ஹூண்டாய் ஐ20 என் லைன்

ஹூண்டாய் ஐ20 என் லைன்
Style: ஹேட்ச்பேக்
9.99 - 12.52 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஹூண்டாய் ஐ20 என் லைன் கார் 8 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் ஐ20 என் லைன் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் ஐ20 என் லைன் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் ஐ20 என் லைன் காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் ஐ20 என் லைன் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஹூண்டாய் ஐ20 என் லைன் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
9,99,500
ஹேட்ச்பேக் | Gearbox
10,19,400
ஹேட்ச்பேக் | Gearbox
11,14,800
ஹேட்ச்பேக் | Gearbox
11,26,800
ஹேட்ச்பேக் | Gearbox
11,29,800
ஹேட்ச்பேக் | Gearbox
11,41,800
ஹேட்ச்பேக் | Gearbox
12,36,800
ஹேட்ச்பேக் | Gearbox
12,51,800

ஹூண்டாய் ஐ20 என் லைன் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 0

ஹூண்டாய் ஐ20 என் லைன் விமர்சனம்

ஹூண்டாய் ஐ20 என் லைன் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

ஹூண்டாய் ஐ20 அடிப்படையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஐ20 என் லைன் கார் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான, தனித்துவ தேர்வாக இருக்கிறது. சாதாரண ஐ20 காரைவிட அதிக அலங்கார அம்சங்களுடன் இந்த கார் வசீகரிக்கிறது. சாதாரண ஐ20 காரிலிருந்து வேறுபடுத்தும் விதமாக புதிய பம்பர், என் லைன் லோகோவுடன் க்ரில் அமைப்பு, கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், 16 அங்குல அலாய் வீல்கள், சிவப்பு வண்ணத்திலான வெளிப்புற அலங்கார அம்சங்கள், டெயில்கேட் ஸ்பாய்லர்,சைடு விங்க்ஸ், இரட்டைக் குழல் சைலென்சர் அமைப்பு ஆகியவற்றுடன் ஸ்போர்ட்டியான மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் ஐ20 காரின் தோற்றத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

உட்புறத்திலும் சில மாற்றங்களுடன் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், சிவப்பு வண்ண தையல் வேலைப்பாடுகள் ஆங்காங்கே கொடுக்கப்பட்டு காரின் உட்புறம் கவர்ச்சியாகவும் பிரிமீயமாகவும் இருக்கிறது. சன்ரூஃப், பேடில் ஷிஃப்ட் வசதி, புதிய ஸ்டீயரிங் வீல், படூல் விளக்குகள், அலுமினிய பெடல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ஹூண்டாய் ஐ20 என் லைன் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஐஎம்டி கியர்பாக்ஸ் அ்ல்லது டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 9.9 வினாடிகளில் எட்டிவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் மைலேஜ்

ஹூண்டாய் ஐ20 என் லைன் காரின் ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் மற்றும் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 20.25 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் சிறப்பான மைலேஜை வழங்கும் என்றும் கருத முடியும்.

ஹூண்டாய் ஐ20 என் லைன் முக்கிய அம்சங்கள்

புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் காரில் 10.25 அஙே்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், வாய்மொழி கட்டுப்படுத்தும் வசதியுடன் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், கூல்டு க்ளவ் பாக்ஸ், எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் ஆகிய பல வசதிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ரியர் வியூ மானிட்டர் ஆகிய பல பாதுகாப்பு வசதிகளுடன் அசத்துகிறது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் தீர்ப்பு

ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் அதிக சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுடன் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட காரை விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக ஹூண்டாய் ஐ20 என் லைன் கார் சிறந்த தேர்வாக அமையும். கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்பையும், சிறந்த செயல்திறனையும் இந்த கார் வழங்கும்.

வண்ணங்கள்


Abyss Black
Starry Night
Thunder Blue
Titan Gray
Atlas White

ஹூண்டாய் ஐ20 என் லைன் படங்கள்

ஹூண்டாய் ஐ20 என் லைன் Q & A

புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் கார் என்6 மற்றும் என்8 என இரண்டு வேரியண்ட் தேர்வுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் காரில் எத்தனை வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன?

போலார் ஒயிட், தண்டர் புளூ, டைட்டன் க்ரே, ஃபியரி ரெட் மற்றும் தண்டர் புளூ, ஃபியரி ரெட் வண்ணத் தேர்வுகள் கருப்பு வண்ண கூரையுடன் இரட்டை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கின்றது.

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X