எம்ஜி ஹெக்டர்

எம்ஜி ஹெக்டர்
Style: எஸ்யூவி
14.95 - 22.15 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

எம்ஜி ஹெக்டர் கார் 20 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. எம்ஜி ஹெக்டர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். எம்ஜி ஹெக்டர் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். எம்ஜி ஹெக்டர் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. எம்ஜி ஹெக்டர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

எம்ஜி ஹெக்டர் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
14,94,800
எஸ்யூவி | Gearbox
15,99,800
எஸ்யூவி | Gearbox
16,99,800
எஸ்யூவி | Gearbox
17,09,780
எஸ்யூவி | Gearbox
17,29,800
எஸ்யூவி | Gearbox
18,23,800
எஸ்யூவி | Gearbox
18,28,780
எஸ்யூவி | Gearbox
18,48,800
எஸ்யூவி | Gearbox
19,69,800
எஸ்யூவி | Gearbox
19,88,000
எஸ்யூவி | Gearbox
20,99,800
எஸ்யூவி | Gearbox
21,19,800
எஸ்யூவி | Gearbox
21,94,800
எஸ்யூவி | Gearbox
22,14,800

எம்ஜி ஹெக்டர் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
17,69,800
எஸ்யூவி | Gearbox
18,69,800
எஸ்யூவி | Gearbox
19,99,800
எஸ்யூவி | Gearbox
20,19,800
எஸ்யூவி | Gearbox
21,69,800
எஸ்யூவி | Gearbox
21,89,800

எம்ஜி ஹெக்டர் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 0
Manual டீசல் 0

எம்ஜி ஹெக்டர் விமர்சனம்

எம்ஜி ஹெக்டர் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியர்கள் அதிகம் விரும்பும் எஸ்யூவி மாடலாக எம்ஜி ஹெக்டர் இருந்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து சிறந்த எஸ்யூவியாக இருந்து வரும் நிலையில், 2021ம் ஆண்டு மாடல் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு விற்பனையில் உள்ளது. புதிய க்ரில், பம்பர் மற்றும் அலாய் வீல்களுடன் கவர்கிறது. வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்களுடன் பழைய டிசைன் அம்சங்களை தக்க வைத்திருக்கும் இந்த மாடலின் உட்புறத்திலும் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பீஜ் மற்றும் கருப்பு வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் சிறப்பு சேர்க்கிறது. லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டர் எஞ்சின் மற்றும் செயல்திறன்


புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல், டிசிடி அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திரனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் மைலேஜ்

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 14.16 கிமீ மைலேஜையும், டிசிடி மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்கள் லிட்டருக்கு 13.96 கிமீ மைலேஜையும் வழங்கும். பெட்ரோல் ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 15.81 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. டீசல் மாடல் லிட்டருக்கு 17.41 கிமீ மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் முக்கிய அம்சங்கள்

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 18 அங்குல அலாய் வீல்கள், முன் இருக்கைகளுக்கு வெனிடிலேட்டட் வசதி, வயர்லெஸ் சார்ஜர், 10.4 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை பெற்றுள்ளது.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட ஏராளமான வசதிகளை பெற்றுள்ளன.

எம்ஜி ஹெக்டர் தீர்ப்பு

டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் மிகவும் தன்னிறைவை தரும் மாடலாக எம்ஜி ஹெக்டர் இருந்து வருகிறது. 5 சீட்டர் மிட்சைஸ் எஸ்யூவி வாங்க விரும்புவோரின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் அம்சங்களை பெற்றுள்ளது. மேலும், நிறுவனத்தின் மதிப்பு வாய்ந்த திட்டங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

வண்ணங்கள்


Starry Black
Dune Brown
Havana Grey
Aurora Silver
Glaze Red
Candy White

எம்ஜி ஹெக்டர் படங்கள்

எம்ஜி ஹெக்டர் Q & A

எம்ஜி ஹெக்டர் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

ஸ்டைல், சூப்பர், ஷைன் மற்றும் ஸ்மார்ட் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் மாடல் இருக்கிறதா?

இருக்கிறது. ஆனால், ஹெக்டர் ப்ளஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X