டாடா நெக்ஸான் இவி கார் 10 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா நெக்ஸான் இவி காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா நெக்ஸான் இவி காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா நெக்ஸான் இவி காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா நெக்ஸான் இவி கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,49,016 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 15,99,013 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 16,49,013 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 16,99,013 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 16,99,079 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 17,49,023 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 17,49,079 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 17,99,046 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 19,29,043 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 19,49,000 |
கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
---|---|---|
Manual | எலக்ட்ரிக் | 0 |
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் அதிகம் விரும்பப்படும் மாடலாக டாடா நெக்ஸான் மாறி இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 என்ற டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கவரும் வகையிலான க்ரில் அமைப்பு, அம்புகுறி வடிவிலான அலங்கார பாகங்களுடன் ஏர்டேம் பகுதி, வசீகரமான பனி விளக்குகள் அறை அமைப்பு, அழகிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார் என்பதை குறிக்கும் நீல வண்ண கோடுகளுடன் அசத்தலாக இருக்கிறது. பக்கவாட்டில் 16 அங்குல டைமண்ட் அலாய் வீல்கள், நவீன தோற்றத்தில் டிசைன் செய்யப்பட்டு இருக்கும் பின்புறம் என கவர்ந்து இழுக்கிறது.
புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 30.2kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் பேட்டரியுடன் இணைந்து 127 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு டிரைவிங் மோடுகளும் உள்ளன.
புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். சாதாரண சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை 20 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றுவதற்கு 8 மணிநேரமும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 60 நிமிடங்களும் பிடிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். சாதாரண சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை 20 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றுவதற்கு 8 மணிநேரமும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 60 நிமிடங்களும் பிடிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மிகச் சிறந்த தேர்வாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் உள்ளது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ், எக்ஸ்இசட் ப்ளஸ் டார்க் எடிசன், எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ், எக்ஸ்இசட் லக்ஸ் டார்க் எடிசன் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 5 பேர் பயணிக்கும் இருக்கை வசதியை பெற்றுள்ளது