மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்
Style: செடான்
43.80 - 46.30 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் கார் 2 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
43,80,000

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
46,30,000

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 17.5
Manual டீசல் 0

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் ஆரம்பர ரக சொகுசு செடான் கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் செடான் கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. மேலும், மிக அழகான ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மாடலாகவும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரபலமான இ க்ளாஸ் மற்றும் எஸ் க்ளாஸ் கார்களின் டிசைன் அம்சங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதை காண முடிகிறது.

முகப்பில் பெரிய க்ரில் அமைப்பு, அதன் நடுவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் லோகோ, எல்இடி ஹெட்லைட்டுகள், இண்டிகேட்டர்களாகவும் செயல்படும் வகையிலான L வடிவிலான பகல்நேர விளக்குகளுடன் முகப்பு அம்சமாக இருக்கிறது. பக்கவாட்டில் 17 அங்குல அலாய் வீல்கள் கவனத்தை ஈர்க்கிறது. மிக சீரான கூரை அமைப்பு, நேர்த்தியான டெயில் லைட்டுகள், இரட்டை சைலென்சர் குழல்கள் ஆகியவற்றுடன் பின்புறமும் அசத்துகிறது. புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் இருக்கும் இன்டீரியர் வடிவமைப்புதான் இதிலும் பிரதிபலிக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் எஞ்சின் மற்றும் செயல்திறன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ ர்ளாஸ் லிமோசின் காரில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு உள்ளது. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 8 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் மைலேஜ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 17.50 கிமீ மைலேஜை வழங்கும் என்றும், டீசல் ஆட்டோமேட்டிக் மாடலானது லிட்டருக்கு 21.35 கிமீ மைலேஜை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் இது நிச்சயம் மிகச்சிறப்பான மைலேஜை வழங்கும் என்று நம்பலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் முக்கிய அம்சங்கள்


மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் காரில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதிநவீன MBUX சாஃப்ட்வேர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக மீ கனெக்ட் என்ற கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் முக்கிய சிறப்பாக இருக்கிறது. க்ரோம் அலங்காரத்துடன் ஏசி வென்ட்டுகள், கன்ட்ரோல் சுவிட்சுகளுடன் ஸ்டீயரிங் வீல், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை டச்பேடு மூலமாகவும் கட்டுப்படுத்தும் வசதி, வாய்ஸ் கமாண்ட் வசதிகளும் உள்ளன.

தவிரவும், ஆப்பிள் கார் ப்ளே, நேவிகேஷன், க்ரூஸ் கன்ட்ரோல், மெமரி வசதி கொண்ட இருக்கைகள், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம், கீ லெஸ் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முற்றிலும் கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், டிஃபியூசர், ரியர் ஸ்பாய்லர், டியூவல் சைலென்சர், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களுடன் ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் பெற்றுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் தீர்ப்பு

இந்தியாவின் ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மார்க்கெட்டில் டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் சிறந்த மதிப்பை வழங்கும் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் இருக்கிறது. இந்த கார் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் மாடலுடன் போட்டி போடுகிறது.

வண்ணங்கள்


Cosmos Black
Mountain Grey
Polar White
Iridium Silver

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

லிமோசின் 200, லிமோசின் ஏ200டீ என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?

டீசல் மாடலிலும் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X