மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின்
Style: செடான்
58.00 - 58.00 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் கார் 1 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
58,00,000

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 13.3

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மார்க்கெட்டில் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திறன் மிக்க எஞ்சினுடன் ஸ்போர்ட்டியான செடான் கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஏ35 ஏஎம்ஜி கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் செடான் காரின் ஸ்டான்டர்டு மாடலில் இருந்து கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுடன் கிடைக்கிறது.

ஏ க்ளாஸ் லிமோசின் காரிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில், ஸ்போர்ட்டியான பம்பர் அமைப்பு, ஏஎம்ஜி பிராண்டின் விசேஷ க்ரில் அமைப்பு, 18 அங்குல ஏஎம்ஜி அலாய் வீல்கள், மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகளுடன் அதிக சிறப்பம்சங்களுடன் தோற்றம் கவர்ச்சியாக இருக்கிறது. உட்புறத்தில் முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் எஞ்சின் மற்றும் செயல்திறன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் ஏ35 4மேட்டிக் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 301 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேலும், இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இரு்பதுடன், 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது.

இந்த ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தேவைப்படும்போது மட்டும் பின்சக்கரங்களுக்கு 50 சதவீத எஞ்சின் சக்தியை அனுப்பும் வசதி கொண்டது. இந்த பெர்ஃபார்மென்ஸ் சொகுசு செடான் கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் மைலேஜ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் ஏ35 ஏஎம்ஜி கார் லிட்டருக்கு 13.39 கிமீ மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஓட்டுத்ல முறை மற்றும் சீதோஷ்ண நிலைகளை பொறுத்து இந்த கார் நடைமுறை பயன்பாட்டில் மைலேஜ் சற்று குறைவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் முக்கிய அம்சங்கள்


புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் ஏ35 ஏஎம்ஜி காரில் மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள், 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எம்பியூஎக்ஸ் இயங்குதளம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, 12 ஸ்பீக்கர்களுடன் கூடிய பர்ம்ஸ்டெர் சவுண்ட் சிஸ்டம் என ஏராாளமான பிரிமீயம் வசதிகளை பெற்றுள்ளது. அடாப்டிவ் சஸ்பென்ஷன், பார்க்கிங் அசிஸ்ட் தொழில்நுட்பம், ஈரப்பதமான சாலைகளில் சக்கரங்கள் வழுக்கிச் செல்வதை தவிர்க்கும் வகையிலான ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்டவை இதன் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் தீர்ப்பு

ஸ்போர்ட்டியான சொகுசு செடான் காரை மிக குறைவான பட்ஜெட்டில் வாங்க விரும்புவோருக்கு இந்த கார் சிறந்த தேர்வாக அமையும். மேலும், ஏஎம்ஜி பிராண்டு அம்சங்கள் இந்த காரின் மதிப்பை வெகுவாக உயர்த்திக் காட்டுகின்றன.

வண்ணங்கள்


Denim Blue
Cosmos Black
Mountain Grey
Mojave Silver
Iridium Silver
Polar White

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஏ35 லிமோசின் Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ லிமோசின் ஏ35 செடான் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மாருதி ஸ்விஃப்ட் காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X