ஹூண்டாய் எலான்ட்ரா கார் 5 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் எலான்ட்ரா காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் எலான்ட்ரா காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் எலான்ட்ரா கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|
செடான் | Gearbox
|
₹ 17,61,298 |
செடான் | Gearbox
|
₹ 18,71,322 |
செடான் | Gearbox
|
₹ 19,56,375 |
வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|
செடான் | Gearbox
|
₹ 18,70,293 |
செடான் | Gearbox
|
₹ 20,65,299 |
கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
---|---|---|
பெட்ரோல் | 15 |
இந்தியாவில் விற்பனையாகும் செடான் ரக கார்களில் ஹூண்டாய் எலான்ட்ரா கார் மிக அழகான மாடலாக விளங்குகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் புளுயிடிக் டிசைன் கொள்கையில் உருவாக்கப்பட்ட முத்தாய்ப்பான மாடலாக இதனை கூறலாம். முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, அதன் இருமருங்கிலும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பூமராங் வடிவிலான பம்பர் முனைகள் என ஒவ்வொரு அங்கமும் ரசிக்கும்படியாக உள்ளன.
இந்த காரின் பக்கவாட்டில் கேரக்டர் லைன் காரின் பக்கவாட்டுக்கு அழகு சேர்க்கிறது. கவர்ச்சியான அலாய் வீல்கள், மெல்லிய சைடு மிரர்கள் டிசைன் என அசத்துகிறது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டரின் டிசைன் சொகுசு கார்களை விஞ்சிய கவர்ச்சியை வழங்குகிறது.
உட்புறத்திலும் பாகங்கள் மிக தரமானதாகவும், நேர்த்தியான வடிவமைப்புடன் காட்சி தருகின்றன. ஃபிட் அண்ட் ஃபினிஷ் மிக அருமையாக உள்ளது. டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீல், சென்ட்ரல் கன்சோல் என அனைத்து உட்புற பாகங்களுமே கவரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் எலான்ட்ரா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 152 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் இடம்பெற்றிருக்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 128 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இரண்டு எஞ்சின்களிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.
இரண்டு எஞ்சின்களுமே மிக அருமையான செயல்திறனை வெளிப்படுத்துகின்றன. நடுத்தர நிலையில் இந்த எஞ்சின்கள் அருமையான பவர் டெலிவிரியை வழங்குகின்றன. இதனால், நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது அதீத உற்சாகத்தை வழங்குகிறது. இந்த காரின் டீசல் எஞ்சின் 1,900 ஆர்பிஎம்.,மிலிருந்து பவரை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. க்ளட்ச் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம் இலகுவாக இருக்கிறது. இதனால், நகர்ப்புறத்திலும் ஓட்டுவதற்கு எளிதாகவே உள்ளது.
ஹூண்டாய் எலான்ட்ரா கார் நெடுஞ்சாலைகளில் வேகமெடுக்கும்போது ஸ்டீயரிங் சிஸ்டம் இறுக்கமாக மாறுவதால் அதிக நம்பிக்கையுடன் செலுத்த முடிகிறது. மோசமான சாலைகளையும் எளிதாக எதிர்கொள்வதற்கு இதன் சஸ்பென்ஷன் துணை நிற்கிறது. அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் இருப்பதால், துல்லியமான நிறுத்துதல் திறனை வழங்குகிறது.
ஹூண்டாய் எலான்ட்ரா காரில் 50 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.6 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் எலான்ட்ரா காரில் ஸ்டீயரிங் வீல், இருக்கைகள், கியர் லிவர் ஆகியவற்றில் பிரிமீயம் லெதர் உறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் ஓட்டுனர் இருக்கையை 10 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யலாம். டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏர்கண்டிஷன் வசதி உள்ளது. டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளன. 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. க்ரூஸ் கன்டரோல், வயர்லெஸ் சார்ஜர், கூல்டு க்ளவ்பாக்ஸ் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
இந்த காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிரைவிங் மோடுகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனெஜ்மென்ட் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
ஹூண்டாய் எலான்ட்ரா கார் தினசரி மற்றும் நீண்ட தூர பயன்பாடு என இரண்டிற்கும் ஏற்ற எக்ஸிகியூட்டிவ் ரக செடான் கார். சொகுசு, செயல்திறன், நிலைத்தன்மை என அனைத்திலும் இந்த கார் ஸ்கோர் செய்கிறது. போதுமான பூட்ரூம் வசதி, போதிய இடவசதியுடன் மிக அழகான செடான் கார் மாடலாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.