டட்சன் ரெடிகோ

டட்சன் ரெடிகோ
Style: ஹேட்ச்பேக்
3.98 - 4.96 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டட்சன் ரெடிகோ கார் 5 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டட்சன் ரெடிகோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டட்சன் ரெடிகோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டட்சன் ரெடிகோ காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டட்சன் ரெடிகோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டட்சன் ரெடிகோ பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
3,97,648
ஹேட்ச்பேக் | Gearbox
4,25,613
ஹேட்ச்பேக் | Gearbox
4,53,487
ஹேட்ச்பேக் | Gearbox
4,74,449
ஹேட்ச்பேக் | Gearbox
4,95,649

டட்சன் ரெடிகோ மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 22

டட்சன் ரெடிகோ விமர்சனம்

டட்சன் ரெடிகோ வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

எஸ்யூவி கார்களுக்கு உரிய அம்சங்களுடன் ஒரு சிறந்த பட்ஜெட் கார் மாடலாக டட்சன் ரெடிகோ பெயர் பெற்றுவிட்டது. டட்சன் ரெடிகோ கார் பிஎஸ்-6 மாடலானது பல டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கொண்டு வரப்பட்டது. இதனால், இந்த கார் அதிக மதிப்பு வாய்ந்ததாக இருக்கிறது. எண்கோண வடிவிலான மிகப்பெரிய க்ரில் அமைப்பு க்ரோம் பட்டை அரணுடன் முகப்பில் பிரதானமாக வீற்றுள்ளது. L வடிவில் தோற்றமளிக்கும் எல்இடி பகல்வேளை விளக்கு கம்பீரத்தை தருகிறது. எல்இட பனி விளக்குகள், பாடி கிளாடிங் சட்டங்கள், டியூவல் டோன் வீல் கவர்கள், எல்இடி டெயில் லைட்டுகள், கருப்பு வண்ண பின்புற பிளாஸ்டிக் பம்பர் ஆகியவை எஸ்யூவி கார் போன்ற தோற்றத்தை தருகிறது.

டட்சன் ரெடிகோ எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய டட்சன் ரெடிகோ காரில் பிஎஸ்-6 தரத்திலான 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 800சிசி எஞ்சின் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரையும், 73 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. அடுத்து 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

டட்சன் ரெடிகோ மைலேஜ்

டட்சன் ரெடிகோ காரின் 800சிசி மேனுவல் மாடல் லிட்டருக்கு 20.71 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 21.70 கிமீ மைலேஜையும், ஏஎம்டி மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மிகச் சிறப்பான மைலேஜ் வழங்கும் கார்களின் பட்டியலில் டட்சன் ரெடிகோவும் இடம்பெறுகிறது.

டட்சன் ரெடிகோ முக்கிய அம்சங்கள்

டட்சன் ரெடிகோ காரில் கருப்பு மற்றும் சாம்பல் வண்ணத்திலான இரட்டை வண்ண டேஷ்போர்டு இடம்பெற்றுள்ளது. இந்த காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

இந்த காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

டட்சன் ரெடிகோ தீர்ப்பு

டிசைன், இடவசதி, மைலேஜ், விலை என அனைத்திலும் மிகச் சிறந்த ஆரம்ப ரக கார் மாடலாக டட்சன் ரெடிகோ கார் உள்ளது. மாருதி ஆல்ட்டோ, எஸ் பிரெஸ்ஸோ, ரெனோ க்விட் கார்களுக்கு நேரடி போட்டியை கொடுத்து வருகிறது. டீலர் எண்ணிக்கை, விற்பனைக்கு பிந்தைய சேவை போன்ற சில பாதக விஷயங்கள் இந்த காருக்கு பின்னடைவான விஷயமாக இருக்கிறது. ஆனால், அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் இடவசதி, தொழில்நுட் வசதிகளில் அதிக மதிப்பை வழங்குகிறது.

வண்ணங்கள்


Vivid Blue
Sandstone Brown
Bronze Grey
Ruby Red
Crystal Silver
Opal White

டட்சன் ரெடிகோ படங்கள்

டட்சன் ரெடிகோ Q & A

டட்சன் ரெடிகோ காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

டட்சன் ரெடிகோ கார் D, A, T, T(O) ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
டட்சன் ரெடிகோ காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X