கியா Seltos

கியா Seltos
Style: எஸ்யூவி
10.90 - 20.35 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

கியா Seltos கார் 26 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. கியா Seltos காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். கியா Seltos காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். கியா Seltos காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. கியா Seltos கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

கியா Seltos பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
10,89,900
எஸ்யூவி | Gearbox
12,23,900
எஸ்யூவி | Gearbox
14,05,900
எஸ்யூவி | Gearbox
15,29,900
எஸ்யூவி | Gearbox
15,41,900
எஸ்யூவி | Gearbox
15,44,900
எஸ்யூவி | Gearbox
16,71,900
எஸ்யூவி | Gearbox
18,72,900
எஸ்யூவி | Gearbox
19,39,900
எஸ்யூவி | Gearbox
19,64,900
எஸ்யூவி | Gearbox
19,72,900
எஸ்யூவி | Gearbox
19,99,900
எஸ்யூவி | Gearbox
20,34,900

கியா Seltos டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
12,34,900
எஸ்யூவி | Gearbox
13,67,900
எஸ்யூவி | Gearbox
15,54,900
எஸ்யூவி | Gearbox
16,79,900
எஸ்யூவி | Gearbox
16,91,900
எஸ்யூவி | Gearbox
16,99,900
எஸ்யூவி | Gearbox
18,21,900
எஸ்யூவி | Gearbox
18,69,900
எஸ்யூவி | Gearbox
18,94,900
எஸ்யூவி | Gearbox
19,39,900
எஸ்யூவி | Gearbox
19,64,900
எஸ்யூவி | Gearbox
19,99,900
எஸ்யூவி | Gearbox
20,34,900

கியா Seltos மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 17.9
Manual டீசல் 19.1

கியா Seltos விமர்சனம்

கியா Seltos Exterior And Interior Design

கியா Seltos வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சூப்பர் ஹிட் மாடலாக கியா செல்்டோஸ் இருந்து வருகிறது. 2021 மாடலாக விற்பனையில் உள்ள புதிய கியா செல்டோஸ் கார் நிறுவனத்தின் புதிய லோகோ மற்றும் கூடுதல் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தன் வசப்படுத்தி வருகிறது. புலிமூக்கு வடிவ க்ரில் அமைப்பு, அழகிய எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகல் முகப்பை அலங்கரிக்கின்றன. பக்கவாட்டில் அட்டகாசமான அலாய் வீல்கள், பின்புறத்தில் டெயில் லைட்டுகள் வசீகரிக்கின்றன. ஒட்டுமொத்த காரின் வெளிப்புற வடிவமைப்பும் சொக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

கியா Seltos எஞ்சின் மற்றும் செயல்திறன்

கியா Seltos Engine And Performance

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதன் சாதாரண வகை 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஐஎம்டி மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகிறது.

இதன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

கியா Seltos மைலேஜ்

கியா Seltos Fuel Efficiency

புதிய கியா செல்டோஸ் காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 16.8 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 1.4 லிட்டர் மேனுவல் மாடல் லிட்டருக்கு 16.1 கிமீ மைலேஜையும், டிசிடி மாடல் லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கியா Seltos முக்கிய அம்சங்கள்

கியா Seltos Important Features

புதிய கியா செல்டோஸ் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதனுடன் யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஏர் பியூரிஃபயர், சன்ரூஃப், 7 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, 8 ஸ்பீக்கர்களுடன் போஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை பெற்றிருக்கிறது.

கியா செல்டோஸ் காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், எமெர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கியா Seltos தீர்ப்பு

கியா Seltos Verdict

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகள், விலை என அனைத்திலும் மிகச் சிறந்த தேர்வாக கியா செல்டோஸ் காரை கூறலாம். கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தேர்வாக தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

வண்ணங்கள்


Aurora Black Pearl
Gravity Grey
Imperial Blue
Pewter Olive
Intense Red
Sparkling Silver
Glacier White Pearl

கியா Seltos படங்கள்

கியா Seltos Q & A

கியா செல்டோஸ் காருக்கு சிறந்த மாற்றுத் தேர்வான கார் மாடல்கள் எவை?

ஹூண்டாய் க்ரெட்டா, ஸ்கோடா குஷாக் ஆகிய கார்கள் சிறந்த மாற்றுத் தேர்வாக உள்ளன

Hide Answerkeyboard_arrow_down
கியா செல்டோஸ் காரில் 7 சீட்டர் மாடல் உள்ளதா?

கியா செல்டோஸ் கார் 5 சீட்டர் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. 7 சீட்டர் தேர்வு இல்லை

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X