மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ்
Style: எஸ்யூவி
255.00 - 400.00 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் கார் 3 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
2,55,00,000
எஸ்யூவி | Gearbox
2,55,00,000

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
4,00,00,000

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual டீசல் 0
Manual பெட்ரோல் 6.1

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

சொகுசு கார் மார்க்கெட்டில் முரட்டுத்தனத்தையும், சொகுசு அம்சங்களையும் குழைத்து வடித்த மிகச் சிறந்த ஆஃப்ரோடு எஸ்யூவி மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜி க்ளாஸ் கார் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. 70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்த எஸ்யூவி இந்தியாவில் ஜி350டீ மற்றும் ஏஎம்ஜி ஜி63 என்ற வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அட்டப் பெட்டி போன்று செவ்வக வடிவிலான தோற்றம் இதற்கு தனித்துவமானதாக இருக்கிறது. செவ்வக வடிவிலான க்ரில் அமைப்பு, வட்ட வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், அழகிய அலாய் வீல்களுடன் கவர்கிறது. மொத்தத்தில் சொகுசு கார் மார்க்கெட்டில் ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தை பெற்றிருக்கும் எஸ்யூவி மாடலாக கூறலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி க்ளாஸ் எஸ்யூவியில் இருக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 282 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்ப்டடு இருக்கிறது. ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவியில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 577 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் தேவைப்படும்போது மட்டும் சிலிண்டர்கள் அனைத்தும் செயல்படும் வகையில் சிலிண்டர் டீ ஆக்டிவேஷன் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் மைலேஜ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி க்ளாஸ் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 8.13 கிமீ மைலேஜையும், ஏஎம்ஜி ஜி63 மாடலானது லிட்டருக்கு 6.1 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட எஸ்யூவி நடைமுறை பயன்பாட்டில் மைலேஜ் அளவு சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் முக்கிய அம்சங்கள்

ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு உகந்த இந்த எஸ்யூவியின் ஏஎம்ஜி மாடலில் இண்டிபென்டென்ட் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் அடாப்டிவ் டேம்பர்களுடன் கூடிய காயில் ஸ்பிரிங்குகள், பாடி ரோலை குறைக்கும் வகையில் விசேஷ குறுக்குவாட்டு ஸ்டெபிலைசர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இது மிகச் சிறந்த சொகுசான எஸ்யூவியாக இல்லாவிட்டாலும், ஆஃப்ரோடு பயன்பாட்டில் இதன் செயல்திறன் மிகச் சிறப்பாக இருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் தீர்ப்பு

ஆஃப்ரோடு சொகுசு எஸ்யூவி வாங்க விரும்புவோருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜி க்ளாஸ் எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக அமையும். தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் சிறப்பானதாக பெயர் பெற்றுள்ளது. ஜீப் க்ராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி, போர்ஷே கேயென் டர்போ, லம்போர்கினி உருஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கிறது.

வண்ணங்கள்


Vintage Blue
Desert Sand
South Seas Blue
Travertine Beige

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி க்ளாஸ் எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களிலும் தலா ஒரு வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியில் எத்தனை பேர் பயணிக்கலாம்?

5 பேர் பயணிக்கும் இடவசதியை பெற்றுள்ளது

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X