ஹூண்டாய் வென்யூ

ஹூண்டாய் வென்யூ
Style: எஸ்யூவி
7.94 - 13.48 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஹூண்டாய் வென்யூ கார் 24 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் வென்யூ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் வென்யூ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் வென்யூ காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் வென்யூ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஹூண்டாய் வென்யூ பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
7,94,100
எஸ்யூவி | Gearbox
9,10,800
எஸ்யூவி | Gearbox
9,88,800
எஸ்யூவி | Gearbox
9,99,990
எஸ்யூவி | Gearbox
10,12,500
எஸ்யூவி | Gearbox
10,40,200
எஸ்யூவி | Gearbox
11,05,300
எஸ்யூவி | Gearbox
11,20,300
எஸ்யூவி | Gearbox
11,38,200
எஸ்யூவி | Gearbox
11,50,900
எஸ்யூவி | Gearbox
11,53,200
எஸ்யூவி | Gearbox
12,44,200
எஸ்யூவி | Gearbox
12,59,200
எஸ்யூவி | Gearbox
12,65,100
எஸ்யூவி | Gearbox
12,80,100
எஸ்யூவி | Gearbox
13,23,100
எஸ்யூவி | Gearbox
13,33,100
எஸ்யூவி | Gearbox
13,38,100
எஸ்யூவி | Gearbox
13,48,100

ஹூண்டாய் வென்யூ டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
10,70,700
எஸ்யூவி | Gearbox
12,37,000
எஸ்யூவி | Gearbox
12,52,000
எஸ்யூவி | Gearbox
13,28,600
எஸ்யூவி | Gearbox
13,43,600

ஹூண்டாய் வென்யூ மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 0
Manual டீசல் 0

ஹூண்டாய் வென்யூ விமர்சனம்

ஹூண்டாய் வென்யூ Exterior And Interior Design

ஹூண்டாய் வென்யூ வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் நிறுவனம் களமிறக்கி இருக்கும் புதிய வெனியூ எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியின் வெற்றிக்கு டிசைனும், தொழில்நுட்ப அம்சங்களும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. புதிய ஹூண்டாய் வெனியூ காரின் முகப்பில் முக்கிய அம்சமாக சதுர வடிவிலான ஹெட்லைட் பானட்டை விட்டு சற்று இறக்கமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட் இடம்பெறும் இடத்தில் இன்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. க்ரோம் க்ரில் அமைப்பு வசீகரத்தை தருகிறது. முன்புறத்தில் ஏர்இன்டேக் அமைப்பிற்கு கீழாக ஸ்கிட் பிளேட்டுகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த காரின் பக்கவாட்டு டிசைனும் மிக சிறப்பாக இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா சாயல் தெரிகிறது. 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் கவர்ச்சியை கூட்டுகிறது. இந்த காரின் பின்புறத்தில் எல்இடி விளக்குகள் கொண்ட டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் சிறப்பாக இருக்கின்றன. மேலும், பின்புற டிசைனும் கவர்ச்சிகரமாக உள்ளது.

உட்புறத்தில் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் சில்வர் ஆக்சஸெரீகள் பிரிமீயமாக தெரிகின்றன. இந்த காரில் உயர் துல்லிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சிறப்பாக இருக்கிறது. போதுமான இடவசதியும் உட்புறத்தின் முக்கிய அம்சமாக கூறலாம்.

ஹூண்டாய் வென்யூ எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஹூண்டாய் வென்யூ Engine And Performance

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பேஸ் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் கிடைக்கிறது.

இரண்டாவது பெட்ரோல் மாடலில் 1.0 லிட்டர் டர்போ எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

மூன்றாவது எஞ்சின் தேர்வாக 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

ஹூண்டாய் வென்யூ மைலேஜ்

ஹூண்டாய் வென்யூ Fuel Efficiency

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 17.52 கிமீ மைலேஜை வழங்கும். 1.0 லிட்டர் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 18.27 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 18.15 கிமீ மைலேஜையும் வழங்கும். டீசல் மாடல் லிட்டருக்ககு 23.7 கிமீ மைலைஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் வென்யூ முக்கிய அம்சங்கள்

ஹூண்டாய் வென்யூ Important Features

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இந்த எஸ்யூவியில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல்போன் சார்ஜர், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 33 விதமான வசதிகளை அளிக்கும் புளூலிங்க் செயலி என பட்டியல் நீள்கிறது. புளூலிங்க் மூலமாக காரை குறிப்பிட்ட பகுதிகளை விட்டு வெளியே செல்லாதவாறு தடுக்க முடியும். அதேபோன்று, திருடுபோனால் காரை கண்டுபிடிப்பதும் எளிதான டிராக்கர் வசதியும் உள்ளது. இதில், நேரடியாக இன்டர்நெட் இணைப்பை பெறுவதற்கான சிம் கார்டும் இருக்கிறது.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

ஹூண்டாய் வென்யூ தீர்ப்பு

ஹூண்டாய் வென்யூ Verdict

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக ஹூண்டாய் வெனியூ மாறி இருக்கிறது. விலை, சிறப்பம்சங்கள், டிசைன் என அனைத்திலும் நிறைவை தருகிறது. இதன் 1.0 லிட்டர் டிசிடி கியர்பாக்ஸ் மாடலானது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும் என்று கூறலாம்.

வண்ணங்கள்


Abyss Black
Denim Blue
Titan Grey
Typhoon Silver
Fiery Red
Atlas White

ஹூண்டாய் வென்யூ படங்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X