டொயோட்டா யாரீஸ் சிவிடி மாடல் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் முதல் சி செக்மெண்ட் செடன் காரான டொயோட்டா யாரீஸ் காரை அந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. பெட்ரோல் இன்ஜின் உடன் மட்டும் விற்பனை செய

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் முதல் சி செக்மெண்ட் செடன் காரான டொயோட்டா யாரீஸ் காரை அந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. பெட்ரோல் இன்ஜின் உடன் மட்டும் விற்பனை செய்யப்படும் இந்த காரில் சிவிடி கியர் ஆப்ஷன்களும் உள்ளது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

டொயோட்டா யாரீஸ் சிவிடி காரை டிரைவ்ஸ்பார்க் குழு ரிவியூ செய்தது. அந்த ரிவியூ குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

டொயோட்டா நிறுவனம் முதன் முதலாக யாரீஸ் காரை ஜப்பானில் அறிமுகப்படுத்தியது. டிரைவ்ஸ்பார்க் குழு ரிவியூ செய்த கார் இந்தியாவிற்காக தனியாக தயாரிக்கப்பட்டது. ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட காரை காட்டிலும், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அதிக அம்சங்கள் இந்த காரில் உள்ளது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

இந்த கார் அறிமுகமாகி சுமார் 4 மாதங்கள் ஆன நிலையில், கடும் போட்டிக்கு இடையிலும் இந்த கார் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் வாங்கியவர்கள் பலர் பல்வேறு விதமான கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். டிரைவ்ஸ்பார்க் குழுவின் கருத்துக்களை கீழே படியுங்கள்.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

டிசைன் மற்றும் ஸ்டைலிங்

இந்தியாவில் வெளியாகியுள்ள டொயோட்டா யாரீஸ் காரின் டிசைனை பொறுத்தவரை அதே சர்வதேச மாடலில் உள்ள டிசைன் மொழியையே கொண்டுள்ளது. யாரீஸின் டிசைனை பொறுத்தவரை இந்தியர்களுக்கு சில மாடல்களில் உள்ள சர்வதேச மாடல் பிடிக்கும். சில மாடல்களுக்கு சர்வதேச டிசைன் ஒத்துவராது. அதில் யாரீஸ் காரும் உள்ளடங்கும்.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

இந்த காரின் முகப்பு பகுதியில் பெரிய பம்பர் மற்றும் பெரிய கிரில் பொருத்தப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் உள்ள எந்த காரிலும் இவ்வளவு பெரிய கிரில் இல்லை. இது தவிர இரு புறங்களிங்களிலும் ஃபாக் லைட் பொருத்தப்பட்டுள்ளது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

குறுகலாகவும், நீண்ட வடிவிலும் வடிவமைக்கப்பட்ட ஹைட்லைட்டில் புரோஜெக்டர் ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அதில் எல்இடி டிஆர்எல்களும் பொருத்தப்பட்டுள்ளது. குறைவான இடங்களிலேயே க்ரோம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் முகப்பு பகுதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

காரின் பக்கவாட்டு டிசைன்களை பொறுத்தவரை இந்திய மக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டிசைன் முழுவதும் சர்வதேச மாடலான யாரீஸ் அட்டிவ் மூலம் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில், 15 இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் கவனிக்கதக்க விதமாக வீல் ஆர்ச்கள் உள்ளன. முக்கியமாக 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

காரின் பின்புற தோற்றம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக டெயில் லேம்ப்கள் எல்இடி ஸ்டிரிப்களை கார்னர் பகுதியில் ஸ்மூத்தாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபாக் லேம்ப்கள் பம்பரின் கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

காரின் ரூஃப் லயன்கள் பின்பக்க வீல் சீல்டிற்கு இறக்குவது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது சாதாரணமாக புலப்படுவதில்லை. சற்று கூர்ந்து கவனித்தால் இதை நீங்கள் கவனிக்கலாம். அதே இடத்தில் ஷார்க் பின் ஆண்டனாவும் கொடுக்கப்பட்டுள்ளது. இது காரின் பின்பகுதியை அழகு ஊட்டுகிறது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

காரின் உட்பகுதியில் உள்ள டேஷ்போர்டை பொறுத்தவரை அதே அருவி போன்ற டிசைனை பெற்றுள்ளது. அதிக லேதர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிரஷ்டு மெட்டல், கிளாஸ் பிளாக், காண்ட்ராஸ்டிங் க்ரோம், மேலும் உட்புறத்தில் ஒரு எலெகெண்ட் ரக டிசைனை கொடுக்கிறது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

சீட்களில் சிறப்பாக எந்த வித அம்சங்களும் இல்லை. இருந்தாலும் சொகுசான சீட்டிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரகத்தில் உள்ள மற்ற செடன் கார்களில் இல்லாத வகையில் இதன் சீட் டிசைன் இருக்கிறது. பின் பக்க சீட்கள் அகலமாகவும் 3 பேர் தாராளமாக அமரும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

அம்சங்கள், மைலேஜ் மற்றும் பெர்பார்மென்ஸ்

முன்னரே சொன்னது போல் டொயோட்டா யாரீஸ் கார் பெட்ரோல் ஃபார்மெட்டில் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இதில் 1.5 லிட்டர் டுயல் விவிடிஐ 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 105 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும் இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்டெப் சிவிடி ஆகிய கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. டொயோட்டா எட்டியோஸ் செடன் காரிலும் இதே போன்ற இன்ஜின்தான் உள்ளது. ஆனால் இதில் டுயல் விவிடிஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

விவிடிஐ என்றால் வேரியபிள் வேல்யூ டைமிங் வித் இன்டலிஜென்ஸ் என்பதாகும். டுயல் விவிடிஐ இன்ஜினில் வேரியபிள் டைமிங்கில் இன்டேக் மற்றும் எக்ஸாட் வால்வுகள் திறந்து மூடப்படும். சாதாரண விவிடிஐ இன்ஜினில் இன்டேக் வால்வுதான் திறந்து மூடப்படும். இதனால் பியூயல் எஃபிசியன்ஸி மற்றும் எமிஷன் கண்ட்ரோல் கிடைக்கும்.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

டிரைவ்ஸ்பார்க் குழு ரிவியூ செய்த கார் சிவிடி வேரியன்ட் காராகும். இந்த காரின் இன்ஜின் சிவிடி கியர்பாக்ஸிற்கு ஏற்றார் போல் சிறப்பாக வேலை செய்தது. இருந்தாலும் சிவிடி கியர் பாக்ஸில் உள்ள ரப்பரினஸ் வேகத்தை சற்று குறைத்தது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

இந்த காரில் வேகமாக செல்ல அதிகமாக ஆக்ஸிலரேட்டரை அழுத்த வேண்டிய சூழ்நிலையில்லை. சிறந்த டிரைவர் இந்த காரை குறைவான ஆர்பிஎம்மிலேயே சிறப்பான ஸ்பீடை கொண்டு வந்து விடுவார். இந்த காரில் டாப் 2 வேரியன்ட்களில் அனைத்து வீல்களும் டிஸ்க் பிரேக் உடன் வருவதால் இதை தாராளமாக செய்யலாம்.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

எங்கள் குழு ரிவியூ செய்த காரில் பெடல் ஸிப்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் பயணிக்கும் போது இந்த பெடல் ஸிப்டர்கள் சிறப்பான பெர்பார்மென்ஸை வழங்குகிறது. மேலும் வேகமாக ஓவர் டேக் செய்யும் போது அல்லது வேகமாக பயணிக்கும் போது இது உதவுகிறது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

சொகுசு

இந்த செக்மெண்ட்டில் மார்கெட்டிலேயே சிறந்த சொகுசான செடன் கார் என்றால் அது டொயோட்டா யாரீஸ் கார்தான். இந்த காரின் சஸ்பென்ஸன் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் இதன் ஸ்டியரிங் இயக்குவதற்கு சுலபமாக இருக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் கிரிப் சிறப்பாக உள்ளது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

இந்த காரில் உள்ள சத்தம், அதிர்வு ஆகியவற்றை பொறுத்தவரை நிதானமான வேகத்தில் காரின் உட்புறம் அமைதியாக இருக்கிறது. சற்று வேகமாக செல்லும் போது காற்றின் சத்தம் உள்ளே கேட்கிறது. அதுவும் மற்ற கார்களை காட்டிலும் குறைவாகவே உள்ளது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

இந்த டொயோட்டா யாரீஸ் சிவிடி காரின் மைலேஜை பொறுத்தவரை லிட்டருக்கு 17.8 கி.மீ. மைலேஜ் கிடைக்கிறது. மேனுவல் வேரியன்டில் 17.1 கி.மீ. மைலேஜ்தான். ஆனால் நீங்கள் ரோட்டில் ஓட்டும்போது உங்களது டிரைவிங் ஸ்டைல், மோசமான ரோடுகள் உள்ளிட்ட பல காரணங்களால் குறைந்த மைலேஜ்தான் கிடைக்கும்.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

டொயோட்டா யாரீஸ் கார் அதிக வசதிகள் நிறைந்த காராக இருக்கிறது. இந்தியாவில் சில கார்களிலேயே 7 ஏர் பேக் வசதி இருக்கிறது. அந்த வசதி இந்த காரிலும் ஸ்டாண்டர்ட்டாக வருகிறது. யாரீஸ் கார் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுகிறது அதனால்தான் இந்த கார் என்சிஏபி டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

இந்த காரில் 7 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறப்பான யூஸர் இன்டர்பேஸை பெற்றுள்ளது. இது பல்வேறு பொஷிஷன்களுக்கு திரும்பும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது முற்றிலும் மடக்கும் வகையிலும் உள்ளது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

இதன் பின்னால் சிடி பிளேயர், மெமரி கார்டு ஸ்லாட் ஆகியன உள்ளன. மேலும் இதில் கெஸ்டர் கண்ட்ரோல் சிஸ்டமும் இருக்கிறது. ஆனால் இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய வசதிகள் உள்ளன.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

இந்த காரில் உள்ள ரூப் மவுண்ட் ஏசி சிஸ்டம் சிறப்பானதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது காரை விரைவாக குளிரூட்டுகிறது. பின்புற சீட்டில் உள்ளவர்களுக்கும் இது சிறப்பான கூலிங்கை வழங்குகிறது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

இதனுடன் டொயோட்டா யாரீஸ் காரின் டிரைவிங் அசிஸ்ட்டாக எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், முன்பக்கம் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார் மற்றும் ரிவர்ஸ் கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷ் மானிட்டர் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

இந்த காரில் அதிகமாக இட வசதி இருக்கிறது. காரின் பின்பக்க சீட் 60:40 என்ற கணக்கில் பிரிக்கப்பட்டுள்ளது. மற்றும் டிரைவர் சீட் எட்டு விதமாக மாற்றும்படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் லக்கேஜ்களை வைக்க 476 லிட்டர் அளவு கொண்ட இடவசதி உள்ளது. நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற காராக இது இருக்கிறது.

 டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

பிற வசதிகள்:

  • லேதர் சீட்
  • கூல்டு க்ளவ் பாக்ஸ்
  • ரெயின் சென்சிங் வைப்பர்கள்,
  • ரியர் சன் சேடு
  • புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்
  • எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் மற்றும் ஃபோல்டபிள் ஓஆர்விஎம்எஸ்
  • ஏபிஎஸ்+இபிடி+பிஏ
  •  டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

    வேரியன்ட், விலை மற்றும் போட்டி

    கடந்த மே மாதம் வெளியான இந்த கார் ரூ.8.75 லட்சம் என்ற அடிப்படையில் விலையில் விற்பனையாகிறது. எங்கள் குழு விஎக்ஸ் ஏடி என்ற வேரியன்ட் காரை டெஸ்ட் செய்தது. அதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ.14.07 லட்சம். நீங்கள் இந்த காரை அருகில் உள்ள டொயோட்டா ஷோரூமில் ரூ.50 ஆயிரம் கொடுத்து புக் செய்து கொள்ளலாம்.

     டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

    கீழே உள்ள டேபிளில் டொயோட்டா யாரீஸ் காரின் வேரியன்ட் மற்றும் விலையை காணலாம்

    Variant MT CVT (AT)
    J ₹ 8,75,000 ₹ 9,95,000
    G ₹ 10,56,000 ₹ 11,76,000
    V ₹ 11,70,000 ₹ 12,90,000
    VX ₹ 12,85,000 ₹ 14,07,000
     டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

    டொயோட்டோ யாரீஸ் கார் 6 விதமான கலர்களில் விற்பனையாகிறது. சூப்பர் ஓயிட் (எங்கள் குழு ரிவியூ செய்த காரின் நிறம்) பியர்ல் ஒயிட், சில்வர் மெட்டாலிக், ஒயில்ட் பயர் ரெட், பாந்தோம் பிரவுன், க்ரே மெட்டாலிக் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

     டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

    இந்த கார் செடன் ரக கார்களில் சி செக்மெண்ட்டாக இருக்கிறது. இந்த செக்மெண்ட்டில் இந்த காருக்கு போட்டியாக பல்வேறு கார்கள் உள்ளன. அந்த கார்களின் இன்ஜின் திறன், பவர், மற்றும் மைலேஜை கீழே உள்ள டேபிளில் காணலாம்.

    Petrol (Automatic) Displacement (cc) Power/Torque Mileage (km/l)
    Toyota Yaris 1496 106/140 17.8
    Honda City 1497 117/145 18
    Hyundai Verna 1591 121/151 17.1
    Maruti Ciaz 1462 103/138 20.28
     டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

    கூடுதல் தகவல்கள்

    சர்வீஸ் இன்டர்வெல்

    1000 கி.மீ அல்லது 1 மாதம்

    10000 கி.மீ அல்லது 12 மாதம்

    20000 கி.மீ. அல்லது 24 மாதம்

     டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

    வாரண்டி:

    3 வருடம் அல்லது 1,00,000 கி.மீ. (7 ஆண்டுகள் வரை நீட்டித்துக்கொள்ளலாம்.)

    இந்தியர்களின் விருப்பத்திற்கு இணங்கவே இந்த டொயோட்டா கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 30-40 வயது உடையவர்களுக்கு எலகெண்ட் சாய்ஸ் ஆக யாரீஸ் இருக்க வேண்டும் என்பதே டொயோட்டாவின் விருப்பம். அதை சரியாக செய்துள்ளது. இந்த காரின் விலைக்கு ஏற்ற சிறந்த காராக இதை பார்க்கலாம்.

     டொயோட்டா யாரீஸ் சிவிடி வேரியன்ட் - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்…

    டிரைவ்ஸ்பார்க் கருத்து

    டொயோட்டா யாரீஸ் கார் பெர்பார்மென்ஸ் அல்லது கவன ஈர்ப்பு காராக இல்லை. அந்த விலையில் கார் வாங்க கூடியவர்களின் வாழ்க்கை ஸ்டைலுக்கு ஏற்ற ஒரு காராகவும் இது இருக்கும். நீண்ட தூரம் சிறிய குடும்பமாக பயணம் செய்ய ஏற்ற கார். உங்களுக்கு இந்த விலையில் செடன் ரக கார் விருப்பமாக இருந்தால் நிச்சயம் நீங்கள் யாரீஸ் காரை தேர்வு செய்யலாம்.

    புகைப்படங்கள்: அபிஜித் விலாங்கில்

Most Read Articles
மேலும்... #டொயோட்டா
English summary
Toyota Yaris CVT Review — The Sensible Choice For The Less-Concerned. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X