மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே
Style: கன்வெர்ட்டிபிள்
72.35 - 72.35 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே கார் 1 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே காரை கன்வெர்ட்டிபிள் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
கன்வெர்ட்டிபிள் | Gearbox
72,34,914

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 0

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரின் அடிப்படையிலான ஓபன் டாப் வசதி கொண்ட மாடலாக சி க்ளாஸ் கேப்ரியோலே இந்தியாவில் விற்பனையில் உள்ளது. சி க்ளாஸ் அடிப்படையிலான மாடலாக இருந்தாலும், இதனை தனித்துவப்படுத்தும் விதத்தில், புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், க்ரில் அமைப்பு மற்றும் பின்புற டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. சாதாரண சி க்ளாஸ் செடான் காரைவிட இந்த திறந்து மூடும் கூரை அமைப்புடையே கேப்ரியோலே மாடலின் டெயில் லைட்டுகள் கச்சிதமாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த காரின் க்ரில் அமைப்பில் வைரக் கற்கள் பதிக்கப்பட்டது போன்ற அலங்காரம் கவர்கிறது. இந்தத காரில் மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் சாலையில் செல்லும்போது எல்லோரின் கவனத்தையும் வெகுவாக ஈர்க்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே எஞ்சின் மற்றும் செயல்திறன்

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே காரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 258 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.2 வினாடிகளில் எட்டிவிடும்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே மைலேஜ்

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே காரின் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 9.6 கிமீ மைலேஜ் வழங்கும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது. இந்த ஓபன் டாப் கார் நடைமுறை பயன்பாட்டில் இதனைவிட சற்று குறைவான மைலேஜையே வழங்கும் என்று நம்பலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே முக்கிய அம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே காரில் ஏர்கேப் என்ற அம்சம் மூலமாக, கூரை திறந்து வைத்து ஓட்டும்போது கேபினுக்குள் காற்று செல்வது வெகுவாக குறைக்கப்படுகிறது. இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, மர அலங்கார தகடுகளுடன் வேலைப்பாடுகளுடன் கவர்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே தீர்ப்பு

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே கார் மிகவும் தனித்துவமான தேர்வை விரும்புவோருக்கு ஏற்றதாக இருக்கிறது. திறந்த கூரை அமைப்புடன் ஓட்டும்போதும், பயணிக்கும்போது ஒரு புதுவிதமான பயண அனுபவத்தை வழங்கும். இந்த கார் ஆடி ஏ5 கேப்ரியோலே காருக்கு நேர் போட்டியாக இருக்கிறது.

வண்ணங்கள்


Obsidian Black
Brilliant Blue
Designo Selenite Grey Magno
Selenite Grey
Designo Hyacinth Red
Mojave Silver
Polar White

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே கார் எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோலே காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X