மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே
Style: கூபே
260.50 - 260.50 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே கார் 1 வேரியண்ட்டுகளில் 10 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே காரை கூபே ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
கூபே | Gearbox
2,60,50,000

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 8.85

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

உலகின் அதிவேக 4 டோர் கூபே ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 63எஸ் கார் பெயர் பெற்றுள்ளது. இந்த கார் தோற்றத்தில் மிரட்டலாக இருப்பதுடன் அதி செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை பெற்றுள்ளது. ஏஎம்ஜி பிராண்டு கார்களுக்கு உரிய பான் அமெரிக்கா க்ரில் அமைப்பு, மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள், ஹை பீம் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ஏஎம்ஜி கார்களுக்கு உரிய விசேஷ பம்பர் அமைப்பு, பிரத்யேக அலாய் வீல்கள், பின்புறத்தில் ரியர் ஆக்டிவ் ஸ்பாய்லர் உள்ளிட்டவற்றுடன் சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே காரில் இரண்டு டர்போசார்ஜர்களுடன் இயங்கும் 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 630 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4மேட்டிக் ஆல்வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 315 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே மைலேஜ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி-4 டோர் கூபே காரில் உள்ள வி8 பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 8.85 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிசெயல்திறன் மிக்க இந்த ஸ்போர்ட்ஸ் கார் நடைமுறையில் இதைவிட குறைவான மைலேஜையே தரும் வாய்ப்பு இருப்பதாக கருதலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே முக்கிய அம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி காரில் மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள், 12.3 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் எம்பியூஎக்ஸ் இயங்குதளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 14 ஸ்பீக்கர்களுடன் கூடிய 640 வாட் பர்ம்ஸ்டெர் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. 64 வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் பேடு ஆகியவையும் உள்ளன. இந்த காரில் மூன்று நிலைகளில் வேகத்தை கணித்து செயல்படும் ஸ்டீயரிங் வீலும் இடம்பெற்றுள்ளது.

இந்த அதிசெயல்திறன் மிக்க ஸ்போர்ட்ஸ் காருக்கு ஏஎம்ஜி டைனமிக் ப்ளஸ் பேக்கேஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏஎம்ஜி ரியர் ஆக்சில் ஸ்டீயரிங், ஏஎம்ஜி 4மேட்ட்க் ப்ளஸ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், ஏஎம்ஜி ரைடு கன்ட்ரோல் ப்ளஸ், ஆக்டிவ் பார்க் அசிஸ்ட், பார்க் ட்ரோனிக், 360 டிகிரி கேமரா, ஏஎம்ஜி ஹை பெர்ஃபார்மென்ஸ் பிரேக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே தீர்ப்பு

அட்டகாசமான தோற்றம், சிறந்த எஞ்சின் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் காரை வாங்க விரும்புவோருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4 டோர் கூபே கார் சிறந்த தேர்வாக இருக்கும்.

வண்ணங்கள்


Brilliant Blue
Obsidian Black
Designo Brilliant Blue Magno
Designo Graphite Grey Magno
Graphite Grey
Designo Selenite Grey Magno
Iridium Silver
Jupiter Red
Polar White
Designo Diamond White Bright

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4 டோர் கூபே கார் எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

ஒரே வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 4 டோர் கூபே காரில் எத்தனை பேர் செல்லலாம்?

4 பேர் பயணிக்கலாம்

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X