மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே
Style: எஸ்யூவி
72.50 - 73.50 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே கார் 2 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
72,50,000

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
73,50,000

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 12.7
Manual டீசல் 16.3

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்திய மிட்சைஸ் சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் தனித்துவமான தேர்வாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. 2021ம் ஆண்டு மாடலாக பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஜிஎல்சி எஸ்யூவியின் அடிப்படையில் பின்புறம் தாழ்ந்த கூரை அமைப்புடன் கூபே ரக மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மாற்றங்கள் செய்யப்பட்ட முகப்பு க்ரில் மற்றும் பம்பர் அமைப்பு இடம்பெற்றுள்ளது. புதிய 19 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், புதிய பொலிவுடன் காட்சித் தருகிறது. மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகளும் இந்த காரின் மதிப்பையும், வசீகரத்தையும் கூட்டுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே எஞ்சின் மற்றும் செயல்திறன்


மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 258 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும், டீசல் மாடல் அதிகபட்சமாக 245 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே மைலேஜ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே எஸ்யூவியின் பிஎஸ்-6 தரமுடைய பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 12.74 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 16.34 கிமீ மைலேஜையும் வழங்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே முக்கிய அம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே எஸ்யூவியில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் 7 ஏர்பேக்குகள், பார்க்கிங் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா ஆகிய பல நவீன பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே தீர்ப்பு

இந்திய சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் தனித்துவமான எஸ்யூவி தேர்வை விரும்புவோருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே கார் மிகச் சிறந்த தேர்வாக அமையும். டிசைன், வசதிகளில் கவரும் வகையில் உள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்4, ஆடி க்யூ5, லெக்சஸ் என்எக்ஸ் மற்றும் போர்ஷே மசான் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கிறது.

வண்ணங்கள்


Spectral Blue
Obsidian Black
Graphite Grey
Designo Hyacinth Red Metallic
Mojave Silver
Polar White

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

பெட்ரோல், டீசல் மாடல்கள் அனைத்து வசதிகளுடன் தலா ஒரே ஒரு வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் நேரடி போட்டி மாடல் எது?

பிஎம்டபிள்யூ எக்ஸ்4 நேரடி போட்டியாளராக உள்ளது

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X