மஹிந்திரா தார்

மஹிந்திரா தார்
Style: எஸ்யூவி
11.25 - 17.60 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மஹிந்திரா தார் கார் 17 வேரியண்ட்டுகளில் 2 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மஹிந்திரா தார் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மஹிந்திரா தார் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மஹிந்திரா தார் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மஹிந்திரா தார் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மஹிந்திரா தார் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
11,25,001
எஸ்யூவி | Gearbox
12,75,000
எஸ்யூவி | Gearbox
14,85,000
எஸ்யூவி | Gearbox
14,99,899
எஸ்யூவி | Gearbox
15,74,900
எஸ்யூவி | Gearbox
15,75,001
எஸ்யூவி | Gearbox
16,15,000
எஸ்யூவி | Gearbox
17,14,900
எஸ்யூவி | Gearbox
17,20,001
எஸ்யூவி | Gearbox
17,60,000

மஹிந்திரா தார் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
13,99,900
எஸ்யூவி | Gearbox
14,30,000
எஸ்யூவி | Gearbox
15,00,001
எஸ்யூவி | Gearbox
15,40,000
எஸ்யூவி | Gearbox
16,49,901
எஸ்யூவி | Gearbox
16,59,800
எஸ்யூவி | Gearbox
16,99,000

மஹிந்திரா தார் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual டீசல் 0
Manual பெட்ரோல் 0

மஹிந்திரா தார் விமர்சனம்

மஹிந்திரா தார் Exterior And Interior Design

மஹிந்திரா தார் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்திய ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களின் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் எஸ்யூவி இருந்து வருகிறது. டிசைன், தொழில்நுட்பம் மற்றும் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற தகவமைப்புகளுடன் மிகச் சரியான பட்ஜெட்டில் இந்த எஸ்யூவி கிடைப்பதால் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விஞ்சும் வகையில் புதிய தலைமுறை அம்சங்களுடன் மஹிந்திரா தார் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் முன்பைவிட பரிமாணத்தில் பெரிய மாடலாக புதிய மஹிந்திரா தார் மாறி இருக்கிறது. பிரமாண்டத் தோற்றத்துடன் புதிய க்ரில் அமைப்பு, வட்ட வடிவிலான ஹாலஜன் பல்புகள் கொண்ட ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், அதனுடன் சேர்த்து டர்ன் இன்டிகேட்டர்கள் உள்ளன.

முன்புற க்ரில் அமைப்புக்கு கீழே இரட்டை வண்ணத்தில் பிரம்மாண்ட பம்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் இருபுறத்திலும் பனி விளக்குகள் உள்ளன. பம்பரில் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் அகலமான வீல் ஆர்ச்சுகள், கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள், 18 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், முழுமையான ஸ்பேர் வீல்கள் இடம்பெற்றுள்ளது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் ஹார்டு டாப், கன்வெர்ட்டிபிள் சாஃப்ட் டாப் மற்றும் சாஃப்ட் டாப் ஆகிய கூரை அமைப்புடைய மாடல்களில் கிடைக்கிறது. சில வேரியண்ட்டுகளில் கதவுகளை கழற்றி மாட்டும் வசதியுடன் கிடைக்கிறது.

ஆஃப்ரோடு பயன்பாடு மட்டுமின்றி, நீண்ட தூர பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அதிக சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் மிகவும் பிரிமீயமாக மாறி இருக்கிறது. சவுகரியமான இருக்கைகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி சிஸ்டம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார் 4 சீட்டர் மற்றும் 6 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது.

மஹிந்திரா தார் எஞ்சின் மற்றும் செயல்திறன்

மஹிந்திரா தார் Engine And Performance

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த எஸ்யூவியில் வழங்கப்படும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 130 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

மஹிந்திரா தார் மைலேஜ்

மஹிந்திரா தார் Fuel Efficiency

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் மைலேஜ் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், லிட்டருக்கு 15 முதல் 17 கிமீ மைலேஜ் வரை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த எஸ்யூவியில் 57 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் பொருத்தப்பட்டுள்ளது. ஆஃப்ரோடு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவானதாக இருக்கும்.

மஹிந்திரா தார் முக்கிய அம்சங்கள்

மஹிந்திரா தார் Important Features

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியில் ஃபாலோ மீ வசதியுடன் கூடிய ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. 18 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், ரிமோட் கீ லெஸ் என்ட்ரி, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதிகள் உள்ளன.

இந்த காரில் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரன்ஷியல், கழுவி சுத்தப்படுத்தும் வசதியுடன் கூடிய இன்டீரியர் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ரோல் கேஜ், பானிக் பிரேக்கிங் சிக்னல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

மஹிந்திரா தார் தீர்ப்பு

மஹிந்திரா தார் Verdict

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் டிசைன், தொழில்நுட்பம், வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சினுடன் மிக சரியான விலையில் வந்துள்ளது. இதனால், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ஆஃப்ரோடு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

வண்ணங்கள்


Stealth Black
Red Rage

மஹிந்திரா தார் படங்கள்

மஹிந்திரா தார் Q & A

புதிய மஹிந்திரா தார் எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ஏஎக்ஸ் ஸ்டான்டர்டு, ஏஎக்ஸ், ஏஎக்ஸ் ஆப்ஷனல் மற்றும் எல்எக்ஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி என்னென்ன வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது?

புதிய மஹந்திரா தார் எஸ்யூவி ராக்கிங் பீஜ், அக்வாமரைன், மிஸ்டிக் காப்பர், ரெட் ரேஜ், நப்போலி பிளாக் மற்றும் கேலக்ஸி க்ரே ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X