மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா
Style: எஸ்யூவி
7.34 - 11.41 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் 9 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல்கள்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
பெட்ரோல் 18.76

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா விமர்சனம்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா Exterior And Interior Design

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர்-1 மாடலாக புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விளங்குகிறது. காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக இருந்தாலும், இதன் வலிமையான தோற்றம் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், வலிமையான பம்பர் அமைப்பு, ஹனிகோம்ப் க்ரில் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. ஸ்கிட் பிளேட் இதனை முழுமையான ஆஃப்ரோடு எஸ்யூவி போல காட்டுகிறது.

பக்கவாட்டில் டி பில்லர் தனியாக பிரிந்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கூரை பறக்கும் நிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை தருகிறது. புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் வெள்ளை வண்ண கூரையுடன் கூடிய இரட்டை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த காரில் 16 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ் கூட பெற்றிருக்கிறது.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் ரியர் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டு இருப்பதும், டெயில் கேட்டில் பிரெஸ்ஸா என்ற முத்திரையுடன் கூடிய அகலமான க்ரோம் சட்டமும் காரின் தோற்றத்தை வசீகரமாக காட்டுகின்றன. முக்கிய அம்சம். உட்புறத்தில் சென்டர் கன்சோல் அமைப்பு பியானோ பிளாக் எனப்படும் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணத்தில் உள்ளது. தொடுதிரையுடன் கூடிய இன்ஸஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியன்ட் லைட்டிங் உள்ளன. இருக்கைகள் அமர்வதற்கு வசதியாகவும், சொகுசாகவும் இருக்கின்றன. ஃபேப்ரிக் தரமும் சிறப்பாக உள்ளது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஞ்சின் மற்றும் செயல்திறன்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா Engine And Performance

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே தற்போது கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. எஞ்சின் பவர் முன்சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. விரைவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விட்டாரா பிரெஸ்ஸா வ இருக்கிறது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மைலேஜ்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா Fuel Efficiency

எஸ்யூவி ரக கார்களில் மிகச் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் மாடல் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா. இந்த காரின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று கூறுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.  ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு சிறப்பானதாக இருக்கிறது. 

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா முக்கிய அம்சங்கள்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா Important Features

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் டில்ட் ஸ்டீயரிங் சிஸ்டம், கூல்டு க்ளவ் பாக்ஸ், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், அதிவேகம் குறித்த எச்சரிக்கை வசதிகள் உள்ளன. விலை உயர்ந்த மாடலில் ரியர் பார்க்கிங் கேமராவும் வழங்கப்படுகிறது.

தீர்ப்பு

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா Verdict

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி இந்தியர்களின் சிறந்த தேர்வாக தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. நடைமுறை பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த தேர்வாகவும், இடவசதி, தொழில்நுட்ப அம்சங்களில் நிறைவாகவும், குறைவான பராமரிப்பு கொண்ட மாடலாகவும் நம்பகத்தன்மையை பெற்றிருக்கிறது. மறுவிற்பனை மதிப்பிலும் சிறப்பானதாக இருப்பதுடன், மாருதியின் விற்பனைக்கு பின் சிறந்த சேவை தரமும் இதன் விற்பனைக்கு வலு சேர்த்து வருகிறது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா வண்ணங்கள்


Torque Blue
Granite Grey
Autumn Orange
Premium Silver
Pearl Arctic White

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா படங்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X