உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்தியாவில் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. பெட்ரோலின் விலை உடனடியாக குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அதே நேரத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வும் தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. எனவே மாற்று எரிபொருள் வாகனங்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது உயர்ந்துள்ளது.

சுத்தமான எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட்-எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறந்த மாற்று தேர்வாக கருதப்படுகின்றன. எனினும் இந்த வாகனங்களின் மீது சந்தேகம் கொண்டவர்களும் இருக்கவே செய்கின்றனர். இதன் காரணமாக சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கான தேவையும் உயர்ந்து வருகிறது. முன்பு டாக்ஸிகளுக்கு மட்டுமே உகந்த சரியான எரிபொருள் என கருதப்பட்ட சிஎன்ஜி தற்போது இந்தியாவின் அனைத்து குடும்பங்களின் கராஜ்களிலும் நிற்கும் வாகனங்களுக்கும் ஏற்ற எரிபொருளாக மாறி வருகிறது.

இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களுக்கான தேவை உயர்ந்து வரும் நிலையில், அதனை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் தனது சிஎன்ஜி வரிசை வாகனங்களை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மற்றும் டிகோர் கார்களின் ஐசிஎன்ஜி மாடல்களை பல்வேறு வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில், டாடா டியாகோ ஐசிஎன்ஜி காரின் டாப் மாடலை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட டியாகோ காருடன் ஒப்பிடுகையில் இதில் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிசைன் & ஸ்டைல்

ஸ்டாண்டர்டு பெட்ரோல் இன்ஜின் மாடலுடன் ஒப்பிடுகையில் டாடா டியாகோ ஐசிஎன்ஜி காரின் வெளிப்புறத்தில் பெரிய அளவில் வித்தியாசங்கள் இல்லை. நமக்கு நன்கு பரிட்சயமான டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரின் டிசைன் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளது. புதிய வண்ண தேர்வின் வடிவில்தான் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது மிட்நைட் ப்ளம் (Midnight Plum) என அழைக்கப்படுகிறது. நேரடி வெளிச்சம் இல்லாத சமயங்களில் இது கருப்பு நிறத்தை போன்று காட்சியளிக்கிறது. எனினும் சூரிய வெளிச்சத்தில் இந்த நிறம் பளபளப்பாக கண்களை கவர்கிறது. இதன் மூலம் ஹேட்ச்பேக் ரக கார்களின் கடலில் டாடா டியாகோ ஐசிஎன்ஜி தனித்து தெரிகிறது.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் முன்பகுதியில் ஹெட்லேம்ப்கள் கவனம் ஈர்க்கின்றன. நாங்கள் ஓட்டியது டாப் மாடலான XZ+ வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டில் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம் மைய பகுதியில் கருப்பு நிற க்ரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மீது டாடா நிறுவனத்திற்கே உரித்தான ட்ரை-ஏரோ டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் கணிசமான அளவில் க்ரோம் பூச்சுக்களை காண முடிகிறது. ட்ரை-ஏரோ டிசைன் மற்றும் டாடா லோகோ ஆகியவற்றில் க்ரோம் பூச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

க்ரில் அமைப்பிற்கு கீழே க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இது காரின் ஒட்டுமொத்த அகலத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் க்ரில் அமைப்பிற்கு மேலே பியானோ பிளாக் நிறத்தில் பிளாஸ்டிக் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் பனி விளக்குகள், 'L' வடிவத்தை போன்ற பகல் நேர விளக்குகளும் கவனம் ஈர்க்கின்றன.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதேபோல் இந்த காரை பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போதும் ஒரு சில அம்சங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். இதன்படி உங்கள் கண்கள் முதலில் செல்வது சக்கரங்களுக்காகதான் இருக்கும். இந்த காரில் 14 இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை பார்ப்பதற்கு அற்புதமாக உள்ளன. இவை முறையான அலாய் வீல்கள் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவை சாதாரணமான 4 ஸ்போக் ஸ்டீல் வீல்கள் ஆகும். ஆனால் இதன் மீது அழகான வீல் கேப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முறையான அலாய் வீல்களை போன்று தோற்றமளிக்கும் வகையில் இதன் தரம் இருக்கிறது என்பது சிறப்பான விஷயம். இந்த காரின் மேற்கூரை, ஸ்பாய்லர் மற்றும் ஓஆர்விஎம்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் பின் பகுதியை பொறுத்தவரையில், ஸ்டாண்டர்டு மாடலின் டிசைன் தக்கவைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஸ்டாப் லேம்ப் உடன் ஸ்பாய்லரை இந்த கார் பெற்றுள்ளது. டாடா லோகோ மற்றும் டியாகோ பேட்ஜ் ஆகியவையும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. டியாகோ பேட்ஜூக்கு கீழே சாவி துவாரமும், அதற்கு கீழே ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவும் இடம்பெற்றுள்ளன. ஐசிஎன்ஜி பேட்ஜ்தான் பின் பகுதியில் இருக்கும் குறிப்பிடத்தகுந்த வித்தியாசம் ஆகும். மற்றபடி பெரும்பாலான அம்சங்கள் அப்படியேதான் உள்ளன.

ஒட்டுமொத்தத்தில் இந்த கார் ஸ்டைலான ஹேட்ச்பேக் என்ற பெருமையை தக்க வைத்து கொண்டுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான டிசைன் என்பதால், கார் விற்பனையிலும் உதவி செய்யும்.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

காக்பிட் & இன்டீரியர்

டாடா டியாகோ ஐசிஎன்ஜி விசாலமான இடவசதியை கொண்ட கார்களில் ஒன்றாகும். ட்யூயல்-டோன் இன்டீரியரை இந்த கார் பெற்றுள்ளது. கருப்பு மற்றும் பழுப்பு ஆகியவைதான் முக்கியமான வண்ணங்களாக உள்ளன. டேஷ்போர்டின் மேல் பகுதி கருப்பு நிறத்திலும், கீழ் பகுதி மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை பழுப்பு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் ஏசி வெண்ட்கள் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றை சுற்றிலும் க்ரோம் பூச்சுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் டேஷ்போர்டின் மைய பகுதியில் ஹார்மன் நிறுவனத்தின் 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

இதனுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த வசதிகளை பயன்படுத்த வேண்டுமென்றால், யூஎஸ்பி ஸ்லாட் மூலமாக போனை சிஸ்டத்துடன் இணைக்க வேண்டும். இந்த காரில் 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஹார்மன் நிறுவனத்துடையதுதான். இந்த ஸ்பீக்கர்களில் இருந்து வரும் சப்தம் நன்றாக உள்ளது.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

டச்ஸ்க்ரீனுக்கு கீழாக சில முக்கியமான பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. இதில், சிஎன்ஜி பட்டன் மிகவும் முக்கியமானது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள்களுக்கு இடையே மாறி கொள்வதற்கு இந்த பட்டன் உதவி செய்கிறது.

இந்த பட்டன்களுக்கு கீழாக டேஷ்போர்டின் பழுப்பு நிற பகுதி தொடங்குகிறது. அதே சமயம் சென்டர் கன்சோலில் க்ளைமேட் கண்ட்ரோலுக்கான கண்ட்ரோல் பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. டெம்ப்ரேச்சர் மற்றும் ஃபேன் வேகம் ஆகியவற்றில், ரோட்டரி நாப்கள் (Rotary Knobs) மூலமாக மாற்றங்களை செய்யலாம். ரோட்டரி நாப்களுக்கு இடையே ஸ்பேஸ் இருக்கிறது. முதலில் இது ஸ்க்ரீன் போன்ற தோற்றத்தை கொடுத்தது. ஆனால் இது ஸ்க்ரீன் கிடையாது. இது எந்த வேலைக்காகவும் வழங்கப்படவில்லை.

டெம்ப்ரேச்சர், ஃபேன் வேகம் மற்றும் ஏர் சர்க்குலேஷன் தொடர்பான விபரங்களை காட்டும் சிறிய எல்சிடி திரையை இங்கு வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இந்த தகவல்கள் பிரதான 7 இன்ச் திரையில் வருகின்றன. இது குழப்பத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது. க்ளைமேட் கண்ட்ரோலில் மாற்றங்களை செய்ய வேண்டுமென்றால் நீங்கள் டச்ஸ்க்ரீனையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் இந்த காரில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் இடம்பெற்றுள்ளது. இதில், இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் சிறிய டிஎஃப்டி டிஸ்ப்ளே ஆகியவற்றை இது பெற்றுள்ளது. ரேஞ்ச், சிஎன்ஜி டெம்ப்ரேச்சர், ஓடோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் உள்பட பல்வேறு தகவல்களை டிஎஃப்டி திரை வழங்குகிறது. எரிபொருள் டேங்க் மூடி திறந்திருந்தால் இது எச்சரிக்கையும் செய்கிறது.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

சௌகரியம், நடைமுறை பயன்பாடு & பூட் ஸ்பேஸ்

நாங்கள் ஏற்கனவே கூறியபடி டாடா டியாகோ ஐசிஎன்ஜி காரின் கேபின் விசாலமாக உள்ளது. இடவசதி இல்லாமல் நெருக்கடியாக இருக்குமோ? என பயப்பட வேண்டியதில்லை. இந்த காரின் இருக்கைகள் ஃபேப்ரிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இருக்கைகளில் நிறைய வண்ணங்களை காண முடிகிறது. கருப்புதான் இங்கே அடிப்படை நிறம். இருக்கைகளின் நடுப்பகுதியில் சாம்பல் வண்ணமும், டாடா நிறுவனத்தின் ட்ரை-ஏரோ டிசைனும் வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம் டோர் பேனல்கள் கருப்பு மற்றும் பழுப்பு வண்ணத்தில் எளிமையாக டிசைன் செய்யப்பட்டுள்ளன. டோர் பாக்கெட்கள் ஓரளவிற்கு இடவசதியுடன் உள்ளன. டோர் பாக்கெட்களில் இரண்டு 500 மிலி பாட்டில்களை வைக்க முடியும். ஒவ்வொரு டோர் பேனலிலும் 2 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் முன் பகுதி இருக்கைகள் சௌகரியமாக உள்ளன. நல்ல இடவசதி இருக்கிறது. நேரடியாக இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு சென்று விடுவோம். அவையும் சௌகரியமாகதான் உள்ளன. ஆனால் இங்கே இடவசதி சற்று குறைவாக உள்ளது. ஹெட்ரூம் மிக சிறப்பாக உள்ளது என்றாலும், தொடைக்கு இன்னும் நன்றாக சப்போர்ட் கிடைக்கும் வகையில் வடிவமைத்திருக்கலாம். பின் பகுதியில் வசதிகள் குறைவாக உள்ளது என்பதும் ஒரு குறை. இந்த காரில் மடித்து வைக்க கூடிய ஆர்ம்ரெஸ்ட் இல்லை. அத்துடன் பின் பகுதி பயணிகளுக்கான ஹெட்ரெஸ்ட்களும் சில சமயங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் காரின் பின்னால் சென்று, பூட் பகுதியை திறந்தால், பெரிய சிஎன்ஜி டேங்க் நம்மை வரவேற்கிறது. இது 60 லிட்டர் டேங்க் என்பதால், பூட் ஸ்பேஸ் முழுவதையும் ஆக்ரமித்து கொண்டுள்ளது. டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடலின் பூட் ஸ்பேஸ் 242 லிட்டர்கள் ஆகும். ஐசிஎன்ஜி மாடலில் இது வெறும் 80 லிட்டர்களாக குறைந்துள்ளது.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்ஜின் செயல்திறன் & ஓட்டுதல் அனுபவம்

பெட்ரோல் அல்லது சிஎன்ஜி மோடுகளில் டாடா டியாகோ ஐசிஎன்ஜி காரை ஓட்ட முடியும். ஆனால் இயல்பாகவே இந்த கார் சிஎன்ஜி-க்கு முன்னுரிமை அளிக்கிறது. அதாவது நீங்கள் பெட்ரோல் மோடில் ஓட்டிவிட்டு, இக்னீஷனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுகிறீர்கள் என வைத்து கொள்வோம். இதன்பின் காரை மீண்டும் ஸ்டார்ட் செய்தால், ஆட்டோமேட்டிக்காகவே அது சிஎன்ஜி எரிபொருளுக்கு மாறிவிடுகிறது.

பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட ஸ்டாண்டர்டு டியாகோ காரின் 1.2 லிட்டர் இன்ஜின் தக்க வைக்கப்பட்டுள்ளது. எனினும் சிஎன்ஜி எரிபொருளுக்கு இணங்கும் வகையில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக பெட்ரோல் இன்ஜின் மாடல்களுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி கார்கள் சற்று மெதுவாக செயல்படும்.

பெட்ரோல் மோடில் இயங்கும்போது டாடா டியாகோ ஐசிஎன்ஜி காரானது, 6,000 ஆர்பிஎம்மில் 84.8 பிஹெச்பி பவரையும், 3,300 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் சிஎன்ஜி பட்டனை அழுத்தியவுடன் 'CNG Mode Active' என்ற நோட்டிஃபிகேஷன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் வருகிறது. உடனடியாக பவர் அவுட்புட் 72.39 பிஹெச்பி ஆகவும், டார்க் அவுட்புட் 95 என்எம் ஆகவும் குறைந்து விடுகிறது.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதாவது பெட்ரோல் மோட் உடன் ஒப்பிடும்போது 12.4 பிஹெச்பி பவரும், 18 என்எம் டார்க் திறனும் குறைவு. இதன் காரணமாக செயல்திறனில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏனெனில் ஆக்ஸலரேஷன் மிகப்பெரிய அளவில் மாற்றமடையவில்லை. மூன்று இலக்க வேகத்தை இந்த கார் எளிதாகவே எட்டுகிறது.

கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மோடுகளுக்கு மாற்றி கொள்ள முடியும். ஆனால் அப்படி மாற்றும்போது எதுவுமே நடக்காதது போலதான் கார் ஓடுகிறது. அதே நேரத்தில் இந்த காரின் கிளட்ச் இலகுவாகவும், பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருக்கிறது.

அதே சமயம் சாலைகளில் உள்ள குண்டும், குழிகளை உணர முடிகிறது. ஆனால் மிகப்பெரிய அளவில் இல்லை. எனவே அசௌகரியமான பயண உணர்வு ஏற்படுகிறது என கூற முடியாது. ஆனால் டியாகோ பெட்ரோல் மாடலை போலவே சிறிய அளவில் பாடி ரோல் ஏற்படுகிறது. அதே நேரத்தில் டாடா டியாகோ ஐசிஎன்ஜி காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 168 மிமீ ஆகும். டாடா டியாகோ பெட்ரோல் மாடல் உடன் ஒப்பிடுகையில் 2 மிமீ குறைவு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த காரின் பிரேக்கிங் திறன் போதுமான அளவில் உள்ளது. அதே சமயம் நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் பயணம் செய்யும்போது ஸ்டியரிங் சிஸ்டம் இறுக்கம் பெறுவது சிறப்பான விஷயம். இதன் மூலம் உங்களால் நம்பிக்கையுடன் காரை ஓட்ட முடியும்.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

பாதுகாப்பு & முக்கியமான வசதிகள்

குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் சமீப காலமாக டாடா நிறுவனத்தின் கார்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இதற்கு டியாகோவும் விதிவிலக்கு அல்ல. குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் இது 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. ஐசிஎன்ஜி மாடலும் அதே கட்டுமான தரத்துடனும், பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடனும் வந்துள்ளது.

டாடா டியாகோ ஐசிஎன்ஜி பாதுகாப்பு வசதிகள்

  • ட்யூயல் ஏர்பேக்குகள்
  • இபிடி உடன் ஏபிஎஸ்
  • கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
  • ரியர் பார்க்கிங் கேமரா
  • இதனுடன் சிஎன்ஜி தொடர்பான பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஸ்டெய்லெஸ் ஸ்டீல் சிஎன்ஜி டேங்க்கும் ஒன்று. பல்வேறு அழுத்தங்கள் மற்றும் வெப்ப நிலைகளில் இது சோதனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வெப்ப நிகழ்வு பாதுகாப்பையும் (Thermal Incident Protection) இந்த கார் பெற்றுள்ளது. இதன் மூலம் தீ அல்லது வெப்பம் சார்ந்த ஏதேனும் அசம்பாவித நிகழ்வுகள் நடந்தால், சிஎன்ஜி சப்ளை துண்டிக்கப்பட்டு விடும்.

    அத்துடன் காரின் கம்ப்யூட்டரால் கசிவு கண்டறியப்பட்டால், தானாகவே பெட்ரோல் மோடுக்கு மாறி விடும். கூடுதல் முன்னெச்சரிக்கையாக தீ அணைப்பானுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரை விற்பனை செய்கிறது. இதுபோன்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருப்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

    உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

    டாடா டியாகோ ஐசிஎன்ஜி முக்கிய வசதிகள்

    • ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள்
    • எல்இடி பகல் நேர விளக்குகள்
    • ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல்
    • ஹார்மன் நிறுவனத்தின் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்
    • ஸ்டியரிங் வீலில் கண்ட்ரோல்கள்
    • டீஃபாகர் உடன் ரியர் வாஷ் வைப்பர்
    • உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

      டாடா டியாகோ ஐசிஎன்ஜி வேரியண்ட்கள் & விலை

      டாடா டியாகோ ஐசிஎன்ஜி கார் மொத்தம் 5 வேரியண்ட்களில் கிடைக்கும். அவற்றின் விலை விபரம் பின்வருமாறு:

      • டியாகோ XE சிஎன்ஜி - 6,09,000 ரூபாய்
      • டியாகோ XM சிஎன்ஜி - 6,39,900 ரூபாய்
      • டியாகோ XT சிஎன்ஜி - 6,69,900 ரூபாய்
      • டியாகோ XZ+ சிஎன்ஜி - 7,52,900 ரூபாய்
      • டியாகோ XZ+ DT சிஎன்ஜி - 7,64,900 ரூபாய்
      • இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

        உச்சகட்ட பாதுகாப்பு... டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு தெரியுமா? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

        டிரைவ்ஸ்பார்க் கருத்து

        டாடா டியாகோ கார் எப்போதுமே அருமையான ஹேட்ச்பேக் காராக இருந்து வருகிறது. இது பயணிகளுக்கு தாராளமான இடவசதி, பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை வழங்குகிறது. தற்போது வந்துள்ள இதன் ஐசிஎன்ஜி மாடலும் வாடிக்கையாளர்களை அதிகளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் பல்வேறு வேரியண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம்!

Most Read Articles
English summary
Tata tiago cng review design interior engine performance driving impressions price
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X