ஸ்கோடா New Superb

ஸ்கோடா New Superb
Style: செடான்
54.00 - 54.00 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஸ்கோடா New Superb கார் 1 வேரியண்ட்டுகளில் 3 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஸ்கோடா New Superb காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஸ்கோடா New Superb காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஸ்கோடா New Superb காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஸ்கோடா New Superb கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஸ்கோடா New Superb பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
54,00,000

ஸ்கோடா New Superb மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 0

ஸ்கோடா New Superb விமர்சனம்

ஸ்கோடா New Superb வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

ஸ்கோடா சூப்பர்ப் கார் இந்தியாவின் பிரிமீயம் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் ஏராளமான டிசைன் மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. அடாப்டிவ் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகளுடன் முகப்பு வசீகரமாக உள்ளது. அடுத்து ஸ்கோடாவின் பாரம்பரியத்தை பரைசாற்றும் வண்ணத்துப் பூச்சி வடிவிலான க்ரில் அமைப்பு, மிரட்டலான பம்பர், அழகிய அலாய் வீல்கள், நேர்த்தியான டெயில் லைட் க்ளஸ்ட்டர்களுடன் மிக நீளமான செடான் கார் மாடலாக காட்சித் தருகிறது.

ஸ்கோடா New Superb எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஸ்கோடா சூப்பர்ப் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையு், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா New Superb மைலேஜ்

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 15.1 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டில் இந்த மைலேஜில் சற்றே குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஸ்கோடா New Superb முக்கிய அம்சங்கள்

ஸ்கோடா சூப்பர்ப் காரில் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டில் இருக்கைகள், கியர் நாப் மற்றும் ஸ்டீயரிங் வீலில் அல்கான்ட்ரா அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல் அண்ட் கே வேரியண்ட்டில் பழுப்பு மற்றும் பீஜ் வண்ண இன்டீரியர் தீம் மற்றும் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி கொண்ட இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனுடன் குளிர்ச்சி மற்றும் வெதுவெதுப்பை வழங்கும் வசதி கொண்டதாகவும் இருக்கைகள் இருப்பது சிறப்பு. 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 மோடுகளில் ஒளிரும் வசதி கொண்ட எல்இடி ஹெட்லைட்டுகள், வயர்லெஸ் சார்ஜர், யுஎஸ்பி போர்்டடுகள், வெர்ச்சுவல் காக்பிட் வசதி, நேவிகேஷன் வசதிகளும் உள்ளன.

இந்த காரில் 8 ஏர்பேக்குகள், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், எல்இடி ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பார்க் ட்ரோனிக் தொழில்நுட்ப வசதி, டிரைவிங் மோடுகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இதன் டாப் வேரியண்ட்டில் வழங்கப்படுகின்றன.

ஸ்கோடா New Superb தீர்ப்பு

பிரிமீயம் செடான் கார் வாங்க விரும்புவோருக்கு சிறந்த டிசைன், வசதிகள் கொண்ட தேர்வாக ஸ்கோடா சூப்பர்ப் உள்ளது. இந்திய வாடிக்கையாளர் மத்தியிலும் இந்த காருக்கு தனி மவுசு இருந்து வருகிறது. அதிக இடவசதியுடன், போதுமான வசதிகள், பாதுகாப்பு அம்சங்களுடன் சிறந்த மதிப்பை அளிக்கும் பிரிமீயம் செடான் கார் மாடலாக உள்ளது.

வண்ணங்கள்


Magic Black
Water World Green
Rosso Brunello

ஸ்கோடா New Superb படங்கள்

ஸ்கோடா New Superb Q & A

ஸ்கோடா சூப்பர்ப் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

ஸ்போர்ட்லைன் மற்றும் எல் அண்ட் கே என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
ஸ்கோடா சூப்பர்ப் காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X