ஹோண்டா சிஆர்வி கார் 2 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹோண்டா சிஆர்வி காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹோண்டா சிஆர்வி காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹோண்டா சிஆர்வி காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹோண்டா சிஆர்வி கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|
எஸ்யூவி | Gearbox
|
₹ 28,34,189 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 29,57,236 |
கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
---|---|---|
பெட்ரோல் | 14.4 |
பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் ஒரு தனித்துவமான ஸ்டைலில் வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது ஹோண்டா சிஆர்வி. இது க்ராஸ்ஓவர் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த எஸ்யூவிக்கு உலக அளவில் தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. ஹோண்டாவின் வலிமையான க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள் என அசத்தலான அம்சங்களுடன் முகப்பு வசீகரிக்கிறது.
இந்த காரில் புதிய அலாய் வீல்கள், காரை சுற்றிலும் கொடுக்கப்பட்டு இருக்கும் பிளாஸ்டிக் க்ளாடிங் சட்டங்கள், க்ரோம் லைன் ஆகியவை பிரிமீயம் எஸ்யூவியாக காட்டுகிறது. பின்புறத்தில் புதிய எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர், ரூஃப் ஸ்பாய்லர், டெயில் கேட்டில் இருக்கும் க்ரோம் சட்டம் ஆகியவை கவரும் வகையில் உள்ளன.
வழக்கம்போல் ஹோண்டாவின் கைவண்ணத்தில் உட்புறம் மிக தரமாகவும், பிரிமீயமாகவும் காட்சி தருகிறது. கருப்பு மற்றும் பீஜ் வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. சில்வர் மற்றும் மர அலங்கார வேலைப்பாடுகளின் உட்புறத்தின் மதிப்பை உயர்த்துகின்றன. ஒரு சொகுசு கார் போல இன்டீரியர் தரமாக இருக்கிறது.
புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 151 பிஎச்பி பவரையும், 189 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
பெட்ரோல் எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டீசல் எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனலாக கொடுக்கப்படுகிறது.
இரண்டு எஞ்சின்களுமே செயல்திறனில் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, ஆரம்ப நிலையில் போதுமான டார்க்கை இதன் டீசல் எஞ்சின் வழங்குவதால் நகர்ப்புறத்திலும் ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை தருகிறது. இதன் எஞ்சின்கள் நெடுஞ்சாலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகின்றன. இதன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மிக மென்மையான ஓட்டுதல் அனுபவத்தை தருகிறது.
ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 18.3 கிமீ மைலேஜையும் வழங்கும். ஓட்டுதல் முறை, போக்குவரத்து நெரிசல் மற்றும் தட்பவெப்ப நிலைகளை பொறுத்து மைலேஜில் வித்தியாசம் ஏற்படலாம்.
புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில் 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட், பேடில் ஷிஃப்ட், க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன.
இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, லேன் வாட்ச் கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் வடிவமைப்பு முற்றிலும் புதிதாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது. இது 7 சீட்டர் மாடல் என்பதுடன் டீசல் எஞ்சின் தேர்வில் கிடைப்பதும் முக்கிய விஷயமாக பார்க்கலாம். ஆனால், விலை அதிகம் என்ற கருத்து இதற்கு எதிரான விஷயமாக இருக்கிறது. எனினும், ஹோண்டா பிராண்டின் தரத்தை விரும்புவோருக்கு இது நிச்சயம் மன நிறைவை தரும் மாடலாக இருக்கும்.