மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா எக்ஸ்யூவி500
Style: எஸ்யூவி
13.27 - 17.78 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் 4 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
13,27,310
எஸ்யூவி | Gearbox
14,54,604
எஸ்யூவி | Gearbox
16,25,221
எஸ்யூவி | Gearbox
17,77,547

மஹிந்திரா எக்ஸ்யூவி500 மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
டீசல் 15.1

மஹிந்திரா எக்ஸ்யூவி500 விமர்சனம்

மஹிந்திரா எக்ஸ்யூவி500 Exterior And Interior Design

மஹிந்திரா எக்ஸ்யூவி500 வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

கடந்த 2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வாடிக்கையாளர்களின் பேராதரவோடு, தொடர்ந்து வெற்றி நடைபோட்டு வருகிறது. சில மாற்றங்களுடன் மூன்றாவது மாடலாக தற்போது விற்பனையில் இருக்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் வடிவமைப்பும், வசதிகளும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

முகப்பில் புதிய க்ரில் அமைப்புடன் வசீகரிக்கிறது. பக்கவாட்டில் பெரிய மாறுதல்கள் இல்லை. ஆனால், இதன் பிரம்மாண்டமான 18 அங்குல அலாய் வீல்கள், வீல் ஆர்ச்சுகள் ஆகியவை காரின் தோற்றத்திற்கு வலு சேர்க்கின்றன

பின்புறத்தில் செங்குத்து வாட்டில் இருந்த டெயில் லைட் க்ளஸ்ட்டர் முக்கோண வடிவிற்கு மாறி இருக்கிறது. மொத்தத்தில் பழைய பவுசு குறையாமல் கவனமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரட்டை குழல் புகைப்போக்கி குழல்களும் சிறப்பு சேர்க்கின்றன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இன்டீரியரும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு லெதர் மற்றும் உயர்தர அலுமினிய ஆக்சஸெரீகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உட்புறம் விசாலமாக தெரிவதுடன், பிரிமீயம் உணர்வை ஏற்படுத்துகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஞ்சின் மற்றும் செயல்திறன்

மஹிந்திரா எக்ஸ்யூவி500 Engine And Performance

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் எம்- ஹாக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

அதேபோன்று, பெட்ரோல் மாடல் தேர்விலும் கிடைக்கிறது. இந்த எஸ்யூவியின் 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 320 என்ம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது.

புதிய மஹி்ந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் சஸ்பென்ஷன் இந்திய சாலைகளை எளிதாக எதிர்கொள்ளும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற தகவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சஙகளுடன் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 மைலேஜ்

மஹிந்திரா எக்ஸ்யூவி500 Fuel Efficiency

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 70 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. இதனால், நீண்ட தூர பயணங்களை அனாயசமாக மேற்கொள்ள முடியும். இந்த காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 15.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 முக்கிய அம்சங்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி500 Important Features

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. உட்புறத்தில் லெதர் இருக்கைகள், ஸ்மார்ட்வாட்ச் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதி உள்ளன.

அனைத்து சக்கங்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் அவசர கால அழைப்பு தொழில்நுட்பம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்த எஸ்யூவி ரக கார் பெற்றிருக்கிறது.

தீர்ப்பு

மஹிந்திரா எக்ஸ்யூவி500 Verdict

இந்தியாவின் 7 சீட்டர் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 விளங்குகிறது. அருமையான டிசைன், வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகள், சரியான விலை போன்ற காரணஙகளால் இதற்கு வலுவான மார்க்கெட் இருந்து வருகிறது. இதன் விலையிலான பிற போட்டியாளர்கள் 5 சீட்டர் மாடல்களில் கிடைக்கும் நிலையில், இது 7 சீட்டர் மாடலாக இருப்பது சிறப்பு.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 வண்ணங்கள்


Volcano Black
Lake Side Brown
Opulent Purple
Mystic Copper
Moondust Silver
Crimson Red
Pearl White

மஹிந்திரா எக்ஸ்யூவி500 படங்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more