டட்சன் கோ ப்ளஸ்

டட்சன் கோ ப்ளஸ்
Style: எம்யூவி
4.26 - 7.00 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டட்சன் கோ ப்ளஸ் கார் 7 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டட்சன் கோ ப்ளஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டட்சன் கோ ப்ளஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டட்சன் கோ ப்ளஸ் காரை எம்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டட்சன் கோ ப்ளஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டட்சன் கோ ப்ளஸ் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எம்யூவி | Gearbox
4,26,011
எம்யூவி | Gearbox
5,17,378
எம்யூவி | Gearbox
5,74,228
எம்யூவி | Gearbox
6,00,221
எம்யூவி | Gearbox
6,36,800
எம்யூவி | Gearbox
6,79,808
எம்யூவி | Gearbox
7,00,112

டட்சன் கோ ப்ளஸ் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 18.57

டட்சன் கோ ப்ளஸ் விமர்சனம்

டட்சன் கோ ப்ளஸ் Exterior And Interior Design

டட்சன் கோ ப்ளஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

டட்சன் கோ ப்ளஸ் கார் பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்தியாவின் குறைவான விலை எம்பிவி கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த 2018ல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடல் வடிவமைப்பிலும், வசதிகளிலும் அடுத்த நிலைக்கு சென்றுள்ளது.

கம்பீரமான க்ரில் அமைப்பு, அ்ழகிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள் இந்த காரின் முகப்பை வசீகரமாக காட்டுகின்றன. பக்கவாட்டில் டைமண்ட் கட் அலாய் வீல்கள் கண்ணை கவர்கின்றன. கோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான இந்த கார் சற்றே நீளத்துடன் நான்கு பில்லர்களை கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

பின்புறத்தில் நேர்த்தியான வடிவமைப்புடன் டெயில் லைட் க்ளஸ்ட்டர் கவர்கிறது. புதிய பம்பர் அமைப்பு காரின் வசீகரத்தை கூட்டுகிறது. இது மினி எம்பிவி கார் என்பதை கச்சிமான தோற்றத்துடன் கவர்கிறது.

உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கருப்பு மற்றும் க்ரீம் வண்ணத்திலான இந்த இரட்டை வண்ணக் கலவை காரின் உட்புறத்தை பிரிமீயமாக காட்டுகிறது. டேஷ்போர்டு அழகாக இருக்கிறது. சென்ட்ரல் கன்சோல், ஸ்டீயரிங் வீல், கியர் லிவர் அமைவிடங்களில் சில்வர் பட்டையுடன் கூடிய அலங்காரம் சிறப்பு. வெளிப்புறத்தை போலவே, உட்புறமும் கவர்ச்சியாக இருக்கிறது.

டட்சன் கோ ப்ளஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

டட்சன் கோ ப்ளஸ் Engine And Performance

புதிய டட்சன் கோ ப்ளஸ் காரில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

டட்சன் கோ ப்ளஸ் கார் 7 சீட்டர் மாடலாக இருந்தாலும், இதன் எஞ்சின் செயல்திறன் போதுமான அளவு இருக்கிறது. 5 பேர் பயணிக்கும்போது ஓரளவு நல்ல செயல்திறனை வெளிக்காட்டுகிறது. மூன்றாவது வரிசை இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே அமர இயலும். அப்போது எஞ்சின் செயல்திறன் போதுமான அளவு இல்லை.

டட்சன் கோ ப்ளஸ் மைலேஜ்

டட்சன் கோ ப்ளஸ் Fuel Efficiency

புதிய டட்சன் கோ ப்ள்ஸ கார் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டின்போது சராசரியாக 15 கிமீ மைலேஜை எதிர்பார்க்கலாம். ஓட்டுதல் முறை, வெப்பநிலை, பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து மைலேஜ் மாறுபடும்.

டட்சன் கோ ப்ளஸ் முக்கிய அம்சங்கள்

டட்சன் கோ ப்ளஸ் Important Features

டட்சன் கோ ப்ளஸ் கார் பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும் சிறப்பம்சங்களிலும் நிறைவை தருகிறது. இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, கூகுள் மேப் நேவிகேஷன் செயலிகளை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும்.

எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சைடு மிரர்கள், பவர் விண்டோ, ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பவர் சாக்கெட் ஆகியவை இதன் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய டட்சன் கோ ப்ளஸ் காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், சென்ட்ரல் லாக்கிங், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எஞ்சின் இம்மொபைலைசர், கீலெஸ் என்ட்ரி உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

டட்சன் கோ ப்ளஸ் தீர்ப்பு

டட்சன் கோ ப்ளஸ் Verdict

மிக குறைவான விலையில் 7 சீட்டர் எம்பிவி கார் மாடலை விரும்புவோருக்கு இது சிறந்த சாய்ஸ். ஆனால், மூன்றாவது வரிசையில் சிறியவர்கள் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும். ஆனால், தாராள இடவசதி கொண்ட பெரிய ஹேட்ச்பேக் கார் போல பயன்படுத்த முடியும் என்பது இதன் முக்கிய சிறப்பு.

வண்ணங்கள்


Vivid Blue
Bronze Grey
Sunstone Brown
Ruby Red
Blade Silver
Opal White

டட்சன் கோ ப்ளஸ் படங்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X