ஹூண்டாய் டூஸான்

ஹூண்டாய் டூஸான்
Style: எஸ்யூவி
22.69 - 27.47 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஹூண்டாய் டூஸான் கார் 5 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் டூஸான் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் டூஸான் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் டூஸான் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் டூஸான் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஹூண்டாய் டூஸான் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
22,68,791
எஸ்யூவி | Gearbox
24,36,387

ஹூண்டாய் டூஸான் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
24,73,791
எஸ்யூவி | Gearbox
26,07,681
எஸ்யூவி | Gearbox
27,46,760

ஹூண்டாய் டூஸான் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 0
Manual டீசல் 0

ஹூண்டாய் டூஸான் விமர்சனம்

ஹூண்டாய் டூஸான் Exterior And Interior Design

ஹூண்டாய் டூஸான் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் நேர்த்தியான டிசைன் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மாடலாக ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி விற்பனையில் உள்ளது. முகப்பில் ஹூண்டாய் கார்களுக்கு உரிய தனித்துவத்துடன் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு உள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் பகல்நேர விளக்குகள் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்த காரில் மிக நேர்த்தியான பாடி லைன்கள் காரின் கம்பீரத்தை தருகிறது. அத்துடன் 18 அங்குல டைமண்ட் கட் அலாய் சக்கரங்களும் இந்த காருக்கு தனித்துமான வசீகரத்தை கொடுக்கிறது. கருப்பு வண்ண ரூஃப் ரெயில்கள் இடம்பெற்றுள்ளன. சில்வர் ஸ்கப்ஃப் ப்ளேட் மற்றும் டியூவல் புகைப்போக்கி குழல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

உட்புறத்தில் ஹூண்டாய் கார்களுக்கு உரிய பிரிமீயம் அம்சங்களுடன் வசீகரிக்கிறது. அழகாக செதுக்கப்பட்ட டேஷ்போர்டு அமைப்பு, அதுனுடன் இயைந்து பொருத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கவர்ச்சிகரமான இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீல் என அனைத்தும் பிரிமீயமாக காட்சி தருகிறது.

ஹூண்டாய் டூஸான் எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஹூண்டாய் டூஸான் Engine And Performance

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல்் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 185 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரண்டு எஞ்சின் தேர்வுகளிலுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன.

பெட்ரோல், டீசல் எஞ்சின்களின் செயல்திறன் சிறப்பாக இருப்பதால், ஓட்டுவதற்கு உற்சாகத்தை அள்ளித் தருகின்றன. அனைத்து நிலைகளிலும் போதுமான பவர் டெலிவிரியை இதன் எஞ்சின்கள் வெளிப்படுததுவது சிறப்பான விஷயம். டீசல் எஞ்சின் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருப்பதால், உடனடி பிக்கப்பை தந்து ஓட்டுபவரை உற்சாகப்படுத்திக் கொண்ட இருக்கிறது.

சஸ்பென்ஷன் மென்மையாக இருப்பதால் சொகுசான அனுபவத்தை தருகிறது. அதேபோன்று, உட்புறத்தில் அதிர்வுகள் மற்றும் வெளிசப்தம் மிக குறைவாக இருக்கிறது. 2,400 ஆர்பிஎம் வரை எஞ்சின் சப்தம் இல்லை. அதற்கு மேல் எஞ்சின் அதிர்வுகளும், சப்தமும் காருக்குள் விரவுகிறது.

இந்த எஸ்யூவியின் பிரேக்குகள் மிக சிறப்பான நிறுத்துதல் திறனை காருக்கு வழங்குகிறது. இதன் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளையும் எளிதாக எதிர்கொள்கிறது. அதேநேரத்தில், பாடி ரோல் சற்று அதிகமாக உணர முடிகிறது. இந்த காரில் நார்மல் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று வகையான டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் டூஸான் மைலேஜ்

ஹூண்டாய் டூஸான் Fuel Efficiency

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் 62 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 13.03 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 12.95 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 18.42 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.48 கிமீ மைலேஜையும் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஹூண்டாய் டூஸான் முக்கிய அம்சங்கள்

ஹூண்டாய் டூஸான் Important Features

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஷார்க் ஃபின் ஆன்டெனா, எலெக்ட்ரானிக் பனோரமிக் சன்ரூஃப், பவர் டெயில்கேட், பனி மற்றும் மழை சமயங்களில் சைடுமிரர்களை வெதுவெதுப்பாக்கி தெளிவாக காட்டும் வசதி, வயர்லெஸ் சார்ஜர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுக், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சி்ஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், டிராக்ஷன் கார்னரிங் கன்ட்ரோல், இம்மொபைலைசர் உள்ளிட்ட பாதுகாப்பு நுட்பங்கள் உள்ளன.

ஹூண்டாய் டூஸான் தீர்ப்பு

ஹூண்டாய் டூஸான் Verdict

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியானது செயல்திறன், டிசைன், வசதிகளில் சிறந்த தேர்வாக அதன் ரக சந்தையில் முன்னிலை வகிக்கிறது. இதன் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதே இதன் வர்த்தகத்தை பாதிக்கும் விஷயமாக கருதப்படுகிறது.

வண்ணங்கள்


Phantom Black
Starry Night
Typhoon Silver
Polar White

ஹூண்டாய் டூஸான் படங்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X