மஹிந்திரா எக்ஸ்யூவி300

மஹிந்திரா எக்ஸ்யூவி300
Style: எஸ்யூவி
7.99 - 14.76 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் 19 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
7,99,000
எஸ்யூவி | Gearbox
8,66,501
எஸ்யூவி | Gearbox
9,99,996
எஸ்யூவி | Gearbox
10,70,501
எஸ்யூவி | Gearbox
11,50,501
எஸ்யூவி | Gearbox
11,65,501
எஸ்யூவி | Gearbox
12,60,502
எஸ்யூவி | Gearbox
12,75,502
எஸ்யூவி | Gearbox
13,30,501
எஸ்யூவி | Gearbox
13,45,501

மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
10,21,500
எஸ்யூவி | Gearbox
11,00,500
எஸ்யூவி | Gearbox
12,30,500
எஸ்யூவி | Gearbox
13,00,500
எஸ்யூவி | Gearbox
13,15,501
எஸ்யூவி | Gearbox
13,92,500
எஸ்யூவி | Gearbox
14,07,501
எஸ்யூவி | Gearbox
14,60,501
எஸ்யூவி | Gearbox
14,75,500

மஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 0
Manual டீசல் 0

மஹிந்திரா எக்ஸ்யூவி300 விமர்சனம்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 Exterior And Interior Design

மஹிந்திரா எக்ஸ்யூவி300 வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சமீபத்திய வரவுகளில் ஒன்றான மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி துவக்கத்திலேயே விற்பனையில் அதிரடி காட்டி வருகிறது. இரண்டாம் இடத்தில் இருந்த டாடா நெக்ஸானை பின்னுக்குத் தள்ளி மாருதி பிரெஸ்ஸாவுக்கு அடுத்து முன்னணி வகுகிறது. இந்த எஸ்யூவிக்கு கிடைத்திருக்கும் வரவேற்புக்கு முக்கிய காரணம், ஆளுமையான டிசைன்.

மஹிந்திரா நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் இந்த எஸ்யூவி அசரடிக்கிறது. க்ரோம் வில்லைகளுடன் கூடிய முகப்பு க்ரில் அமைப்பு, பனி விளக்குகள் வரை நீளும் எல்இடி பகல்நேர விளக்குகள் தனித்துவமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. முன்புறத்தில் பெரிய ஏர்டேம் அமைப்பு,வலிமையான பம்பர்கள் என அசத்தலாக இருக்கிறது.

பக்கவாட்டிலும் வலிமையான பாடி லைன்கள் முரட்டுத்தனமான தோற்றத்தை தருகிறது. இந்த எஸ்யூவியில் 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள், கருப்பு வண்ண சி பில்லர், அசத்தலான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், டியூவல் டோன் பம்பர்கள், ஸ்கஃப் பிளேட் ஆகியவை இந்த எஸ்யூவியின் தோற்றத்தை போட்டியாளர்களாவிட சிறந்ததாக மாற்றி காட்டுகிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்்டுள்ளது. கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ணத்துடன் டேஷ்போர்டு கலக்கலாக இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில்வர் அலங்கார ஆக்சஸெரீகள் சென்ட்ரல் கன்சோலின் மதிப்பை உயர்த்துகிறது. மொத்தத்தில் டிசைனில் கவரும் வகையில் இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஞ்சின் மற்றும் செயல்திறன்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 Engine And Performance

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் என இரண்டு எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்யூவியில் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ காரில் பயன்படுத்தப்படும் அதே டீசல் எஞ்சின்தான் இதிலும் இடம்பெற்றுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக செயல்திறன் மிக்க டீசல் எஞ்சின் இதுதான். ஆரம்ப நிலைகளில் டர்போ லேக் இருந்தாலும், 2,000 ஆர்பிஎம் தாண்டிவிட்டால், எஞ்சின் பவர் டெலிவிரி மிக சிறப்பாக உள்ளது.

இந்த எஸ்யூவியில் இருக்கும் கியர்பாக்ஸ் மிக துல்லியமாகவும், மென்மையான அனுபவத்தை தருகிறது. க்ளட்ச் இலகுவாக இருப்பதால், நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கும் அருமையான அனுபவத்தை தருகிறது. சாங்யாங் டிவோலி அடிப்படையிலான வாகனம் என்பதுடன், அதில் இருக்கும் அதே சஸ்பென்ஷன் அமைப்புதான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்திய சாலைநிலைகளுக்கு ஏற்ப ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் உள்ளதால், துல்லியமாக இருக்கிறது.

பல்வேறு இயக்க நிலைகளுக்கான டிரைவிங் மோடுகள், ஸ்டீயரிங் அட்ஜெஸ்ட் வசதிகள் உள்ளன. குறைவான வேகத்தில் ஸ்டீயரிங் வீல் இலகுவாகவும், அதிவேகத்தில் இறுக்கமாகவும் மாறுவது நம்பிக்கையான ஓட்டுதல் அனுபவத்தை தருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 Fuel Efficiency

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 42 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16 முதல் 18 கிமீ வரை மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும் வழங்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 முக்கிய அம்சங்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 Important Features

மஹிந்திரா எக்ஸ்யூவியில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த எஸ்யூவியில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், சைடு மிரர்களில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய அம்சங்கள். அதேபோன்று, ஃபாலோ மீட ஹெட்லைட்டுகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, கீ லெஸ் என்ட்ரி, எலெக்ட்ரிக் டெயில் கேட் ரிலீஸ், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஆன்ட்டி தெஃப்ட் அலாரம், இம்மொபைலைசர், ஐசோஃபிக்ஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், எலெக்ட்ானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் என பாதுகாப்பு வசதிகளுக்கும் குறைவில்லை.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 தீர்ப்பு

மஹிந்திரா எக்ஸ்யூவி300 Verdict

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் சொகுசான கேபின், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள், அதிக மைலேஜ் மற்றும் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களுடன் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக விளங்குகிறது. டிசைனிலும் அசத்தலாக உள்ளது.

வண்ணங்கள்


Napoli Black
Aqua Marine
Dsat Silver
Red Rage
Pearl White

மஹிந்திரா எக்ஸ்யூவி300 படங்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X