ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோ
Style: ஹேட்ச்பேக்
4.87 - 6.45 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஹூண்டாய் சான்ட்ரோ கார் 9 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் சான்ட்ரோ காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் சான்ட்ரோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஹூண்டாய் சான்ட்ரோ பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
4,86,690
ஹேட்ச்பேக் | Gearbox
5,33,190
ஹேட்ச்பேக் | Gearbox
5,69,690
ஹேட்ச்பேக் | Gearbox
5,82,190
ஹேட்ச்பேக் | Gearbox
5,97,690
ஹேட்ச்பேக் | Gearbox
5,99,990
ஹேட்ச்பேக் | Gearbox
6,44,690

ஹூண்டாய் சான்ட்ரோ சிஎன்ஜி மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
6,09,900
ஹேட்ச்பேக் | Gearbox
6,38,500

ஹூண்டாய் சான்ட்ரோ மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 20
Manual சிஎன்ஜி 30

ஹூண்டாய் சான்ட்ரோ விமர்சனம்

ஹூண்டாய் சான்ட்ரோ Exterior And Interior Design

ஹூண்டாய் சான்ட்ரோ வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த மாடல் ஹூண்டாய் சான்ட்ரோ. கடந்த ஆண்டு முற்றிலும் புதிய டிசைனில் ஹூண்டாய் சான்ட்ரோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், டால்பாய் டிசைன் அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் பெரிய க்ரில் அமைப்பு, க்ரோம் அலங்கார பீடிங், தனித்துவமான ஹெட்லைட் க்ளஸ்ட்டர் டிசைன், க்ரில் அமைப்பின் இருமருங்கிலும் பனி விளக்குகள் என எல்லோரையும் வசீகரிக்கிறது.

பக்கவாட்டில் ஹூண்டாய் கார்களுக்கு உரிய தனித்துவமான வளைவு நெளிவுகளுடன் நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. அலாய் வீல்கள் இல்லை. பின்புறத்தில் பெரிய அளவிலான விண்ட்ஷீல்டு அமைப்பு, டெயில் லைட் க்ளஸ்ட்ர், புதிய பம்பர் மற்றும் பிளாஸ்டிக் பாகங்களுடன் சிறப்பான வடிவமைப்பை பெற்றிருக்கிறது.

உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உட்புற வடிவமைப்பு மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. பீஜ் மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர் அமைப்பு உள்ளது. இதன் கேபினில் சில்வர் ஆக்சஸெரீகள் அலங்காரமும் கவர்வதாக இருக்கிறது. ஏசி வென்ட்டுகள் விமான புரொப்பல்லர்கள் போன்ற அமைப்பில் உயர்ரக கார் போல கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் ரக கார்களில் இடவசதியிலும் திருப்திப்படுத்துகிறது.

ஹூண்டாய் சான்ட்ரோ எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஹூண்டாய் சான்ட்ரோ Engine And Performance

ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. சிஎன்ஜி எரிபொருள் வகையிலும் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடலின் எஞ்சின் அதிகபட்சமாக 58 பிஎச்பி பவரையும், 84 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த காரின் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆரம்ப நிலையில் சிறப்பான பவர் டெலிவிரியை வழங்குகிறது. இதனால், நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறப்பானதாக இருக்கிறது. மேலும், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதும் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த மாடலாக இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் அதிர்வுகள் குறைவாக இருப்பதும் சிறப்பானதாக கூறலாம்.

ஹூண்டாய் சான்ட்ரோ மைலேஜ்

ஹூண்டாய் சான்ட்ரோ Fuel Efficiency

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கணக்கீடுகளின்படி, கிலோவுக்கு 30.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த காரில் 35 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இருப்பதும் நீண்ட தூர பயணங்களுக்கும் சிறப்பானதாக கருதமுடியும்.

ஹூண்டாய் சான்ட்ரோ முக்கிய அம்சங்கள்

ஹூண்டாய் சான்ட்ரோ Important Features

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மிரர் லிங்க் இணைப்பு வசதியும் உண்டு. எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் சைடு மிரர்கள், பின்புற இருக்கை பயணிகளுக்கு தனி ரியர் ஏசி வென்ட்டுகள், மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி போர்ட், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், பவர் விண்டோ ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், பார்க்கிங் கேமரா, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ரியர் டீஃபாகர், மோதலின்போது தானாக கதவுகள் திறந்து கொள்ளும் வசதி என பல சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ஹூண்டாய் சான்ட்ரோ தீர்ப்பு

ஹூண்டாய் சான்ட்ரோ Verdict

பழைய மாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட டிசைனில், பல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பட்ஜெட் விலை ஹேட்ச்பேக் கார்களை வாங்க விரும்புவோரின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும். போட்டியாளர்களைவிட பிரிமீயம் அந்தஸ்தை பெற்றிருப்பது இதன் கூடுதல் பலமாக இருக்கிறது.

வண்ணங்கள்


Titan Grey
Fiery Red
Typhoon Silver
Imperial Beige
Polar White

ஹூண்டாய் சான்ட்ரோ படங்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X