மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரண்டு நிறுவனங்களும் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூட்டணி அமைத்து கொண்டன. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது மற்றும் தயாரிப்புகளை பரிமாறி கொள்வது உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்த கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டணி மூலமாக இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் டொயோட்டா நுழைந்தது. மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் க்ளான்சா என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

டொயோட்டா க்ளான்சா பிரீமியம் ஹேட்ச்பேக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் இருந்து வெளிவந்த இரண்டாவது தயாரிப்பு இதுவாகும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர். ஆனால் க்ளான்சாவை போல் அல்லாமல், அர்பன் க்ரூஸரின் வெளிப்புறத்தில் டொயோட்டா நிறுவனம் சில மாற்றங்களை செய்துள்ளது. இதன் மூலம் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவிடம் இருந்து டொயோட்டா அர்பன் க்ரூஸர் சற்று வித்தியாசமாக தெரிகிறது. ஆனால் க்ளான்சாவில் டொயோட்டா நிறுவனம் வெறும் லோகோக்களை மட்டுமே மாற்றம் செய்திருந்தது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் காம்பேக்ட் எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. நகர பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் நாங்கள் இந்த காம்பேக்ட் எஸ்யூவியை ஓட்டி பார்த்து சோதனை செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

வெளிப்புறம் & டிசைன்

நாங்கள் ஏற்கனவே கூறியபடி டொயோட்டா அர்பன் க்ரூஸர் சில மாறுதல்களை பெற்றுள்ளது. இதில், முதலாவது முன் பக்க க்ரில் அமைப்பு. டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் காம்பேக்ட் எஸ்யூவியை தங்களது தனித்துவமான டிசைனில் அறிமுகம் செய்துள்ளது. க்ரில் அமைப்பின் இருபுறமும் செங்குத்தான க்ரோம் பட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் க்ரில் அமைப்பில், கிடைமட்டமான ஸ்லாட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் இந்த காம்பேக்ட் எஸ்யூவிக்கு இது கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

அத்துடன் முழு எல்இடி ஹெட்லைட்களையும், எல்இடி பகல் நேர விளக்குகளையும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் பெற்றுள்ளது. அவை பிரகாசமாக ஒளிர்வதுடன், இரவு நேரங்களில் நல்ல பார்வையை வழங்குகின்றன. ஆனால் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவில் பனி விளக்குகள் எங்கு வழங்கப்பட்டுள்ளதோ, அதே இடத்தில்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸரிலும் பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அதை சுற்றிலும் க்ரோம் பூச்சுக்கள் மூலம் டொயோட்டா அழகுபடுத்தியுள்ளது. காரின் பிரீமியமான லுக்கை இது மேம்படுத்துகிறது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

இனி பக்கவாட்டு பகுதிக்கு நகர்வோம். இங்கே 16 இன்ச் ட்யூயல்-டோன் அலாய் வீல்களை டொயோட்டா அர்பன் க்ரூஸர் பெற்றுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரை சுற்றிலும் கருப்பு நிற கிளாடிங் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து விட்டு பார்த்தால், பக்கவாட்டு பகுதியில் பெரிதாக மாற்றங்கள் இல்லை. டொயோட்டா அர்பன் க்ரூஸர் காம்பேக்ட் எஸ்யூவி கருப்பு நிற ஓஆர்விஎம்களை பெற்றுள்ளது. இதிலேயே டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ரூஃப் ரெயில்கள் மற்றும் சுறா துடுப்பு ஆன்டெனா ஆகியவற்றையும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் பெற்றுள்ளது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

ஆனால் டொயோட்டா அர்பன் க்ரூஸர் காம்பேக்ட் எஸ்யூவியின் பின் பகுதி, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை போலவே உள்ளது. டெயில்லைட், பம்பர், பூட் பகுதியில் வழங்கப்பட்டுள்ள பெரிய க்ரோம் பட்டை ஆகியவை அப்படியே உள்ளன. நம்பர் பிளேட்டிற்கு மேலாக உள்ள பெரிய க்ரோம் பட்டையில், அர்பன் க்ரூஸர் என்ற பெயர் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்கிங் சென்சார்களுடன் ரியர்வியூ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

இன்டீரியர் & வசதிகள்

இனி காரின் உள்ளே நுழைவோம். அர்பன் க்ரூஸர் காம்பேக்ட் எஸ்யூவியின் இன்டீரியர் அப்படியே மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை போல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் சீட் கவரின் நிறம் மாறியிருப்பது மட்டும் ஒரே ஒரு மாற்றமாக உள்ளது. அதே சமயம் டேஷ்போர்டின் மைய பகுதியில், 'ஸ்மார்ட் ப்ளேகாஸ்ட்' வழங்கப்பட்டுள்ளது. இது 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே ஆகும். இது ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்யக்கூடியது. இன்போடெயின்மெண்ட் சிஸ்டமிற்கு அப்படியே கீழாக க்ளைமேட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கீழாக கப் ஹோல்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் ஸ்டியரிங் வீல் சௌகரியமாக உள்ளது. பிடித்து ஓட்டுவதற்கும் நன்றாக இருக்கிறது. ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு கண்ட்ரோல்களுக்கான பட்டன்கள் சரியான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. டிரைவர் சாலையில் முழுமையாக கவனம் செலுத்துவதற்கு அவை அனுமதிக்கின்றன. பாதுகாப்பை பொறுத்தவரை முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் ஆகிய வசதிகளை டொயோட்டா அர்பன் க்ரூஸர் பெற்றுள்ளது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

அதே நேரத்தில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவில் உள்ள அதே இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸரிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மைய பகுதியில் எம்ஐடி ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது. கார் பற்றிய பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது. இதன் இரு புறமும் பக்கவாட்டில் டேக்கோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை இரண்டுமே அனலாக்தான்.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

டொயோட்டா அர்பன் க்ரூஸரின் முன் பகுதியில் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஸ்டியரிங் வீல் டில்ட் ஆப்ஷனை மட்டுமே பெற்றுள்ளது. சரியான மற்றும் சௌகரியமான டிரைவிங் பொஷிஷனை கண்டறிவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருந்தாலும் இறுதியில் அதை நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள். ஓட்டுனர் இருக்கை கீழ் தொடைக்கு ஓரளவிற்கு நல்ல சப்போர்ட்டை வழங்குகிறது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

இரண்டாவது வரிசை இருக்கைகளை பொறுத்தவரை முதுகுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. ஆனால் கீழ் தொடைக்கு போதிய அளவிற்கு சப்போர்ட் இல்லை. எனினும் போதிய அளவிற்கு ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் இருக்கிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரில் 5 உயரமான பயணிகள் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். ஆனால் பின் வரிசையில் ஏசி வெண்ட்கள் மற்றும் சார்ஜிங் சாக்கெட்கள் இல்லாதது ஒரு குறை.

அத்துடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் வெறும் 328 லிட்டர்கள் பூட் ஸ்பேஸை மட்டுமே பெற்றுள்ளது. இது போதுமான அளவு கிடையாது. எனினும் 60:40 ஸ்பிளிட் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தேவைக்கு ஏற்ப இருக்கைகளை மடித்து வைத்து கொண்டு, இட வசதியை அதிகரித்து கொள்ள முடியும்.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

இன்ஜின் & ஹேண்ட்லிங்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவில் உள்ள அதே பெட்ரோல் இன்ஜின்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரிலும் வழங்கப்படுகிறது. இந்த காரில், 1.5 லிட்டர் கே-சீரிஸ் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சுஸுகியின் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பமும் (SHVS) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. நாங்கள் ஓட்டியது மேனுவல் வேரியண்ட் ஆகும்.

இந்த காரின் இன்ஜின் ரீஃபைன்மெண்ட்டை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். கார் ஐட்லிங்கில் இருக்கும்போது சிறிய சத்தம் கூட கேட்கவில்லை. என்விஹெச் லெவல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. அதேபோல் வெளிப்புற சத்தமும் கேபினுக்குள் கேட்கவில்லை.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

டொயோட்டா அர்பன் க்ரூஸரில் வழங்கப்பட்டிருப்பது நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் ஆகும். இந்த காரை முன்னோக்கி செலுத்த ஆக்ஸலரேட்டரை லேசாக கொடுத்தாலே போதுமானது. அத்துடன் ஆரம்ப நிலைகளில் டார்க் நன்றாக கிடைக்கிறது. டாப் கியர்களில் குறைவான வேகத்தில் சென்றாலும், கார் ஆஃப் ஆவதில்லை. நாங்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் 5வது கியரில் காரை ஓட்டினோம்.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவில் உள்ள அதே சஸ்பென்ஸன்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸரிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சஸ்பென்ஸன் அமைப்பு சௌகரியமான பயணத்தை வழங்குகிறது. குண்டும், குழியுமான நகர சாலைகளை கார் எளிதாக கடக்கிறது. எனினும் பாடி ரோல் இருக்கிறது.

ஆனால் மைலேஜ் என்ற விஷயத்தில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எங்களை ஆச்சரியப்படுத்தியது. நகர பகுதிகளில் எங்களுக்கு ஒரு லிட்டருக்கு 12.5 முதல் 14 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜ் கிடைத்தது. அதே சமயம் நெடுஞ்சாலைகளில் ஒரு லிட்டருக்கு 15 முதல் 17.8 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜை டொயோட்டா அர்பன் க்ரூஸர் வழங்கியது. 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜினுக்கு இது மோசமான மைலேஜ் கிடையாது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

டொயோட்டா அர்பன் க்ரூஸரின் டிசைன் அருமையாக உள்ளது. இது இளைய தலைமுறையினரை அதிகம் கவரக்கூடும். ஆனால் சன்ரூஃப் வழங்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதேபோல் இன்னும் தரமான பிளாஸ்டிக் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். எனினும் ஃபேஸ்லிஃப்ட் சமயத்தில், டொயோட்டா நிறுவனம் இன்டீரியரில் மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுடன், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவுடனும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் போட்டியிடும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Urban Cruiser Road Test Review: Design, Features, Engine Performance & Handling. Read in Tamil
Story first published: Thursday, February 25, 2021, 23:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X