டாடா ஹாரியர்

டாடா ஹாரியர்
Style: எஸ்யூவி
15.49 - 26.44 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டாடா ஹாரியர் கார் 25 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா ஹாரியர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா ஹாரியர் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா ஹாரியர் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா ஹாரியர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டாடா ஹாரியர் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
15,49,000
எஸ்யூவி | Gearbox
15,99,000
எஸ்யூவி | Gearbox
16,99,000
எஸ்யூவி | Gearbox
17,49,000
எஸ்யூவி | Gearbox
18,69,000
எஸ்யூவி | Gearbox
19,69,000
எஸ்யூவி | Gearbox
19,99,000
எஸ்யூவி | Gearbox
19,99,001
எஸ்யூவி | Gearbox
20,19,000
எஸ்யூவி | Gearbox
21,09,000
எஸ்யூவி | Gearbox
21,39,000
எஸ்யூவி | Gearbox
21,69,000
எஸ்யூவி | Gearbox
22,24,000
எஸ்யூவி | Gearbox
22,69,000
எஸ்யூவி | Gearbox
22,99,000
எஸ்யூவி | Gearbox
23,09,000
எஸ்யூவி | Gearbox
23,54,000
எஸ்யூவி | Gearbox
23,64,000
எஸ்யூவி | Gearbox
24,09,000
எஸ்யூவி | Gearbox
24,39,000
எஸ்யூவி | Gearbox
24,49,000
எஸ்யூவி | Gearbox
24,94,000
எஸ்யூவி | Gearbox
25,04,000
எஸ்யூவி | Gearbox
25,89,000
எஸ்யூவி | Gearbox
26,44,000

டாடா ஹாரியர் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual டீசல் 14.6

டாடா ஹாரியர் விமர்சனம்

டாடா ஹாரியர் Exterior And Interior Design

டாடா ஹாரியர் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்ட டாடா ஹாரியர் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடும் வகையில் ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது. வழக்கமாக பானட்டை ஒட்டி இல்லாமல் சற்று கீழாக தாழ்த்தி பொருத்தப்பட்டு இருப்பது முக்கிய அம்சமாக இருக்கிறது. அதேநேரத்தில், வழக்கமாக ஹெட்லைட் இடம்பெறும் இடத்தில் எல்இடி பகல்நேர விளக்குகளும், இண்டிகேட்டர் க்ளஸ்ட்டரும் கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கவாட்டில் அதிக தரை இடைவெளியுடன் மிக உயரமான மாடலாக இருக்கிறது. இந்த காரில் 17 அங்கு அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டில் மிகப்பெரிய எஸ்யூவி மாடல் போன்ற தோற்றத்துடன் காட்சி தருகிறது.

இந்த காரின் பின்புறமும் தனித்துவமாகவும், கவர்ச்சியாகவும் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. டெயில் லைட்டுகளுக்கு இடையே கருப்பு வண்ண பேனல் ஒன்று பொருத்தப்ட்டு இருக்கிறது. ஸ்பாய்லர் மற்றும் ஆன்டென்னாவும் இடம்பெற்றுள்ளது.

இந்த எஸ்யூவியின் இன்டீரியர் நவீன காலத்திற்கு ஏற்றதாகவும், அதிக வசதிகள் நிரம்பியதாகவும் உள்ளது. மர அலங்கார வேலைப்பாடுகள், லெதர் பயன்பாடு, சில்வர் மற்றும் கருப்பு வண்ண ஆக்சஸெரீகளுடன் கவரும் வகையில் உள்ளது. இந்த காரிலும் ஃப்ளோட்டிங் திரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

டாடா ஹாரியர் எஞ்சின் மற்றும் செயல்திறன்

டாடா ஹாரியர் Engine And Performance

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இதே எஞ்சின்தான் ஜீப் காம்பஸ் மற்றும் விரைவில் வர இருக்கும் மற்றொரு போட்டியாளரான எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் எஞ்சின் செயல்திறனில் குறைவில்லாமல் இருக்கிறது. இந்திய சாலை நிலைகள் மற்றும் தட்ப வெப்ப நிலைகளுக்கு தக்கவாறு இதன் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. தினசரி மற்றும் நெடுஞ்சாலை பயணங்களில் இதன் எஞ்சின் சிறப்பானதாக இருக்கிறது.

டாடா ஹாரியர் மைலேஜ்

டாடா ஹாரியர் Fuel Efficiency

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் மேனுவல் டீசல் மாடல் லிட்டருக்கு 16.35 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 14.63 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான எஸ்யூவிக்கு இது சிறப்பான மைலேஜாக கூறலாம். மேலும், போட்டியாளர்களைவிட சிறந்த மைலேஜ் தரும் மாடலாகவும் இருக்கிறது.

இந்த எஸ்யூவியில் 50 லிட்டர் கொள்திறன் கொண்ட டீசல் டேங்க் உள்ளது. முழுமையாக நிரப்பிச் செல்லும்போது நீண்ட தூர பயணங்களையும் தங்கு தடையில்லாமல் முடிக்க வகை செய்யும்.

டாடா ஹாரியர் முக்கிய அம்சங்கள்

டாடா ஹாரியர் Important Features

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மேலும், ஜேபிஎல் ஆடியோ சிஸ்டமும் இருப்பது இதன் பிரிமீயம் மாடலாக தரம் உயர்த்திக் காட்டுகிறது. இந்த காரில் டிரைவிங் மோடுகளும், பிரேக்குகளில் டிஸ்க் வைப்பிங் நுட்பமும் இருப்பது சிறப்பானதாக கூறலாம்.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரோல் ஓவர் மிட்டிகேஷன், ரிவர்ஸ் பாரக்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

டாடா ஹாரியர் தீர்ப்பு

டாடா ஹாரியர் Verdict

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி இந்தியாவின் பாரம்பரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தொழில்நுட்ப வல்லமைக்கு எடுத்துக்காட்டான மாடலாக கூறலாம். இதன் போட்டியாளர்களில் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாகவும் இருக்கிறது. இதன் 7 சீட்டர் மாடலும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

வண்ணங்கள்


Seaweed Green
Pebble Grey
Coral Red
Lunar White

டாடா ஹாரியர் படங்கள்

டாடா ஹாரியர் Q & A

டாடா ஹாரியர் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

டாடா ஹாரியர் எஸ்யூவியானது எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி ப்ளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
டாடா ஹாரியர் எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளதா?

பெட்ரோல் எஞ்சின் தேர்வு இல்லை

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X