மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53
Style: செடான்
106.00 - 106.00 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 கார் 1 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
1,06,00,000

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 11.7

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்


இந்தியாவில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வரும் மாடலான மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் அதிசெயல்திறன் மிக்க வெர்ஷனாக ஏஎம்ஜி இ53 கார் விற்பனையில் உள்ளது. இ க்ளாஸ் சொகுசு செடான் கார் மற்றும் ஏஎம்ஜி இ63 எஸ் கார்களுக்ககு இடையிலான மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அடிப்படையில் வந்துள்ள இந்த கார் 12 செங்குத்து பட்டைகள் கொண்ட அழகிய ஏஎம்ஜி க்ரில், பெரிய லோகோ, முரட்டுத்தனமாக தோற்றமளிக்கும் பம்பர் அமைப்புடன் வசீகரிக்கிறது.

அட்டகாசமான 19 அங்குல ஏஎம்ஜி பிராண்டு அலாய் சக்கரங்கள், உயர்வகை கருப்பு பெயிண்ட் செய்யப்பட்ட வெளிப்புற பாகங்கள், அழகிய டெயில் லைட்டுகள், அலங்கார ஆக்சஸெரீகளுடன் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் டிசைன் அம்சங்களை பெற்றுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 எஞ்சின் மற்றும் செயல்திறன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கூடிய 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 429 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இக்யூ என்ற மோடில் வைத்து இயக்கும்போது கூடுதலாக 21 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 மைலேஜ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 காரில் உள்ள 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 11.76 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிசெயல்திறன் மிக்க இந்த காரை ஓட்டுதல் முறையை பொறுத்து இந்த மைலேஜ் அளவு சிறிது குறைய வாய்ப்பு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 முக்கிய அம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 காரில் உள்ள 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 11.76 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிசெயல்திறன் மிக்க இந்த காரை ஓட்டுதல் முறையை பொறுத்து இந்த மைலேஜ் அளவு சிறிது குறைய வாய்ப்பு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 தீர்ப்பு

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காருக்கு பெரிய வாடிக்கையாளர் வட்டம் இந்தியாவில் உண்டு. அதிக சிறப்பம்சங்களுடன் செயல்திறன் மிக்க இ க்ளாஸ் காரை வாங்க விரும்புவோருக்கு இந்த மாடல் மிகச் சிறப்பான தேர்வாக அமையும். அனைத்து விதத்திலும் நிறைவை தரும் என்று கூறலாம்.

வண்ணங்கள்


Cavansite Blue
Obsidian Black
Graphite Grey
Selenite Grey
Hi-Tech Silver
Polar White

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 காரில் எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ53 காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X