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

ரேஞ்ச் டெஸ்ட்

நாங்கள் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் காரை டெஸ்ட் டிரைவிங்கிங்கிற்காக எடுத்த போது அதில் 98 சதவீத சார்ஜ் இருந்தது. இன்னும் 407 கி.மீ பயணிக்கும் என ரேஞ்ச் காட்டியது. காரை எடுத்து அன்று பல விதமான சாலைகளில் காரை ஓட்டினோம். ஹைவேக்களில் செல்லும் போது 80 கி.மீ வேகத்தில் க்ரூஸ் கண்ட்ரோல் செட் செய்து பயணித்தோம். அதே நேரம் மெதுவாக நகரும் டிராபிக்கிலும் இந்த காரில் சென்றோம்.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

நாங்கள் நேரடியாகக் கர்நாடகா மாண்டியாவில் உள்ள ராக்னதித்து பறவை சரணாலயம் பகுதிக்குச் சென்று இந்த காரை ஆஃப் ரோடு டிரைவிங்கை டெஸ்ட் செய்யச் சென்றிருந்தோம். கரடு முரடான மணல் பாதைகளில் எப்படி பயணிக்கிறது எனப் பார்த்தோம். ஆனால் இந்த கார் அந்த இடத்தை உழுதுவிட்டது என்றே சொல்லலாம். ஸ்லிப் ஆகவோ அல்லது சறுக்கவேயில்லை.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இறுதியாக நாங்கள் மீண்டும் பெங்களூரு திரும்பினோம். அப்பொழுது நாங்கள் 300 கி.மீ வரை பயணித்திருந்தோம். பேட்டரியில் 10 சதவீத சார்ஜ் மீதம் இருந்தது. இந்த காரில் லிம்ப் ஹோம் மோட்டை கடைசி நேரத்தில் பயன்படுத்தினோம். இந்த மோடில் காரை பயன்படுத்தினால் காரை வேகமாகச் செல்லாது, ஆக்ஸிலேட்டரை எவ்வளவு கொடுத்தாலும் குறைவான வேகத்தில் செல்லும் இந்த மோடை பயன்படுத்தும்போது 30-40 கி.மீ வரை அதிகம் பயன்படுத்த முடியும் எனக் கணிக்கிறோம்.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இறுதியாகக் காரை நாங்கள் மீண்டும் டாடா மோட்டார்ஸிடம் ஒப்படைக்கும் போது 309.8 வரை பயணித்தோம். த்ராட்டல், மற்றும் பிரேக்கிங்கை அளவாகவே பயன்படுத்தினோர். அதனால் நல்ல ரீஜெனரேஷன் கிடைத்தது. காரை எக்கோ மோடில் வைத்தே பயணித்தோம். காரில் ஏசியை 5 கி.மீ வரை மட்டும் தான் ஆன் செய்தோம்.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இந்த காரில் 3 டிரைவ் மோட் உள்ளது. எக்கோ, சிட்டி, மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்கள் உள்ளது. இதில் எக்கோ மோடில் குறைவான சார்ஜில் அதிகம் பயணிக்க முடியும். சிட்டி மோடை பொருத்தவரை பம்பர் டூ பம்பர் டிராபிக்கிற்கு சிறந்தது. ஸ்போர்ட் மோடை பயன்படுத்தும்போது காரின் பெர்பாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது. ஸ்போர்ட் மோடை ஆன் செய்ததும் கிடைக்க வேண்டிய ரேஞ்சில் 30 கி.மீ வரை எக்ஸ்ட்ராவாக பயணிக்க முடியும்.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

இந்த டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் காரை பொருத்தவரை மொத்தம் 4 ரீஜென் செட்டிங்ஸ் இருக்கிறது. ஒரு ஆப்ஷன் மொத்தமாக இதை ஆஃப் செய்கிறது. அடுத்ததாக 3 லெவல் வரை இருக்கிறது. 3வது லெவலில் ஒரே பெடலில் காரை ஓட்ட முடியும். அப்பொழுது பிரேக்கிங்கும் ஸ்டாரங்காக இருக்கிறது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

ரைடிங்

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் காரை பொருத்தவரை ரைடிங் தரமான இருந்தது. காரின் சஸ்பென்சன் சிறப்பாகச் செயல்பட்டது. சாலைகளில் குழிகளிலும் ஸ்பீடு பிரேக்கர்களிலும் சிறப்பாகச் செயல்பட்டது. காரின் உட்புறம் எந்த வித சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. எலெக்ட்ரிக் வாகனம் என்பதால் அதிர்வுகளும் இல்லை. மோட்டாரில் சில நேரங்களில் மட்டுமே சத்தம் வருகிறது. அதுவும் வேகமாகப் பயணிக்கும் போது சத்தம் வருகிறது. கரடு முரடான பாதைகளில் தேய்மானத்தின் போது சத்தம் டயர் ரோட்டில் தேய்ந்து சத்தம் வருகிறது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

காரின் ஸ்டியரிங் பிடிப்பதற்கு நல்ல உணர்வை வருகிறது. குறைவான வேகத்தில் செல்லும் போதும் சிறப்பான செயல்படுகிறது. வேகமாகச் செல்லும் போது டிரைவருக்க ஒரு வித கான்ஃபிடென்ஸை தருகிறது. டிரைவிங்கிற்கு டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் கார் சிறந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

சார்ஜிங்

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் காரை பொருத்தவரை இதை வாங்குபவர்களுக்கு இரண்டு சார்ஜிங் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகிறது. சாதாரணமாக 3.3kW சார்ஜர் கொடுக்கப்படுகிறது. இந்த சா்ஜர் மூலம் முழு பேட்டரியும் சார்ஜ் ஆக15-16 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கிறது. பேட்டரி பெரிய சைஸ் என்பதால் இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

விரைவாக சார்ஜ் ஏற டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய பாஃஸ்ட் சார்ஜரை வழங்குகிறது. இது 7.2kW அளவில் சார்ஜ் ஏற்றும் இந்த சார்ஜரை பயன்படுத்தும் போது முழு பேட்டரி 5-6 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிறது. இது போக 50kW டிசி பாஃஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் இந்த கொடுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தினால் 0-80 சதவீத பேட்டரி சார்ஜ் ஏற ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

பாதுகாப்பு அம்சங்கள்

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் கார் அந்த செக்மெண்டில் உள்ள கார்களிலேயே பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த காரில் ரீ இன்ஃபோர்ஸ்டு ஸ்டீல் ஸ்டெக்ச்சர், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், IP67 ரேட் செய்யப்பட்ட பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசெண்ட் கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு, பேனிக் பிரேக் ஹசார்டு லைட், குழந்தைகளுக்கான ISOFIX சீட் ஹெங்கர்கள், இஎஸ்பி ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

முக்கிய அம்சங்கள்

இந்த டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் காரில் முக்கிய அம்சங்களாக எலெக்டரிக் சன் ரூப், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அனலாக்- டிஜிட்டல் இன்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பின்பக்கம் உள்ள ஏசி வெண்ட், வென்டிலேட்டட் சீட், ஏர் ஃப்ரிபயர், ஆக்டிவ் டிஸ்பிளே உடன் கூடிய கியர் நாப், தானாக டிம் ஆகும் ஐஆர்விஎம், வயர்லெஸ் போன் சார்ஜர் ஆகிய அம்சங்கள் இந்த காரில் உள்ளது.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

வேரியன்ட், கலர் மற்றும் விலை

இந்த கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் வருகிறது. 3.3kW சார்ஜருடன் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் XZ+ கார் ரூ17.74 லட்சத்திலும், 7.2kW சார்ஜருடன் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் XZ+ கார் 18.24 லட்சத்திலும், 3.3kW சார்ஜருடன் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் XZ+ லக்ஸ் கார் ரூ18.74 லட்சத்திலும், 7.2kW சார்ஜருடன் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் XZ+ கார் ரூ19.24 லட்சத்திலும் விற்பனையாகிறது. இந்த கார்களுக்கு மூன்று கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இன்டென்சி - டீல், டேடோனா க்ரே, பிரிஸ்டைன் ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

முழு சார்ஜில் அசால்டாக 300 கி.மீ பயணித்தோம் . . . டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரிவியூ . . .

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் இவி மேக்ஸ் என காருக்கு பெயர் வைத்ததிற்கு ஏற்ப எல்லாவற்றையும் மேக்ஸிமம் தர முயற்சி செய்துள்ளது. இந்த கார் ரியலிஸ்ட்டிக் ரேஞ்ச் 270 கி.மீ தாண்டி என எடுத்துக்கொண்டாலும் அது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் உடன் வருவது வாடிக்கையாளர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கிறது. விலை பார்க்கும் போது சற்று அதிகமாகத் தான் இருக்கும் ஆனால் இதன் மூலம் கிடைக்கும் பலன்களைக் கணக்கிட்டால் கொடுக்கும் பணத்திற்கு இந்த கார் சிறப்பாக இருக்கும் என நாம் சொல்லிவிடலாம்.

Most Read Articles
English summary
Tata nexon ev max review spec performance interior features advantages and disadvantages
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X