????????? ????????? ??4 கார் 1 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ????????? ????????? ??4 காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ????????? ????????? ??4 காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ????????? ????????? ??4 காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ????????? ????????? ??4 கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|
எஸ்யூவி | Gearbox
|
₹ 28,73,080 |
கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
---|---|---|
டீசல் | 12.03 |
பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் ஓர் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஜி4 அல்டுராஸ் எஸ்யூவி கார். சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் அடிப்படையிலான இந்த எஸ்யூவியில், மஹிந்திராவின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
முகப்பில் மஹிந்திரா பாரம்பரிய க்ரில் அமைப்பு, கவரும் வகையிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் க்ரோம் பீடிங்குடன் கூடிய பம்பர் அமைப்பு, எல்இடி பனி விளக்குகள் வசீகரிக்கின்றன.
பக்கவாட்டில் 18 அங்குல அலாய் வீல்கள் மற்றும் பெரிய வீல் ஆர்ச்சுகளுடன் மிக பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் காட்சி தருகிறது. இந்த எஸ்யூவியின் பின்புறத்தில் டெயில்லைட் க்ளஸ்ட்டர்கள் மிக அழகாக செதுக்கப்பட்டது போன்று இருக்கிறது. முன்புறத்திலும், பின்புறத்திலும் ஸ்கிட் பிளேட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் உட்புறமும் மிகவும் பிரிமீயமாகவும், அதிக இடவசதியுடன் காணப்படுகிறது. லெதர், தரமான பிளாஸ்டிக் பாகங்கள், பழுப்பு வண்ண கலவை என அசத்தலான காம்பினேஷனில் காட்சியளிக்கிறது.
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்..7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. எஞ்சின் சக்தியானது அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.
தோற்றத்தைப் போலவே, இதன் எஞ்சினும் செயல்திறனில் அசத்துகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் டிரான்ஸ்மிஷன் மிகவும் மென்மையான அனுபவத்தை தருகிறது. ஆன்ரோடு, ஆஃப்ரோடுக்கு ஏற்ப இதன் சஸ்பென்ஷன் ட்யூனிங் செய்யப்பட்டு இருப்பது சிறப்பு. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதால், ஆஃப்ரோடு சாகசங்களிலும் அச்சமில்லாமல் ஓட்டலாம்.
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியில் 70 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் கொடுக்கப்பட்டுள்ளது. இநத் கார் லிட்டருக்கு 12 கிமீ மைலேஜ் வரை வழங்கும். அதிக கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் நீண்ட தூர மற்றும் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு தோதுவாக இருக்கும்.
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், 360 டிகிரி கேமரா ஆகியவை மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
இந்த எஸ்யூவியில் 9 ஏர்பே்க்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன. இதில், ஆஃப்ரோடு சாகசங்களுக்கும் ஏற்ற மாடலாக முன்னிறுத்துகிறது.
டிசைன், வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் போன்று மிரட்டலான தொனியில் இல்லாமல், மிடுக்கான தோற்றத்தை பெற்றிருப்பது இதன் தனித்துவம்.