இசுஸு டி மேக்ஸ்

இசுஸு டி மேக்ஸ்
Style: பிக்கப்
19.50 - 27.00 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

இசுஸு டி மேக்ஸ் கார் 4 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இசுஸு டி மேக்ஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். இசுஸு டி மேக்ஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். இசுஸு டி மேக்ஸ் காரை பிக்கப் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. இசுஸு டி மேக்ஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

இசுஸு டி மேக்ஸ் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
பிக்கப் | Gearbox
19,49,900
பிக்கப் | Gearbox
22,99,900
பிக்கப் | Gearbox
23,49,900
பிக்கப் | Gearbox
26,99,900

இசுஸு டி மேக்ஸ் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual டீசல் 0

இசுஸு டி மேக்ஸ் விமர்சனம்

இசுஸு டி மேக்ஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இசுஸு டி மேக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவின் ஆஃப்ரோடு வாகன பிரியர்களையும், வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்து விட்டது. இந்தியாவில் பிக்கப் டிரக் வாகனங்கள் வர்த்தக ரீதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், ஆஃப்ரோடு பிரியர்களின் கனவு வாகனமாக இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் மாறி இருக்கிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு தர உமிழ்வு அம்சங்களுடன் வடிவமைப்பில் புதிய பொலிவு மற்றும் கூடுதல் வசதிகளுடன் இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனையில் உள்ளது. தனி நபர் பயன்பாட்டிற்கான டி மேக்ஸ் பிக்கப் டிரக்கானது ஹை லேண்டர் மற்றும் வி க்ராஸ் என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது.

வி க்ராஸ் மாடலானது மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் பை எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகல், ரூஃப் ரெயில்கள், சைடு ஸ்டெப்புகள், 18 அங்குல அலாய் வீல்களுடன் மிரட்டலாக இருக்கிறது. விலை குறைவான தேர்வாக உள்ள ஹை லேண்டர் மாடலில் சாம்பல் வண்ண க்ரில், 16 அங்குல ஸ்டீல் வீல்கள், க்ரோம் டெயில் கேட் கைப்பிடி உள்ளிட்டவை கொடுக்கப்ப்டடுள்ளன. மொத்தத்தில் ஆஃப்ரோடு வாகனப் பிரியர்களை ஒரே பார்வையில் சுண்டி இழுக்கும் தோற்றத்தையும், வசதிகளையும் பெற்றிருக்கிறது.

இசுஸு டி மேக்ஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக்கின் பிஎஸ்-6 மாடலில் 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட தேர்வுகளில் கிடைக்கிறது.

இசுஸு டி மேக்ஸ் மைலேஜ்

இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக்கின் பிஎஸ்-6 மாடலின் மைலேஜ் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை. எனினும், நடைமுறை பயன்பாட்டில் 10 கிமீ மைலேஜை வழங்கும் என்று நம்பலாம்.

இசுஸு டி மேக்ஸ் முக்கிய அம்சங்கள்

இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக்கின் பிஎஸ்-6 மாடலில் பை - எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 18 அங்குல அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஷிஃப்ட் ஆன் ஃப்ளை 4 வீல் டிரைவ் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த பிக்கப் டிரக்கில் 6 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. மேலும், வி க்ராஸ் மாடலில் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மற்றும் ஆன்ட்டி ரோல் பார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் உள்ளது.

இசுஸு டி மேக்ஸ் தீர்ப்பு

ஆஃப்ரோடு வாகனங்களை வாங்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக் உள்ளது. ஆளுமையானத் தோற்றம், வசதிகள், தொழில்நுட்பம் என அனைத்திலும் சிறந்த தேர்வாக இருக்கிறது. மஹிந்திரா தார், ஃபோர்ஸ் குர்கா ஆகியவற்றைவிட விலை அதிகம் இருப்பது சற்றே பாதகமான விஷயம். ஆனால், தனித்துவமான ஆஃப்ரோடு வாகனமாக இருப்பதால் இதற்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது.

வண்ணங்கள்


Nautilus Blue
Black Mica
Galena Grey
Red Spinal Mica
Valencia Orange
Silver Metallic
Splash White

இசுஸு டி மேக்ஸ் படங்கள்

இசுஸு டி மேக்ஸ் Q & A

இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

ஹைலேண்டர், வி க் ராஸ் இசட் 2 வீல் டிரைவ், இசட் 4 வீல் டிரைவ், இசட் பிரஸ்டீஜ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X