ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்
Style: எஸ்யூவி
23.84 - 24.03 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் 2 வேரியண்ட்டுகளில் 2 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எலக்ட்ரிக் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
23,84,132
எஸ்யூவி | Gearbox
24,03,081

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual எலக்ட்ரிக் 0

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் விமர்சனம்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் Exterior And Interior Design

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி நடைமுறை பயன்பாட்டில் இந்தியாவின் முதல் உண்மையான தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட சிறந்த எஸ்யூவியாக தெரிவிக்கப்படுகிறது. 2019ம் ஆண்டு முதல் விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வடிவமைப்பு, வசதிகள், செயல்திறன், ரேஞ்ச் என அனைத்திலும் சிறந்ததாக இருக்கிறது. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் கோனா எஸ்யூவியின் அடிப்படையிலான மின்சார கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள சாதாரண கோனா காரிலிருந்து வேறுபடுத்தும் வகையில் க்ரில் அமைப்பு, புதிய பம்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் Engine And Performance

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் 39.2kWh திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி மற்றும் இதன் மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 134 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் பேட்டரியை சாதாரண 2.8kW சார்ஜர் பயன்படுத்தினால் 19 மணிநேரமும், 7.2kW சார்ஜர் பயன்படுத்தினால் முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 6 மணிநேரம் பிடிக்கும். 50kW குயிக் சார்ஜர் பயன்படுத்தினால் ஒரு மணிநேரத்திற்குள் பூஜ்யத்திலிருந்து 80 சதவீதம் அளவை எட்டிவிடும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மைலேஜ்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் Fuel Efficiency

ஹூண்டாய் கோனா காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டில் ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 350 கிமீ தூரத்திற்கும் மேல் செல்லும் வாய்ப்பை வழங்கும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் முக்கிய அம்சங்கள்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் Important Features

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், டிரைவிங் மோடுகள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பேடில் ஷிஃப்ட் வசதிகள் உள்ளன.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் தொழில்நுட்பம், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், ரியர் கேமரா, செயற்கையாத எஞ்சின் சப்தத்தை உருவாக்கும் வசதிகள் உள்ளன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் தீர்ப்பு

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் Verdict


ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு சென்னையிலுள்ள ஹூண்டாய் ஆலையில் கட்டமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் சிறப்பான வசதிகளுடன், சரியான விலையில் கிடைக்கிறது. அதிக ரேஞ்ச் கொண்ட மின்சார மாடலாகவும் இருப்பது இதற்கு வலு சேர்க்கிறது. மின்சார கார் மாடலை வாங்குவோரை அனைத்து விதத்திலும் திருப்திப்படுத்தும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

வண்ணங்கள்


Abyss Black
Atlas White

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் படங்கள்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் Q & A

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

பிரிமீயம் மற்றும் பிரிமீயம் ப்ளஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
ஹூண்டாய் கோனா காரில் எத்தனை பேர் பயணிக்கலாம்?

5 பேர் பயணிக்கும் இருக்கை வசதியை பெற்றுள்ளது.

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X